TA/Prabhupada 0265 - பக்தி என்றால் ஹிருஷிகேஷவிற்கு சேவை செய்வது, புலன்களின் எஜமானர்

Revision as of 18:55, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.10 -- London, August 16, 1973

பிரத்யும்னன்: மொழிபெயர்ப்பு, "ஓ பரத குலத் தோன்றலே, அச்சமயத்தில் கிருஷ்ணர் புன்சிரிப்புடன், இரு தரப்பு சேனைகளுக்கு மத்தியில், துயரத்தால் பாதிக்கப்பட்ட அர்ஜுனனிடம் பின்வருமாறு கூறினார்." பிரபுபாதர்: ஆக ஹ்ருஷீகேஷ:, ப்ரஹசன இவ. கிருஷ்ணர் மெல்லென சிரித்தார், புன்னகைத்தார், "எப்படிப்பட்ட முட்டாள் இந்த அர்ஜுனன்." முதலில் அவர், "என்னை அங்கு எடுத்துச்செல்லுங்கள்," என்று கூறினார். செனயோர் உபயோர் மத்யே ரதம் ஸ்தாபய மே அச்யுத (பகவத் கீதை 1.21). "கிருஷ்ணா, என்னுடைய ரதத்தை இரு தரப்பு படைவீரர்களுக்கு மத்தியில் நிறுத்துங்கள்." (பக்கத்தில்:) எனக்கு தண்ணீர் கொண்டுவாருங்கள். இப்பொழுது... அவர் ஆரம்பத்தில் மிகவும் ஆர்வமூடன் இருந்தார், அதாவது "என்னுடைய ரதத்தை இரு சேனைகளுக்கும் மத்தியில் நிறுத்துங்கள்." இப்பொழுது இந்த அயோக்கியன் சொல்கிறான், 'ந யோத்ஸ்ய', "நான் சண்டைப் போட மாட்டேன்." இந்த அயோக்கியத்தனத்தை பாருங்கள். ஆக அர்ஜுனரே; கிருஷ்ணரின் நெருங்கிய நண்பன்; மாயை அவ்வளவு சக்திவாய்ந்தது, அதாவது அவரே அயோக்கியன் ஆகிவிட்டார், மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது. முதலில் பெரும் உற்சாகம்: "ஆம், என்னுடைய ரதத்தை இரு சேனைகளுக்கு மத்தியில் நிறுத்துங்கள்." ஆனால் இப்போது..., ந யோத்ஸ்ய இதி கோவிந்தம் (பகவத் கீதை 2.9), "நான் போர் புரிய போவதில்லை." இது அயோக்கியத்தனம். ஆக கிருஷ்ணர் மெல்ல சிரித்தார், அதாவது "இவன் என் நண்பன், நெருங்கிய நண்பன், மேலும் இவ்வளவு பெரிய... மேலும் இப்போது 'நான் போர் புரியமாட்டேன்.' என்று சொல்கிறான். ஆக கிருஷ்ணர் சிரிக்கிறார், இந்தச் சிரிப்பு மிகவும் முக்கியமானது, ப்ரஹசன். தம் உவாச ஹ்ருஷீகேஷ ப்ரஹசன் இவ பாரத, செனயோர் உபயோர் விஷீதந்தம். வருந்துகிறார். முதலில் மிகவும் உற்சாகமாக போர் புரிய வந்தார்; இப்போது வருந்துகிறார். மேலும் கிருஷ்ணர் இங்கு ஹ்ருஷீகேஷ என்று அழைக்கப்பட்டிருக்கிறார். அவர் திடமானவர். அவர் 'அச்யுத'. அவர் உறுதியானவர். அவர் மாற்றமடையாதவர். ஹ்ருஷீகேஷ என்னும் வார்த்தையின் மற்றொரு முக்கியத்துவம் என்னவென்றால்... ஏனென்றால் நாரத-பஞ்சராத்திரத்தில் பக்தி என்றால் ஹ்ருஷீகேஷ-சேவனம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, ஹ்ருஷீகேஷ என்ற இந்த பெயர் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. ஹ்ருஷீகேஷ-சேவனம் பக்திர் உச்யதே. பக்தி என்றால் ஹ்ருஷீகேஷருக்கு, அதாவது புலன்களின் எஜமானருக்கு பணியாற்றுவது. புலன்களின் எஜமானர், அப்பேர்பட்ட கிருஷ்ணரை சில அயோக்கியர்கள் ஒழுக்கமற்றவர் என்று வர்ணிக்கிறார்கள். அவர் புலன்களின் எஜமானர், அப்பேர்பட்டவர் நெறியற்றவராம். அவன் எப்படி பகவத்-கீதையை கற்றிருக்கிறான் என்று பாருங்கள். கிருஷ்ணர் சிறந்த பிரம்மச்சாரியாக இருக்கும் பட்சத்தில்... கிருஷ்ணர் மிகச்சிறந்த பிரம்மச்சாரி, ஏனென்றால்.... அது பீஷ்மதேவராலேயே அறிவிக்கப்பட்டது. பீஷ்மதேவர் பிரபஞ்சத்திலேயே சிறந்த ஒரு பிரம்மச்சாரி. சத்தியவதியின் தந்தைக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.... உங்களுக்கு அந்த கதை தெரியுமா? சத்தியவதியின் தந்தை.... பீஷ்மதேவரின் தந்தை ஒரு