TA/Prabhupada 0218 - குரு கண்களை திறந்துவிடுகிறார்
Lecture on SB 6.1.55 -- London, August 13, 1975
ஆக, வாழும் உயிரினங்களான நாம், நாம் அனைவரும் கிருஷ்ணரின் ஒரு பகுதியே. நெருப்பும் நெருப்புத் துண்டுகளையும் போல், தீப்பொறி போலத் தான், நம் நிலைமையும். அல்லது சூரியன் மற்றும் சிறு சிறு ஒளியின் துகள்கள் சேர்ந்து சூரிய ஒளி ஆவதைப் போல். நாம் தினமும் பார்க்கும் இந்த சூரிய ஒளி, அது ஒரு ஓரின கலவை அல்ல. அதில், மூலக்கூறுகள், மிகச் சிறிய, ஒளியின் துகள்கள் உள்ளன. எனவே நாமும் அம்மாதிரி தான், மிகவும் சிறியவர்கள் ... அணுக்கள், பொருள் அணுக்கள் போல – யாராலும் எண்ண முடியாது - இதேபோல், நாம் இறைவனுடைய அணுப்பொறிகள். நாம் எத்தனைப் பேர், என்ற எண்ணிக்கை கிடையாது. Asaṅkhyā. Asaṅkhyā என்றால் நம்மால் எண்ண முடியாது. அவ்வளவு உயிரினங்கள். எனவே நாம் மிகவும் சிறிய துகள்கள், மேலும் நாம் இந்த பௌதிக உலகத்திற்கு வந்திருக்கிறோம். . குறிப்பாக ஐரோப்பியர்களைப் போலவே, , அவர்கள் மற்ற நாடுகளுக்கு குடியேறுவதற்காகச் செல்வார்கள், அங்குள்ள பொருள் வளங்களைத் தம் சுக போகங்களுக்காக பயன்படுத்திக் கொள்ள. அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டது, ஐரோப்பியர்கள் அங்கு சென்றனர். அங்கு செல்வதுதான் அவர்கள் எண்ணம் ... இப்பொழுது அவர்கள் சந்திர கிரகத்திற்கு செல்ல முயற்சி செய்கிறார்கள், அங்கு ஏதேனும் வசதி இருக்கிறதா என்பதைக் கண்டறிய. இது பதப்படுத்தப்பட்ட ஆன்மாவின் போக்கு ஆகும். அதனால் தான் அவர்கள் இந்த பௌதிக உலகிற்கு வந்திருக்கிறார்கள். Kṛṣṇa bhuliya jīva bhoga vāñchā kare. இதன் பொருள் புருஷா தான் போகி. போகி. கிருஷ்ணர் உண்மையில் போகி. Bhoktāraṁ yajña-tapasām (BG 5.29). எனவே நாம் கிருஷ்ணரை பின்பற்றுகிறோம். இது தான் நம் நிலை. அனைவரும் கிருஷ்ணராக முயற்சி செய்கிறோம். மாயாவாதிகள், தவங்களையும், விரதங்களையும் மேற்கொண்டிருந்தாலும் - மிகவும் கண்டிப்பான முறையில் ஆன்மீக வாழ்க்கையின் கொள்கைகளைப் பின்பற்றினாலும் - அவர்கள் மாயையின் பிடியில் இருப்பதால், இறுதியில் "நான் கடவுள், நான் புருஷா” என்று எண்ணுகிறார்கள். அதே நோய், புருஷா. புருஷா என்றால் போகி என்று அர்த்தம். "நான் கிருஷ்ணரே..." என்ற போக யாகம்... மேலும் தவங்களும், விரதங்களும் மேற்கொண்டாலும், கட்டுப்பாட்டோடு கொள்கைகளைப் பின்பற்றினாலும், இந்த மாயை எவ்வளவு சக்தி வாய்ந்து என்றால், இன்னும் அவன் “நான் புருஷா “என்ற எண்ணத்தில் இருக்கிறான். சாதாரண புருஷா மட்டுமல்ல, மகா புருஷன், பகவத் கீதையில் கிருஷ்ணர் விவரிக்கப்பட்டுள்ளது போல. Paraṁ brahma paraṁ dhāma pavitraṁ paramaṁ bhavān, puruṣam śāśvata: (BG 10.12) "நீ தான் புருஷா” ஆக, இந்த மாயை எவ்வளவு சக்தி வாய்ந்ததென்றால், பல ஜன்மங்களில் உதை வாங்கி, பற்பல ஜன்மம் எடுத்தும், அவன் இன்னமும், “நான் புருஷா. நான் சுக போகி” என்று எண்ணுகிறான். இது தான் நோய். எனவே eṣa prakṛti-saṅgena puruṣasya viparyayaḥ என்று இங்கே கூறப்பட்டுள்ளது. அவனது பௌதிக வாழ்க்கை, “நான் புருஷா. நான் சுக போகி” என்ற கருத்திலிருந்து தொடங்கியுள்ளது. மேலும் “நான் சுக போகி” என்ற கருத்தை அவனால் விட முடியாததால். ஒவ்வொரு ஜன்மத்திலும் அவன் விபர்யயனாகிறான், தலைகீழ் நிலையில். தலைகீழ் நிலை