TA/Prabhupada 1064 - பகவான் ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்தில் உள்ளகத்தில் வாழ்கிறார்



660219-20 - Lecture BG Introduction - New York

அந்த நித்தியமான உணர்வு, இது பகவத்-கீதையில் விவரிக்கப்படும் ஜீவாவிற்கும் ஈஸ்வராவிற்கும் இருக்கும் வித்தியாசத்தைப் பற்றி விவரிக்கும் அத்தியாயத்தில். ஷேத்ர-ஷேத்ர-ஞான. இந்த ஷேத்ர-ஞான விவரிக்கப்பட்டுள்ளது, அதாவது பகவானும் கூட ஷேத்ர-ஞான, அல்லது உணர்வு நிலை கொண்டவர், மேலும் ஜீவா, அல்லது உயிர்வாழிகள், அவர்களும் உணர்வு நிலை கொண்டவர்கள். ஆனால் வித்தியாசம் என்னவென்றால் உயிரினங்கள் அவர்களுடைய வரையறுக்கப்பட்ட உடம்பினுள் உணர்வு நிலை கொண்டவர்கள்., ஆனால் பகவான் அனைத்து உடலின் உணர்வுகளையும் கொண்டவர். ஈசுவர: ஸர்வ-பூதானாம் ஹ்ருத்தேஷெ 'ர்ஜுன திஷ்டதி (ப.கீ.18.16). பகவான் ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்தில் உள்ளகத்தில் வாழ்கிறார் ஆகையினால் அவர் குறிப்பிட்ட ஜீவாவின் உளவியல் சார்ந்த அசைவுகள், செயல்கள் பற்றிய உணர்வு நிலை கொண்டுள்ளார். நாம் மறந்துவிடக் கூடாது. இதற்கு மேலும் பரமாத்மா, அல்லது முழுமுதற் கடவுள் ஒவ்வொருவருடைய இதயத்திலும் ஈஸ்வரராக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார் என்று விவரிக்கப்பட்டுள்ளது, ஆளுநராகவும் அவர் வழி காட்டிக் கொண்டிருக்கிறார். அவர் வழி காட்டிக் கொண்டிருக்கிறார். ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்த: (.ப. கீ.15.15) ஒவ்வொருவருடைய இதயத்திலும் அவர் வீற்றிருக்கிறார், மேலும் அவர் விரும்புவது போல் நடந்துக் கொள்ள அவர் வழிகாட்டுகிறார். இந்த உயிர்வாழிகள் என்ன செய்வது என்பதை மறந்துவிடுகிறார்கள். முதலில் அவர் ஒரு வழியில் செயல்பட அவரே ஓர் தீர்மானம் எடுக்கிறார், பிறகு அவர் தன் சொந்த கர்மாவினால் அந்த நடவடிக்கைகளிலும், எதிர்நடவடிக்கைகளிலும் சிக்கிக் கொள்கிறார். ஆனால் ஒரு விதமான உடலை விட்டு, அவர் மற்றொரு விதமான உடலை அடையும் பொழுது, எவ்வாறு என்றால் நாம் ஒரு தினுசான ஆடையை, ஒரு விதமான ஆடையை, மற்றொரு விதமான ஆடைக்காக விட்டுவிடுவது போல், அதேபோல், இது இந்த பகவத்-கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது அதாவது, வாஸாம்ஸி ஜீர்னானி யதா விஹாய (ப.கீ.2.22). ஒருவர் தன்னுடைய பலவிதமான ஆடைகளை மாற்றுவது போல், அதே மாதிரி உயிர்வாழிகள், அவர்களும் வெவ்வேறு உடலுக்கு மாறுகிறார்கள், ஆன்மாவின் கூடுவிட்டுக் கூடுபாய்தல், மேலும் கடந்தகால செயல்களின் நடவடிக்கை, எதிர்நடவடிக்கைகளின் அனுகூலம். ஒரு உயிரினத்தின் மனநிலையும், நற்குணமும், தெளிந்த மனத்துடனும் இருக்கும் பொழுது, இந்த செயல்கள் மாறிவிடலாம், எத்தகைய செயல்களை அவர் பின்பற்ற வேண்டும் என்பதை அவர் புரிந்துக் கொண்டார், மேலும் அவர் அவ்வாறு செய்தால், பிறகு அவருடைய அனைத்து கடந்த கால செயல்களின் நடவடிக்கையும் எதிர்நடவடிக்கையும் மாற்றப்படலாம். ஆகையினால் கர்ம நித்தியமானதல்ல. மற்றவைகள், நான்கில், ஐந்து