TA/Prabhupada 0678 - கிருஷ்ண உணர்வுடையவன் எப்பொழுதும் யோக சமாதியில் இருப்பான்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0678 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
(No difference)

Revision as of 04:57, 30 April 2018



Lecture on BG 6.25-29 -- Los Angeles, February 18, 1969

விஷ்ணுஜன: பதம் 27: "என் மீது மனதை நிறுத்திய யோகி நிச்சயமாக உத்தம சுகம் எனும் உயர் பக்குவத்தை அடைகிறான். பிரம்மனிடம் உள்ள தனது குண ஒற்றுமையை உணர்ந்திருப்பதால், அவன் முக்தி அடைகிறான், அவன் மனம் நிறைவடைகிறது, அவன் கட்டற்ற பேராசைகள் சாந்தப்படுகின்றன, பிறகு அவன் எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான் (BG 6.27)

“ இருபத்தி எட்டு: "தன்னுணர்வில் நிலையாக இருந்து, எல்லா ஜடக் களங்கத்திலிருந்தும் விடுபட்டு, பிரம்மனுடன் நித்திய தொடர்பு கொண்டிருப்பதால், யோகி, பக்குவமான சுகத்தின் உன்னத நிலையை அடைகிறான் (BG 6.28)

" பிரபுபாதர்: இது தான் உன்னத நிலை, "என் மீது மனதை நிறுத்திய யோகி." 'என்' என்றால் கிருஷ்ணர். கிருஷ்ணர் பேசுகிறார். "எனக்கு ஒரு குவளை ஜலம் தா.", என்று நான் சொன்னால், வேறு யாரிடமோ ஜலத்தை தரவேண்டும் என்று அதற்க்கு அர்த்தம ஆகாது. அதுபோலவே பகவத்-கீதை கிருஷ்ணரால் சொல்லப்படுகிறது மேலும் அவர் "என்." என்கிறார். "என்" என்றால் கிருஷ்ணர். இதை தெளிவாக புரிந்துகொள்ளலாம். ஆனால் கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டுக் கூறும் பல உரையாசிரியர்கள் இருக்கிறார்கள். அது ஏனென்று எனக்கு விளங்கவில்லை. அது அவரது வக்கிர நோக்கம். இல்லை. "என்" என்றால் கிருஷ்ணர். ஆக கிருஷ்ண உணர்வுடையவன் எப்பொழுதும் யோக சமாதியில் இருப்பான். மேலும் படியுங்கள்.