TA/Prabhupada 0381 - தசாவதார ஸ்தோத்ரம் பாடலின் பொருள்

Revision as of 10:31, 27 April 2018 by Karunapati (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0381 - in all Languages Category:TA-Quotes - 1970 Category:TA-Quotes - Pur...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Purport to Sri Dasavatara Stotra -- Los Angeles, February 18, 1970

ப்ரளய-பயோதி-ஜலே-த்ருதவான் அஸி வேதம், விஹித-விஹித்ர-சரித்ரம் அகேதம். இன்று கிருஷ்ண பெருமான் ஒரு காட்டுப்பன்றியின் வடிவத்தில் அவதரித்த நாள். உலகம், பிரம்மாண்டத்தில் உள்ள கர்ப்போதகக் கடலின் நீரில் முழுகியிருக்கும் பொழுது, அதை தூக்கி மீட்டெடுத்தார். நமக்கு தெரிந்த பிரம்மாண்டம் என்பது வெறும் ஒரு பகுதி தான். மற்றொரு பகுதியில் தண்ணீர் நிரம்பியிருக்கிறது, மற்றும் அந்த தண்ணீரில் கர்போதகஷாயீ விஷ்ணு பள்ளி கொண்டிருத்கிறார். ஹிரண்யாக்ஷன் எனும் ஓர் அரக்கன், இந்த பூமியை அந்த நீரில் தள்ளி முழுகச் செய்தான். பிறகு கிருஷ்ணர் இந்த பூமியை அந்த நீரிலிருந்து, ஒரு காட்டுப்பன்றியின் வடிவத்தில் வந்து மீட்டார். இன்று தான் அந்த புனிதமான நாள், வராஹ-த்வாதசி. இதற்கு வராஹ-த்வாதசி எனப் பெயர். ஆக இன்று, இந்த பிரம்மாண்டத்தில், பகவான் ஏற்ற பல்வேறு அவதாரங்களின் புகழைப் பாடுவது சிறந்தது. முதல் அவதாரம் ஒரு மீன் வடிவத்தில் இருந்தது. இந்த புகழ், ஜயதேவ கோஸ்வாமியால் அர்ப்பணிக்கப்பட்டது. பகவான் சைதன்யர் தோன்றிய எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு வைஷ்ணவ கவிஞர இவ்வுலகில் வந்தார். அவர் ஒரு சிறந்த பக்தர், மேலும் குறிப்பாக கீத-கோவிந்த எனப்படும் அவரது ஒரு கவிதை, உலகம் முழுவதும் புகழ்பெற்ற ஒன்று. கீத-கோவிந்த. கிருஷ்ணர், ராதாராணியைப் பற்றி புல்லாங்குழல் ஊதுவது தான் இந்த கீத-கோவிந்த எனும் கவிதையின் நுதல் பொருள். இது தான் கீத-கோவிந்தத்தின் நுதல் பொருள். இந்த புகழையும் அதே ஜயதேவ கோஸ்வாமி என்ற கவிஞர் பிடியிருக்கிறார், ப்ரளய-பயோதி-ஜலே-த்ருதவான் அஸி வேதம். அவர் கூறுகிறார், "என் அன்பு நாதா,


