TA/Prabhupada 0074 - நீங்கள் ஏன் மிருகங்களை உண்ண வேண்டும்?
Lecture on BG 4.21 -- Bombay, April 10, 1974
அனைத்தும் பகவத் கீதையில் வர்ணிக்கப்பட்டுள்ளது. "நீங்கள் காற்றை சுவாசித்து கொண்டு வாழுங்கள்." என்று பகவத் கிதையில் கூறவில்லை. பகவத் கிதையில் கூறியிருப்பது, அன்னாத் பவந்தி பூதானி (ப.கீ.3.14). அன்ன. அன்ன என்றால் உணவு தானியங்கள். அங்கே உணவு தானியங்களுக்கு அவசியம் உள்ளது. அன்னாத் பவந்தி பூதானி. பகவத் கிதையில் இவ்வாறு கூறப்படவில்லை அதாவது " நீங்கள் உணவு உண்ண தேவையில்லை. நீங்கள் வெறுமனே காற்றை சுவாசித்து மேலும் யோகா பயிற்சி செய்யுங்கள்." இல்லை. ஆனால் நாம் உண்ண வேண்டும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ அல்ல. அது தான் சிபார்சு செய்யப்பட்டுள்ளது. யுக்தாஹார-விஹாரஸ்ய. நாம் அதிகமாகவோ குறைவாகவோ உண்ண கூடாது. மேலும் நிராஷீஹ. நிராஷீஹ என்றால் ஊதாரி செலவு செய்ய விரும்பாதது. நாம் இப்பொழுது புலன் நுகர்வில் மேன்மேலும் விருப்பம் கொள்கிறோம். அது தேவையற்றது. உங்களுக்கு குறைவற்ற முழுமையான வாழ்க்கை வேண்டுமென்றால், இதுதான் தபஸ்ய என்று அழைக்கப்படுகிறது. ஒருவருக்கு அந்த எதிர்பார்ப்பு இருக்கும், ஆனால் அவர் தேவையற்று ஏதிர்பார்க்க கூடாது. எல்லோருக்கும் உணவு உண்ண உரிமை இருக்கிறது, மிருகங்களுக்கு கூட. எல்லோருக்கும் அந்த உரிமை இருக்கிறது. ஆனால் அனுபவிக்கும் ஏதிர்பார்ப்பு நம்மிடம் அதிகமாக இருக்கிறது, ஆகையினால், மிருகங்கள் நன்றாக வாழ நாம் அவற்றிற்கு சந்தர்ப்பம் அளிப்பதில்லை. முன்பாக, நாம் அந்த மிருகங்களை, உண்ண முயற்சிக்கிறோம். இது தேவையற்றது. இதை தான் நிராஷீஹ என்றழைக்கிறோம். நீங்கள் ஏன் மிருகங்களை உண்ண வேண்டும்? அது அநாகரிகமான வாழ்க்கை. அங்கே உணவு இல்லாத பொழுது, அவர்கள் ஆதிவாசிகளாதலால், அவர்கள் மிருகங்களை உண்ண வாய்ப்புண்டு, ஏனென்றால் அவர்களுக்கு உணவு பயிர் செய்ய தெரியாது. ஆனால் மனித சமுதாயம் நாகரிகமாகும் பொழுது, அவர் பல நல்ல உணவுகளை பயிர் செய்யலாம், அவர் மாடுகளை உண்பதற்கு பதிலாக, அவற்றை வளர்க்கலாம், அவருக்கு பால் கிடைக்கும், போதுமான அளவிற்கு பால். பாலில் இருந்தும் தானியங்களிலிருந்தும் நாம் பல வகையானவற்றைத் தயாரிக்கலாம். ஆகையால் நாம் தேவையில்லாமல் அதிகமாக அனுபவிக்க எதிர்ப்பார்க்க கூடாது. பிறகு இது இங்கே சொல்லப்படுகிறது, குர்வன்னாப்னொதி கில்பிஷம். கில்பிஷம் என்றால் பாவச்செயல் நிறைந்த வாழ்க்கையின் கர்மபலன். கில்பிஷம். ஆகையால் நம் தேவைக்கு அதிகமாக எதிர்ப்பார்ப்பு இல்லையென்றால், பிறகு நாம் சிக்கவைக்கப் படமாட்டோம், பாவச் செயலில் சம்பந்தப்பட, குர்வன் அபி, அவர் வேலையில் ஈடுபட்ட போதிலும். நீங்கள் வேலை செய்துக் கொண்டிருக்கும் பொழுது, அறிந்தோ அல்லது அறியாமலோ, நீங்கள் எதாவது தெய்வ பக்தி இல்லாத, பாவச் செயலில் கூட ஈடுபட நேரிடலாம், ஆனால் நீங்கள் வெறுமனே நல்லவிதமாக வாழும் எதிர்ப்பார்ப்புடன் இருந்தால், பிறகு குர்வன்னாப்னொதி கில்பிஷம். நம் வாழ்க்கை எந்தவிதமான பாவச் சம்பவமும் இல்லாததாக இருக்க வேண்டும். இல்லையென்றால் நாம் துன்பப்பட நேரும். அவர்கள் பல சகிக்க முடியாத உயிர்களைப் பார்த்துக் கொண்டு இருப்பினும், அவர்கள் நம்புவதாக இல்லை. எங்கிருந்து இவர்கள் வருகிறார்கள், 8,400,000 இன உயிர்கள்? அங்கே பலவித உயிர்கள் மிகவும் சகிக்க முடியாத நிலையில் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. நிச்சயமாக, மிருகங்களுக்கோ அல்லது உயிருள்ள இனங்களுக்கோ தெரியாது. ஆனால் நாம் மனிதப் பிறவி, ஏன் இந்த சகிக்க முடியாத வாழ்க்கை என்று நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இது மாயாவின் மாயை. இருப்பினும், உதாரணத்திற்கு, ஒரு பன்றி மிகவும் அசுத்தமான நிலையில் வாழ்கிறது, மலத்தை உண்கிறது, இருப்பினும், அது மிகவும் சந்தோஷமாக நினைக்கிறது, ஆகையினால் அது பருமனாகிறது. ஒருவர் சந்தோஷமாக உணரும் போது, "நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்," அவர் பருமனாகிவிடுவார்.