TA/Prabhupada 0496 - ஸ்ருதி என்றால் மிகப்பெரிய அதிகாரியிடமிருந்து கேட்பது
Lecture on BG 2.14 -- Germany, June 21, 1974
இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் என்பது அனைத்தையும் பூரணமாக புரிந்து கொள்வதற்குத் தான், பரம அதிகாரியான கிருஷ்ணரிடம் இருந்து. இதுதான் செயல்முறை. தத் விஜ்ஞானார்தம் ஸ குரும் ஏவ அபிகச்சேத் (MU 1.2.12) நம் பார்வைக்கு அப்பாற்பட்ட விஷயத்தை புரிந்து கொள்வதற்கு, இதனை எடுத்துச் சொல்லக்கூடிய இத்தகைய அதிகாரியை தான் நாம் அணுக வேண்டும். நம் தந்தை யார் யார் என்பதை அறிவது நம்முடைய அறிவுக்கு அப்பாற்பட்டது கற்பனைக்கும் அப்பாற்பட்டது, ஆனால் அதில் நாம் அதிகாரப்பூர்வமான நம் தாயின் சொல்லை ஏற்போம் ஆனால் அதுவே முழுமையான அறிவு. அதைப் போலவே தான் இதுவும். இதனைப் புரிந்து கொள்வதற்கு அறிவில் உயர்வதற்கு மூன்று வகையான முறைகள் இருக்கின்றது. ஒன்று நேரடியாக காண்பது பிரத்யக்ஷம் அடுத்தது அதிகாரியிடமிருந்து அறிவது, அடுத்தது ஸ்ருதி ஸ்ருதி என்பது பரம புருஷர் இடம் இருந்து கேட்பதைக் குறிக்கும். நம்முடைய முறை சுருதி. ஸ்ருதி என்றால் நாம் மிகப்பெரிய அதிகாரியிடமிருந்து கேட்பது. அதுவே நம்முடைய முறை, மிகவும் எளிமையானதும் கூட. மிகப்பெரிய அதிகாரி. குற்றமற்றவர். சராசரி மனிதர்கள் குற்றம் உடையவர்கள். அவர்களிடம் முழுமை இருப்பதில்லை. அவர்களின் முதல் குறையே குற்றம் புரிவது தான். உலகில் எத்தனை பெரிய மனிதராக இருந்தாலும் அவர் குற்றம் புரிவார். மாயையில் கட்டுண்டு இருப்பார். எது உண்மை இல்லையோ அதை உண்மை என்று ஏற்றுக்கொள்வார் இந்த உடம்பை நாம் எப்படி உண்மை என்று ஏற்றுக் கொள்கிறோம் அது போல மாயை எனப்படும். ஆனால் இது உண்மையில்லை. "நான் ஆன்மா" அதுவே உண்மை. இதற்குப் பெயர்தான் மாயை. அதன்பின், இந்த மாயா அறிவோடு முழுமையற்ற அறிவோடு நாம் ஆசிரியர்கள் ஆகிவிடுகிறோம். அது மற்றும் ஒரு ஏமாற்று. இந்த விஞ்ஞானிகளும் தத்துவவாதிகளும் சொல்கின்றனர், "இருக்கலாம்" "ஒருவேளை" என்றெல்லாம். உங்கள் அறிவு எங்கே போனது? "ஒருவேளை", "இருக்கலாம்". நீங்கள் ஏன் ஒரு ஆசிரியரின் பதவியை ஏற்கிறீர்கள்? "வருங்காலத்தில் நாம் புரிந்துகொள்ளலாம்". எதிர்காலம் என்பது என்ன? பின் தேதியிட்ட காசோலையை ஏற்பீர்களா? "வரும் காலத்தில் நான் கண்டுபிடிப்பேன், அதனால் நான் விஞ்ஞானி"என்றால் அது என்ன விஞ்ஞானி? அனைத்திற்கும் மேலாக, நம் புலன் களில் குறைபாடு இருக்கின்றது. வெளிச்சம் இருக்கும் வரையில்தான் நாம் ஒருவரை ஒருவர் பார்க்க முடிகிறது, அதுபோல்தான். வெளிச்சம் இல்லை என்றால், என் பார்வையின் திறன் என்ன? ஆனால் இந்த கயவர்கள் தாங்கள் எப்போதும் குற்றம் உடையவர்கள் என்பதை புரிந்து கொள்வதில்லை இருந்தும் அறிவு சார்ந்த புத்தகங்கள் பலவற்றை எழுதுகின்றனர். உங்கள் அறிவு தான் என்ன? குற்றமற்றவரிடமிருந்து தான் அறிவைப் பெற வேண்டும்.
