TA/Prabhupada 1048 - இறைவனின் திரு நாட்டிற்குத் திரும்பும் வரை, நீ என்றுமே மகிழ்ச்சியாக இருக்க மாட்டாய் - ம
(Redirected from TA/Prabhupada 1048 -)
750712 - Lecture SB 06.01.26-27 - Philadelphia
நாம் வாழ்வின் பந்தப்பட்ட நிலையில் உள்ளோம், ஏனெனில் நம் ஆதி புருஷனான கிருஷ்ணரிடம் இருந்து நாம் பிரிந்து உள்ளோம். ஏனெனில், நாம் கிருஷ்ணருடைய அங்கத் துணுக்கு. நாம் இதனை மறந்து விட்டோம். நாம், இந்தியா அல்லது அமெரிக்காவின் அங்கத் துணுக்கு என்று நினைத்துக் கொள்கிறோம். இதுதான் மாயை என்று அழைக்கப்படுகிறது. அவர்கள்.... சிலர் தங்கள் நாட்டின் நன்மையை கருதுகிறார்கள், சிலர் சமூகத்தின் அல்லது குடும்பத்தின் நன்மையை கருதுகிறார்கள். நாம் பல விஷயங்களை, கடமைகளை உருவாக்கியுள்ளோம். எனவேதான் "அவர்களது உண்மையான சுயநலன் என்ன என்பதை இந்த அயோக்கியர்கள் அறிய மாட்டார்கள்." என்று சாஸ்திரம் கூறுகிறது. ந தே விது:3 ஸ்வார்த2-க3திம்' ஹி விஷ்ணும் து3ராஷ2யா (SB 7.5.31). என்றுமே நிறைவேறாத ஒன்றினை அவன் எதிர்பார்க்கிறான். எனவே அவன் ஒரு அயோக்கியன். இந்த ஜட உலகத்தில், மகிழ்ச்சி அடைவதற்காக நாம் விஷயங்களை சரி செய்ய முயற்சி செய்கிறோம். ஆனால் இந்த ஜட உலகத்தில் இருக்கும் வரை இன்பத்தை பற்றிய கேள்வியே இல்லை என்பதை, இந்த அயோக்கியன் அறியமாட்டான். இதுதான் அயோக்கியத்தனம்.
கிருஷ்ணர் கூறுகிறார் இந்த இடம் து:3கா2லயம் அஷா2ஷ்2வதம் (ப.கீ 8.15). , நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த ஜட உலகம், ஒன்றன்பின் ஒன்றாக பல உடல்களை மாற்றிக் கொண்டிருக்கும் து:3காலயம். ஏன் நான் என்னுடைய உடலை மாற்ற வேண்டும்? நான் நிரந்தரமானவன். ஏன் கூடாது? ந ஹன்யதே ஹன்யமானே ஷ2ரீரே (ப.கீ 2.02). எனவேதான், நாம் கற்றுக் கொள்ள வேண்டும், நாம் அறிவூட்டப் படவேண்டும், நாம் பக்குவமான மூலத்திலிருந்து ஞானத்தை பெற வேண்டும். மேலும் பரமபுருஷ பகவானான கிருஷ்ணரே தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஞானத்தை வழங்குகிறார். மேலும் இந்த பக்குவமான ஞானத்தை எடுத்துக் கொள்ளாத அளவிற்கு நாம் துரதிர்ஷ்டசாலிகள் ஆக இருந்தால், நாம் இட்டுக் கட்டினால், நாம் கற்பனை செய்தால், நம்முடைய சொந்த கருத்தை உருவாக்கினால்- பிறகு அது து3ராஷ2யா என்று புரிந்து கொள்ளப்படுகிறது. நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம், "இந்த வகையில் நான் மகிழ்ச்சியாக