TA/Prabhupada 1063 - அனைத்து செயல்களின் நடவடிக்கையிலிருந்தும் எதிர்நடவடிக்கையிலிருந்தும் எங்களுக்கு நி
660219-20 - Lecture BG Introduction - New York
அனைத்து செயல்களின் நடவடிக்கையிலிருந்தும் எதிர்நடவடிக்கையிலிருந்தும் எங்களுக்கு நிவாரணம் கொடுங்கள் எவ்வாறு என்றால் தற்கால வாழ்க்கையிலும் கூட, நாம் அந்த செயல்களை அனுபவிக்கிறோம், நம் செயல்களின் பலன்களை. ஒருவேளை நான் ஒரு வணிகன், மேலும் நான் அறிவோடு மிகவும் கடினமான வேலை செய்தேன் மேலும் எனக்கு பெருந்திரளாக பெரிய அளவில் வங்கியில் தொகையிருக்கிறது. இப்பொழுது நான்தான் அனுபவிப்பாளர். அதேபோல், ஒருவேளை நான் என் வணிகத்தை ஒரு பெரும் பணத்தொகையுடன் ஆரம்பித்தால், ஆனால் அதில் வெற்றியடைய தவறிவிட்டேன். நான் என் பணத்தையெல்லாம் இழந்துவிட்டேன். ஆகையால் நான் கஷ்டப்படுகிறேன். ஆகையால் அதேபோல், வாழ்க்கையின் ஒவ்வொரு களத்திலும் நாம் நம்முடைய உழைப்பின் பலனை அனுபவிக்கிறோம். இதைத்தான் கர்ம என்றழைக்கிறோம். ஆகையால் இவை அனைத்தும், ஈஸ்வர, ஜீவா, ப்ரக்ருதி, அல்லது முழுமுதற் கடவுள், அல்லது உயிர்வாழிகள், அல்லது ஜட இயற்கை, திவ்வியமான நேரம், மேலும் நம் வேறுபட்ட நடவடிக்கைகள், இவைகளின் பொருள்கள் பகவத்-கீதையில் விவரிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இந்த ஐந்திலிருந்து, பகவான், உயிர்வாழிகள், மேலும் ஜட இயற்கையும் நேரமும், இந்த நான்கு வகையும் நித்தியமானவைகள். இப்பொழுது தோற்றம், ப்ரக்ருதியின் தோற்றம் தற்காலிகமானதாக இருக்கலாம், ஆனால் அது பொய் அல்ல. சில தத்துவஞானிகள் ஜட இயற்கையின் தோற்றம் பொய்யானது என்று கூறுகிறார்கள், ஆனால் பகவத்-கீதையின் தத்துவப்படியும் அல்லது வைஷ்ணவ தத்துவப்படியும், அவர்கள் உலகின் தோற்றம் பொய் என்பதை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவர்கள் தோற்றத்தை உண்மை என்று ஏற்றுக்கொள்கிறார்கள், ஆனால் அது தற்காலிகமானது. எவ்வாறு என்றால் ஆகாயத்தில் மேகம் தோன்றும் பொழுது மழை காலம் தொடங்குகிறது, மேலும் மழை காலத்திற்குப் பிறகு பல புதிய பச்சை தாவரங்கள் நிலத்தில் எங்கும் இருப்பதை, நாம் காணலாம். மழை காலம் முடிந்த உடனடியாக, பிறகு மேகம் கலைந்துவிடும். பொதுவாக படிப்படியாக தாவரங்கள் அனைத்தும் காய்ந்துவிடும் மேலும் மறுபடியும் நிலம் தரிசுநிலமாகிவிடும். அதேபோல், இந்த ஜட தோற்றம் சில இடைவேளைக்குப் பிறகு தோன்றும். பகவத்-கீதையின் பக்கங்களில் இருந்து நாம் இதை புரிந்துக் கொள்வோம், நாம் இதை தெரிந்துக் கொள்வோம். பூத்வா பூத்வா ப்ரலீயதே. (ப.