TA/Prabhupada 0021 - இந்த நூற்றாண்டில் ஏன் இத்தனை விவாகரத்து

Revision as of 13:31, 26 May 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 6.1.26 -- Honolulu, May 26, 1976

பொதுவாக இப்படித்தான் வாழ்க்கையை வாழ்கிறார்கள். எல்லோரும் இந்த பௌதிக செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள், மற்றும் பௌதிக செயல்களின் அடிப்படை என்றால் கிரஹஸ்த வாழ்க்கை, அதாவது குடும்ப வாழ்க்கை. வேத ஒழுங்கமைப்பின் படி, அல்லது எங்கேயும், குடும்ப வாழ்க்கை என்றால், மனைவி மற்றும் குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பை நிறைவேற்றும் வாழ்க்கை. எல்லோரும் ஈடுபட்டிருக்கிறார்கள். இது மட்டும்தான் கடமை என்று அவர்கள் நினைக்கிறார்கள். "குடும்பத்தை பராமரிப்பது தான் என்னுடைய கடமை. எவ்வளவு வசதியாக முடிகிறதோ அவ்வளவு. அது தான் என்னுடைய கடமை." இது போன்ற கடமைகளை மிருகங்கள்கூட தான் செய்கின்றன என்பதை ஒருவரும் நினைத்துப் பார்ப்பதில்லை. அவற்றிற்கும் பிள்ளைகள் இருக்கின்றன. அவைகளும் உணவுக்கான ஏற்பாட்டை செய்வது உண்டு . இதில் என்ன வித்தியாசம்? எனவே இங்கு மூட என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மூட என்றால் கழுதை. இது போன்ற கடமைகளில் ஈடுபட்டிருப்பவன், புஞ்ஜான: ப்ரபிபன் காதன். ப்ரபிபன். ப்ரபிபன் என்றால் குடிப்பது, புஞ்ஜான: என்றால் உண்பது. உண்ணும் பொழுதும், குடிக்கும் பொழுதும், காதன், மெல்லும் பொழுதும், சர்வ சஸ்ய ரஜ ப்ரெய(?). நான்கு வகையான உணவு வகைகள் உள்ளன. சில நேரம் நாம் மெல்லுவோம், சில நேரம் நாம் நக்குவோம், (சமஸ்கிருதம்) சில நேரம் நாம் விழுங்குவோம், சில நேரம் நாம் பருகுவோம். ஆக நான்கு வகையான உணவுப் பொருட்கள் உள்ளன. அதனால்தான் நாம், சது: விதா ஸ்ரீ-பகவத்-ப்ரசாதாத் என பாடுகிறோம். சது: விதா என்றால் நான்கு வகைகள். ஆக நாம் ஸ்ரீ விக்கரத்திற்கு (கடவுளுக்கு), இந்த நான்கு வகைகளுக்கு உட்பட்ட பல வகையான உணவுப் பொருட்களை வழங்குகிறோம். சிலவற்றை மெல்லுகிறோம், சிலவற்றை நக்குகிறோம், சிலவற்றை விழுங்குகிறோம். அப்படி. ஆக புஞ்ஜான: ப்ரபிபன் காதன் பாலகம் ஸ்நேஹ-யந்த்ரித:. தந்தையும் தாயும், பிள்ளைகளுக்காக எப்படி உணவை ஏற்பாடு செய்வது என்பதை கவனித்து, அவர்களை பராமரிக்கின்றனர். தாயார் யசோதா கிருஷ்ணருக்கு உணவு ஊட்டுவாள் என்பதை நாம் அறிவோம். அதே செயல். இதுதான் வித்தியாசம். நாம் சாதாரணமான குழந்தைக்கு ஊட்டுகிறோம். பூனைகளும் நாய்களும் கூடத்தான் இதைச் செய்கின்றன. ஆனால் தாயார் யசோதா கிருஷ்ணருக்கு ஊட்டிக் கொண்டிருக்கிறாள். செய்முறை அதே தான். செய்முறையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் ஒன்று கிருஷ்ணரை மையமாகக் கொண்டது, மற்றொன்று தான்தோன்றித்தனமாக தீர்மானிக்கப்பட்ட மையம். அதுதான் வித்தியாசம். கிருஷ்ணரை மையமாகக் கொண்டிருக்கும்பொழுது