TA/Prabhupada 0706 – உண்மையான உடல் உள்ளேயிருக்கிறது: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0706 - in all Languages Category:TA-Quotes - 1975 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0705 - We Will Find in Bhagavad-gita, the Super-excellence of this Science of God|0705|Prabhupada 0707 - Those Who Aren’t Enthusiastic—Lazy, Lethargetic—They Can’t Advance in Spiritual Life|0707}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0705 – இறை விஞ்ஞானத்தின் சிறப்பை நாம் பகவத்கீதையில் காணலாம்|0705|TA/Prabhupada 0707 – சுறுசுறுப்பற்ற சோதாக்களும், சோம்பல் மிக்கவர்களும் ஆன்மிக வாழ்வில் உயரமுடியாது|0707}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->

Latest revision as of 07:26, 10 July 2021



Lecture on SB 3.26.29 -- Bombay, January 6, 1975

நம்முடைய முயற்சி எப்படி விடுபட வேண்டும் இந்த பௌதிக வாழ்விலிருந்து, பின்னர் ஆன்மீக தளத்தைஅடைவது எப்படி என்பதற்காக இருக்க வேண்டும். இதுதான் மனித வாழ்வின் முயற்சியாக இருக்க வேண்டும். பூனைகளுக்கும் நாய்களுக்கும் இந்த அளவுக்கு முன்னேறிய உணர்வில்லை. எனவே, அவைகளால் இதற்கு முயற்சி செய்ய முடியாது. அவைகள் இந்த ஜட உடலோடும் ஜட புலன்களோடும் திருப்தி அடைந்துள்ளன. ஆனால் இந்த மனித உடலில் இதைப் புரிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு உள்ளது. அதாவது இந்தப் புலன்கள், இந்த ஸ்தூல உடல், இவை பொய் என்றும், அல்லது நிலையில்லாதது, அல்லது இது என்னுடைய உண்மையான உடல் அல்ல என்ற வகையில் பொய். உண்மையான உடல் இந்த ஜட உடலுக்குள் உள்ளது. அது ஆன்மீக உடலாகும். அஸ்மின் தே₃ஹே தே₃ஹிந꞉. தே₃ஹிநோ (அ)ஸ்மின், ததா₂ தே₃ஹாந்தர-ப்ராப்தி꞉ (BG 2.13), அஸ்மின் தே₃ஹிந꞉. எனவே ஆன்மீக உடல் தான் உண்மையில் உடல், இந்த ஜட உடல் அதனை மூடியிருக்கும் உறை தான். இது பல்வேறு விதத்தில் பகவத்கீதையில் விளக்கப்பட்டுள்ளது. வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா₂ விஹாய (BG 2.22). இந்த ஜட உடல் ஒரு உடையை போன்றது. இந்த உடை... நான் ஒரு சட்டையை அணிந்துள்ளேன், நீங்கள் ஒரு சட்டையுடன் அதற்கு மேல் ஒரு கோட் அணிந்துள்ளீர்கள். இதுவெல்லாம் முக்கியமான விஷயம் அல்ல. முக்கியமான விஷயம் சட்டைக்குள் இருக்கும் உடல்தான். அதைப் போலவே, இந்த ஜட உடல், ஆன்மீக உடலை மூடியிருக்கும் வெளிப்புற உறை மாத்திரமே பௌதிக சூழ்நிலை மூலம். ஆனால் உண்மையான உடல் உள்ளே உள்ளது. தே₃ஹிநோ (அ)ஸ்மின் யதா₂ தே₃ஹே (BG 2.13). வெளிப்புறமாக இருக்கும் பௌதிக உடல் தேஹ என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த தேகத்துக்கு உரிமையாளன் தேஹி என்று அழைக்கப்படுகிறான். "தேகத்தை உடையவன்" இதை நாம் புரிந்து.... இதுவே பகவத் கீதையின் முதல் உபதேசம் ஆகும்.

எனவே ஒருவன் அறிவதற்கு ஆவலுடன் இருக்க வேண்டும், "எப்படி இந்த பௌதிக உடல் ஏற்பட்டது, என்னை மூடியவாறு (ஆன்மீக உடலை), அஹம் ப்₃ரஹ்மாஸ்மி. இந்த விஞ்ஞானத்தை புரிந்து கொள்வதற்கு, கபிலதேவர் பௌதிக சாங்கிய தத்துவத்தை விளக்குகிறார், எப்படி இந்த பௌதிக விஷயங்கள் உருவாகிவருகின்றன. இதைப் புரிந்துகொள்ள... அதே விஷயம்தான்: இந்த எளிய விஷயத்தை புரிந்துகொள்வது, அதாவது "நான் இந்த உடல் அல்ல. உடல் ஆன்மாவிடமிருந்து உருவாகியுள்ளது. எனவேதான் நாம் பௌதிக விஞ்ஞானிகளுக்கு சவால் விடுகிறோம். ஆத்மா உடலிலிலிருந்து தோன்றியிருக்கிறது என்கிறார்கள் அவர்கள். இல்லை. ஆத்மா உடலிலிலிருந்து உருவாகவில்லை, ஆனால் உடல் தான் ஆத்மாவிடமிருந்து உருவாகியுள்ளது. அப்படியே எதிர்மாறானது. ஜட விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள் இந்த ஜடப் பொருட்களின் சேர்க்கையினால் ஒரு நிலையில் உயிரின் அறிகுறிகள் ஏற்படுகின்றன. இல்லை. அப்படி இல்லை. உண்மை என்னவென்றால், ஆன்மீக ஆத்மா அங்கே உள்ளது. அவை இந்த பிரபஞ்சம் எங்கும் திரிகின்றன, பிரம்மாண்ட பிரம்மன். பிரம்மாண்ட என்றால் பிரபஞ்சம். இந்த ஆத்மா சில சமயம் ஓர் உயிரினத்தில் உள்ளது, சில சமயம் இன்னொரு உயிரினத்தில் உள்ளது. சில சமயம் அவன் இந்த கிரகத்தில் உள்ளான், சில சமயம் வேறொரு கிரகத்தில். இப்படியாக அவனுடைய கர்மாவை பொறுத்து அவன் திரிந்து கொண்டிருக்கிறான். இதுவே ஜட வாழ்க்கையாகும். ஏஇ ரூபே ப்₃ரஹ்மாண்ட₃ ப்₄ரமிதே (CC Madhya 19.151). அவன் எந்த குறிக்கோளுமின்றி அலைந்து திரிகின்றான். "வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நான் ஏன் இந்த சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளேன், எல்லா துன்பத்திற்கும் காரணமான இந்த ஜட உடலை ஏற்றதன் மூலம்?" இந்தக் கேள்விகள் கேட்கப்பட வேண்டும். இதுதான் ப்₃ரஹ்ம-ஜிஜ்ஞாஸா. இந்த கேள்விகளுக்கு சரியாக விடை அளிக்கப்பட வேண்டும், பிறகு நம் வாழ்க்கை வெற்றியடையும். இல்லையென்றால், இது ஒரு பூனை அல்லது நாயின் உடலை ஏற்றது போல் வீணாகும். எந்தப் புரிதலும் இல்லை, மூடா₄. மூடா₄.