TA/Prabhupada 0647 - யோகம் என்பது பரம்பொருளோடு நம்மை இணைப்பதாகும்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0647 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 9: Line 9:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0646 - Yoga System is Not that You Go On Doing All Nonsense|0646|Prabhupada 0648 - By Nature We Are Living Entities, We Must Act|0648}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0646 - எல்லாவிதமான முட்டாள்தனத்தையும் செய்வதல்ல யோகபயிற்சி|0646|TA/Prabhupada 0648 – இயற்கையாக நாம் வாழும் ஜீவிகள் - செயல்பட்டே ஆகவேண்டும்|0648}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:46, 25 June 2021



Lecture on BG 6.2-5 -- Los Angeles, February 14, 1969

பக்தர்: நான்காவது ஸ்லோகம். "யோக நிலையை அடைந்தார் ஒருவர் என்று சொல்லப்படுவது ஜட ஆசைகளைத் துறந்து, புலன் இன்பத்திற்காக செயலாற்றாமலும் பலன் நோக்கு செயல்களில் ஈடுபடாமலும் இருப்பவரையே (ப.கீ. 6.4)

பிரபுபாதர்: ஆமாம். இதுவே யோகத்தின், யோகப் பயிற்சியின் உன்னத நிலை. யோகத்தை அடைந்தவன் எனப்படுவான். அதாவது, யோகம் என்றால் இணைதல். அதே உதாரணம் தான். ஒருவேளை என் விரல் என் உடலை விட்டு போகுமானால். அல்லது விரலை எடுத்துக்கொள்ள வேண்டாம், ஏதாவது ஒரு கருவியின் பாகத்தை எடுத்துக் கொள்வோம். அது கருவியில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு வெறுமனே கிடக்கிறது. அதனை கருவியுடன் இணைத்தவுடன் செயலாற்ற தொடங்கிவிடும். கட்ட கட்ட, கட்ட கட்ட, கட்ட கட்ட என்று வேலை செய்யத் தொடங்கிவிடும். அதாவது யோகம், அது இணைக்கப்பட்டு விடுகிறது. அதுபோலவே, இப்போது நாம் வேறுபட்டு இருக்கின்றோம். இந்த ஜட செயல்கள், பலன் நோக்கு செயல்கள், அவை பெரும் நேர விரயம் என்று விளக்கப் படுகின்றன. மூட. மூட.. இவை பகவத் கீதையில் மூட என்று கூறப்படுகின்றன. மூடன் என்றால் முட்டாள். ஏன்? அவ்வளவு பெரிய தொழிலதிபர். அவரை முட்டாள் என்கிறாய் ஏன்? அவர் ஆயிரக்கணக்கான டாலர்களை ஒரு நாளைக்கு சம்பாதிக்கிறார். ஆனால் அவர்கள் எல்லாம் மூடர்கள், முட்டாள்கள் என்றே கூறப்படுகிறார்கள். ஏனெனில் அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள், ஆனால் எதனை அனுபவிக்கிறார்கள்? அவர்களும் அதே உண்ணுதல், உறங்குதல், உடலுறவு என்பதையே அனுபவிக்கிறார்கள். அவ்வளவுதான். அதாவது ஒரு மனிதன் லட்சக் கணக்கான டாலர்களை சம்பாதிப்பதனால், லட்சக்கணக்கான பெண்களை அனுபவிக்கலாம் என்று அர்த்தமல்ல. அது சாத்தியமல்ல. அவனது அனுபவிக்கும் சக்தி பத்து டாலர்கள் சம்பாதிப்பவனைப் போன்றதுதான். அவனது உண்ணும் திறனும் பத்து டாலர்கள் சம்பாதிக்கும் மனிதனை போன்றதுதான். "நான் வாழ்க்கையை அனுபவிக்கும் அளவு அந்த பத்து டாலர் சம்பாதிக்கும் மனிதனை போன்றதாகவே இருக்கிறதே பிறகு நான் ஏன் கடினமாக உழைத்து லட்சம் டாலர்கள் சம்பாதிக்க வேண்டும்?" என்று அவன் நினைப்பதில்லை. என் திறனை நான் ஏன் வீணடிக்க வேண்டும்?" என்று அவன் நினைப்பதில்லை. இவர்களுக்கு பெயர்தான் மூடர்கள்.

