TA/Prabhupada 1051 - எனக்கு திறன் இல்லை, ஆனால் என் குருவின் சொற்களை, வாழ்க்கை மற்றும் ஆன்மா என நான் எடுத்துக
(Redirected from TA/Prabhupada 1051 -)
750712 - Lecture SB 06.01.26-27 - Philadelphia
பிரபுபாதர்: நீங்கள் தினமும் பாடவில்லையா? ஆனால் உங்களுக்கு பொருள் புரிகிறதா? அல்லது நீங்கள் மட்டும் பாடுகிறீர்களா? இதன் அர்த்தம் என்ன? யார் விளக்குவார்கள்? ஹூ? யாருக்கும் தெரியாதா? ஆம், இதன் பொருள் என்ன?
பக்தர்: "என் ஆன்மீக குருவின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளால் என் மனம் சுத்திகரிக்கப்பட வேண்டும் என்பதே எனது ஒரே ஆசை. எனக்கு வேறு எதற்கும் ஆசை இல்லை."
பிரபுபாதர்: ஆம். இதுதான் ஒழுங்கு. குரு-முக-பத்ம-வாக்ய, சித்தேதே கோரியா ஐக்ய. இப்போது, சிட்டா என்றால் நனவு அல்லது இதயம் என்று பொருள். "நான் இதை மட்டுமே செய்வேன், பஸ். என் குரு மஹாராஜா என்னிடம் கூறினார்; இதை நான் செய்ய வேண்டும் என்று." சித்தேதே கோரியா ஐக்ய, ஆர் நா கோரிஹோ மனே ஆஷா. எனவே இது எனது பெருமை அல்ல, ஆனால் உங்கள் அறிவுறுத்தலினால் நான் செய்தேன் என்று சொல்ல முடியும். ஆகையால், எனது எல்லா ஞான சகோதரர்களையும் விட நீங்கள் எந்த சிறிய வெற்றியைப் பார்த்தாலும், இது காரணமாகும். எனக்கு திறன் இல்லை, ஆனால் என் குருவின் சொற்களை வாழ்க்கை மற்றும் ஆன்மா என நான் எடுத்துக்கொண்டேன். எனவே இது உண்மை. குரு-முக-பத்ம-வாக்ய, சித்தேதே கோரியா ஐக்ய.எல்லோரும் அதை செய்ய வேண்டும். ஆனால் அவர் ஏதேனும் கூட்டி, மாற்றம் செய்தால் கூடுதலாக, மாற்றங்களைச் செய்தால், அவர் முடிக்கப்படுகிறார். கூட்டுவது, மாற்றுவது கூடாது. நீங்கள் குருவை அணுக வேண்டும் - குரு என்றால் கடவுளின் - கிருஷ்ணரின் உண்மையுள்ள சேவகன் - அவரை எவ்வாறு சேவிப்பது என்று அவருடைய குருவிடமிருந்து கேட்டு கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் வெற்றி பெறுகிறீர்கள். நீங்கள் கலவை செய்தால், "நான் என் குருவை விட மிகவும் புத்திசாலி, நான் கூடுதலாக அல்லது கூட்டி, மாற்றம் செய்ய முடியும்" பின்னர் நீங்கள் முடிந்துவிட்டீர்கள். எனவே அது மட்டுமே. இப்போது, மேலும் பாடுங்கள்.
பக்தர்: ஸ்ரீ-குரு-சரணே ரதி, ஏஇ ஸே உத்தம-கதி.ப்ரபுபாத: ஸ்ரீ-குரு-சரணே ரதி, ஏஇ ஸே, உத்தம-கதி. நீங்கள் உண்மையான முன்னேற்றம் அடைய விரும்பினால், நீங்கள் குருவின் தாமரை பாதங்களில் உறுதியாக இருக்க வேண்டும். பிறகு?
