TA/Prabhupada 0268 - மொழிபெயர்ப்பு, யாராலும் கிருஷ்ணரை புரிந்து கொள்ள முடியாது,அவருடைய தூய பக்தரை தவிர
Lecture on BG 2.10 -- London, August 16, 1973
ஆகையால் அது மிகவும் கடினம். கிருஷ்ணரின் கலப்படமற்ற பக்தராகாமல் எவராலும் கிருஷ்ணரைப் புரிந்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் கிருஷ்ணர் கூறுகிறார்
பக்த்யா மாமபிஜானாதி யாவான்யஷ்ச்சாஸ்மி தத்வத (BG 18.55)
தத்வத:, உண்மையில். தத்வத: என்றால் உண்மை. கிருஷ்ணரை உண்மையாகவே ஒருவர் புரிந்துக் கொள்ள விரும்பினால், பிறகு அவர் பக்தி தொண்டு முறையை மேற்கொள்ள வேண்டும், பக்தா, பக்தி. ஹிருஷிகேன
ஹிருஷிகேஷ-சேவனம் பக்திர் உச்யதெ (CC Madhya 19.170)
ஹிருஷிகேஷரின் பணியாளராக அமர்த்தப்படும் போது, புலன்களின் எஜமானர். எஜமானர், மேலும் ஹிருஷிகேனா, உங்களுடைய புலன்களும், புலன்களின் எஜமானரின் பக்தி தொண்டில் ஈடுபட்டிருக்கும் போது, பிறகு நீங்களும் புலன்களின் எஜமானராகிறீர்கள். நீங்களும் கூட. ஏனென்றால் உங்கள் புலன்கள் ஹிருஷிகேஷரின் சேவையில் ஈடுபட்டிருக்கிறது, புலன்களுக்கு ஈடுபடுவதற்கு வேறு வாய்ப்பு இல்லை. மூடப்பட்டுவிட்டது.
ச வைமனஹ க்ருஷ்ண-பதாரவின்டயோஹ (SB 9.4.18)
ஆகையால் இதுதான் பக்தி மயத் தொண்டின் செயல்முறை. நீங்கள் புலன்களின் எஜமானராக வேண்டுமென்றால், கொஸ்வாமீ, ஸ்வாமீ, அப்போது நீங்கள் எப்போதும் உங்கள் புலன்களை ஹிருஷிகேஷ தொண்டில் ஈடுபடுத்த வேண்டும். அது ஒன்றே வழி. இல்லையெனில் அது சாத்தியமில்லை. புலன்களின் எஜமானரின் தொண்டில் ஈடுபடுவதில் சிறிது தளர்வு ஏற்பட்ட உடனடியாக, அக் கணத்தில் மாயா அங்கு இருப்பாள், "தயை கூர்ந்து வந்துவிடு." இதுதான் செயல்முறை.
க்ருஷ்ண புலியா ஜீவ போக வாண்சா கரே, பாஸதெ மாயா தாரே ஜாபதியா தாரே
நீங்கள் கிருஷ்ணரை மறந்த உடனேயே, ஒரு கணம் ஆயினும், உடனடியாக மாயா அங்கே இருப்பாள்: "தயவு செய்து, என் அன்புக்குரிய நண்பனே, இங்கே வாருங்கள்." ஆகையினால் நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஒரு கணம் கூட கிருஷ்ணரை நாம் மறக்கக் கூடாது. ஆகையினால் உச்சாடனம் திட்டம்,
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண, ஹரே ஹரே, ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே
எப்பொழுதும் கிருஷ்ணரை நினைவில் கொள்ளுங்கள். பிறகு மாயாவால் உங்களை தொட முடியாது.
மாம் ஏவ யே ப்ரபதியந்தி மாயாம் எதான் தரந்தி தெ
மாயா தொட முடியாது. எவ்வாறு என்றால் ஹரிதாஸ் தாகூர போல. அவர் ஹிருஷிகேஷ தொண்டில் ஈடுபட்டிருந்தார். மாயா முழுமை நிரம்பிய சக்தியுடன் உள்ளே வந்தாள். இருப்பினும், அவள் தோற்கடிக்கப்பட்டாள்; ஹரிதாஸ் தாகூரை தோற்கடிக்கப்படவில்லை.