TA/Prabhupada 1039 - நாம் பசுவினுடைய பாலை குடிப்பதால், பசு நம் அன்னை. பசு நம் அன்னை அல்ல என்று நான் எப்படி மற

(Redirected from TA/Prabhupada 1039 -)


730809 - Conversation B with Cardinal Danielou - Paris

பிரபுபாதா : மற்றொரு விஷயம், மிருகவதை பாவம் அல்ல என்பதை நீங்கள் எப்படி ஒப்புக்கொள்ளலாம்?

யோகேஸ்வரா : பிரஞ்சு மொழி (விலங்குகளை கொல்வது பாவம் அல்ல என்பதை எவ்வாறு நியாயப்படுத்துவது)

கார்டினல் டேனியல்: பிரஞ்சு மொழி (விலங்குகளை கொல்வது பாவமல்லவா?) பகவான் : நீங்கள் இதனை எப்படி நியாயப்படுத்துகிறீர்கள்?

கார்டினல் டேனியல்: ஆம், ஏனெனில், மனிதனின் உயிருக்கும், ஆத்மாவிற்கும் மற்றும் உயிரியல் தன்மைக்கும் இயற்கையாக வித்தியாசம் இருப்பதாக நாங்கள் நினைக்கிறோம். மேலும் எல்லா விலங்குகள் மற்றும் தாவரங்களின் படைப்பும் மனிதனுக்கு உதவி செய்வதற்காகவே (தெளிவாக இல்லை) கடவுளால் அளிக்கப்பட்டுள்ளன என்று நாங்கள் நினைக்கிறோம். ஏசு கிறிஸ்து, ஆத்மாவே உண்மையான உயிர்வாழி என்றும், மற்றவை தோற்றமளித்தாலும் உண்மையில் இருப்பதில்லை என்றும் கூறியுள்ளார், நாங்கள் அவ்வாறு தான் நினைக்கிறோம். மிருகங்களும், தாவரங்களும், உண்மையான உயிர்வாழி அல்ல என்று நாங்கள் நினைக்கிறோம், மனிதன் மட்டுமே உண்மையான உயிர்வாழி. அந்தவகையில் பௌதிக உலகம் முக்கியமானதல்ல.

பிரபுபாதா : இப்போது, நான் தொடர்கிறேன். நீங்கள் இந்த வீட்டில் வாழ்வதாக வைத்துக் கொள்வோம். அப்படி என்றால் நீங்கள் இந்த வீடு அல்ல, இது உண்மைதான்.

கார்டினல் டேனியல்: ஆம், ஆம்.

பிரபுபாதா : ஆனால், நான் வந்து உங்கள் வீட்டை உடைத்தால், அது உங்களுக்கு தொந்தரவாக இருக்காதா?

கார்டினல் டேனியல் : ஆம் நிச்சயமாக, நிச்சயமாக அது தொந்தரவு தான்.

பிரபுபாதா : எனவே நான் உங்கள் தொந்தரவிற்கு காரணமாக இருந்தால், அது குற்றம் இல்லையா?

கார்டினல் டேனியல் : அது எனக்கு தொந்தரவு தான் ஆனால்..

பிரபுபாதா : இல்லை. நான் உங்களுக்கு ஏதாவது தொந்தரவு ஏற்படுத்தினால், அது குற்றம் இல்லையா? அது பாவம் இல்லையா?

கார்டினல் டேனியல்: ஒரு உண்மையான காரணம் இருந்தால், அது ஒரு மனிதனையே கொல்வதை போன்றதல்ல என்று நான் நினைக்கிறேன். உதாரணத்திற்கு, பௌதிக உலக உண்மையை பயன்படுத்துவது நிச்சயமாக சாத்தியமே, இயற்கை உலகின் மனித தொழிலின் மதிப்புமிக்க இறுதி வரை பயன்படுத்துவது நிச்சயமாக சாத்தியமே, அதன் காரணத்தைப் பற்றிய கேள்வி தான். ஒரு மிருகத்தை கொல்வதற்கு தவறான காரணமும் இருக்க முடியும். ஆனால், குழந்தைகளுக்கும், ஆண்களுக்கும், பெண்களுக்கும் உணவு அளிப்பதற்காக மிருகங்கள் கொல்லப்பட்டால்.... நாங்கள் (பிரெஞ்சு மொழி) பக்தர் : பசி.

