TA/Prabhupada 0265 - பக்தி என்றால் ஹிருஷிகேஷவிற்கு சேவை செய்வது, புலன்களின் எஜமானர்

Revision as of 15:04, 24 March 2018 by Karunapati (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0265 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.10 -- London, August 16, 1973

ப்ரத்யும்ந: மொழிபெயர்ப்பு, "ஓ பாரத சந்ததி, அந்த நேரத்தில் கிருஷ்ணர், புன்னகை புரிந்துக் கொண்டு, இரண்டு தரைப்படைகளுக்கும் இடையில், துக்கம் நிறைந்த அர்ஜுனிடம் கீழ்க்கண்ட வார்த்தைகளை கூறினார்."


பிரபுபாதர்: ஆகையால் ஹிருஷிகேஷ:, ப்ரஹசன இவ. கிருஷ்ணர் புன்னகைத்தவாறு, சிரிக்க தொடங்கினார், "இது என்ன முட்டாள்தனம் அர்ஜுனா." அவர் கூறினார் முதலில், "என்னை நிறுத்துங்கள்." ஸேனயோருபயோர்மத்யே ரதம் ஸ்தாபய மேச்யுத (BG 1.21). "கிருஷ்ண, சும்மா என்னுடைய ரதத்தை இரண்டு தரப்பு படைவீரர்களுக்கும் இடையில் நிறுத்துங்கள்." (பக்கத்தில்:) எனக்கு தண்ணீர் கொண்டுவாருங்கள். இப்பொழுது.... அவன் ஆரம்பத்தில் மிகவும் ஆர்வமூடன் இருந்தான், அதாவது "என்னுடைய ரதத்தை இரண்டு படைகளுக்கும் இடையில் நிறுத்துங்கள்." இப்பொழுது இந்த அயோக்கியன் சொல்கிறான் யோத்ஸ்ய இல்லை, " நான் போர் புரியமாட்டேன்." சும்மா பாருங்கள் இந்த அயோக்கியத்தனத்தை. ஆகையால் அர்ஜுனன் கூட கிருஷ்ணரின் நேரடி நண்பன், மாயை மிகவும் பலமானது, அதாவது அர்ஜுனனும் அயோக்கியனானான், மற்றவர்களைப் பற்றி என்ன சொல்வது. முதலில் மிகவும் உற்சாகம்: "ஆம், என்னுடைய ரதத்தை இரண்டு படைகளுக்கும் இடையில் நிறுத்துங்கள்." மேலும் இப்போது இந்த..., ந யோத்ஸ்ய இதி கோவிந்தம் (BG 2.9), "நான் போர் புரிய போவதில்லை." இது அயோக்கியத்தனம். ஆகையால் கிருஷ்ணர் சிரித்துக் கொண்டிருந்தார், அதாவது "இவன் என் நண்பன், ஒளி மறைவற்ற நண்பன், மேலும் இவ்வளவு பெரிய... மேலும் இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறான் அதாவது 'நான் போர் புரியமாட்டேன்.' " ஆகையால் கிருஷ்ணர் சிரிக்கிறார், இந்தச் சிரிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது, ப்ரஹாசன். தம உவாச ஹிருஷிகேஷ ப்ரஹாசன் இவ பாரத, ஸேனயோருபயோர் விஸீடன்தம புலம்பிக் கொண்டிருக்கிறான். முதலில் மிகவும் உற்சாகமாக போர் புரிய வந்தான்; இப்போது புலம்பிக் கொண்டிருக்கிறான். மேலும் கிருஷ்ணர் இங்கு ஹிருஷிகேஷ என்று குறிப்படப்படுகிறார். அவர் திடமானவர். அவர் குற்றமற்றவர். அவர் உறுதியானவர். அவர் மாற்றமடையாதவர். ஹிருஷிகேஷ என்னும் வார்த்தையின் மற்றொரு முக்கியத்துவம்... ஏனென்றால் நாரத-பண்சராதிரவில் பக்தி என்றால் ஹிருஷிகேஷ-சேவனம். ஆகையினால் இந்த அதிமுக்கியமான பெயர் இங்கு ஹிருஷிகேஷ, என்று குறிப்பிடப்படுகிறது. ஹிருஷிகேஷ-சேவனம் பக்திர் உச்யதே. பக்தி என்றால் ஹிருஷிகேஷவிற்கு சேவை செய்வது, புலன்களின் எஜமானர். மேலும் புலன்களின் எஜமானர்.


சில அயோக்கியர்கள் கிருஷ்ணர் நெறியற்றவர் என்று வர்ணிக்கிறார்கள். அவர் புலன்களின் எஜமானர், மேலும் அவர் நெறியற்றவர். அவன் எவ்வாறு பகவத்-கீதையை கற்றிருக்கிறான் என்று பாருங்கள். கிருஷ்ணர் குற்றமற்ற பிரமச்சாரியாக இருந்தால்... கிருஷ்ணர் குற்றமற்ற பிரமச்சாரிதான், ஏனென்றால்.... அது பீஷ்மதேவரால் பிரகடனம் செய்யப்பட்டது. பீஷ்மதேவர் பிரபஞ்சத்திலேயே முதல் தரமான பிரமச்சாரி. சத்தியவதியின் தந்தைக்கு வாக்குறுதி அளித்தார்.... உங்களுக்கு அந்த கதை தெரியுமா?


