TA/Prabhupada 0047 - கிருஷ்ணர் பூரணத்துவம் நிறைந்தவர்: Difference between revisions
No edit summary |
(No difference)
|
Latest revision as of 16:03, 26 May 2021
Lecture on BG 7.1 -- Upsala University Stockholm, September 8, 1973
அங்கே பலவிதமான யோகா அமைப்புகள் உள்ளன, பக்தி-யோகா, ஞான-யோகா, கர்ம-யோகா, ஹத-யோகா, தியான-யோகா. பல விதமான யோகாக்கள். ஆனால் பக்தி யோகாதான் அதி உன்னதமானது. அது கடைசி அத்தியாயத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. நான் உங்கள் முன் ஏழாம் அத்தியாயத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். ஆறாம் அத்தியாயத்தின் இறுதியில், கிருஷ்ணர் கூறுகிறார்: யோகிநாம் அபி ஸர்வேஷாம் மத்கதே நாந்தராத்மநா ஸ்ரத்தாவான்பஜதே யோ மாம் ஸ மே யுக்த தமோ மத: (ப.கீ.6.47). யோகிநாம் அபி ஸர்வேஷாம். யோகா முறையை பயிற்சி செய்யும் ஒருவர் யோகி என்று அழைக்கப்படுகிறார். ஆகையால் கிருஷ்ணர் சொல்கிறார் யோகிநாம் அபி ஸர்வேஷாம்: "அனைத்து யோகிகளிலும்" நான் ஏற்கனவே விவரித்துவிட்டேன். அங்கே பல மாதிரியான யோகிகள் இருக்கிறார்கள். "அனைத்து யோகிகளிலும்" யோகிநாம் அபி ஸர்வேஷாம். ஸர்வேஷாம் என்றால் "அனைத்து யோகிகளிலும்". மத்கதே நாந்தராத்மநா: "என்னைப் பற்றி தனக்குள்ளே நினைத்துக் கொண்டிருப்பவர்." நாம் கிருஷ்ணரை பற்றி நினைக்கலாம். நம்மிடம் கிருஷ்ணரின் வடிவம் இருக்கிறது. கிருஷ்ணரின் விக்ரகம், நாம் வழிப்படுகிறோம். ஆகையால் நாம் கிருஷ்ணரின் உருவ விக்ரகத்தை வழிப்படுவதில் ஈடுபட்டால், இது கிருஷ்ணரிலிருந்து வேறுபட்டதல்ல, அல்லது, விக்ரகம் இல்லை என்றால், நாம் கிருஷ்ணரின் தெய்வீகமான பெயரை ஜபம் செய்தால் அதுவும் கிருஷ்ணரே. அபிநாத்வாந் நாம-நாமிநெர்: (ஸி.ஸி.மத்திய17.133). கிருஷ்ணர் முழுமையானவர். ஆகையினால், அவருக்கும் அவருடைய பெயருக்கும் இடையில் வேறுபாடுகள் இல்லை. அவருக்கும் அவருடைய உருவத்திற்கும் இடையில் வேறுபாடுகள் இல்லை. அவருக்கும் அவருடைய சித்திரத்திர்க்கும் இடையில் வேறுபாடுகள் இல்லை. அவருக்கும் அவருடைய தலைப்பிற்கும் இடையில் வேறுபாடுகள் இல்லை. கிருஷ்ணர் சம்மந்தபட்ட எதுவும் கிருஷ்ணரே. இதை தான் முழுமையான ஞானம் என்கிறோம். த் நீங்கள் கிருஷ்ணர் நாமத்தை ஜபித்தாலும் அல்லது அவருடைய திருவுருவத்தை வழிபட்டாலும் அனைத்துமே கிருஷ்ணர்தான். ஆகையால் அங்கே வேறுபட்ட வடிவத்தில் பக்தி மார்க்கங்கள் உள்ளன. ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத-ஸேவனம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்ம-நிவேதனம் (ஸ்ரீ.பா. 