ந மாம் துஷ்க்ருதின (BG 7.15): உண்மையில் அவன் லட்ச ரூபாய் சம்பாதிப்பவனாக இருக்கும் பட்சத்தில் அவன் தன்னையும் தனது நேரம் சக்தி ஆகியவற்றையும் கடவுளையும் வாழ்வின் நோக்கத்தையும் புரிந்துகொள்வதில் ஈடுபடுத்த வேண்டும். ஏனென்றால் அவனுக்கு பொருளாதாரப் பிரச்சனை இல்லை. அவனிடம் போதிய நேரம் இருக்கின்றது, அதனை அவன் கிருஷ்ண உணர்வில் கடவுள் பக்தியில் செலவழிக்க வேண்டும். ஆனால் அவன் அவ்வாறு செய்வதில்லை. எனவே அவன் மூடன். மூடா என்றால் உண்மையில் கழுதை. அவனுடைய புத்தி அவ்வளவு சரியாக இருக்காது. யோகத்தின் உன்னத நிலையை, ஜட ஆசைகளைத் துறந்தவனே அடைய முடியும். யோகத்தின் உன்னத நிலையை அடைந்தவன் திருப்தியாக இருப்பான். அவனுக்கு ஜட ஆசைகள் இருப்பதில்லை. அதுவே முழுமை பெற்ற நிலை. அவன் புலன் இன்பத்திற்காகவோ பலன்நோக்கு செயல்களுக்காகவோ செயல்படுவதில்லை. பலன்நோக்கு செயல்கள் கூட புலன் இன்பத்திற்காக செய்வதுதான். எனவே ஒருவர் புலன் இன்பத்திலேயே ஈடுபட்டு இருக்கின்றார், புலன் இன்பத்திற்காகவே பணம் சேர்க்கின்றார்.

எனவே பலன்நோக்கு செயல்கள் புணிதச் செயல்களாக இருந்தால். புணித செயல்கள் வேதங்களின் படி எங்குமே, நீ நல்லவனாக இருந்தால், கொடையாக நீ அளிக்கும் பணம் புண்ணிய செயலில் சேர்கிறது. ஒரு மருத்துவமனை திறப்பதற்கு பணம் கொடுத்தால், பள்ளிக்கூடம் திறப்பதற்கும் இலவச கல்வி கொடுப்பதற்கும் நன்கொடை செய்வது, இவையெல்லாம் புனித செயல்கள். ஆனால் அவையும் புலன் இன்பதற்காகவே செய்யப்படுகின்றன. கல்வியை பரப்புவதற்காக ஈகை செய்கிறேன் என்று வைத்துக் கொள்வோம், அப்படி என்றால் என் அடுத்த பிறவியில் கல்வியைப் பெறுவதற்கு எனக்கு நல்ல வசதி வாய்ப்புகள் ஏற்படும். நான் நல்ல கல்வி பயில்வேன், கல்வி பயின்று பெரிய பதவியை அடைவேன். ஆனால் இறுதியில், கருத்து என்ன? எனக்கு நல்ல பதவி கிடைத்து, நிலை உயரும் போது, நான் எப்படி அதை பயன்படுத்துகிறேன்? புலன் இன்பத்திற்காக நன்றாகவே. அவ்வளவுதான். ஏனெனில் எனக்கு வேறு ஒன்றும் தெரியாது. அதுதான் பலன்நோக்கு செயல். நான் சொர்க்கத்திற்கு செல்வதால் எனக்கு நல்ல வாழ்க்கை கிட்டும். உங்கள் அமெரிக்காவில் இந்தியாவைவிட வாழ்க்கைத்தரம் சிறப்பாக உள்ளது அதுபோல, ஆனால் "சிறப்பான வாழ்க்கைத் தரம்" என்றால் என்ன? அதே உண்ணுதல், உறங்குதல், சற்று சிறப்பாக அவ்வளவுதான். நீங்கள் வேறு ஒன்றும் அதிகமாக செய்துவிடப் போவதில்லை. அவர்களும் உண்ணுகிறார்கள். அவர்கள் சற்று குருணை தானியத்தையும் நீங்கள் நல்லவித தானியத்தையும் உண்கிறீர்கள். ஆனால் உண்ணுதல். ஒரு அளவுக்கு மேல் உண்ண முடியாது.

