TA/Prabhupada 0874 - யார் ஒருவன் ஆன்மீக தளத்திற்கு உயர்ந்துள்ளனோ, அவனே பிரசன்னாத்மா. அவன் மகிழ்ச்சியானவன்: Difference between revisions
(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Tamil Pages - 207 Live Videos Category:Prabhupada 0874 - in all Languages Category:TA...") |
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items) |
||
Line 8: | Line 8: | ||
<!-- END CATEGORY LIST --> | <!-- END CATEGORY LIST --> | ||
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | <!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE --> | ||
{{1080 videos navigation - All Languages| | {{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0873 - பக்தி என்பது என்னவென்றால் நாம் நமது பதவிகளை துறப்பது தான்|0873|TA/Prabhupada 0875 - உங்கள் சொந்த கடவுளின் பெயரை உச்சரியுங்கள். மறுப்பு எங்கே- ஆனால் இறைவனின் திருநாமத்தை உ|0875}} | ||
<!-- END NAVIGATION BAR --> | <!-- END NAVIGATION BAR --> | ||
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> | <!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK--> |
Latest revision as of 07:29, 7 August 2021
750519 - Lecture SB - Melbourne
யார் ஒருவன் ஆன்மீக தளத்திற்கு உயர்ந்துள்ளனோ, அவனே பிரசன்னாத்மா. அவன் மகிழ்ச்சியானவன். எனவே ஒரு கணவான், மிக்க படித்த மேதை, வித்யா-வினய-ஸம்பன்னே ப்ராஹ்மணே கவி- ஒரு பசு, ஹஸ்தி- ஒரு யானை, வித்யா-வினய-ஸம்பன்னே ப்ராஹ்மணே கவி ஹஸ்தினி, அந்த் ஷுனி - ஷுனி என்றால் நாய்- ஷ்வபாக்... ஷ்வபாக் என்றால் நாயை தின்பவன். பலபேர் இருக்கின்றனர், அவர்கள் பலவகையான மாமிசத்தை உண்பதை விரும்புவார்கள். ஆனால் நாயின் மாமிசத்தை உண்பவன், மிகவும் கீழ்த்தரமானவனாக கருதப்படுகிறான். ஷு2னி சைவ ஷ்வ-பாகே ச பண்டிதா: ஸம-தர்ஷின: (ப.கீ 5.18). ஒரு பண்டிதனாக, கற்றறிந்தவனாக இருப்பவன், எல்லாவற்றையும் சமமான தளத்திலேயே பார்க்கிறான். அந்த சமமான தளம் என்ன? ஆத்மா. வெளிப்புற உடலை அவன் பார்ப்பதில்லை. இதுவே பிரம்ம தர்ஷின என்று அழைக்கப்படுகிறது. பண்டிதா: ஸம-தர்ஷின:. மேலும் ஒருவன் அத்தகைய நிலையில் இருந்தால்,
- ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்நாத்மா
- ந ஷோசதி ந காங்க்ஷதி
- ஸம: ஸர்வேஷு பூதேஷு
- மத்-ப4க்திம்' லபதே பராம்
- (ப.கீ 18.54).
ஒருவன் தான் இந்த உடல் அல்ல என்று தன்னுணர்வு பெற்றிருந்தால், அவன் ஆத்மா, பிரம்ம-பூத:, அவனுடைய அறிகுறிகள் என்ன? இப்போது பிரசன்னாத்மா, அவன் உடனடியாக மிக்க மகிழ்ச்சியானவன் ஆகிவிடுவான்.
நாம் பௌதிகத்தில் ஆழ்ந்திருக்கும் வரையில், வாழ்க்கையின் உடல் பற்றிய கருத்தில் ஆழ்ந்திருக்கும் வரை எப்போதுமே கவலைகள் இருக்கும். இதுதான் பரிசோதனை. ஒருவன் கவலையில் இருக்கிறான் என்றால், அவன் பௌதிக நிலையில் இருக்கிறான். மேலும் ஒருவன் ஆன்மீக தளத்திற்கு உயர்ந்திருந்தால், அவன் பிரசன்னாத்மா. அவன் மகிழ்ச்சியானவன். பிரசன்னாத்மா என்பதன் பொருள் என்ன? ந ஷோசதி ந காங்க்ஷதி: அவனுக்கு எதுவுமே தேவைப்படுவதில்லை, மேலும் அவன் எதையாவது பெற்றாலும், அது தொலைந்தாலும், அதற்காக அவன் அழுவதில்லை. அவ்வளவுதான். நாம் இந்தப் பௌதிக உலகில், நமக்கு சொந்தமில்லாத ஒன்றின் பின் அலைந்து கொண்டிருக்கிறோம். மேலும் நமக்கு ஏதாவது கிடைத்து, அது தொலைந்து போனால் பிறகு நாம் அழுகிறோம். இரண்டு வேலைகள்: ஷோசன அந்த் ஆகாங்க்ஷ. ஒவ்வொருவரும் பெரிய மனிதன் ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். இது ஆகாங்க்ஷ என்று அழைக்கப்படுகிறது. மேலும் அவனுடைய உடமையை அவன் தொலைத்தால், பிறகு அவன் அழுகிறான். எனவே நீங்கள் ஆன்மீகத்தில் நிலைத்திருந்தால், பிறகு இந்த இரண்டு விஷயங்களும் முடிந்து போகும்.
- ப்ரஹ்ம-பூத: ப்ரஸன்நாத்மா
- ந ஷோசதி ந காங்க்ஷதி
- ஸம: ஸர்வேஷு பூதேஷு...
