TA/Prabhupada 0141 - தாய் பாலை கொடுக்கிறார்கள்; நீங்கள் அந்த தாயை கொன்றுவிடுகிறிர்கள்

Revision as of 05:25, 12 July 2019 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Garden Conversation -- June 14, 1976, Detroit

ஜெயாத்வைத: கல்லூரி நிகழ்ச்சிகளில், சத்ஸ்வரூப மஹாராஜும் நானும் வர்ணாஸ்ரம-தர்ம பற்றி மிக அதிகமான வகுப்புக்கள் நடத்திக் கொண்டிருந்தோம். ஏனென்றால் அவர்கள் எப்போதும் இந்து மதத்தின் முறையை பற்றி எதாவது கேட்டுக் கொண்டிருக்க விரும்பினார்கள், ஆகையால் எங்களை அந்த அடிப்படையில் நோக்கிச் செலுத்துவார்கள். அதன் பிறகு நாங்கள் வர்ணாஸ்ரம-தர்ம பற்றி பேசினோம். ஆனால் அதை வெல்ல அவர்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. அவர்கள் எப்போதும், சில சாரமற்ற விவாதம் செய்வார்கள், ஆனால் எந்த முன்னேற்ற முறையும் அவர்களிடம் இல்லை.

பிரபுபாதர்: அவர்களுடைய விவாதம் என்ன?

ஜெயாத்வைத: கடினமாக, அவர்களுக்கு சில யோசனைகள் உள்ளது, அவர்கள் விவாதிப்பார்கள், அதாவது எளிதில் இயங்கும் சமூகம் இல்லை என்று, ஏனென்றால் அவர்கள் எல்லோருக்கும் பிறப்பில் சாதி வேறுபாடு என்னும் எண்ணம் இருக்கிறது.

பிரபுபாதர்: இல்லை, அது காரணமல்ல.

ஜெயாத்வைத: இல்லை.

பிரபுபாதர்: இந்த தகுதிப்பேறு.

ஜெயாத்வைத: நாங்கள் உண்மையான எண்ணத்தை அளிக்கும் போது அவர்கள் சும்மா அமர்ந்து இருக்கிறார்கள், அவர்களிடமிருந்து விவாதம் ஏதுமில்லை. மேலும் நாங்கள் அவர்களுடைய முறைகளுக்கு சவாலிட்டோம், அதாவது "உங்கள் சமூகத்தின் குறிக்கோள் என்ன? அதனுடைய நோக்கம் என்ன?" மேலும் அவர்களால் எதுவும் கூற முடியவில்லை.

பிரபுபாதர்: தொழிலின் இடையே வேறுபாடு இல்லையென்றால், எதையும் குறைவற்றதாக சரியாக செய்ய முடியாது. உடம்பில் இயற்கையான வேறுபாடு இருக்கிறது - தலை, மேற்கை, வயிறும் கால்களும். அதேபோல், சமூகத்திலும் அங்கே, நிச்சயமாக தலைவர், அறிவில் சிறந்த பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். பிறகு அனைத்தும் சீராக நடைபெறும். மேலும் தற்சமயத்தில், அங்கே அறிவில் சிறந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் இல்லை. அனைவரும் தொழிலாளிகள், தொழிலாளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள், நான்காம் தரம். முதல்தரம், இரண்டாம் தரம் இல்லை. ஆகையினால் சமூகம் தாறுமாறான நிலையில் உள்ளது. அங்கே மூளை இல்லை.

ஜெயாத்வைத: அவர்களுடைய ஒரே எதிர்ப்பு, அதாவது அங்கே பிரமசாரி, கிரஹஸ்த, வானப்ரஸ்த, சந்நயாஸ, இருக்கிறார்கள் என்று கூறும் போது, அதன் பிறகு அவர்கள் தானாக எதிரியாகிறார்கள், ஏனென்றால் நாம் புலன் நுகர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை புரிந்துக் கொண்டார்கள்.

பிரபுபாதர்: ஆம், புலன் நுகர்வு மிருக நாகரிகமாகும். மேலும் புலன் கட்டுப்பாடு மனித நாகரிகம். புலன் நுகர்வு மனித சமூகம் அல்ல. புலன் நுகர்வு மனித நாகரிகம் அல்ல. இல்லை. அது அவர்களுக்கு தெரியாது. அவர்களுடைய முக்கிய குறிக்கொள் புலன் நுகர்வாகும். அது தான் அந்த குறைபாடு. அவர்கள் மிருக நாகரிகத்தை மனித நாகரிகமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது தான் குறைபாடு. புலன் நுகர்வு மிருக நாகரிகமாகும். மேலும் உண்மையிலேயே அவர்கள் மிருகங்கள். அவர்களால் தன் சொந்த குழந்தையையே கொல்ல முடிந்தால், அது மிருகம் தான். எவ்வாறு என்றால், பூனைகளும், நாய்களும் போல், அவை தன் சொந்த குட்டிகளை கொன்றுவிடும். அது என்ன? அது ஒரு மிருகம். யார் பேசிக் கொண்டிருந்தது, அதாவது குழந்தையை எதிலோ போட்டு விட்டுப் போன, பயணப் பெட்டி? ஹரி

செளரி: விட்டுப் போன-பயணப் பெட்டி போட்டகத்தில். த்ரிவிக்ரம மஹாராஜ் ஜப்பானில். அவர் கூறினார் இரண்டு லட்சத்திற்கு மேல், இருபதாயிரம் குழந்தைகள், அவர்கள் விட்டுப் போன-பயணப் பெட்டி போட்டகத்தில் போட்டுவிட்டு சென்றுவிடுவார்கள்.