இந்த பிரம்மாண்டத்தில் பேரழிவு ஏற்படும்போது, எல்லாம் தண்ணீரால் நிரம்பியது. அப்பொழுது தாங்கள் வேதங்களை ஒரு படகில் வைத்து பாதுகாத்தீர்கள். ஒரு பெரும் மீன் வடிவத்தில் வந்து அந்த படகை மூழ்காமல் தாங்கினாய்." இந்த மீன் முதலில் ஒரு மீன் தொட்டியில் வைக்கப்பட்டிருந்தது. பிறகு அதன் உருவம் பெருகியதால் அந்த மீன், ஒரு பெரிய குளத்தில் வைக்கப்பட்டது. இப்படி அந்த மீன் வளர்ந்து வந்தது. பிறகு ஒருநாள் அந்த மீன் ஒரு தகவல் கூறியது: "பேரழிவு வரப்போகிறது. நீ வெறும் அனைத்து வேதங்களையும் ஒரு படகில் வை. நான் அதை பத்திரமாக பாதுகாப்பேன்." ஆக ஜயதேவ கோஸ்வாமி இந்த புகழை அர்ப்பணிக்கிறார், "என் நாதரே, தாங்கள் வேதங்களை, பேரழிவு ஏற்படும்போது ஒரு மீன் வடிவத்தில் வந்து காப்பாற்றினீர்." அடுத்ததாக கூர்மாவதாரம். பாற்கடல் கடையப்பட்டது. ஒரு பக்கத்தில் எல்லா தேவர்களும், மற்றொரு பக்கத்தில் அனைத்து அசுரர்களும் கூடினார்கள். மந்தர-பர்வதம் என்கிற ஒரு பெரும் மலை தான் மத்தாக இருந்தது. மற்றும் பகவான் ஒரு ஆமையாக தோன்றி, தன் முதுகை அந்த மலையின் அடித்தளமாக வைத்தார். ஆகையால் அவர் புகழ் பாடுகிறார், "வெறும் ஒரு அடித்தளமாக இருப்பதற்காக, தாங்கள் ஒரு ஆமையாக அவதரித்தீர். உங்கள் முதுகில் எதோ அரிப்பு உணர்ந்ததால் தாங்கள் அப்படி செய்தீர்கள். முதுகை சொரியும் கருவியாக, ஒரு பெரிய மதத்தைப் போல் இருந்த மந்தர மலையை பயன்படுத்தினீர்."


அதற்கு பிறகு வராஹ அவதாரம், காட்டுப்பன்றி. அவர் இந்த பூலோகத்தை தன் தந்தங்களால் விடுவித்தார், அவர் முழு உலகையும் தன் தந்தங்களின்மேல் தூக்கி வைத்திருந்தார். அவர் எவ்வளவு பிரம்மாண்டமாக தோன்றியிருப்பார் என்பதை சற்று நினைத்துப்பாருங்கள். அப்பொழுது இந்த உலகம், சில மாசு மருக்கள் கொண்ட ஒரு நிலாவைப் போல் தோன்றியது. ஆக கேஷவ த்ருத-வராஹ-ஸரீர. அவர் கூறுகிறார், "என் அன்பு நாதரே, நீங்கள் ஒரு மாபெரும் காட்டுப்பன்றியாக தரிசனம் தந்தீர். ஆக நான் என் மரியாதைக்குரிய வணக்கங்களை உங்களிடம் சமர்பித்துக் கொள்கிறேன்."