கார்டினல் டேனியல் : பசி, நாங்கள் பசியோடு இருப்பதால், அது சரியே, சரியே..... எங்களுக்கு.... இதனை ஏற்றுக் கொள்வது கடினமாக உள்ளது, இந்தியாவில், (பிரெஞ்சு மொழி) பசு

யோகேஸ்வரா : பசுக்கள்.

கார்டினல் டேனியல் : ஆம், பசுக்கள். பசுக்களை கொல்வதற்கு அனுமதி இல்லை அல்லவா....?

யோகேஸ்வரா : பசு.

கார்டினல் டேனியல்: பசித்திருக்கும் குழந்தைகளுக்காக, ஒரு பசுவை கொல்வது....

பிரபுபாதா : இல்லை, இல்லை. எந்த வகையில் பார்த்தாலும், நாம் பசுவின் பாலை குடிக்கிறோம். எனவே அது நம் தாய். இல்லையா?

யோகேஸ்வரா : பிரெஞ்சு மொழி (அவர் கூறுகிறார், நாங்கள் பசுவின் பால் குடிக்கிறோம், எனவே அவள் எங்கள் அம்மா இல்லையா?)

கார்டினல் டேனியல் : ஆமாம். நிச்சயமாக ஆனால்.....

பிரபுபாதா : வேத கொள்கைகளின்படி நமக்கு ஏழு தாய்மார்கள் இருக்கிறார்கள். ஆதௌ3-மாதா, உண்மையான தாய், கு3ரோ: பத்னீ, ஆன்மீக குருவின் மனைவி....

கார்டினல் டேனியல் : ஆம். பகவான்: உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?

யோகேஸ்வரா : பிரஞ்ச் மொழி(வேதக் கருத்துப்படி ஏழு தாய்மார்கள் இருப்பதாக அவர் கூறுகிறார், மனிதனுக்கு, எனவே இயற்கை தாய் ...)

பிரபுபாதா : ஆதௌ3-மாதா கு3ரோ: பத்னீ ப்3ராஹ்மணீ, பிராமணரின் மனைவி.

யோகேஸ்வரா : (விரைவில் ..)

கார்டினல் டேனியல் : (தெளிவாக இல்லை)

பிரபுபாதா அரசனின் மனைவி அரசி

கார்டினல் டேனியல்: ஆம்

பிரபுபாதா : நான்காவது, ஆதௌ3-மாதா கு3ரோ: பத்னீ ப்3ராஹ்மணீ ராஜ-பத்னிகா, தே4னுர். தே4னு என்றால் பசு. தே4னுர் தா4த்ரீ. தா4த்ரீ என்றால் செவிலி. ததா2 ப்ரு'த்2வீ. ப்ரு'த்2வீ என்றால் பூமி. இவர்களெல்லாம் ஏழு தாய்மார்கள். எனவே, நாம் பசுவின் பாலை குடிப்பதால், பசு நம் அன்னை.

கார்டினல் டேனியல்: ஆம்.

பிரபுபாதா: நான் எப்படி அவள் அன்னை அல்ல என்று மறுக்க முடியும்? அன்னையை கொல்வதை நம்மால் எப்படி ஒப்புக்கொள்ள முடியும்?

கார்டினல் டேனியல்: ஆமாம். சரிதான். ஆனால் நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால்....

பிரபுபாதா: எனவே, இந்தியாவில் மாமிசம் உண்பவர்கள், அதுவும் கூட ஒரு கட்டுப்பாட்டிற்கு கீழ் தான் இருக்கிறது. அவர்கள் ஏதாவது கீழ்நிலை மிருகங்களான ஆடுகள், எருமைகள் வரைகூட கொல்வதற்கு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் பசு வதை மிகப் பெரிய பாவம்.

கார்டினல் டேனியல்: ஆமாம், ஆமாம். எனக்கு இது தெரியும், எனக்கு இது தெரியும். மேலும் இது எங்களுக்கு கடினமே, கடினமே...

பிரபுபாதா: ஆமாம், ஏனெனில் பசு நம் தாய்.