அது ஆன்மீகமாகும். மற்றும் தான்தோன்றித்தனமாகத் தீர்மானிக்கப்பட்ட ஒரு மையம் இருந்தால், அப்போது அது பௌதிகமாகும். வேறு எந்த வித்தியாசமும் கிடையாது, பௌதிகத்திற்கும்... இதுதான் வித்தியாசம். எப்படி என்றால், காமம் மற்றும் காதல், தூய்மையான காதல் அதாவது அன்பு. அது போல் தான். காமவேட்கைக்கும் தூய்மையான அன்பிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன? இங்கே நாம் கலந்து பழகுகிறோம், ஆண்களும் பெண்களும், கலந்து காமவேட்கையுடன் பழகுகிறார்கள். மற்றும் கிருஷ்ணரும் கோபியர்களுடன் கலந்து பழகுகிறார். மேற்தோற்றத்தில் இந்த இரண்டும் ஒருபோலவே தான் தென்படுகின்றன. இருப்பினும் இவற்றில் என்ன வித்தியாசம்? இந்த வித்தியாசம் சைதன்ய-சரிதாம்ருதத்தின் நூலாசிரியரால் விளக்கப்பட்டுள்ளது, அதாவது காமவேட்கைக்கும் தூய்மையான அன்பிற்கும் இடையில் உள்ள வித்தியாசம் என்ன? அது விளக்கப்பட்டுள்ளது. அவர் சொல்லி இருக்கிறார், ஆத்மெந்திரிய-ப்ரீதி-வாஞ்சா-தாரெ பலி காம (சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை 4.165), "நான் என் புலன்களை திருப்திபடுத்த விரும்பினால், அதுதான் காமம்." ஆனால் க்ருஷ்ணேந்த்ரிய-ப்ரீதி-இச்சா தரே ப்ரெம நாம, மற்றும் நாம் கிருஷ்ணரின் புலன்களுக்கு திருப்தி அளிக்க விரும்பினால், அதுதான் உண்மையில் அன்பு, ப்ரேம." அதுதான் வித்தியாசம். இங்கு இந்த பௌதிக உலகில் அந்த அன்பே கிடையாது ஏனென்றால் அந்த ஆணுக்கும் பெண்ணுக்கும், அவர்களுக்கு அப்படிப்பட்ட சிந்தனையே கிடையாது, அதாவது, "நான் அந்த ஆணுடன் உறவாடுகிறேன், அந்த ஆண் தன் ஆசைகளை என் மூலம் திருப்தி செய்து கொள்கிறான்." இல்லை. "நான் என் ஆசைகளை திருப்திபடுத்திக் கொள்வேன்." இதுதான் அடிப்படை கொள்கை. ஓர் ஆண் நினைக்கிறான், "இந்த பெண்ணுடன் உறவு கொள்வதால் என் புலன்களின் தாகத்தை தணித்துக் கொள்வேன்," மற்றும் பெண் நினைக்கின்றாள், "இந்த ஆணுடன் உறவு கொள்வதால் நான் என் ஆசைகளைத் தீர்த்துக் கொள்வேன்." ஆக மேற்கத்திய நாடுகளில் இது மிகவும் பிரபலமானது. தன் சொந்த புலன் இன்பத்தில் சிக்கல் ஏற்பட்டவுடன், விவாகரத்து தான். இந்த நாட்டில் ஏன் இத்தனை விவாகரத்துக்கள் என்பதற்கு இந்த மனோவியல் நிலையே காரணம். இதன் அடிப்படை காரணம் என்னவென்றால் "எனக்குத் திருப்தி இல்லை என்று அறிந்தவுடனே, எனக்கு இந்த உறவு தேவையில்லை." என்ற மனப்பான்மை. அது ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது: தாம்-பத்யம் ரதிம் எவ ஹி (ஸ்ரீமத் பாகவதம் 12.2.3). இந்த காலத்தில், கணவன் மனைவி என்றால் உடலுறவு, சுயநலம். அந்த கேள்விக்கே இடமில்லை, அதாவது, "நாம் சேர்ந்து வாழவோம்; கிருஷ்ணரை திருப்தி படுத்துவது எப்படி, என்று பயிற்சி பெற்று, நாம் கிருஷ்ணரைத் திருப்தி படுத்துவோம்." அதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம்.