TA/Prabhupada 0313 - எல்லா புகழும் கிருஷ்ணரை தான் சேரும்
Lecture on SB 3.26.42 -- Bombay, January 17, 1975
மேன்மைப்படுத்துவதே பக்தனின் வேலை. அவன் தனக்கு எந்த புகழையும் ஏற்றுக்கொள்வதில்லை. வாஸ்தவத்தில் புகழ் ஏற்றுக்கொள்வதற்கு ஒன்றுமே இல்லை. எல்லா புகழும் கிருஷ்ணரை தான் சேரும். ஒரு பக்தன் அவ்வாறு எதிர்ப்பார்ப்பதில்லை; அது சாத்தியமுமில்லை. எவ்வளவு மிகச் சிறந்த பக்தனாக இருந்தாலும் அவன் தனது புகழுக்குரிய செயல்களுக்காக எந்த புகழையும் எதிர்பார்ப்பதில்லை. அவனது புகழுக்குறிய செயல்களின் நோக்கம் கிருஷ்ணருக்கு புகழ் சேர்ப்பதே. அதுவே அவனது புகழுக்குரிய செயலாகும். பௌதீகவாதிகள் போல அல்ல. அவர்கள் எல்லாப் புகழையும் தனக்காகவே விரும்புவார்கள். கூடாது.
ஸ்வ-கர்மணா தம் அப்யர்ச்ய ஸித்திம் விந்ததி மானவ (BG 18.46)
ஸ்வ-கர்மணா. நீ எந்த விதமான செயலிலும், எந்த துறையின் செயலிலும் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் உன் செயலினால் கிருஷ்ணரின் வாழ்தலே நிறுவிக்கப்படுகிறது. மேலும் என்ன நிகழ்த்தப்படுகிறதோ, அது கிருஷ்ணரின் கைதேர்ந்த மேலாண்மையினால் நிகழ்த்தப்படுகிறது. சூரியன் குறிப்பிட்ட நேரத்தில் தான் உதிக்கிறது மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் தான் அஸ்தமனம் ஆகிறது. வெவ்வேறு பருவ காலங்களுக்கு தகுந்தபடி வெப்பம், உத்தராயண, தக்ஷிணாயண அசைவுகள் - எல்லாம் பெருமாளின் ஆணைப்படி சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது.
மயாத்யக்ஷேன ப்ரக்ருதி (BG 9.10)
சூரியன் இவ்வளவு சிறப்பாக, தானாகவே செயல்படுகிறது என்று நினைக்காதீர்கள். தானாக அல்ல. எஜமான் இருக்கிறார், கிருஷ்ணர்.
யஸ்ஸயாக்ஞயா ப்ரமதி ஸம்ப்ருத-கால-சக்ர
இந்த பிரம்மாண்டத்தில் தூரியன் மிகவும் சக்தி வாய்ந்தது. பலலட்சக்கணக்கான சூரியன்கள் இருக்கின்றன. இது வெறும் ஒரு சூரியன் தான் - ஆனால் அது கிருஷ்ணரின் கட்டளையை நிகழ்த்துகிறது.
யச்-சக்ஷுர் எஷ ஸவிதா ஸகல-க்ரஹாணாம் ராஜா ஸமஸ்த-ஸுர-மூர்த்திர் அஷேஷ-தேஜா:. அஷேஷ-தேஜா
அளவற்ற ஒலி, அளவற்ற நெருப்பு, அளவற்ற வெப்பம். அஷேஷ. அஷேஷ-தேஜா, சூரிய ஒளியையும், சூரிய வெப்பத்தையும் ஒப்பிடவே முடியாது. இந்த பிரம்மாண்டத்தில் அதுக்கு சமமாக எதுவுமில்லை. அளவற்றது. பல லட்சக்கணக்கான வருடங்களாய், சூரியனிலிருந்து ஒளியும், வெப்பமும் வெளியேறுகிறது. ஆனால் ஒரு குறைவும் ஏற்படவில்லை. பல லட்ச வருடங்களுக்கு முன்பு இருந்தது போலவே இப்போதும் இருக்கிறது. இத்தகைய ஒளியையும் வெப்பத்தையும் பல லட்ச வருடங்களாக அளித்த பிறகும் அதே அளவில் ஒளியும் வெப்பமும் இந்த நாள் வரை இருக்கிறது. ஆக ஒரு ஜட பொருளுக்கே இது சாத்தியமென்றால், அதாவது இவ்வளவு ஒளியையும் வெப்பத்தையும் அளித்த பிறகும் அது எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது, அதுபோலவே பரம புருஷ பகவானும் தன் சக்தியை விரிவாக்கம் செய்த பிறகும் ஒரு மாற்றமும் இல்லாமல் இருக்கிறார். அவர் குறுங்கிப் போவதில்லை.
பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் ஏவ அவஷிஷ்யதே (Īśo Invocation)
ஆக ஒரு ஜட பொருளே பல லட்சக்கணக்கான வருடங்களுக்கு வெப்பத்தை அளித்த பிறக்கும் - அது அளிக்கும் வெப்பத்தில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது என்றால், அது எப்படி கடவுளுக்கு சாத்தியமில்லாமல் இருக்க முடியும்? ஆகையால் ஈசோபனிஷத் தெரிவிப்பது என்னவென்றால் 'பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் ஏவ அவஷிஷ்யதே.' கிருஷ்ணரிடமிருந்து அவருடைய அனைத்து சக்திகளையும் கழித்த பிறகும் அதே அளவில் முழு சக்தியும் அப்படியே அவரிடம் இருக்கும். ஆனால் இப்போதெல்லாம் நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள். புதுமாதிரியான கடவுள்கள். "நவீன கடவுள்கள்" பலர் இருக்கின்றனர்; நான் பெயர் சொல்லி கூப்பிட விரும்பவில்லை. ஆனால் ஒரு நவீனகால கடவுள் தன் அனைத்து சக்திகளையும் தன் சீடனுக்கே கொடுத்துவிட்டார், அவன் மயக்கம் தெளிந்த போது அவர் கண்ணீர் வடித்தார். அந்த சீடன் குருவிடம் கேட்டான், "குருவே, நீங்கள் எதற்காக அழுகிறீர்கள்?" "இப்போது என்னிடம் இருந்தது எல்லாம் தீர்ந்துவிட்டது, நான் எல்லாத்தையும் உன்னிடம் அளித்துள்ளேன். நான் உனக்கு எல்லாத்தையும் அளித்ததால் என்னிடம் எதுவும் மிச்சமில்லை." அது ஆன்மீகத் தன்மையற்றது. அது ஐடத் தன்மையுடையது. என்னிடம் நூறு ரூபாய் இருக்கிறது. நான் உனக்கு ரூபாய் கொடுத்தால் என் பணப் பை காலியாகிவிடும். ஆனால் கிருஷ்ணர் அப்படி கிடையாது. கிருஷ்ணர் தன்னை போலவே நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கிருஷ்ணரை படைக்கலாம்; இருப்பினும் அவர் அதே கிருஷ்ணர் தான். அது தான் கிருஷ்ணர். அந்த சக்தி எப்பொழுதும் குறைவதில்லை. அது
பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் ஏவ அவஷிஷ்யதே (Īśo Invocation)
என்றழைக்கப்படுகிறது. ஆக இந்த போலி கடவுளால் நமக்கு உதவி செய்ய முடியாது. உண்மையான கடவுள்,
ஈஷ்வர பரம: கிருஷ்ண ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ: அனாதிர் ஆதிர் கோவிந்த ஸர்வ-காரண-காரணம் (பிரம்ம ஸம்ஹிதா 5.1) ஸர்வ-காரண-காரணம்
அவர் எப்போதும் குறைவடைவதில்லை. கூறப்படுவது என்னவென்றால்,
யஸ்யைக-நிஷ்வாஸித-காலம் அதாவலம்ப்ய ஜீவந்தி லோம-விலஜா ஜகத்-அண்ட-நாதா: விஷ்ணுர் மஹான் ஸ இஹ யஸ்ஸ கலா-விஷேஷோ கோவிந்தம் ஆதி புருஷம் தம் அஹம் பஜாமி (பிரம்ம ஸம்ஹிதா 5.48)
பல லட்சக்கணக்கான பிரம்மாண்டங்கள் அவர் சுவாசத்தை விடும்பொழுது வெளியேறுகின்றன, பிறகு சுவாசத்தை உள்வாங்கும்பொழுது அவை அழிகின்றன. இவ்வாறு பிரம்மாண்டங்கள் படைக்கப்படுகின்றன.
ஜகத்-அண்ட-நாத:. ஜகத்-அண்ட-நாத
ஜகத்-அண்ட என்றால் பிரம்மாண்டம், மற்றும் நாத என்றாள் பிரம்மாண்டத்தின் எஜமான் அதாவது பிரம்ம தேவர். அவருக்கு ஒரு ஆயுட்காலம் இருக்கிறது. எத்னை அந்த ஆயுட்காலம்? மஹா-விஷ்ணுவின் ஒரு சுவாசத்திற்குடைய காலமே.