பிரபுபாதர்: பேருந்து நிலையம்? ரயில் நிலையம்? பயணப் பெட்டியை விட்டுச் சென்றனர். அதில் போட்டுவிட்டு பூட்ட வேண்டியது, பிறகு திரும்ப வருவதில்லை. பிறகு அங்கே துர்நாற்றம் ஏற்படும் போது...., இது நடந்துக் கொண்டிருக்கிறது. இது வெறுமனே மிருக நாகரிகம். கடைசி சொட்டு பால்வரை பசுவிடமிருந்து கரந்துவிட்டு, மேலும் உடனடியாக அதை மிருகவதை மையங்களுக்கு அனுப்புகிறார்கள்.. அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். மிருகவதை மையத்திற்கு அனுப்புவதற்கு முன், பசுவிடமிருந்து கடைசி சொட்டு பால்வரை கரந்துவிடுகிறார்கள். மேலும் உடனடியாக கொன்றுவிடுகிறார்கள். ஆகையால் உங்களுக்கு பால் தேவைப்படுகிறது, நீங்கள் நிறைய பால் எடுக்கிறீர்கள், பால் இல்லாமல் உங்களால் முடியாது..., மேலும் நீங்கள் பாலை கரக்கும் அந்த மிருகம், அது உங்கள் தாய். அவர்கள் இதை மறந்துவிடுகிறார்கள். தாய் பாலைக் கொடுக்கிறார்கள், தன் உடம்பிலிருந்து பாலை சுரக்கிறார்கள், நீங்கள் அந்த தாயை கொன்றுவிடுகிறிர்கள். அதுதான் நாகரிகமா? தாயை கொல்வது? மேலும் பால் அத்தியாவசியமானது. ஆகையினால் நீங்கள் அந்த கடைசி துளிவரை கரக்கிறீர்கள். இல்லையெனில், பாலை கடைசி சொட்டுவரை பசுவிடமிருந்து கரக்க வேண்டிய அவசியம் என்ன? அது அத்தியாவசியமானது. ஆகையால் ஏன் அதை வாழவிட்டு உங்களுக்கு பால் கொடுக்கவிடக் கூடாது, மேலும் நீங்கள் அந்த பாலிலிருந்து நூறு, ஆயிரம் கணக்கான சத்துணவு, சுவையுணவுகளையும் தயாரிக்கலாம். அந்த அறிவாற்றல் எங்கே? பால் வேறொன்றும் இல்லை, வெறும் இரத்தத்தின் உருமாற்றம் தான். ஆகையால் இரத்தத்தை எடுப்பதற்கு பதிலாக, பாலாக மாறியதை எடுத்துக் கொண்டு, மேன்மையான பண்புள்ள மனிதராக நன்றாக வாழுங்கள். இல்லை. அவர்கள் பண்புள்ள மனிதர்கள் கூட இல்லை. அயோக்கியர்கள், காட்டுமிராண்டிகள். நீங்கள் மாமிசம் உண்ண வேண்டுமென்றால், முக்கியமற்ற சில மிருகங்களை பன்றிகள், நாய்கள் போன்ற பயனற்ற மிருகங்களை கொல்லலாம். நீங்கள் உண்ண வேண்டும் என்றால், அவற்றை நீங்கள் உண்ணலாம். அது அனுமதிக்கப்பட்டது, பன்றிகளும் நாய்களும் அனுமதிக்கப்பட்டது. ஏனென்றால் பண்புள்ள வகுப்பைச் சேர்ந்த மனிதர்கள் மாமிசம் எடுக்கமாட்டார்கள். அது தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள். ஆகையால் அவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள், "அனைத்தும் சரியே, நீங்கள் உண்ணலாம் பன்றிகளையும், ஸ்வபச." தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள், அவர்கள் பன்றிகளும், நாய்களும் உண்ணுகிறார்கள். இன்னமும், அவர்கள் உண்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஆகையால், உங்களுக்கு மாமிசம் தேவைப்பட்டால், நீங்கள் இந்த முக்கியமற்ற பிராணிகளை கொல்லலாம். கடைசி சொட்டுப் பால்வரை உங்களுக்கு தேவைப்படும் ஒரு மிருகத்தை ஏன் கொல்லுகிறிர்கள்? இதன் உணர்வு என்ன? நீங்கள் கிருஷ்ணரை எடுத்துக் கொண்டால், அவர் பூதனாவை கொன்றார், ஆனால் அவளுக்கு தாய் என்னும் அந்தஸ்தை கொடுத்தார். ஏனென்றால் கிருஷ்ணர் நன்றிக் கடனை உணர்ந்தார், அதாவது "பூதனாவின் நோக்கம் எதுவாயினும், நான் அவள் மார்பில் பால் குடித்தேன், ஆகையால் அவள் என் தாய்." ஆகையால் நாம் பசுவிடமிருந்து பால் கரக்கிறோம். அந்த பசு என் தாய் இல்லையா? யாரால் பால் இல்லாமல் வாழ முடியும்? மேலும் பசுவின் பால் குடிக்காதவர் யார்? காலையில், உடனடியாக, உங்களுக்கு பால் தேவைப்படுகிறது. மேலும் அந்த பிராணி, அது பால் கொடுக்கிறது, அது தாய் அல்லவா? இது என்ன உணர்வு? தாயை கொல்லும் நாகரிகம். மேலும் அவர்கள் சந்தோஷமாக இருக்க விரும்புகிறார்கள். மேலும் இடைவெளிகளுடன் அங்கே கடும் போரும், மேலும் படுகொலை, எதிர் நடவடிக்கை இருக்கிறது.