சத்தியவதியின் தந்தை.... அவருடைய, பீஷ்மதேவரின் தந்தை ஒரு மீனவப் பெண்ணால் ஈர்க்கப்பட்டார், மீனவப் பெண். ஆகையால் அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பினார். மேலும் அந்த பெண்ணின் தந்தை மறுத்துவிட்டார், "முடியாது உங்களுக்கு என் பெண்ணை தர முடியாது." ஆனால் "ஏன் நான் ஒரு அரசன், நான் உன் பெண்ணைக் கேட்கிறேன்." "இல்லை, உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்." பீஷ்மதேவ அவருடைய முதல் மனைவி, அன்னை கங்கையின் மகன் ஆவார். அன்னை கங்கை சந்தனு மஹாராஜாவின் மனைவியாக இருந்தார், மேலும் பீஷ்மதேவ மட்டுமே எஞ்சிய ஒரே மகன். அந்த ஒப்பந்தம், சந்தனு மஹாராஜாவிற்கும் கங்கை, அன்னை கங்கைக்கும் மத்தியில் உள்ளது, அதாவது "நான் உங்களை திருமணம் செய்துக் கொள்கிறேன், ஆனால் பிறக்கும் குழந்தைகள் அனைவரையும் கங்கை நீரில் தூக்கிப் போட அனுமதித்தால். மேலும் நீங்கள் அனுமதிக்காவிட்டால், பிறகு உடனடியாக நான் உங்கள் சகவாசத்தை விட்டு போய்விடுவேன்." ஆகையால் சந்தனு மஹாராஜா கூறினார், "அப்படியே ஆகட்டும், இருப்பினும், நான் உன்னை மணந்துக் கொள்கிறேன்." ஆகையால் அவள் அனைத்து குழந்தைகளையும் கங்கையில் தூக்கி எறிந்துக் கொண்டிருந்தாள். ஆனால் இந்த பீஷ்மதேவ... பிறகு அனைத்திற்கும், தந்தை, மிகவும் வருத்தப்படுகிறார், அதாவது "என்ன இது? எவ்வகையான மனைவி எனக்கு கிடைத்திருக்கிறாள்? அவள் சும்மா அனைத்து குழந்தைகளையும் தண்ணீரில் தூக்கி எறிந்துக் கொண்டிருக்கிறாள்." ஆகையால் பீஷ்மதேவ பிறந்த நேரத்தில், சந்தனு மஹாராஜா கூறினார், "இல்லை, நான் இதை அனுமதிக்கமாட்டேன். நான் இதை அனுமதிக்கமாட்டேன்." பிறகு அன்னை கங்கை கூறினார், "அவ்வாறு என்றால் நான் போகிறேன்." "ஆம், நீ போகலாம், எனக்கு நீ தேவையில்லை. எனக்கு இந்த மகன் வேண்டும்." ஆகையால் அவர் மனைவியற்றவர் ஆனார். மறுபடியும் அவர் சத்தியவதியை மணக்க விரும்பினார். ஆகையால் தந்தை கூறுகிறார், "இல்லை, உங்களுக்கு என் மகளை கொடுக்க முடியாது, ஏனென்றால் உங்களுக்கு ஒரு மகன் இருக்கிறான், வயது முதிர்ந்த மகன். அவர் அரசனாகிவிடுவார். உங்களுக்கு வேலைக்காரியாக என் மகளை கொடுக்க முடியாது. அவளுடைய... அவளுடைய மகன் அரசனாவன் என்ற எண்ணம் இருந்தால், பிறகு நான் என் மகளை உங்களுக்கு கொடுக்கிறேன்." அதற்கு அவர் கூறினார், "இல்லை, அது சாத்தியமல்ல." ஆனால் பீஷ்மதேவ் புரிந்துக் கொண்டார் அதாவது "என் தந்தை இந்த பெண்ணால் ஈர்க்கப்பட்டார்." ஆகையால் அவர் அணுகினார், அதாவது... அவர் மீனவரிடம் கூறினார் "நீங்கள் உங்கள் பெண்ணை என் தந்தைக்கு அளிக்கலாம், ஆனால் நீங்கள் நினைக்கிறீர்கள் நான் அரசன் ஆவென்னென்று. ஆகையால் உங்கள் மகளின் மகன் அரசனாவான். இந்த நிபந்தனையின் பேரில் நீங்கள் உங்கள் மகளை அளிக்கலாம்." அதற்கு அவர் பதில் அளித்தார், "இல்லை, என்னால் முடியாது." "ஏன்?" "நீங்கள் அரசனாகாமல் இருக்கலாம், ஆனால் உங்கள் மகன் அரசனாகலாம்." சும்மா பாருங்கள், இந்த பௌதிக கணிப்பு. அப்பொழுது அந்த நேரத்தில் அவர் சொன்னார், "இல்லை, நான் திருமணம் செய்துக் கொள்ளமாட்டேன். அவ்வளவு தான். நான் உறுதியளிக்கிறேன். நான் திருமணம் செய்துக் கொள்ளமாட்டேன்." ஆகையால் அவர் பிரமச்சாரீயாக இருந்தார். ஆகையினால் அவர் பெயர் பீஷ்ம. பீஷ்ம என்றால் மிகவும் திடமான, திட்டவட்டமாக உறுதியான நிலையானவர். ஆகையால் அவர் பிரமச்சாரீயாக இருந்தார். தந்தையின் புலன்களின் திருப்திக்காக அவருக்காக அவர் பிரமச்சாரீயாக இருந்தார்.