ஒருவன் ஆன்மீகத்தில் தன்னை உணராத வரைக்கும், அவனால் அனைவரையும் சமமாக பார்ப்பது என்பது இயலாது. பிறகு ஸம: ஸர்வேஷு பூதேஷு மத்-பக்திம்' லபதே பராம். பிறகு அவன் பிரம்ம பூத நிலையை கடந்த பிறகு, பகவானுடைய உண்மையான பக்தன் ஆவான்.
எனவே இந்த பக்தியின் வழி மிக சுலபமானது அல்ல. ஆனால் சைதன்ய மகாபிரபுவின் கருணையால், நாம் உங்கள் நாட்டில் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்து இருக்கிறோம். எப்படி எல்லா கவலைகளில் இருந்தும் விடுபட்டு இருப்பது என்று உங்களுக்குக் கற்றுத் தருவதற்காக, சைதன்ய மஹாபிரபு உங்கள் நாட்டிற்கு வந்திருப்பதால், நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். இது தான் சைதன்ய மகாபிரபுவின் இக்கம். எல்லோருமே கவலைகளால் நிறைந்து உள்ளார்கள், ஆனால் சைதன்ய மகாபிரபுவினால் வரையறுக்கப்பட்ட பாதையைப் பின்பற்றினால், அனைவரும் எல்லா கவலைகளில் இருந்தும் விடுபட முடியும். மேலும் சைதன்ய மஹாபிரபுவின் அறிவுரை என்ன? மிகவும் எளிமையானது.
- ஹரேர் நாம ஹரேர் நாம ஹரேர் நாம ஏவ கேவலம்
- கலௌ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ நாஸ்த்யேவ கதிர் அன்யதா
இது சைதன்ய மஹாபிரபுவின் தனிப்பட்ட கருத்து கிடையாது. இது சாஸ்திரங்களில், வேத சாஸ்திரங்களில் உள்ளது. இந்த அறிவுரை ப்ருஹன் நாரதீய புராணத்தில் உள்ளது. இந்த யுகத்தில், மக்கள் மிகவும் வீழ்ந்தவர்களாக இருக்கும் காரணத்தினால், அளிக்கப்பட்டுள்ள வழிமுறையும் மிகவும் எளிதானது. அவர்களால் எந்த விதமான உறுதியான அல்லது கடுமையான தவத்தை பின்பற்ற முடியாது. அது சாத்தியமல்ல. அவர்கள் இறைவனின் திருநாமத்தை ஜபம் செய்ய மட்டும் பரிந்துரைக்கப் படுகிறார்கள். அவ்வளவே. யார் வேண்டுமானாலும் செய்யலாம். இது கடினமானதே அல்ல. பிறகு, நீங்கள் "நீங்கள் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறீர்கள். உங்கள் சைதன்யரும் இந்தியர் தான், எனவே அவர் ஹரே கிருஷ்ண வைப் பரிந்துரைக்கிறார். நான் ஏன் ஜபம் செய்ய வேண்டும்? எனக்கு என்னுடைய சொந்த கடவுள் இருக்கிறார்." என்று கூறுவீர்களானால், சரி தான், நீங்கள் உங்கள் சொந்த கடவுளை கொண்டிருந்தால், பிறகு அவர் திருநாமத்தை உச்சரியுங்கள். சைதன்ய மஹாபிரபு, நீங்கள் கிருஷ்ணரின் பெயரைத் தான் ஜபம் செய்ய வேண்டும் என்று கூறவில்லை. நீங்கள் கடவுளுடன் ஏதேனும் ஓர் உறவுமுறையை கொண்டிருந்தால், நீங்கள் அவரது பெயர் மற்றும் விலாசத்தை அறிந்திருந்தால், பிற்கு நீங்கள் அவர் பெயரை ஜபம் செய்யலாம். (சிரிப்பு) துரதிரஷ்டவசமாக, நீங்கள் கடவுள் யார் என்று அறிந்திருக்கவில்லை; அவ்ர் விலாசத்தையோ, செயல்களையோ நீங்கள் அறிந்திருக்கவில்லை. எனவே நீங்கள் இந்த கிருஷ்ண எனும் பெயரை ஏற்றுக்கொள்ளுங்கள். இது நிச்சயமான பெயராகும். மேலும் நாம் உங்களுக்கு அவர் விலாசம், அவரது தந்தையின் பெயர், தாயின் பெயர், எல்லாவற்றையும் அளிக்கிறோம். எனவே, நீங்கள் உங்கள் சொந்த கடவுளின் பெயரை தெரிந்து கொண்டிருந்தால், சைதன்ய மஹாபிரபு, நீங்கள் அதனை உச்சரிக்கலாம் என்று கூறுகிறார். நீங்கள் கடவுளின் பெயரை பெற்றிருக்கிறீர்களா? யாராவது? யாருக்கும் தெரியாதா?
பக்தர் : ஜெஹோவா.
பிரபுபாதா : சரி தான், நீங்கள் ஜெஹோவா என்று ஜபிக்கலாம். எனவே, இது தான் சைதன்ய மஹாபிரபுவின் பரிந்துரை, அதாவது, இது தான் கடவுளின் பெயர் என்று அறிந்திருந்தால், அதனை ஜபம் செய்யுங்கள். நாம்னாம் அகாரி பஹுதா நிஜ-ஸர்வ-ஷக்தி: தத்ரார்பிதா நியமித: ஸ்மரணே ந கால: (சை சரி அந்த்ய 02.16, ஷி2க்ஷாஷ்டகம் 2). இதுதான் சைதன்ய மஹாபிரபுவின் அறிவுரை, அதாவது, கடவுளின் திருநாமம், கடவுளைப் போன்றே நல்லதாகும்.