7.5.23). நீங்கள் சும்மா கிருஷ்ணரைப் பற்றி கேளுங்கள். அந்த கேட்பதும் கிருஷ்ணரே. எவ்வாறு என்றால் இப்பொழுது நாம் கிருஷ்ணரைப் பற்றி கேட்க முயற்சிக்கிறோம். ஆகையால் அந்த கேட்பதும் கிருஷ்ணரே. இந்த ஆண்களும் பெண்களும் ஜபிக்கிறார்கள். அந்த ஜபமும் கிருஷ்ணரே. ஸ்ரவணம் கீர்த்தனம். பிறகு ஸ்மரணம். நீங்கள் கிருஷ்ணரை பற்றி ஜபிக்கும் பொழுது, கிருஷ்ணரின் உருவ படத்தை நினைவில் கொண்டால் அதுவும் கிருஷ்ணரே. அல்லது நீங்கள் கிருஷ்ணரின் உருவ படத்தைப் பார்த்தாலும் அதுவும் கிருஷ்ணரே. நீங்கள் கிருஷ்ணரின் விக்ரகத்தைப் பார்த்தால். அதுவும் கிருஷ்ணரே. நீங்கள் கிருஷ்ணரை பற்றி ஓரளவுக்கு கற்றறியூங்கள். அதுவும் கிருஷ்ணரே. ஆகையால் எவ்வகையிலேனும், ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத-ஸேவனம் அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்ம-நிவேதனம் (ஸ்ரீ.பா. 7.5.23). இந்த ஒன்பது வகையில், எதை நீங்கள் ஏற்றுக் கொண்டாலும், நீங்கள் உடனடியாக கிருஷ்ணரின் தொடர்புக் குரியவர். நீங்கள் ஒன்பது வகைகளையும் ஏற்றுக் கொள்ளலாம் அல்லது எட்டு அல்லது ஏழு அல்லது ஆறு அல்லது ஐந்து அல்லது நான்கு அல்லது மூன்று அல்லது இரண்டு, குறைந்தது ஒன்றாவது, நீங்கள் வளைந்து கொடுக்காது எடுத்தால் அத்துடன், ஒருவேளை இந்த ஜபித்தல். இதற்கு விலையே இல்லை. உலகெங்கிலும் நாம் ஜபித்துக் கொண்டிருக்கிறோம். நாம் ஜபிப்பதைக் கேட்டு எவரும் ஜபிக்கலாம். உங்களுக்கு இதில் செலவு இல்லை. அத்துடன் நீங்கள் ஜபிப்பதால் உங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. ஆகையால், நீங்கள் அவ்வாறு செய்தால், நீங்கள் உடனடியாக கிருஷ்ணருடன் தொடர்பு கொள்வீர்கள். அதுதான் இதன் பயன். உடனடியாக. ஏனென்றால் கிருஷ்ணரின் பெயரும் கிருஷ்ணரும் வேறல்ல. அபிநத்வான் நாம-நாமிநொ: (ஸி.ஸி.மத்திய17.133). இதுவே வேத இலக்கியம் கொடுக்கும் விரிவுரை. அபிநத்வான் நாம-நாமிநொ: நாம சிந்தாமணி: கிருஷ்ணர். கிருஷ்ணரின் பெயர் சிந்தாமணி. சிந்தாமணி என்றால் ஆன்மீகம். சிந்தாமணி-ப்ரகர-சத்மசு கல்ப-விர்க்ஸ-லக்ஸாவிர்தெஸு (பி.ஸ.5.29). இதுதான் வேத இலக்கிய விரிவுரை. கிருஷ்ணர் எங்கு வசிக்கின்றாரோ, அந்த இடம் விவரிக்கப்பட்டுள்ளது: சிந்தாமணி-ப்ரகர-சத்மசு கல்ப-விர்க்ஸ-லக்ஸாவிர்தெஸு சுரபீர் அபிபாலயந்தம் (பி.ஸ.5.29). ஆகையால் நாம, கிருஷ்ணரின் தெய்வீகப் பெயர் சிந்தாமணியும் ஆகும், ஆன்மீகம். நாம சிந்தாமணி கிருஷ்ணர்: அவர் அதே கிருஷ்ணர், நபர். நாம சிந்தாமணி கிருஷ்ணஸ் சைதன்ய (ஸி.ஸி.