TA/Prabhupada 0261 - பகவானும் பக்தனும், அவர்கள் ஒரே நிலையில் தான் இருக்கின்றார்கள்

Revision as of 10:34, 31 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0261 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Seattle, September 27, 1968

பிரபுபாதா: உங்கள் நாட்டில் இவர்கள் கிருஷ்ணர் உணர்வு இயக்கத்தை பற்றி போதனை செய்கிறார்கள் எனவே நான் அனைவரையும் தயவுகூர்ந்து கேட்கிறேன்.. இந்த விழுமிய ஆசியை புரிந்துகொள்ள முயற்சியுங்கள்.. ஹரே கிருஷ்ணா எனும் மந்திரத்தை சொல்லிக்கொண்டே இருக்கும்போது உங்களையும் அறியாமல் கிருஷ்ணரின் மேல் ஒரு ஆழ்நிலை அன்பு வந்துவிடும்.. கிருஷ்ணரை நேசிக்க ஆரம்பித்தவுடன் ... உங்கள் அனைத்து பிரச்சனைகளும் ..... மிகுந்த திருப்தி அடைவீர்கள் ... பிரச்சனைகளோ அல்லது கவலைகளோ.. ஒருவன் மாதத்திற்கு $6000 சம்பாதித்துக்கொண்டிருந்தான்.. மற்றொருவன் மாதத்திற்கு $200 சம்பாதித்தான் ஆனால் எனக்கு தெரிந்த அந்த நபர், கல்கத்தாவில் வசித்தவர், $6000 சம்பாதித்தவர், தற்கொலை செய்து கொண்டார். ஏன் தற்கொலை செய்து கொண்டான்? பணம் அவனுக்கு மனதிருப்தியை தரவில்லை .. அவனுக்கு வேறு எதுவோ தேவைப்பட்டிருக்கிறது இந்த இயந்திர மண்டலத்தில், நிறைய பணம் சம்பாதிப்பதன் மூலம் , முழுமையான திருப்தியை தந்துவிடாது.. ஏன் என்றால் நாம் அனைவருமே உணர்வுகளின் அடிமைகள். இந்த உணர்வுகளின் சேவையை, நாம் கிருஷ்ணரின் சேவையாக மாற்ற வேண்டும்.. பின்னர் நீங்கள் அனைத்து பிரெச்சனைகளிலிருந்தும் விடுபட்டுவிடுவீர்கள்.. மிக்க நன்றி.. பத்தர்கள் வணங்குகிறார்கள். ஏதேனும் கேள்விகள் உள்ளதா ? பக்தர்: பிரபுபாதா , கிருஷ்ணரின் ஒரு பிம்பம்.. என்பது சரியா? ஒரு சிறந்த பக்தனின் உருவம் கடவுளுடன் ஒத்துப்போகுமா? பிரபுபாதா : பக்தனின் உருவமா ? பக்தர் : ஒரு தூயமையான பக்தரின் உருவம் பிரபுபாதா : ஆம் . பக்தர் : மிகவும் உறுதியாக ஒரே போல் இருக்குமா பிரபுபாதா : ஆம் . பக்தர் : ப்ரஹலாத மகாராஜாவின் உருவமும், கடவுளான நரசிம்மரின் உருவமும் கூட.. ப்ரஹலாத மகாராஜாவின் உருவம் முற்றிலும் மாறுபடுகிறதே ? பிரபுபாதா : ஆம், கடவுள் மற்றும் பக்தர் அனைவரும் ஒரே நிலையில் தான் இருக்கின்றனர். அனைவருமே கடவுள், அவன் பெயர், அவன் நிலை, அவன் தரம் , அவனின் கூட்டாளிகள், அவனின் உபகரணங்கள் அனைத்துமே.. பூரணமானது ... Nāma guṇa rūpa līlā pari...மற்றும் கடந்த காலங்கள் கிருஷ்ணரை பற்றி நாம் கேட்பது போல.. இது கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டது இல்லை. ஹரே கிருஷ்ணா என்று கூறும் மாத்திரம்.. கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்ட ஒன்று இல்லை அனைத்துமே பரிபூரணமானது.. எனவே ஒரு தூயமையான கிருஷ்ணா பக்தர் கிருஷ்ணரிடமிருந்து வேறுபட்டவர் அல்ல.. இது ஒரே நேரத்தில், ஒன்றும் பலவுமாக இருக்கிறது..Acintya-bhedābheda-tattva. இந்த தத்துவத்தை புரிந்துகொள்ளவேண்டும். கிருஷ்ணரின் அனைத்திற்கும் முதன்மையானவர், சக்திவாய்ந்தவர்.. நாம் பார்ப்பது , நாம் அனுபவம் கொள்வது, அவை எல்லாமே கிருஷ்ணரின் வேறுபட்ட ஆற்றல் ஆகும் ஆற்றலையும் சக்திவாய்ந்தவரையும் பிரிக்க இயலாது எனவே இவை அனைத்தும் ஒரே சம நிலையில் உள்ளன மாயையாலும் , அறியாமையினாலும் , இவை கவரப்பட்டால் இவை வேறு வேறு என்று ஆகும்.. அவ்வளவே..