TA/Prabhupada 0577 - தத்துவவாதிகள், விஞ்ஞானிகள் என்று அழைக்கப்படுவோர் அனைவரும் முட்டாள்கள், மூடர்கள்
Lecture on BG 2.19 -- London, August 25, 1973
கிருஷ்ணர் ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ: (ஸ்ரீ பிரம்ம ஸம்ஹிதை 5.1) என்பதால், அவர் வடிவம் கொண்டவர், திவ்யமான வடிவம். நித்திய வடிவம், அறிவு நிறைந்த, ஆனந்தம் நிறைந்த வடிவம். இதேபோல் நாமும், நாம் மிகச் சிறிய பகுதி என்றாலும், அதே தன்மை. எனவே இது 'ந ஜாயதே' என்று கூறப்படுகிறது. இந்தப் பிரச்சினை, இந்த அயோக்கியத்தனமான நாகரிகம், இவர்களால் தன்னை நித்தியமானவன் என்று புரிந்துக் கொள்ள முடியாது. பிறப்பு இறப்பு என்ற நிலைக்கு நான் தள்ளப்படுகிறேன் என்று எந்த அயோக்கிய நபர்களுக்கும் புரிவதில்லை. தத்துவவாதிகள், விஞ்ஞானிகள் என்று அழைக்கப்படுபவர்கள் அனைவருமே, எனவே அயோக்கியர்கள், முட்டாள்கள். அவர்களை நிராகரியுங்கள், அவர்களை உடனுக்குடன் நிராகரியுங்கள். கடினமாக உழைப்பது. அதே : நூனம் ப்ரமத்த: குருதே விகர்ம (ஸ்ரீமத் பாகவதம் 5.5.4). பைத்தியம் வேலை செய்வது போல. பைத்தியக்காரனின் வேலையின் மதிப்பு என்ன? அவர் இரவு பகலாகப் பிஸியாக இருந்தால், நான் மிகவும் பிஸியாக இருக்கிறேன் என்று சொல்வார். அப்படியானால் நீங்கள் என்ன ஐயா? நீங்கள் ஒரு பைத்தியம். உங்கள் மூளை விரிசல் ஆனது - பைத்தியம். உங்கள் வேலையின் மதிப்பு என்ன? ஆனால் இது தொடர்கிறது. எனவே கிருஷ்ண உணர்வு, எவ்வளவு முக்கியமான இயக்கம் என்பதை நீங்கள் நினைத்துப் பாருங்கள். இது மனித சமுதாயத்திற்கான சிறந்த சமூக சேவை ஆகும். அவர்கள் அனைவரும் முட்டாள்கள் மற்றும் அயோக்கியர்கள், அவர்களுக்கு எந்த அறிவும் இல்லை, அவர்களின் நிலைப்பாட்டை அறியாதவர்கள். அவர்கள் தேவை இல்லாமல் இரவும் பகலும் கடினமாக உழைக்கிறார்கள். எனவே அவர்கள் மூட என்று சொல்லப்பட்டிருக்கிறார்கள், மூட என்றால் கழுதை. கழுதை சிறிய புற்களுக்காக வண்ணாணுக்கு இரவும் பகலும் வேலை செய்கிறது. புல் எல்லா இடங்களிலும் கிடைக்கிறது, ஆனால் அது, "நான் வண்ணாணுக்கு வேலை செய்யவில்லை என்றால்," மிகவும் கடினமாக, எனக்கு இந்தப் புல் கிடைக்காது " என்று நினைக்கிறது. இது தான் கழுதை. எனவே, அறிவை வளர்த்தபிறகு ஒருவர் புத்திசாலியாக மாறும்போது ... காலப்போக்கில் ஒருவர் புத்திசாலி ஆகிறார். முதலில் பிரம்மச்சாரி. பின்னர், ஒருவர் பிரம்மச்சாரியாக இருக்க முடியாவிட்டால், சரி, மனைவியை ஏற்றுக் கொள்ளுங்கள், கிரிஹஸ்தா. பின்னர் அதைக் கைவிடுங்கள், வனப்பிரஸ்தா. பின்னர் சந்நியாசம் ஏற்றுக் கொள்ளுங்கள். இதுதான் செயல்முறை. மூடர்கள் புலனின்பத்திற்காக இரவும் பகலும் வேலை செய்வார்கள். ஆகையால், வாழ்க்கையின் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், அந்த முட்டாள்தனத்தை விட்டுவிட்டு சந்நியாசத்தை ஏற்று கொள்ள வேண்டும். இல்லை, முடிந்தது. அது சந்நியாசம். இப்போது வாழ்க்கையின் இந்தப் பகுதி கிருஷ்ணரின் சேவைக்காக முழுமையாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான சந்நியாசம். அனாஷ்ரித: கர்ம-பலம் கார்யம் கர்ம கரோதி ய: (பகவத் கீதை 6.1) கிருஷ்ணருக்கு சேவை செய்வது என் கடமை, நான் நித்திய சேவகன்... கார்யம். நான் அதைச் செய்ய வேண்டும், நான் கிருஷ்ணருக்கு சேவை செய்ய வேண்டும் அதுவே எனது நிலைப்பாடு. அது சந்நியாசம் அனாஷ்ரித: கர்ம-பலம் கார்யம் கர்ம கரோதி ய: கர்மிகள், புலன்கள் திருப்திக்கு சில நல்ல விளைவுகளை எதிர்பார்க்கிறார்கள். அது கர்மி. சன்னியாசி என்றால் ... அவர்களும் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள், ஆனால் புலன்கள் திருப்திக்காக அல்ல. கிருஷ்ணரின் திருப்திக்காக. அது சந்நியாசம். இது சந்நியாசம் மற்றும் கர்மி. கர்மியும் மிகக் கடினமாக, மிக மிகக் கடினமாக உழைக்கிறார், ஆனால் இவை அனைத்தும் இந்த ஆமிஷ மத்த-சேவா. ஆமிஷ-மத-ஸேவா. வ்யவாய, பாலியல் வாழ்க்கை, இறைச்சி சாப்பிடுவது மற்றும் போதைக்கு மட்டுமே. ஒரு பக்தர் அதே வழியில் கடினமாகச் செயல்படுகிறார், ஆனால் கிருஷ்ணரின் திருப்திக்காக. இதுதான் வித்தியாசம். நீங்கள் இந்த ஒரு வாழ்க்கையை புலன் இன்பத்திற்காக அல்லாமல் கிருஷ்ணருக்காக அர்ப்பணித்தால், நீங்கள் ந ஜாயதே, எனும் நிலைக்கு வருகிறீர்கள், இனி மரணம் இல்லை, பிறப்பு இல்லை. ஏனென்றால் உங்கள் நிலை ந ஜாயதே ந ... அதுவே உங்கள் உண்மையான நிலை. ஆனால் நீங்கள் அறியாமையில் இருப்பதால், ப்ரமத்த: நீங்கள் பைத்தியம் ஆகிவிட்டீர்கள், நீங்கள் பைத்தியம் ஆகிவிட்டீர்கள். எனவே நீங்கள் இந்தப் புலன்களை திருப்திப்படுத்தும் செயல்முறையைப் பின்பற்றுகிறீர்கள். எனவே நீங்கள் ஒரு சரீரத்தில் சிக்கிக் கொள்கிறீர்கள், உடல் மாறிக் கொண்டே இருக்கிறது. அது பிறப்பு இறப்பு என்று அழைக்கப்படுகிறது.