TA/Prabhupada 0004 - அறிவற்றவர்களிடம் சரணடையக் கூடாது: Difference between revisions
No edit summary |
(No difference)
|
Latest revision as of 12:41, 26 May 2021
Lecture on BG 10.2-3 -- New York, January 1, 1967
செய்முறை என்னவென்றால்... அதுவும் பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தத்வித்தி ப்ரணிபாதென பரிப்ரஷ்னென ஸெவயா (பகவத்-கீதை 4.34). அந்த திவ்யமான விஞ்ஞானத்தை அறிந்துகொள்ள வேண்டுமென்றால், இந்த கொள்கையைப் பின்பற்றி ஆகவேண்டும். அது என்ன? தத்வித்தி ப்ரணிபாதென. நீங்கள் சரணடைய வேண்டும். அதே பொருள்: நமந்த எவ அதே தான். உங்களுக்குப் பணிவு இல்லாவிட்டால் உங்களால் சரணடைந்த ஆத்மாவாகமுடியாது. சரணடையவேண்டியது எங்கே? ப்ரணிபாத. அப்பேர்ப்பட்ட ஒருவரை எப்படி கண்டுபிடிப்பது, அதாவது, "இதோ இருக்கிறார் நான் சரணடைவதற்கு யோக்கியமானவர்"? அப்படியென்றால் நாம் சரணடையும் இடத்தில் ஒரு சிறிய சோதனை செய்து பார்க்கவேண்டும். அந்த அளவுக்கு அறிவு இருக்கவேண்டியது தான். அறிவற்றவர்களிடம் சரணடையக்கூடாது. அறிவுள்ளவனா அல்லது அறிவற்றவனா என்பதை எப்படி கண்டுபிடிப்பது? அதுவும் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது கதா உபநிசதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தத்வித்தி ப்ரணிபாதேன பரி...(பகவத்-கீதை 4.34). கதா உபநிஷதம் கூறுகிறது, தத்-விக்ஞானார்த்தம் ஸ குரும் ஏவாபிகச்சேத் ஷ்ரோத்ரியம் ப்ரஹ்ம-நிஷ்டம். [மண்டுக்ய உபனிசத் 1.2.12] ஷ்ரோத்ரியம் என்றால் குரு-சிக்ஷ்ய பரம்பரையில் வருபவன். அவர்கள் குரு-சிக்ஷ்ய பரம்பரையில் வந்ததற்கு என்ன ஆதாரம்? பிரம்ம நிக்ஷ்டம் என்றால் மீயுயர்ந்த பூரணமான சத்தியத்தின் மீது உறுதியாக இருப்பவன்.. அங்கு தான் சரணடைய வேண்டும். பரணிபாத என்றால் ப்ரக்ருஷ்ட-ரூபேண நிபாதம், எந்தவித தயக்கமும் இல்லாமல்.
அப்பேர்ப்பட்ட ஒருவர் தென்பட்டால், அவரிடம் சரணடைய வேண்டும். ப்ரணிபாத. மேலும் அவரிடம் பணிபுரிந்து, அவரை மகிழ்வித்து, சந்தேகங்களை கேட்கவேண்டும். அனைத்தும் தெளிவாக வெளிப்படுத்தப்படும். இத்தகைய தகுதி பெற்றவரை கண்டுபிடித்து அவரிடம் சரணடைய வேண்டும். அவரிடம் சரணடைவது இறைவனிடம் சரணடைவதற்கு சமமாகும், ஏனென்றால் அவர் இறைவனின் பிரதிநிதியானவர். சந்தேகம் கேட்கும் உரிமை இருந்தாலும், தத்துவத்தை புரிந்துகொள்வதற்கு தானே ஒழிய அவர் நேரத்தை வீணாக்குவதற்கு அல்ல. அதற்கு தான் பரிப்ரஷ்ன எனப் பெயர். இதுதான் செயல்முறை. ஆக அனைத்தும் இருக்கிறது. நாம் வெறும் அதை ஏற்று பின்பற்றவேண்டியது தான். ஆனால் நாம் அதை செய்யாமல், நேரத்தை போதையில், கர்பனை தத்துவம் பேசுவதில், எல்லா அறிவற்ற காரியங்களில் வீணாக்கினால், அய்யயோ, பிறகு ஒருபோதும் அது சாத்தியம் ஆகாது. இறைவனை ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் இறைவன் என்பவன் தேவர்கள் மற்றும் பரம ஞானிகளின் அறிவுக்கே எட்டாதவன். அப்படி இருக்கும் போது நம்முடைய சிறிய முயற்சிகள் எந்த மூலைக்கு ?
ஆக இவைதான் செயல்முறைகள். மற்றும் இந்த கொள்கைகளை, 'அஸம்மூடஹவாக' பின்பற்றினால், படிப்படியாக இருந்தாலும் நிச்சயமாக, அஸம்மூடஹ, எந்த சந்தேகமும் இல்லாமல் செய்தால்... அது தான்... ப்ரத்யக்ஷாவகமம் தர்ம்யம். நீங்கள் பின்பற்றினால், உங்களுக்கே புரியும் "ஆம், எனக்கு இதனால் ஏதோ பலன் கிடைக்கிறது." இது குருட்டு நம்பிக்கை அல்ல; நாம் குருட்டுத்தனமாக பின்பற்றுவதாக அர்த்தம் ஆகாது. கொள்கைகளை பின்பற்றினால் உங்களுக்கே புரியும்.