— ஆகையால் நீங்கள் பன்றிகளைப் பார்த்தால், அவை மிகவும் பருமனாக இருக்கும், ஆனால் அவை என்ன உண்ணுகின்றன? அவை மலம் உண்டு மேலும் அசுத்தமான இடத்தில் இருக்கின்றன. ஆனால் அவை நினைக்கின்றன "நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றோம்." ஆகையால் அதுதான் மாயாவின் மாயை. எவரும் சகிக்க முடியாத வாழ்க்கை நிலையில் வாழ்பவர்கள், மாயா, மாயையினால், அவர் நினைக்கிறார் தான் நன்றாக இருக்கிறோம், தான் குறையற்ற முழுமையான வாழ்க்கை வாழ்கிறார் என்று. ஆனால் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவர், அவர் தான் வெறுக்கத்தக்க நிலையில் வாழ்வதாக பார்க்கிறார். ஆகையால் இந்த மாயை அங்குள்ளது, ஆனால் ஞானத்தாலும், நல்ல சகவாசத்தாலும், சாஸ்திரத்திலிருந்து விதிமுறைகளை எடுத்துக் கொண்டு, குருவிடமிருந்தும், புனிதமானவர்களிடமிருந்தும், ஒருவர் வாழ்க்கையின் மதிப்பென்ன என்பதைப் புரிந்துக் கொண்டு அதன்படி வாழ வேண்டும். ஆகையால் இது கிருஷ்ணரால் வழங்கப்பட்ட அறிவுரைகள், அதாவது, நிராஷீஹ, ஒருவர் தேவையற்று எதிர்பார்ப்புடன், தன் வாழ்க்கையின் தேவைக்கு மேல் எதிர்பார்ப்பது. இதை தான் நிராஷீஹ என்றழைக்கிறோம். நிராஷீஹ. மற்றொரு பொருள் என்னவென்றால் ஜட இன்பத்தில் ஆர்வம் இல்லாமை. மேலும் இது சாத்தியமானதே அவர் முழு ஞானம் பெற்று அதாவது "நான் இந்த உடம்பு அல்ல. நான் ஆன்மா. என்னுடைய தேவை எவ்வாறு ஆன்மீக ஞானத்தில் முன்னேறுவது." பிறகு அவர் நிராஷீஹவாகிவிடுவார். இவைகள் தான் தபஸ்ய, துறவறம், பிராயச்சித்தம் ஆகியவற்றுக்கான பட்டியல். மக்கள் இப்பொழுது இதை மறந்துவிட்டார்கள். அவர்களுக்கு துறவறம் என்றால் என்னவென்று தெரியாது. ஆனால் மனித வாழ்க்கை அந்த குறிக்கொளுக்கானது. தபோ திவ்யம் புத்ரகா யேன ஸத்த்வம் ஷூத்த்யேத் யஸ்மாத் ப்ரஹ்ம - ஸெளக்யம் த்வ அனந்தம் (ஸ்ரீ.பா.5.5.1). இவைகள் தான் சாஸ்திராவின் விதிமுறைகள். மனித வாழ்க்கை தபஸ்யாவைக் குறிக்கிறது. மேலும் தபஸ்யா, ஆகையினால் வேத வழிப்பட்ட வாழ்க்கையின் ஆரம்பம் தபஸ்ய, ப்ரமசாரீ, ப்ரமசாரீ. ஒரு மாணவன் குருகுலத்திற்கு பிரமசாரியா பயிற்சி பெற அனுப்பப்படுகிறார். அதுதான் தபஸ்ய, சுகமான வாழ்க்கையல்ல. கீழே தரையில் படுத்துக் கொள்வது, வீட்டுக்கு வீடு சென்று குருவிற்காக யாசகம் வேண்டுவது. ஆனால் அவர்கள் களைப்படைய மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் குழந்தைகள், அவர்களுக்கு இந்த துறவறம் பயிற்சி அளிக்கப்பட்டால், அவர்கள் செயல்படுவார்கள். அவர்கள் அனைத்து பெண்களையும் "அம்மா." "அம்மா, கொஞ்சம் யாசகம் கொடுங்கள்." என்று அழைப்பார்கள். மேலும் அவர்கள் குருவின் இருப்பிடத்திற்குச் செல்வார்கள். அனைத்தும் குருவிற்குச் சொந்தமாகும். இது ப்ரமசாரீ வாழ்க்கை. இதுதான் தபஸ்ய. தபோ திவ்யம் (ஸ்ரீ.பா.5.5.1). அதுதான் வேத நாகரிகம், அதாவது குழந்தைகள் வாழ்க்கையின் ஆரம்பத்திலிருந்து, தபஸ்ய, பிரமசாரியத்திற்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மணமாகாத நிலை. ஒரு ப்ரமசாரீ எந்த இளம் பெண்ணையும் பார்க்க கூடாது. குருவின் மனைவி கூட இளமையாக இருந்தால், அவர் குருவின் மனைவியிடம் செல்லக் கூடாது. இவைகள் தான் கட்டுப்பாடுகள். இப்பொழுது அந்த பிரமசாரிய எங்கே? ப்ரமசாரீ இல்லை. இது கலி-யுகம். தபஸ்ய இல்லை.