TA/Prabhupada 0029 - புத்தர் பகவான் அரக்கர்களை ஏமாற்றினார்

Revision as of 14:04, 26 May 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Sri Isopanisad, Mantra 1 -- Los Angeles, May 3, 1970

ஆகையால் புத்த பகவான், அவர் அரக்கர்களை ஏமாற்றினார். அவர் ஏன் ஏமாற்றினார்? சடய-ஹிர்தய தர்ஸித-பஸூ-காதம். அவர் மிகுந்த கருணை நிறைந்தவர். இறைவன் எப்பொழுதும் எல்லா உயிர்வாழிகளிடமும் இரக்கமுள்ளவர் ஏனென்றால் ஒவ்வொருவரும் அவருடைய பிள்ளை. ஆகையால் இந்த அயோக்கியர்கள் கட்டுப்பாடு இல்லாமல் கொலை செய்தார்கள், வெறுமனே மிருகங்களை வதைத்தார்கள். மற்றும் நீங்கள் சொன்னால், "ஓ, ஏன் நீங்கள் மிருகங்களைக் கொல்லுகிறீர்கள்?" அவர்கள் உடனே சொல்வார்கள், "ஓ, அது வேதத்தில் இருக்கிறது: பஸவொ வதாய ஸ்ரிஷ்த." மிருகங்களைக் கொல்வது வேதத்தில் இருக்கிறது, ஆனால் அதன் நோக்கம் என்ன? அது வேத மந்திரத்தைச் சோதனை செய்ய. ஒரு மிருகத்தை நெருப்பில் போடுவார்கள், அத்துடன் வேத மந்திரத்தால் அது மீண்டும் இளமையாகிறது. அதுதான் பலி, மிருகத்தைப் பலி கொடுத்தல். அதை உண்ணும் நோக்கத்துடன் அல்ல. ஆகையினால் இந்த கலியுகத்தில், சைதன்ய மஹாபிரபு எந்த விதமான யாகத்தையும் கூடாது என தடை விதித்துள்ளார் ஏனெனில் அங்கே இல்லை, நான் சொல்வது யாதெனில், மந்திரத்தை ஜபிக்கக் கூடிய திறமை வாய்ந்த பிராமணர் இல்லை அத்துடன் வேத மந்திரத்தைப் பரிசோதனை செய்து அது "இதோ வெளியே வருகிறது, (என்று கூறுமளவிற்கு)," அதாவது.... மந்திரம் எவ்வளவு சக்தி வாய்ந்தது, என்று யாகத்தைச் செயற்படுத்தும் முன், அதை பரிசோதிக்க ஒரு மிருகத்தைப் பலியிட்டு பின்பு மீண்டும் மறுபிறவி கொடுக்கப்படுகிறது. பிறகு இது புரிந்துக் கொள்ளத்தக்கது அதாவது ஆக்னிஹோத்ரிகள் ஜபித்துக் கொண்டிருந்த அந்த மந்திரம், அது சரியானது என்று தீர்மானிக்கப்படும். அது ஒரு சோதனை. மிருகங்களைக் கொல்ல அல்ல. ஆனால் இந்த அயோக்கியர்கள், மிருகத்தை உண்பதற்காக அவர்கள் கூறுவது, "இங்கே மிருக பலி நடக்கிறது." உதாரணத்துக்கு, கல்கத்தாவில்.... நீங்கள் கல்கத்தாவிற்க்குச் சென்று இருக்கிறீர்களா? அங்கே ஒரு தெரு இருக்கிறது, காலெஜ் தெரு. இப்பொழுது அதற்கு வேறு பெயர். நான் நினைக்கிறேன் அதற்கு விதன் ராயா என்று பெயரிடப்பட்டுள்ளது. எப்படியோ, அங்கே சில கசாப்புக் கடைகள் இருக்கின்றன. ஆகையால் கசாப்புக் கடைகள் என்றால் இந்துக்கள், அவர்கள் முஸ்லிம் கடைகளிலிருந்து மாமிசம் வாங்கமாட்டார்கள். அது சுத்தமற்றது. அதைப்போல்: இந்த பக்கமும் மலம், அந்த பக்கமும் மலம். அவர்கள் சாப்பிடுவது மாமிசம், அதில் இந்து கடையில் இருப்பது சுத்தமானது, முஸ்லிம் கடையில் இருப்பது அசுத்தமானது. இவைகள் மனம் சார்ந்த கட்டுக் கதைகள். மதம் இந்த நிலையில் போய்க் கொண்டிருக்கிறது. ஆகையினால் சண்டையிடுகிறார்கள்: "நான் இந்து," "நான் முஸ்லிம்," "நான் கிறிஸ்தவர்." யாருக்கும் மதத்தைப் பற்றி தெரியாது. நீங்கள் பார்க்கிறீர்களா? அவர்கள் மதத்தைப் புறக்கணிக்கிறார்கள், இந்த அயோக்கியர்கள். இங்கே மதம் இல்லை. உண்மையான மதம் இதுதான், கிருஷ்ண உணர்வு, இறைவனை நேசிப்பது எப்படி என்று கற்றுக் கொடுக்கிறது. அவ்வளவு தான். அதுதான் மதம். எந்த மதமானாலும், பரவாயில்லை, இந்து மதம், முஸ்லிம் மதம், கிறிஸ்துவ மதம், எதுவானாலும், நீங்கள் இறைவன் மீதான பக்தியை மேம்படுத்தினால், பிறகு நீங்கள் உங்கள் மதத்தில் பூரணமாக இருப்பீர்கள்.