கீ.8.19). இந்த தோற்றம் ஏதோ ஒரு இடைவேளைகளில் பிரம்மாண்டமாக வரும், பின்பு மறுபடியும் மறைந்துவிடும். அது ப்ரக்ருதியின் வேலையாகும். ஆனால் அது நித்தியமாக செயல்படுகிறது, ஆகையினால் ப்ரக்ருதி நித்தியமானது. அது பொய்யல்ல. ஏனென்றால் பகவான் அதை ஏற்றுக்கொண்டார், மமா ப்ரக்ருதி, "என் ப்ரக்ருதி." அபரேயமிதஸ் து வித்ஹி மெ ப்ரக்ருதிம் பராம் (ப.கீ.7.5). பின்னா ப்ரக்ருதி, பின்னா ப்ரக்ருதி, அபரா ப்ரக்ருதி. இந்த ஜட இயற்கை முழுமுதற் கடவுளின் தனிப்பட்ட சக்தியாகும், மேலும் உயிர்வாழிகள், அவர்களும் முழுமுதற் கடவுளின் சக்தியாகும், ஆனால் அவர்கள் தனிப்பட்டவர்கள் அல்ல. அவர்கள் நித்தியமான தொடர்புடையவர்கள். ஆகையால் பகவான், உயிர்வாழிகள், இயற்கை, ஜட இயற்கை, மேலும் நேரம், இவை அனைத்தும் நித்தியமானவை. ஆனால் மற்றொரு வகை கர்ம, நித்தியமானதல்ல. கர்மாவின் தாக்கம் அல்லது செயல் மிகவும் பழமையானதாக இருக்கலாம். நமது செயல்களின் முடிவுகளால் நாம் கஷ்டப்படுவதோ அல்லது ஆனந்தப்படுவதோ தொன்று தொட்டுள்ளதாகும், இருப்பினும், நம் கர்மாவின் முடிவுகளையோ அல்லது செயலையோ நாம் மாற்றலாம். அது நம் குற்றமற்ற ஞானத்தைப் பொறுத்துள்ளது. சந்தேகமின்றி நாம் பலதரப்பட்ட செயல்களில் ஈடுபட்டுள்ளோம், ஆனால் எத்தகைய செயல்களை நாம் கடைபிடிக்க வேண்டும் என்பது நமக்கு தெரியாது செயல்களின் நடவடிக்கையிலிருந்தும், எதிர்நடவடிக்கையிலிருந்தும், அது நமக்கு நிவாரணத்தை கொடுக்கும். அதுவும் பகவத்-கீதையில் வைவரிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது, ஈஸ்வரவின் நிலை நித்தியமான உணர்வு. ஈஸ்வர, அல்லது முழுமுதற் கடவுளின் நிலை, நித்தியமான உணர்வு. மேலும் ஜீவா, அல்லது உயிர்வாழிகள், முழுமுதற் கடவுளின் அங்க உறுப்புகளாக இருப்பவர்களும் உணர்வு பெற்றவர்கள். ஒரு உயிர்வாழியும் உணர்வுள்ளது. உயிர்வாழிகள் ப்ரக்ருதி என்று விவரிக்கப்படுகிறார்கள், சக்தியும், ஜட இயற்கையும் ப்ரக்ருதி என்று விவரிக்கப்படுகிறார்கள், ஆனால் இரண்டில், ஒரு ப்ரக்ருதி, ஜீவா, அவர்களுக்கும் உணர்வுள்ளது. மற்றொரு ப்ரக்ருதி உணர்வற்றது. அதுதான் வித்தியாசம். ஆகையினால் ஜீவ ப்ரக்ருதி மேலானது ஏனென்றால் ஜுவாவின் உணர்வு பகவானுடையதை ஒத்தது. பகவான் நித்தியமான உணர்வுடையவர். ஜீவ, உயிர்வாழியும் நித்தியமான உணர்வுடையவர்கள் என்று ஒருவரும் உரிமை கோரக் கூடாது. இல்லை, ஒரு உயிரினம் குற்றமற்ற எந்த நிலையிலும் நித்தியமான உணர்வாக முடியாது. இது தவறாக வழிகாட்டும் தத்துவம். இது தவறாக வழிகாட்டும் தத்துவம். ஆனால் அவர் உணர்வுடையவர். அவ்வளவுதான். ஆனால் அவருக்கு நித்திய உணர்வு இல்லை.