பக்தர்: ஜே ப்ரஸாதே பூரே ஸர்வ ஆஷா. ப்ரபுபாத: ஜே ப்ரஸாதே பூரே ஸர்வ ஆஷா. யஸ்ய ப்ரஸாதாத்... முழு வைஷ்ணவ தத்துவத்திலும் இது அறிவுறுத்தலாகும். ஆகவே, நாம் அதைச் செய்யாவிட்டால், நாம் மூடாவாகவே இருக்கிறோம், இது இந்த அஜாமில உபாக்யான-வில் விளக்கப்பட்டுள்ளது. எனவே இன்று நாம் இந்த வசனத்தைப் படிக்கிறோம். ஸ ஏவம் வர்தமான: அஜ்ஞ:. மீண்டும் அவர் கூறுகிறார். மீண்டும் வியாசதேவா கூறுகிறார் "இந்த அயோக்கியன் ..., அவனது மகன் நாராயணாவின் சேவையில் மூழ்கியுள்ளான்." அவருக்குத் தெரியாது. "இது என்ன முட்டாள்தனமான நாராயணா?" அவர் தனது மகனை அறிந்திருந்தார். ஆனால் நாராயணா மிகவும் இரக்கமுள்ளவர், ஏனெனில் அவர் தொடர்ந்து தனது மகனை அழைத்து வந்தார். "நாராயணா, தயவுசெய்து இங்கே வா. நாராயணா, தயவுசெய்து இதை எடு," எனவே கிருஷ்ணர் ஏற்றுக் கொண்டார் "அவர் நாராயணா நாமம் ஜபிக்கிறார்" என்று. கிருஷ்ணர் மிகவும் இரக்கமுள்ளவர். அவர் ஒரு போதும் "நான் நாராயணரிடம் செல்கிறேன்" என்று கூறவில்லை. அவர் தனது மகனை விரும்பினார், ஏனென்றால் அவர் பாசமாக இருந்தார். ஆனால் நாராயணரின் புனித பெயரை உச்சரிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இது அவரது நல்ல அதிர்ஷ்டம். எனவே, இதன் படி, நாம் பெயரை மாற்றி கொள்கிறோம். ஏன்? ஏனென்றால் ஒவ்வொரு பெயரும் கிருஷ்ணரின் சேவகனாக மாறுவதற்கானது. எனவே உபேந்திராவைப் போலவே. உபேந்திரா என்றால் வாமனதேவா. எனவே நீங்கள் "உபேந்திரா, உபேந்திரா" என்று அல்லது இதேபோல் அழைத்தால், அந்த பெயர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. எனவே அது பின்னர் விளக்கப்படும்.
எனவே இங்கேயும் இது கூறப்படுகிறது ... முதல் வசனத்தில் இது மூடா என்றும், இரண்டாவது வசனத்திலும் சொல்லப்படுகிறது. ஸ ஏவம் வர்தமான: அஜ்ஞ: (SB 6.1.27). அஜ்ஞ:. என்றால் அயோக்கியன் என்று பொருள். அஜ்ஞ:. என்றால் அயோக்கியன் என்று பொருள். அஜ்ஞ:. என்றால் அறிவற்றவர், அறிவற்றவர், அறிவு இல்லாதவர் என்று பொருள். ஜ்ஞ:. என்றால் அறிவு உள்ளவர் என்று பொருள். அஜ்ஞ:. என்றால் அறிவில்லாதவர். ம்ருத்யு-கால உபஸ்திதே. எனவே இந்த பௌதிக உலகில் உள்ள அனைவரும், அவர் மூடா, அஜ்ஞ. "நான் மரணத்தை சந்திக்க வேண்டியிருக்கும்" என்று அவர் கவலைப்படவில்லை. "எல்லாம் முடிந்ததும், எனது திட்டங்கள் அனைத்தும், எனது சொத்துக்கள் அனைத்தும் முடிவடையும். " அது அவருக்குத் தெரியாது. அவருக்கு அது தெரியும், ஆனால் இந்த விஷயங்களை அவதானிப்பதில் அவருக்கு அக்கறை இல்லை. எனவே எல்லோரும் மூடா மற்றும் அஜ்ஞ. பின்னர், மரணம் வந்த போதிலும், மதிம் சகார தனயே பாலே நாராயணாஹ்வயே. "இப்போது நான் இறந்து கொண்டிருக்கிறேன்; மரணம் நெருங்கிவிட்டது" என்று அவர் அதை அனுபவிக்கிறார். இன்னும், அவர் தனது குழந்தையைப் பற்றி நினைத்துக்கொண்டிருக்கிறார். யம் யம் வாபி ஸ்மரன் லோகே த்யஜத்யந்தே (ப.கீ. 8.6). அவருக்கு ஒரு குழந்தை உள்ளது. அவன் பெயர் நாராயணா.
இப்போது, அவரது நிலைப்பாடு வேறு. ஆனால் நான் இதேபோல் பாதிக்கப் பட்டிருந்தால், என் நாயுடன் இதேபோல் பாசமாக இருந்தால், என் நிலை என்ன? அல்லது எதையும். இயற்கையாகவே, நான் என் நாயைப் பற்றி நினைப்பேன், உடனடியாக நான் ஒரு நாய் அல்லது நாய் போன்ற மற்றொரு உடலைப் பெறுவேன். இது இயற்கையின் விதி. யம் யம் வாபி ஸ்மரன் லோகே த்யஜத்யந்தே கலேவரம். அந்த நேரத்தில் ... சோதனை இறக்கும் நேரத்தில் இருக்கும், நீங்கள் எந்த வகையான உடலைப் பெறப் போகிறீர்கள் என்று. யம் யம் வாபி ஸ்மரன் பாவம். அவர் தனது மகனிடம் மிகவும் பாசமாக இருப்பதைப் போல. அவர் தனது மகனை நினைத்துக்கொண்டிருக்கிறார். இதேபோல், உங்கள் நாய் அல்லது வேறு எதையாவது நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்கள் என்றால், அந்த நேரத்தில் நீங்கள் நினைப்பீர்கள். எனவே ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்யுங்கள், இதனால் மரணத்தின் போது நீங்கள் கிருஷ்ணரைப் பற்றி சிந்திக்க முடியும், மேலும் உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும்.
மிக்க நன்றி.
பக்தர்கள்: ஜெய் பிரபுபாதா.