TA/Prabhupada 0009 - பக்தனாக மாறிய திருடன்: Difference between revisions

No edit summary
 
(No difference)

Latest revision as of 12:44, 26 May 2021



Lecture on SB 1.2.12 -- Los Angeles, August 15, 1972

பகவத் கீதையில் கிருஷ்ணர் சொல்கிறார்: [ப. கீ. 7.25] நாஹம் ப்ரகாஷ ஸர்வஸ்ய யோக-மாயா-ஸமாவ்ருத "நான் எல்லோருக்கும் வெளிப்படுத்த படவில்லை. யோகமாயை மறைக்கிறது." அதனால் நீங்கள் எப்படி கடவுளைக் காண முடியும்? ஆனால் இந்த பாதகச்செயல் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது, அதாவது " எனக்கு கடவுளைக் காட்ட முடியுமா? நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?" கடவுள் ஒரு விளையாட்டுப் பொருளாக கருதப்படுகிறார். "கடவுள் இங்கு இருக்கிறார். அவர் கடவுளின் திருஅவதாரம்." [ப. கீ. 7.15] நமாம் துஷ்க்ருதினொ மூடாஹ ப்ரபத்யந்தே நராதமாஹ அவர்கள் பாவம் நிறைந்த அயோக்கியர்கள், முட்டாள்கள், மனித இனத்தில் மிக தாழ்ந்தவர்கள். அவர்கள் விசாரிக்கின்றனர்: "உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா?" கடவுளைக் காண என்ன தகுதியை நீங்கள் முயன்று பெற்றீர்கள்? காண்பதற்கான தகுதி இங்கு இருக்கிறது. அது என்ன? தச் சரதானா முநயஹ. முதலில் ஒருவர் விசுவாசமானவராக இருக்க வேண்டும். விசுவாசம். ஸரததானஹ: அவர் கடவுளைக் காண மிகுந்த ஆர்வம் மிக்கவராக இருக்க வேண்டும். அற்பமான மனக்கோட்டம் கொண்டு "கடவுளை உங்களால் காட்ட முடியுமா?" மாய வித்தை. கடவுள் மாய வித்தை போல. அவ்வாறு இல்லை. அவர் மிக கருத்தூன்றியவராக இருக்க வேண்டும். "ஆம், கடவுள் இருக்கிறார் என்றால்......... நாம் பார்த்திருக்கிறோம், நமக்கு கடவுளைப் பற்றி தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் நான் பார்க்க வேண்டும்." இதன் தொடர்பில் ஒரு கதை இருக்கிறது. இது அறிவுடைய தகவல் நிறைந்தது. கவனமாக கேளுங்கள். ஒரு பேச்சாளராக தொழில் கொண்டவர் பாகவதத்தைப் பற்றி ஒப்புவித்தார், அவர் கிருஷ்ணர் பற்றி விவரிக்கும் பொழுது, கிருஷ்ணர் மிகவும் உயர்ந்த நகைகளால் அலங்கரிக்கப்பட்டு இருப்பார், அவர் காட்டுக்கு மாடுகளை மேற்பார்வையிட அனுப்பப்பட்டார். அந்த கூட்டத்தில் ஒரு திருடன் இருந்தான். திருடன் சிந்தித்தான், "நாம் ஏன் விருந்தாவனம் சென்று இந்த சிறுவனை கொள்ளைக் அடிக்கக்கூடாது? சிறுவன் காட்டில் பல மிக விலை உயர்ந்த நகைகளுடன் இருக்கிறான். நான் அங்கு சென்று சிறுவனைப் பிடித்து எல்லா நகைகளையும் எடுத்துக்கொள்வேன்." அதுவே திருடனின் நோக்கம். அதனால் அவன் மிக கவனமாக "நான் அந்த சிறுவனைக் கண்டுபிடிக்க வேண்டும். அதன்பின் ஒரே இரவில் நான் கோடீஸ்வரன் ஆகிவிடுவேன். எவ்வளவு நகைகள். இல்லையா." அதனால் அவன் அங்கு சென்றான், ஆனால் அவன் தகுதி என்னவென்றால் "நான் கிருஷ்ணரை பார்க்கவேண்டும், நான் கிருஷ்ணரைப் பார்க்கவேண்டும்." அந்த ஏக்கம், ஆர்வம், அவன் விருந்தாவனத்தில் கிருஷ்ணரைப் பார்க்க வழி வகுத்தது. பாகவத பேச்சாளர் கிருஷ்ணர் பற்றி தகவல் கூறிய அதே தோற்றத்தில் அவரைப் பார்த்தான். பிறகு அவன் பார்த்தான் "ஓ நீங்கள் மிக அழகான சிறுவன் கிருஷ்ணா." பிறகு அவன் பொய் புகழ்ச்சி பேச ஆரம்பித்தான். அவன் நினைத்தான் "பொய் புகழ்ச்சி பேசிக்கொண்டே நான் எல்லா நகைகளையும் எடுத்து விடுவேன்." அதனால் அவன் தன் உண்மையான தொழில் விருப்பத்தை தெரிவித்தான். "நான் தங்களுடைய இந்த நகைகளில் கொஞ்சம் எடுத்துக் கொள்ளலாமா? தாங்கள் பெரும் செல்வந்தராக இருக்கிறீர்கள்." "இல்லை, இல்லை நீங்கள்...... என் அம்மா கோபப்படுவார்கள். என்னால் முடியாது......" கிருஷ்ணர் ஒரு குழந்தையாக கூறினார். திருடனுக்கு கிருஷ்ணர் மீது ஆர்வம் மேன்மேலும் அதிகமானது. அதன் பின்..... கிருஷ்ணரின் தொடர்பினால் அவன் தூய்மை ஆக்கப்பட்டான். இறுதியாக கிருஷ்ணர் கூறினார், "சரி நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்." திருடன் உடனடியாக பக்தன். ஆனான். ஏனென்றால் கிருஷ்ணரின் தொடர்பினால்...... அதனால் ஏதோ ஒரு வழியில் கிருஷ்ணருடன் நாம் தொடர்பு கொள்ள வேண்டும். ஏதோ ஒரு வழியில். அதன் பின் நாம் தூய்மை படுத்தப்படுவோம்.