என்றால்... அனைத்து உயிரினங்களும் இறைவனின் பகுதியாகும். இறைவனோ sac-cid-ānanda-vigrahaḥ (Bs. 5.1) ஆக, நாமும் sac-cid-ānanda-vigrahaḥ, ஒரு சிறிய sac-cid-ānanda-vigrahaḥ , ஆனால் நம் நிலை ப்ரக்ருததி நிலை, புருஷ நிலை இல்லை. அவர்கள் இருவரும் ... ராதையும் கிருஷ்ணரும் போல, அவர்கள் இருவரும் ஒரே தன்மை வாய்ந்தவர்கள். Rādhā-kṛṣṇa-praṇaya-vikṛtir hlādinī-śaktir asmāt. அவர்கள் இருவரும் ஒன்றே, ஆனால் ராதை ப்ரக்ருததி, கிருஷ்ணர் புருஷ நிலை. இதே போல், நாம் கிருஷ்ணரின் பகுதி என்றாலும், நாம் ப்ரக்ருததி, கிருஷ்ணர் புருஷா. எனவே தவறாக, நாம் புருஷா என்று நினைக்கும் போது, அது மாயை அல்லது விபர்யயா என்று அழைக்கப்படுகிறது. அது தான் இங்கே கூறப்பட்டுள்ளது. Evaṁ prakṛti-saṅgena puruṣasya viparyayaḥ. விபர்யயன் என்றால் உண்மையில் புருஷாவோடு சேர்ந்து இன்புற்றிருக்கக் கூடியன் என்று அர்த்தம். புருஷாவும் ப்ரக்ருததியும் ஆணும் பெண்ணும், இன்புற்று இருந்தால், அவர்கள் இன்புறுகிறார்கள், இருவருக்கும் அதே இன்பம் கிடைக்கும், ஆனால் ஒன்று புருஷா; மற்றொன்று ப்ரக்ருததி. இதேபோ ல், கிருஷ்ணர் புருஷா, நாமோ ப்ரக்ருததி. நாம் கிருஷ்ணரோடு இன்பம் அனுபவித்தால், ānanda, sac-cid-ānanda, இருக்கும். அதை நாம் மறந்துவிட்டோம். நாம் புருஷாவாக விரும்புகிறோம். எனவே, எப்படியோ இந்த நிலை வந்திருக்கிறது, புருஷா, போகி ஆகிவிடுவதான ஒரு தவறான கருத்து. அதன் விளைவு என்ன? அதன் விளைவாக நாம் வாழ்க்கையில் ஒவ்வொரு ஜன்மத்திலும் இன்பம் அனுபவிக்க முயல்கிறோம், ஆனால் நாம் தான் அனுபவிக்கப் படுகிறோம்; நாம் அனுபவிப்பதில்லை. நாம் வெறுமனே சுக போகி ஆவதற்குப் போராடி வருகிறோம். இது தான் நம் நிலை. எனவே இந்தப் போராட்டத்தை நிறுத்தி எப்படி நீங்கள் உண்மை நிலைக்கு வர முடியும்? அது தான் இங்கு கூறப்பட்டுள்ளது. Sa eva na cirād īśa-saṅgād vilīyate. “நான் தான் புருஷா” என்னும் வாழ்க்கையின்இந்த பொய்யான கருத்து, அதை முற்றிலும் முறியடிக்க முடியும். எப்படி? Īśa-saṅga, இறைவனோடு இணைவது மூலம். Īśa என்றால் உயரிய கட்டுப்பாட்டாளர் என்று பொருள். Īśa-saṅga. "எனவே, Īśa எங்கே? என்னால் Īśa-வைப் பார்க்க முடியாது… நான் பார்க்க முடியாது... கிருஷ்ணரும் Īśa-தான், தலையாயவர், ஆனால் என்னால் அவரைப் பார்க்க முடியாது." இப்போது, கிருஷ்ணர் அங்கு உள்ளார். நீங்கள் தான் குருடர்களாகவே இருக்கிறீர்கள். ஏன் நீங்கள் அவரைப் பார்க்கமாட்டேன் என்கிறீர்கள்? எனவே நீங்கள் பார்க்க முடிவதில்லை. ஆக நீங்கள் கண்களைத் திறக்க வேண்டும், மூடக் கூடாது. அது குருவின் வேலை. குரு கண்களைத் திறக்கிறார். Ajñāna-timirāndhasya jñānāñjana-śalākayā cakṣur unmīlitaṁ yena tasmai śrī-gurave namaḥ (Gautamīya Tantra) எனவே கிருஷ்ணர் எப்படி கண்களைத் திறந்து வைக்கிறார்? jñānāñjana-śalākayā மூலம். இருளில் நாம் எதையும் பார்க்க முடியாததைப் போல. ஆனால் தீக்குச்சியோ மெழுகுவர்த்தியோ இருந்தால், மெழுகுவர்த்தியை ஏற்றினாலோ, நாம் பார்க்க முடியும். இதே போல், குருவின் பணி கண்களைத் திறந்து வைப்பது. கண்களைத் திறப்பது என்றால், "நீ புருஷா இல்லை. நீ ப்ரக்ருததி. உன் கருத்தை மாற்றிக்கொள்." என்ற அறிவை அவனுக்கு க் கொடுப்பது. அது தான் கிருஷ்ண பக்தி.