எடுத்துக்காட்டாக, நல்ல சத்துள்ள உணவைச் சாப்பிட்டால், வயிறு நிறைந்து, நமக்கு வலிமை கிடைப்பதை நாமே உணரலாம். யாரிடமும் கேட்க அவசியம் இல்லை. நாமே உணரலாம். அதேபோலவே, சரியான வழியில் சென்று, கோட்பாடுகளைப் பின்பற்றினால் நீங்களே புரிந்துக்கொள்வீர்கள் "ஆம், என்னுள் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது." அத்தியாயம் ஒன்பதில் அவர் கூறியிருக்கிறார் ப்ரத்யக்க்ஷாவகமம் தர்மியம் ஸுஸுகம்.
இது மிகவும் எளிதானது. மற்றும் இது மகிழ்ச்சியுடன் செய்யக்கூடிய ஒன்று. இதற்கான செய்முறை என்ன? நாம் ஹரே கிருஷ்ண ஜெபம் செய்கின்றோம் மற்றும் கிருஷ்ண-பிரசாதத்தை சாப்பிடுகிறோம். அத்துடன் பகவத் கீதையின் தத்துவத்தைக் கற்கிறோம், நல்லிசை ஒலிகளைக் கேட்கிறோம். இது மிகுந்த கடினமானதா? இது மிகுந்த கடினமானதா? நிச்சயமாக இல்லை. ஆகையால் இந்த செய்முறையினால் நீங்கள் அஸம்மூடஹ ஆவிர்கள். யாரும் உங்களை ஏமாற்ற முடியாது. ஆனால் நீங்கள் ஏமாற விரும்பினால், ஏமாற்றுபவர் பலர் இருக்கிறார்கள். அதனால் ஏமாறுபவர்களும், ஏமாற்றுபவர்களும் நிறைந்த சமுதாயத்தை உருவாக்காதீர்கள். வேத இலக்கியங்களில் பரிந்துரைக்கப்பட்ட, கிருஷ்ணரால் பரிந்துரைக்கப்பட்ட பரம்பரையைப் பின்பற்றினால் போதும். அத்தகைய அதிகாரம் பெற்றவரிடமிருந்து புரிந்துகொண்டு, வாழ்க்கையிலும் அதை செயல்படுத்த முயற்ச்சி செய்யுங்கள்.
அதன் பின் அஸமூடஹ ஸ மர்த்யெஷு. மர்த்யெஷு என்றால் மரணத்திற்கு உட்பட்டவர்கள். யார் அவர்கள்? இந்த கட்டுண்ட ஆத்மாக்கள், அதாவது பிரம்மதேவர் முதல் அற்பமான எறும்பு வரை எல்லாமே மர்த்ய. மர்த்ய என்றால் ஏதோ ஒரு நேரத்தில் அவர்களுக்கு மரணம் நிச்சயமாக ஏற்படும். அதனால் மர்த்யெஷு. இறக்கக்கூடியவர்களில் இவர் மிகச்சிறந்த அறிவாளியாகிறார். அஸம்மூடஹ ஸ மர்த்யெஷு. எப்படி? சர்வ-பாபைஹி ப்ரமுச்யதே.
அவன் பாவச்செயல்களின் எல்லா விளைவுகளிருந்தும் விடுபடுகிறான். இந்த உலகில், பெளதிக உலகில், அறிந்தோ அறியாமலோ, நாம் எப்பொழுதும் பாவச்செயல்களைச் செய்து கொண்டிருக்கிறோம். நாம் இந்த வினைப்பயன்களிலிருந்து வெளியேறவேண்டும். இதிலிருந்து எப்படி வெளியேறுவது? அதுவும் பகவத் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யக்ஞார்தாத் கர்மணோ (அ)ன்யத்ர லோகோ (அ)யம் கர்ம-பந்தன: (பகவத்-கீதை 3.9). செய்வதை கிருஷ்ணருக்காக மட்டும் செய்வதால்... யக்ஞ என்றால் விஷ்ணு அல்லது கிருஷ்ணர். கிருஷ்ணருக்காக மட்டுமே செயல்புரிந்தால், எந்த விதமான வினைப்பயனிலிருந்தும் விடுபடலாம். ஷுபாஷுப-ஃபலைஹி. நாம் மங்களகரமாகவோ, அமங்களகரமாகவோ எதையாவது செய்கிறோம். ஆனால் கிருஷ்ண உணர்வில் இருந்து அதன்படி செயற்படுபவனுக்கு, மங்களகரம், அமங்களகரம், இதற்கான எந்த கவலையும் இருப்பதில்லை, ஏனேன்றால் அவன் தொடர்பில் இருப்பது மங்களகரம் மிக்க கிருஷ்ணருடன். ஆகையினால் சர்வ-பாபைஹி ப்ரமுச்யதே. அவன் பாவச்செயல்களின் அனைத்து விளைவுகளிலிருந்தும் விடுதலை பெறுகிறான்.
இதுதான் வழிமுறை. நாம் இந்த வழிமுறையை ஏற்றுக் கொண்டால், இறுதியில் நாம் கிருஷ்ணருடன் தொடர்பு கொள்ளலாம் மற்றும் நம் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும். இந்த வழி மிகவும் எளிதானது, யார் வேண்டுமானாலும் இதை பின்பற்றலாம். மிக்க நன்றி.