வகை - ஈஸ்வர, ஜீவா, ப்ரக்ருதி, கால, மேலும் கர்ம - இந்த நான்கு வகை நித்தியமானது, தவிரவும் கர்ம, கர்ம எனப்படும் வகை நித்தியமானதல்ல. இப்பொழுது ஈஸ்வர உணர்வு, நித்திய உணர்வு ஈஸ்வர, மேலும் நித்திய உணர்வு ஈஸ்வரனுக்கும், அல்லது பகவானுக்கும் உள்ள வேறுபாடு, மேலும் உயிரினங்கள், தற்கால சூழ்நிலையில், இவ்வாறு இருக்கிறார்கள். உணர்வு நிலை, பகவானும் உயிர்வாழிகளும் இருவரின் உணர்வு நிலையும், அவர்கள், இந்த உணர்வு நிலை தெய்வீகமானது. இந்த நித்திய உணர்வு கருப்பொருளின் சேர்க்கையால் உருவானது என்பதல்ல. அது தவறான சிந்தனை. அந்த தத்துவம் அதாவது நித்திய உணர்வு குறிப்பிட்ட சூழ்நிலையில் பௌதிக பிணைப்பால் உருவாகிறது பகவத்-கீதையில் இது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவைகளால் முடியாது. பௌதிக சூழலின் திரையால் உணர்வுகள் தவறான வழியில் பிரதிபலிக்கப்படலாம், எவ்வாறு என்றால் ஒளியின் பிரதிபலிப்பு வர்ண கண்ணாடியில் ஊடுருவும் பொழுது அதனுடைய வர்ணத்திற்கேற்ப தோன்றும். அதேபோல், பகவானின் உணர்வுகள், அது பௌதிக ரீதியாக பாதிக்கப்படாது. முழுமுதற் கடவுள், கிருஷ்ணர், அவர் கூறுகிறார் அதாவது மயாத்யக்ஷெண ப்ரக்ருதி: (ப.கீ.9.10). அவர் இந்த பௌதிக உலகில் தோன்றிய பொழுது, அவருடைய உணர்வுகள் பௌதிக ரீதியாக பாதிக்கப்படவில்லை. அவருடைய உணர்வுகள் பௌதிக ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தால், பகவத்-கீதையில் தெய்வீகமாக எடுத்துக் கொண்ட கருப்பொருளைப் பற்றி கூற தகுதி பெற்றிருக்கமாட்டார். ஒருவர் தெய்வீகமான உலகைப் பற்றி எதுவும் கூற ஜட செயல்களால் களங்கப்பட்ட உணர்வுகளிலிருந்து விடுபடாமல் முடியாது. ஆகையால் பகவான் ஜட செயல்களால் களங்கப்படவில்லை. ஆனால் நம்முடைய உணர்வுகள், தற்சமயம், ஜட செயல்களால் களங்கப்பட்டுள்ளது. ஆக அனைத்தும், பகவத்-கீதை கற்பிப்பது போல், நாம் ஜட செயல்களால் களங்கமுற்றிருக்கும் உணர்வை தூய்மைப்படுத்த வேண்டும், மேலும் அந்த தூய்மையான உணர்வில், நடவடிக்கைகள் செயல்படும். அது நம்மை சந்தோஷப்படுத்தும். நம்மால் நிறுத்த முடியாது. நம் செயல்களை நம்மால் நிறுத்த முடியாது. அந்த செயல்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டியவை. மேலும் இந்த தூய்மைப்படுத்தப்பட்ட செயல்கள் பக்தி என்றழைக்கப்படுகிறது. பக்தி என்றால் அவை, அவைகளும் சாதாரண செயல்களாக தோன்றும், ஆனால் அவை களங்கமுடைய செயல்கள் அல்ல. அவை தூய்மைபடுத்தப்பட்ட செயல்கள். ஆகையால் ஒரு அறிவற்றவர் பார்வையில், ஒரு பக்தர் சாதாரண மனிதரைப் போல் வேலை செய்வது போல் தோன்றும், ஆனால் மிக குறைந்த அறிவுள்ள ஒருவர், அவருக்கு தெரியாது அதாவது ஒரு பக்தரின் செயல்களும் அல்லது பகவானின் செயல்களும், அவர்கள் இவைகளால் களங்கப்படவில்லை தூய்மையற்ற உணர்வு கருப்பொருளால், தூய்மையற்ற மூன்று குணாஸ், இயற்கையின் குணம், ஆனால் திவ்வியமான உணர்வுகள். ஆகையால் நம் உணர்வு ஜட செயல்களில் களங்கப்பட்டது, நமக்கு தெரிந்திருக்க வேண்டும்.