நான்காம் அவதாரம் ந்ருஸிம்ஹ-தேவர். நரஸிம்ஹ-தேவர் பிரகலாத மகாராஜா என்ற ஒரு ஐந்து வயதான சிறுவனை காப்பாற்றுவதற்காக அவதரித்தார். அவர் (பிரகலாதர்) தன் நாத்திகரான தந்தையால் சித்திரவதை செய்யப்பட்டார். ஆகையால் அவர் (நரஸிம்ஹர்) அரண்மனையின் தூணைப் பிளந்து, மனிதன் பாதி, சிங்கம் பாதியாக வெளியே வந்தார். ஏனென்றால் ஹிரண்யகஷிபு, பிரம்ம தேவரிடம், எந்த மனிதனும் அல்லது எந்த மிருகமும் தம்மை வெல்ல முடியாதபடி வரம் பெற்றிருந்தான். ஆகையால் பகவான் மனிதனும் இல்லாத மிருகமும் இல்லாத உருவத்தில் தோன்றினார். அது தான் கடவுளின் அறிவுக்கும், நம் அறிவுக்கும் வித்தியாசம். நமது புத்திசாலித்தனத்தால் கடவுளை ஏமாற்ற முடியும் என நாம் நினைக்கிறோம். ஆனால் அந்த பகவான் நம்மைவிட சிறந்த புத்திசாலி. இந்த ஹிரண்யகஷிபு, பிரம்ம தேவரை மறைமுகமான அர்த்தத்தால் ஏமாற்ற நினைத்தான். முதலில் அவன் காகாமல் இருக்க விரும்பினான். பிரம்மா கூறினார், "அது சாத்தியம் அல்ல ஏனென்றால் நானே இறப்பற்றவன் அல்ல. இந்த ஜடவுலகில் யாருமே இறப்பற்றவர் அல்ல. அது சாத்தியம் அல்ல. ஆக ஹிரண்யகஷிபு, அந்த அரக்கன்... அரக்கர்கள் நல்ல அறிவுத்திறன் உடையவர்கள். அவன், "சுற்றிவளைத்து நான் இறப்பற்றவன் ஆகிவிடுவேன்" என நினைத்தான். அவன் பிரம்மரிடம் வேண்டினான், "தயவுசெய்து எனக்கு வரம் அளியுங்கள், எந்த மனிதனாலோ, மிருகத்தினாலோ நான் மரணம் அடையக் கூடாது." அதற்கு பிரம்மதேவர் கூறினார், "சரி, அப்படியே ஆகட்டும்." "நான் வானத்திலோ, நீரிலோ அல்லது நிலத்திலோ மரணம் அடையக் கூடாது." பிரம்மதேவர் கூறினார், "ஓ சரி." "மனிதனால் செய்யப்பட்ட எந்த ஆயுதங்களாலையும் என்னை வெல்ல முடியாது." "அதுவும் சரி." இப்படியாக, வெறும் தனக்கு மரணமே ஏற்படாமல் இருப்பதற்காக, அவன் தன் புத்தியை பல விதங்களில் பயன்படுத்தினான். ஆனால் பகவானின் ஒப்பில்லாத சூட்சி; அவர் பிரம்மதேவர் கொடுத்த வாக்கை பாதுகாத்தார் அதே நேரம் அவனையும் வதம் செய்தார். "பகலிலும் சரி, இரவிலும் சரி, என்னை யாவராலும் கொல்ல முடியாது." எனக் கூறியிருந்தான். பிரம்மரும் "சரி." என்றார். ஆகையால், இரவும் பகலும் கூடும் நேரத்தில், அதாவது அந்தி சந்தி நேரத்தில், அவன் கொல்லப்பட்டான். அதை இரவு என்றும் சொல்லமுடியாது, பகல் என்றும் சொல்லமுடியாது. "வானத்திலோ, நீரிலோ, நிலத்திலோ நான் மரணம் அடையக் கூடாது." என வரம் கேட்டிருந்தான். ஆக அவன் அவர் மடியில் கொல்லப்பட்டான். "மனிதன் செய்த ஆயுதங்களாலோ, தேவர்கள் செய்த ஆயுதங்களாலோ என்னை வெல்ல முடியாது." என்று வரம் வாங்கியிருந்தான். அதுவும் அளிக்கப்பட்டது, "சரி." எனவே அவன் நகங்களால் கொல்லப்பட்டான். இப்படியாக, அளித்த வரங்கள் எல்லாம் பொய் ஆகாமல் இருந்தபோதிலும் அவன் கொல்லப்பட்டான். அதுபோலவே, நாம் திட்டங்கள் போடலாம், விஞ்ஞானத்தில் நன்கு முன்னேறியிருக்கலாம், ஆனால் இயற்கையின் இறப்பு என்கிற செயல்முறை நிற்காமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும். யாவராலும் அதிலிருந்து தப்பிக்க முடியாது. நமது புத்திசாலித்தனத்தால் தப்பிக்க முடியாது. பிறப்பு, இறப்பு, முதுமை மற்றும் நோய், இவை பௌதீக வாழ்வின் நான்கு விதிகள் ஆகும். நாம் பல வகையான மருந்துகளை, பல ஆயுதங்களை கண்டுபிடித்திருக்கலாம், ஆனால் பௌதீக வாழ்வின் இந்த நான்கு விதிகளிலிருந்து தப்பிக்கவே முடியாது. நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி. அது ஹிரண்யகஷிபுவின் உதாரணத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஹிரண்யகஷிபு, பௌதீகத்தில் வல்லவனாக இருந்தான், மரணமே இல்லாமல் என்றென்றும் மகிழ்ச்சியுடன் வாழ நினைத்தான். ஆனால் அவனால் அப்படி வாழமுடியவில்லை. எல்லாம் நிர்மூலம் ஆனது.