எனவே என்னுடைய சிறந்த வாழ்க்கை முறை என்பது ஆன்மீக உணர்வைக் குறிக்காது. சிறப்பான முறையில் உண்ணுதல், உறங்குதல், இனப்பெருக்கம் செய்தல் அவ்வளவுதான். இதற்குப் பெயர்தான் பலன்நோக்கு செயல்கள். பலன்நோக்கு செயல்களும் இன்னொரு விதமான புலன் இன்பம் தான், ஆனால் அதுவும் புலன் இன்பத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். யோகா என்பது பரம்பொருளுடன் இணைவது. பரம புருஷன் நம்முடன் தொடர்பு கொள்ளும் பொழுது, துருவமஹாராஜாரைப் போல. அவர் நாராயணரை கண்டவுடன்... அந்தச் சிறுவன் பகவானை காண்பதற்காக கடும் தவ நெறிகளைக் கடைப்பிடித்து வந்தான். கண்டான். கண்ட பின்பு அவர் கூறியதாவது, ஸ்வாமின் க்ருதார்தோ 'ஸ்மி வரம் ந யாசே (சை.ச. மத்திய 22.42). "பகவானே நான் இப்பொழுது மிகவும் திருப்தியாக இருக்கின்றேன். எனக்கு எந்த வரத்தையும் உன்னிடமிருந்து கேட்க வேண்டாம்." வரம் என்றால் என்ன? வரம் என்றால் நல்ல அரசாங்கம் நல்ல மனைவி நல்ல உணவுப் பண்டங்கள். இவற்றையே நாம் வரம் என்று நினைக்கின்றோம். ஆனால் உண்மையில் ஒருவர் பகவானுடன் இணையும் போது இத்தகைய வரங்கள் அவருக்குத் தேவைப் படுவதில்லை. அவர் திருப்தியாக இருக்கின்றார். முழுமையான திருப்தியுடன் இருக்கின்றார். ஸ்வாமின் க்ருதார்தோ 'ஸ்மி வரம் ந யாசே (சை.ச. மத்திய 22.42).

இந்த துருவ மகாராஜனின் சரித்திரத்தை நான் உங்களுக்கு பல முறை கூறி இருக்கின்றேன், அவன் ஒரு சிறுவன் ஐந்து வயது சிறுவன். அவன் தனது சிறிய தாயினால் அவமானப் படுத்தப் படுகிறான். அவன் தனது தந்தையின் மடியில் உட்கார முயல்கிறான். அப்போது அவனது சிறிய தாயானவள், "நீ உனது தந்தையின் மடியில் உட்கார முடியாது ஏனெனில் நீ எனது கருவிலிருந்து பிறக்கவில்லை" என்கிறாள். அவன் சத்திரிய சிறுவனாக இருந்தபடியால், ஐந்து வயதே ஆனபோதிலும், இதனை பெரும் அவமானமாக அவன் எடுத்துக் கொண்டான். எனவே அவன் தன் அன்னையிடம் சென்றான், "தாயே, சிறியதாய் என்னை இவ்வாறு அவமதித்து விட்டார்கள்" என்றான். அவன் அழுதான். அன்னை சொன்னாள், "நான் என்ன செய்வது மகனே? உன் தந்தை உனது சிறிய தாயாரை தான் அதிகம் விரும்புகிறார் நான் என்ன செய்ய முடியும்? " "இல்லை எனக்கு என் தந்தையின் ராஜ்யம் வேண்டும். அதை நான் எப்படி அடைவது" "எனது அருமை மகனே கிருஷ்ண பகவான் அருள் செய்தால் உனக்கு அது கிட்டும்" என்றாள் தாய். "கடவுள் எங்கே?" என்றதற்கு அவள், "கடவுள் காட்டில் இருப்பதாக நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். பெரும் முனிவர்கள் அங்கு சென்றுதான் கடவுளை பார்க்கிறார்கள்." என்று கூறினாள். எனவே அவன் காட்டுக்குச் சென்று கடும் தவம் புரிந்து கடவுளைப் பார்த்தான். ஆனால் கடவுளை நாராயணரை பார்த்தவுடன் அவனுக்கு தன் தந்தையின் ராஜ்யத்தின் மேலிருந்த ஆவல் இல்லாமல் போனது. ஆசை இல்லை. "பகவானே நான் திருப்தியாக இருக்கிறேன் முற்றிலும் திருப்தியாக இருக்கிறேன்" என்று கூறினான். எனக்கு இதற்கு மேல் வேறொன்றும் வேண்டாம் ராஜ்யம் என் தந்தையின் ராஜ்யம்" அவன் ஒரு ஒப்புமை கூறுகிறான்,"நான் சில கூழாங்கற்களை தேடி வந்தேன், இங்கு எனக்கு கிடைத்ததோ விலை மதிக்க முடியாத ரத்தினங்கள்." எனவே அவன் மிகுந்த திருப்தியுடன் இருப்பது தெரிகிறது.

உண்மையில் பகவானுடன் இணையும் பொழுது, இந்த ஜட உலகில் கிடைக்கும் ஆனந்தத்தை விட ஆயிரம் மடங்கு அதிக ஆனந்தம் அடைவதை உணர முடியும். அதுவே கடவுளை உணர்தல். அதுவே யோகத்தின் உன்னத நிலை.