ஆகவேதான் நாம் கிருஷ்ணரிடம் இருந்து அறிவைப் பெறுகிறோம் பரம புருஷர் முழுமையானவர். ஆக அவர் நமக்கு அறிவுறுத்துகிறார், நம் சுகதுக்கங்கள் ஒழிய வேண்டுமென்றால் இந்த பௌதீக உடல் மறுபடியும் கிடைக்காதபடி நாம் ஏதாவது ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்று இதைத்தான் கிருஷ்ணர் அறிவுறுத்துகிறார் பௌதீக உடலை பெறுவதை எப்படி தவிர்ப்பது. அது விளக்கப்பட்டிருக்கிறது. இது இரண்டாவது அத்தியாயம். நான்காவது அத்தியாயத்தில் கிருஷ்ணர் சொல்லி இருக்கிறார்: ஜன்ம கர்ம மே திவ்யம் யோ ஜாநாதி தத்த்வத:, த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம நைதி மாம் ஏதி (BG 4.9). கிருஷ்ணரின் செயல்களை புரிந்து கொள்ள மட்டுமே முயலுங்கள். கிருஷ்ணரின் செயல்கள் சரித்திரத்தில், மகாபாரதத்தில் இருக்கிறது. மகாபாரதம் என்றால் மகா இந்தியா அல்லது மகாபாரதம் மகாபாரதம் சரித்திரம் அந்தச் சரித்திரத்தில் தான் இந்த பகவத்கீதையும் உள்ளது. அவர் தன்னைப் பற்றியே பேசுகிறார். கிருஷ்ணரை புரிந்து கொள்ள முயலுங்கள். அதுவே நமது கிருஷ்ண பக்தி இயக்கம். கிருஷ்ணரையும் அவர் செயல்களையும் மட்டும் புரிந்து கொள்ள முயலுங்கள். அவர் உருவமற்றவர் அல்ல. ஜன்ம கர்ம மே திவ்யம். கர்மா என்றால் செயல்கள். அவர் செயலாற்றுகிறார். அவரின் இந்த உலக கர்மங்களில் பங்கேற்கிறார்? அவர் ஏன் வருகிறார்?
- யதா யதா ஹி தர்மஸ்ய
- க்லானிர் பவதி பாரத
- அப்யுத்தானம் அதர்மஸ்ய
- ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்
- (BG 4.7)
அவர் ஒரு காரணத்திற்காக வருகிறார். அவருக்கு ஒரு குறிக்கோள் இருக்கிறது. எனவே கிருஷ்ணரை அவரது குறிக்கோளை அவரது செயல்களை புரிந்து கொள்ள முயலுங்கள். அது ஒரு சரித்திர வடிவில் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் சிரமம் எங்கே? நாம் பலவற்றையும் படிக்கின்றோம், பல தலைவர்களின் அரசியல்வாதிகளின் செயல்களை சரித்திரங்களை. அதே தான் இதுவும். அதே ஆற்றலை கிருஷ்ணரை புரிந்துகொள்ள செலவழித்தால் சிரமம் எங்கே? கிருஷ்ணர் பலவிதமான செயல்களின் மூலம் தன்னை வெளிப்படுத்துகிறார்.