இருப்பேன். இதில் நான் மகிழ்ச்சியாக இருப்பேன்." அப்படி அல்ல. நீங்கள் என்றுமே மகிழ்ச்சியாக இருக்க மாட்டீர்கள்- இதுதான் மிகச் சரியான அறிவுரை. இறைவனின் திருநாட்டை அடையாத வரைக்கும் உதாரணமாக, ஒரு முட்டாள் சிறுவன் தன்னுடைய தந்தையை விட்டுவிட்டு வந்துவிடுகிறான் அவன் தந்தை ஒரு பணக்காரர், அங்கே எல்லாம் இருக்கிறது, ஆனால் அவன் ஒரு ஹிப்பி ஆக மாறி விட்டான். அதைப் போலவே, நாமும் அது போலத் தான் இருக்கிறோம், நமது தந்தை கிருஷ்ணர். நாம், அங்கே எந்த கவலைகளும் இன்றி, பணம் சம்பாதிப்பதற்கான எந்த முயற்சியும் இன்றி, வசதியாக வாழலாம். ஆனால் இந்த பௌதீக உலகில் வாழ்வதற்கு நாம் முடிவெடுத்துள்ளோம். இதுதான் கழுதை எனப்படுகிறது. இதுதான்..... எனவே மூட:4. நமது உண்மையான சுயநலன் என்ன என்பதை நாம் அறிய மாட்டோம். நாம், நம்பிக்கைக்கு எதிராக நம்பிக்கை வைக்கிறோம். "நான் இந்த வகையில் மகிழ்ச்சியாக இருப்பேன். நான் இப்படி மகிழ்ச்சியாக இருப்பேன்." எனவேதான் இந்த வார்த்தை உபயோகிக்கப் பட்டுள்ளது, மூட:4. அவர்கள் உண்மையில் தன் மகிழ்ச்சி என்ன என்பதை அறிய மாட்டார்கள், அவர்கள் ஒவ்வொரு வகையாக ஒன்றன்பின் ஒன்றாக முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள், "நான் இப்போது மகிழ்ச்சியாக இருப்பேன்." கழுதை. கழுதை.... சில சமயம் வண்ணான் கழுதையின் மீது அமர்ந்து கொண்டு கையில் ஒரு புல்லுக்கட்டை வைத்துக்கொண்டு, அதனை கழுதையின் முன் நீட்டுவான். அந்தக் கழுதை புல்லுக்கட்டை எடுத்துக் கொள்ள விரும்பும். ஆனால், முன்னே சென்று கொண்டிருப்பதால், அந்தக் புல்லுக்கட்டும் முன்னால் நகர்ந்துகொண்டிருக்கும். (சிரிப்பு) அவன் நினைப்பான் "ஒரு அடி முன்னேறினால் போது, நான் அந்த புல்லுக்கட்டை பெறுவேன்." ஆனால், அது கழுதையாக உள்ள காரணத்தினால் அதனை அறியாது. "கோடிக்கணக்கான வருடத்திற்கு வரும்படியான புற்கள் எங்கும் இருக்கிறது. இருந்தும்... நான் மகிழ்ச்சி அடைய மாட்டேன்" இதுதான் கழுதை. "கோடிக்கணக்கான வருடங்கள் இந்த உலகில் நான் மகிழ்ச்சியாக இருப்பதற்கு முயற்சி செய்யலாம். நான் என்றும் மகிழ்ச்சி அடைய மாட்டேன்." என்னும் உணர்விற்கு அவன் வர மாட்டான்.
எனவேதான், விஷயங்களை அறிந்தவரான குருவிடமிருந்து நீங்கள் ஞானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். எனவேதான் குரு வழிபடப்படுகிறார்:
- அஜ்ஞான-திமிராந்த4ஸ்ய
- ஜ்ஞானாஞ்ஜன-ஷ2லாகயா
- சக்ஷுர் உன்மீலிதம்' யேன
- தஸ்மை ஸ்ரீ-கு3ரவே நம:.