TA/Prabhupada 0534 - கிருஷ்ணரைப் பார்ப்பதற்கு செயற்கையாய் முயலாதீர்கள்

Revision as of 07:27, 25 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Radhastami, Srimati Radharani's Appearance Day -- London, August 29, 1971

பிரபுபாதர்: எனவே கோஸ்வாமிகளின் கால்தடங்களை நாம் பின்பற்ற வேண்டும், கிருஷ்ணா மற்றும் ராதாராணியை, பிருந்தாவனத்தில் அல்லது உங்கள் இதயத்திற்குள் தேடுவது எப்படி. அதுதான் சைதன்யா மகாபிரபுவின் பஜனையின் செயல்முறை: பிரிவுணர்வு, விப்ரலம்பா, விப்ரலம்பா-சேவா. கிருஷ்ணரின் பிரிவினை உணர்ந்த சைதன்ய மகாபிரபுவைப் போலவே, அவர் கடலில் கீழே விழுந்து கொண்டிருந்தார். அவர் தனது ஓய்வு அறையிலிருந்து அல்லது அவரது படுக்கையறையிலிருந்து வெளியே வந்து இரவ நேரத்தில் வெளியே சென்று கொண்டிருந்தார். அவர் எங்கு சென்றார் என்பது யாருக்கும் தெரியாது. எனவே அது அவருடைய தேடலாக இருந்தது. பக்தி சேவையின் இந்த செயல்முறையை சைதன்ய மகாபிரபு கற்பிக்கிறார். அவ்வளவு சுலபமாக அல்ல, "நாம் கிருஷ்ணரை அல்லது ராதாராணியை ராசா-லிலாவில் பார்த்திருக்கிறோம்." என்பதல்ல. இல்லை, அப்படி இல்லை. பிரிவினை உணருங்கள். கிருஷ்ணரிடமிருந்து பிரிந்து செல்வதை நீங்கள் எவ்வளவு அதிகமாக உணர்கிறீர்களோ, அப்பொழுது தான் நீங்கள் முன்னேறுகிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். கிருஷ்ணரை செயற்கையாக பார்க்க முயற்சிக்காதீர்கள். பிரிவு உணர்வில் முன்னேறுங்கள், பின்னர் அது சரியானதாக இருக்கும். அதுதான் பகவான் சைதன்யரின் போதனை. ஏனென்றால் நம் பௌதீகக் கண்களால் நாம் கிருஷ்ணரைப் பார்க்க முடியாது. அத: ஸ்ரீ-க்ருஷ்ண-நாமாதி ந பவேத் க்ராஹ்யம் இந்த்ரியை: (CC Madhya 17.136). நம்முடைய பௌதீகப் புலன்களால் நாம் கிருஷ்ணரைப் பார்க்க முடியாது, கிருஷ்ணரின் பெயரைப் பற்றி கேட்க முடியாது. ஆனால், ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ. கிருஷ்ணருடைய சேவையில் நீங்கள் ஈடுபடும்போது ... சேவை எங்கே தொடங்குகிறது? ஜிஹ்வாதவ். சேவை நாக்கிலிருந்து தொடங்குகிறது. கால்கள், கண்கள் அல்லது காதுகளிலிருந்து அல்ல. இது நாக்கிலிருந்து தொடங்குகிறது. ஸேவோன்முகே ஹி ஜிஹ்வாதௌ. உங்கள் நாக்கு வழியாக சேவையைத் தொடங்கினால் ... எப்படி? ஹரே கிருஷ்ணா என்று கோஷமிடுங்கள். உங்கள் நாக்கைப் பயன்படுத்துங்கள். ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே, ஹரே ராம, ஹரே ராம, ராம ராம, ஹரே ஹரே. மேலும் கிருஷ்ண பிரசாதம் எடுத்துக் கொள்ளுங்கள். நாக்குக்கு இரண்டு முக்கிய வேலைகள் கிடைத்துள்ளன: ஒலியை வெளிப்படுத்த, ஹரே கிருஷ்ணா; மற்றும் பிரசாதம் எடுத்துக் கொள்ள. இந்த செயல்முறையின் மூலம் நீங்கள் கிருஷ்ணரை உணருவீர்கள்.

பக்தர்: ஹரிபோல்!

பிரபுபாதர்: கிருஷ்ணரைப் பார்க்க முயற்சிக்காதீர்கள். உங்கள் பௌதீகக் கண்களால் கிருஷ்ணரை நீங்கள் பார்க்க முடியாது. உங்கள் பௌதீகக் காதுகளால் அவரைப் பற்றி கேட்க முடியாது. தொடவும் முடியாது. ஆனால் நீங்கள் உங்கள் நாக்கை கிருஷ்ணருடைய சேவையில் ஈடுபடுத்தினால், பின்னர் அவர் உங்களுக்கு தன்னை வெளிப்படுத்துவார்: "இதோ நான் இருக்கிறேன்." அது விரும்பப்படுகிறது. ஆகவே, பகவான் சைதன்யர் நமக்குக் கற்பிப்பது போல, ராதாராணியைப் போலவே கிருஷ்ணரைப் பிரிந்து வாடுவதை உணருங்கள், கிருஷ்ணருடைய சேவையில் உங்கள் நாவை ஈடுபடுத்துங்கள்; பின்னர், ஒரு நாள், நீங்கள் முதிர்ச்சியடைந்தவுடன், உங்கள் கண்களுக்கு கிருஷ்ணர் வெளிப்படுவார். மிக்க நன்றி.