கார்டினல் டேனியல்: ஆமாம், ஆமாம் அப்படித்தான்.

பிரபுபாதா: நீங்கள் உங்கள் அன்னையிடம் இருந்து பாலை பெறுகிறீர்கள், அவளுக்கு வயதானவுடன், அவளால் உங்களுக்கு பால் அளிக்க முடியாது என்ற நிலைவந்தவுடன், அவளை கொல்வதா?

கார்டினல் டேனியல்: ஆம்,

பிரபுபாதா: அது சரியான கோட்பாடு தானா?

யோகேஸ்வரா: (பசு மிகவும் வயதாகும்போது, நீங்கள் அவளைக் கொல்கிறீர்களா?)

கார்டினல் டேனியல்: ஆமாம்.

யோகேஸ்வர: அவர் கூறுகிறார் ஆம், அவர் கூறுகிறார், "ஆம், இது நல்ல கொள்கைதான்."

கார்டினல் டேனியல்: மனிதன் பசியுடன் இருக்கும் போது, மனிதர்களுடைய உயிர், பசுவினுடைய உயிரைக் காட்டிலும் முக்கியமானது.

பிரபுபாதா: எனவேதான், நாங்கள் இந்த கிருஷ்ண உணர்வை பரப்புகிறோம். நாங்கள் மக்களை, எந்த வகையிலும் மாமிசம் உண்ண வேண்டாம் என்றும், கருணையுடன் இருக்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

கார்டினல் டேனியல்: ஆமாம்.

பிரபுபாதா: ஆனால், சில சூழ்நிலைகளில், நீங்கள் மாமிசம் உண்ண வேண்டி வந்தால், ஏதாவது கீழ்நிலை மிருகங்களின் மாமிசத்தை சாப்பிட லாம். பசுக்களைக் கொல்லாதீர்கள். அது மிகப் பெரிய பாவம். ஒருவன் பாவியாக இருக்கும் வரை, அவனால் கடவுள் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள முடியாது.. ஆனால், மனிதர்களுக்கு முக்கிய வேலையே கடவுளைப் புரிந்து கொண்டு, அவர் மீது அன்பு செலுத்துவது தான். ஆனால், அவன் பாவியாக இருந்தால், அவனால் கடவுளை புரிந்து கொள்ள முடியாது, மேலும்.. அன்பு செலுத்துவதை பற்றிய கேள்வி எங்கே இருக்கிறது? எனவே, குறைந்தபட்சம் மனித சமுதாயத்தில், இந்த கொடூரமான இறைச்சிக் கூடம் பராமரிப்பாவது நிறுத்தப்பட வேண்டும்.

கார்டினல் டேனியல்: (பிரஞ்சு மொழி.)

யோகேஸ்வரா: பிரஞ்சு மொழி( வேதங்களில் எப்படி பரிந்துரைக்கப் பட்டிருக்கிறது என்று அவர் கூறுகிறார், ஒருவர் இறைச்சி சாப்பிட வேண்டும் என்றால், பசுவை விட தாழ்ந்த விலங்குகளை கொல்வது நல்லது. எனவே தற்போதுள்ள இந்த இறைச்சிக் கூடங்கள், நாம் மனித இனத்தை முன்னேற்ற வேண்டுமானால் மூடப்பட வேண்டும்)

கார்டினல் டேனியல்: ஆம் ஆம் இது முக்கியமான விஷயம் அல்ல என்று நான் நினைக்கிறேன். இந்த குறிப்பிட்ட விஷயத்தில் பல்வேறு மதங்களின் நன்மையை பயன்படுத்தலாம் என்று நான் நினைக்கிறேன். முக்கியமான விஷயம் கடவுள் மீது அன்பு செலுத்துவது தான்.

பிரபுபாதா: ஆம்.

கார்டினல் டேனியல்: ஆனால், இந்த பத்து கட்டளைகள் நடைமுறையில் வேறுபடலாம்.

பிரபுபாதா: இல்லை. உதாரணமாக கடவுள், கடவுள் "நீ இதைச் செய்யலாம்" என்று கூறினால், அது பாவமல்ல. ஆனால் கடவுள், "நீ இதை செய்யக்கூடாது" என்று கூறினால்,பிறகு அது பாவச் செயல்.