மத்திய17.133). சைதன்ய என்றால் இறக்கவில்லை, ஆனால் உயிர்வழிகள். நீங்களும் இதே பெயரை ஜபித்தலினால் தனிபட்ட முறையில் கிருஷ்ணருடன் பேசும் வாய்ப்பை பெறலாம். அதுவும் சாத்தியமே. ஆனால் இது படிப்படியாக உணரப்படும். நாம சிந்தாமணி கிருஷ்ணஸ் சைதன்ய-ராச-விக்ரஹ. ராச-விக்ரஹ என்றால் மகிழ்ச்சி, அனைத்து மகிழ்ச்சியின் தேக்கம். நீங்கள் ஹரே கிருஷ்ணா பெயரை ஜபித்து வரும் பொழுது, படிப்படியாக நீங்கள் ஆன்மீக இன்பத்தை பெறுவீர்கள். எவ்வாறு என்றால் இந்த ஆண்களும் பெண்களும், ஜபிக்கும் பொழுது, சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறார்கள். யாராலும் அவர்களைப் பின்பற்ற முடியாது. ஆனால் அவர்கள் பைத்தியக்காரர்கள் அல்ல, அவர்கள் ஜபித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே, அவர்கள் இன்பம் அடைகிறார்கள், ஆன்மீக இன்பம். ஆகையினால் அவர்கள் நடனம் ஆடுகிறார்கள். அது நாய்கள்-நடனம் அல்ல. இல்லை. அது உண்மையிலேயே ஆன்மீக நடனம், ஆத்மாவின் நடனம். ஆகையினால், அவர் ராச-விக்ரஹ, என்று அழைக்கப்படுகிறார் அனைத்து மகிழ்ச்சியின் தேக்கம். நாம சிந்தாமணி கிருஷ்ணஸ் சைதன்ய-ராச-விக்ரஹ பூர்ணஹ (ஸி.ஸி.மத்திய 17.133). பூர்ண, முழுமையான. கிருஷ்ணரைவிட ஒரு சதவிகிதம் குறைவு என்பதல்ல. இல்லை. நூறு சதவிகிதம் கிருஷ்ணர். முழுமையான. பூர்ண. பூர்ண என்றால் முழுமையான. பூர்ண ஸுட்தஹ. ஸுட்த என்றால் புனிதமான. இந்த பௌதிக உலகத்தில் தூய்மைக் கேடு உள்ளது. பௌதிகம், எந்த பெயர் ஜபித்தாலும், அது தூய்மைக் கேடு நிறைந்ததால், உங்களால் இதில் நீண்ட காலத்திற்கு தொடர முடியாது. இது மற்றொரு அனுபவம். ஆனால் இந்த ஹரே கிருஷ்ணா மந்திரத்தை நீங்கள் இருபத்தி-நான்கு மணி நேரமும் ஜபித்துக் கொண்டிருந்தாலும், நீங்கள் சோர்வை உணரமாட்டீர்கள். இது ஒரு சோதனை. ஜபிக்கத் தொடருங்கள். இந்த ஆண்கள், எதையும் சாப்பிடாமலும், தண்ணீர் குடிக்காமலும் இருபத்தி-நான்கு மணி நேரமும் ஜபிக்க முடியும். இது மிக இன்பகரமானது. ஏனென்றால் இது முழுமையானது, ஆன்மீகம், ஸுட்த. ஸுட்த என்றால் தூய்மை. பௌதிக தூய்மைக் கேடு அற்றது. பௌதிக மகிழ்ச்சி, எவ்வித மகிழ்ச்சியானாலும் பௌதிக உலகத்தின் உயர்ந்த மகிழ்ச்சி பாலுறவு. ஆனால் இதை நீங்கள் இருபத்தி-நான்கு மணி நேரமும் அனுபவிக்க முடியாது. இயலாது. அதை நீங்கள் சில நிமிடங்களுக்கு மட்டுமே அனுபவிக்கலாம். அவ்வளவுதான். நீங்கள் அனுபவிக்க உந்தப்பட்டாலும், அதை மறுத்துவிடுவீர்கள்: "இல்லை, அவ்வளவுதான்." அதுதான் பௌதிகம். ஆனால் ஆன்மீகம் என்றால் அதற்கு முடிவு இல்லை. நீங்கள் தொடர்ந்து அனுபவிக்கலாம், இருபத்தி-நான்கு மணி நேரம். அதுதான் ஆன்மீக மகிழ்ச்சி. ப்ரஹ்ம-ஸெளக்யம் த்வ அனந்தம் (ஸ்ரீ.பா.5.5.1). அனந்தம். அனந்தம் என்றால் முடிவற்றது.