TA/Prabhupada 1036 - நம் மேல் ஏழு கோள் அமைப்புகள் மற்றும் கீழேயும் ஏழு கோள் அமைப்புகள் உள்ளன



720403 - Lecture SB 01.02.05 - Melbourne

நம் மேல் ஏழு கோள் அமைப்புகள் மற்றும் கீழேயும் ஏழு கோள் அமைப்புகள் உள்ளன. ஷ்யாமஸுந்தரன்: இந்த ஏழு கோள் அமைப்புகள், ஒரு யோகியின் ஏழு வண்ணங்கள் மற்றும் ஏழு ரத்தினங்களை ஒத்திருக்கிறதா? பிரபுபாதர்: இல்லை. நம் மேல் ஏழு கோள் அமைப்புகள் மற்றும் கீழேயும் ஏழு கோள் அமைப்புகள் உள்ளன. ஆகையால் இந்த பிரம்மாண்டம், சதுர்தஷ-புவன: "பதினான்கு கோள் அமைப்புகள்." என அழைக்கப்படுகிறது. இது 'பூர்லோக' என்றழைக்கப்படுகிறது. இதன் மேல் புவர்லோகம் என்பது இருக்கிறது. அதற்கு மேல் ஜனலோகம் இருக்கிறது. அதற்கு மேல் மஹர்லோகம் உள்ளது. அதற்கு மேல் ஸத்யலோகம் இருக்கிறது. அதற்கும் மேல் பிரம்ம லோகம் இருக்கிறது, அதாவது மீஉயர்ந்த கோள் அமைப்பு. அதுபோலவே, கீழேயும் தல, அதல, தலாதல, விதல, பாதால, ரஸாதல என்று இருக்கின்றன. இந்த பதினான்கு உலகங்களைப்பற்றிய அறிவு, நமக்கு வேத இயக்கங்களிலிருந்து கிடைக்கிறது. ஒவ்வொரு பிரம்மாண்டத்திலும் இத்தகைய பதினான்கு கோள் அமைப்புகள் அடங்கியுள்ளன, மற்றும் இவ்வாறு பல பிரம்மாண்டங்கள் உள்ளன. அந்த அறிவும் நமக்கு பிரம்ம-ஸம்ஹிதாவிலிருந்து தான் கிடைக்கிறது. யஸ்ய ப்ரபா ப்ரபவதோ ஜகத்-அண்ட-கோடி (பிரம்ம ஸம்ஹிதா 5.40). ஜகத்-அண்ட-கோடி. ஜகத்-அண்ட என்றால் இந்த பிரம்மாண்டம் கன அளவில் பெரியது. அண்ட, அதாவது முட்டையைப் போல் தான். எல்லா கிரகங்களும் முட்டையைப் போல் தான். இந்த பிரம்மாண்டமும் முட்டை உருவத்தில் தான் உள்ளது. ஆக இதைப்போலவே பல கோடிக்கணக்கான ஜகத்-அண்டங்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு ஜகத்-அண்டத்திலும், கோடிஷு வஸுதாதி-விபூதி-பின்னம், எண்ணிக்கையற்ற கோள்கள் உள்ளன. ஆக இத்தகைய அறிவு நமக்கு வேத இயக்கங்களிலிருந்து கிடைக்கிறது. உனக்கு பிடித்திருந்தால் ஏற்றுக்கொள். உனக்கு விருப்பம் இல்லாவிட்டால் நீ நிராகரிக்கலாம். அது உன்னை பொருத்தது.