மீனவப் பெண்ணால் ஈர்க்கப்பட்டார், மீனவப் பெண். ஆக அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு அந்த பெண்ணின் தந்தை மறுத்தார், "முடியாது உங்களுக்கு என் பெண்ணை தர முடியாது." "ஏன்? நான் ஒரு அரசன், நான் உன் பெண்ணைக் கேட்கிறேன்." "இல்லை, உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான்." பீஷ்மதேவர் அவருடைய முதல் மனைவி, கங்கை தாயாரின் மகன் ஆவார். கங்கை தாயார், சந்தனு மஹாராஜாவின் மனைவியாக இருந்தாள், மற்றும் பீஷ்மதேவர், பிழைத்திருந்த ஒரே மகன் ஆவார். சந்தனு மஹாராஜாவிற்கும் கங்கை தாயாருக்கும் மத்தியில் ஒரு ஒப்பந்தம் இருந்தது, அதாவது "நான் உங்களை திருமணம் செய்துக் கொள்கிறேன், ஆனால் பிறக்கும் குழந்தைகள் அனைவரையும் கங்கை நீரில் தூக்கிப் போட தாங்கள் அனுமதிக்கவேண்டும். மேலும் நீங்கள் அனுமதிக்காவிட்டால், பிறகு உடனடியாக நான் உங்கள் சகவாசத்தை விட்டுச் செல்வேன்." ஆக சந்தனு மஹாராஜா கூறினார், "அப்படியே ஆகட்டும், இருப்பினும், நான் உன்னை மணந்துக் கொள்கிறேன்." ஆக அவள் அனைத்து குழந்தைகளையும் கங்கையில் தூக்கி எறிந்து வந்தாள். ஆனால் இந்த பீஷ்மதேவர்... அதற்கு பிறகு, தந்தை, மிகவும் வருத்தப்பட்டார், அதாவது "என்ன இது? எப்படிப்பட்ட மனைவி எனக்கு கிடைத்திருக்கிறாள்? அவள் சும்மா அனைத்து குழந்தைகளையும் தண்ணீரில் தூக்கி எறிந்துக் கொண்டிருக்கிறாள்." ஆக பீஷ்மதேவர் பிறந்தபோது , சந்தனு மஹாராஜா கூறினார், "இல்லை, நான் இதை அனுமதிக்கமாட்டேன். நான் இதை அனுமதிக்கமாட்டேன்." பிறகு கங்கை தாயார் கூறினார், "அப்படி என்றால் நான் போகிறேன்." "சரி , நீ போகலாம், எனக்கு நீ தேவையில்லை. எனக்கு இந்த மகன் வேண்டும்." ஆக அவர் மனைவியற்றவர் ஆனார். மறுபடியும் அவர் சத்தியவதியை மணக்க விரும்பினார். அதற்கு அவள் தந்தை கூறினார், "இல்லை, உங்களுக்கு என் மகளை கொடுக்க முடியாது, ஏனென்றால் உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான், வளர்ந்த மகன். அவன் அரசன் ஆகிவிடுவான். உங்களுக்கு தாசியாக என் மகளை கொடுக்க முடியாது. அவளுடைய... அவளுடைய மகன் அரசன் ஆவான் என்று உறுதி அளித்தால் நான் என் மகளை உங்களுக்கு கொடுக்கிறேன்." அதற்கு அவர் கூறினார், "இல்லை, அது சாத்தியம் இல்லை." ஆனால் பீஷ்மதேவர் புரிந்துகொண்டார், அதாவது "என் தந்தை இந்த பெண்ணால் கவரப்பட்டிருக்கிறார்." ஆக அவர், அவள் தந்தையிடம் சென்று... அந்த மீனவரிடம் கூறினார், "நீங்கள் உங்கள் மகளை என் தந்தைக்கு கொடுக்கலாம், ஆனால் நீங்கள் நான் அரசன் ஆவென் என்று நினைக்கிறீர்கள். உங்கள் மகளின் மகன் அரசன் ஆவான் என்று நான் உறுதி அளிக்கிறேன். நான் அளித்த இந்த வாக்கின் அடிப்படையில் நீங்கள் உங்கள் மகளை அளிக்கலாம்." அதற்கு அவர் பதில் அளித்தார், "இல்லை, என்னால் முடியாது." "ஏன்?" "நீங்கள் அரசன் ஆகாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் மகன் அரசன் ஆகலாமே." பாருங்கள், இந்த பௌதிகவாதிகள் போடும் கணக்கு. அப்பொழுது அவர் சொன்னார், "இல்லை, நான் திருமணம் செய்துக் கொள்ளமாட்டேன். அவ்வளவு தான். நான் உறுதியளிக்கிறேன். நான் திருமணம் செய்துக் கொள்ளமாட்டேன்." ஆக அவர் பிரம்மச்சாரீயாகவெ வாழ்ந்தார். எனவேதான் அவர் பெயர் பீஷ்மர். பீஷ்ம என்றால் மிகவும் திடமானவர், சபதத்தில் நிலையானவர். ஆக அவர் பிரம்மச்சாரீயாக இருந்தார். தந்தையின் புலன்களின் திருப்திக்காக அவர் பிரமச்சாரீயாகவெ வாழ்ந்தார்.