TA/Prabhupada 0638 - எப்பொழுதும் கிருஷ்ணரையே நினைத்தொழுகுபவர் முதல்நிலை யோகியாவார்
Lecture on BG 2.30 -- London, August 31, 1973
ஆக அனைத்திலும் அவர் கிருஷ்ணரை மட்டும் தான் பார்க்கிறார். ப்ரேமாஞ்ஜன-ச்சு²ரித-ப⁴க்தி-விலோசனேன ஸந்த꞉ ஸதை³வ ஹ்ருʼத³யேஷு விலோகயந்தி (பி.ச. 5.38). சதைவ. அவர்கள் சில நேரங்களில் விசாரணை செய்வார்கள், "நீங்கள் பகவானை பார்த்திருக்கிறிர்களா?" உண்மையிலேயே பக்தர்களாக இருப்பவர்கள், உயர்ந்த பக்தர், அவர் கிருஷ்ணரை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறார், வேறெதுவுமில்லை. ப்ரேமாஞ்ஜன-ச்சு²ரித-ப⁴க்தி-விலோசனேன ஸந்த꞉ ஸதை³வ ஹ்ருʼத³யேஷு (பி.ச. 5.38). சதைவ என்றால் எப்பொழுதும். ஹிருதயேசு விலோகயந்தி. யம் ஸ்யாமசுந்தரம் அசின்தய-குண-ஸ்வரூபம் கோவிந்தம் ஆதி-புருஷம் தம ஹம் பஜாமி. ஆகையால் இதுதான்... கிருஷ்ண உணர்வில் நீங்கள் மேன்மேலும் உயர, நீங்கள் சாதாரணமாக கிருஷ்ணரை காண்பீர்கள். மேலும் நீங்கள் கிருஷ்ணரை எப்பொழுதும் பார்க்க பயிற்சி மேற்கொண்டால், சதா-தத்-பாவ-பாவித: .. யம் யம் வாபி ஸ்மரன் லோகே த்யஜதி அந்தே கலேவரம் (ப.கீ. 8.6). யத் யத் பாவம். ஆக நீங்கள் எப்பொழுதும் கிருஷ்ணரை நினைத்துக் கொண்டிருந்தால்... கிருஷ்ணரின் அறிவுரையையும் மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு (ப.கீ.18.65). "எப்போதும் என்னைப் பற்றியே நினைத்திரு." அதுதான் முதல் ரக யோகி, கிருஷ்ணரைப் பற்றியே எப்போதும் நினைப்பவர். யோகினாம் அபி ஸர்வேஷாம் மத்-கதேனாந்தர்-ஆத்மனா ஷ்ரத்தாவான் பஜதே யோ மாம் ஸ மே யுக்ததமோ மத: (ப.கீ.6.47). அவர் முதல் ரக யோகி. மேலும் பக்தர். நாம் ஏற்கனவே ... மற்றபடி, அவர் ஏன் கிருஷ்ணரை நினைக்க வேண்டும்? மன்-மனா மத்-பக்தோ மத்-யாஜீ. ஒருவர், பக்தர்களால் மட்டுமே எப்போதும் கிருஷ்ணரைப் பற்றி நினைக்க முடியும். மன்-மனா பவ மத்-பக்த:. "உன்னுடைய கடமை என்னைப் பற்றி எப்போதும் நினைப்பது ஏனென்றால் நீ என்னுடைய பக்தன்." அது கடினமான பணியா? நீங்கள் கிருஷ்ணரை ஆலயத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதிகமாக நீங்கள் கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண, கிருஷ்ண, என்று பார்க்க, இருபத்திநான்கு மணி நேரமும் கிருஷ்ண உணர்வில் ஈடுபட்டிருப்பது என்றால் நீங்கள் கிருஷ்ணரை எப்பொழுதும் பார்க்க பயிற்சி பெறுவீர்கள். இதுதான் கிருஷ்ண பக்தி இயக்கம். நீங்கள் கிருஷ்ணரை ஒரு கணம் கூட மறக்கக் கூடாது. மேலும் அதுதான் அறிவுரை. மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம் நமஸ்குரு (ப.கீ.18.65). இந்த நான்கு விஷயங்கள். கோயிலில் மூர்த்தி இருக்கும் போது, நீங்கள் பார்க்கிறீர்கள் மேலும் நீங்கள் அபிப்பிராயப்படுகிறீர்கள். கிருஷ்ணர் மீது நீங்கள் அன்பு வளர்த்திருந்தால், கோயிலை விட்டு வெளியே வந்த பின்னும் உங்கள் மனத்தில் அவரை காண முடிகிறது. மற்றபடி, உத்தியோக பூர்வமாக, நீங்கள் கோயிலுக்கு வருகிறீர்கள் மேலும் உடனடியாக ... "இம்சை, அதை மறந்து விடுகிறேன்." அது மற்றோரு விஷயம். ஆனால் அனைத்து செயல்முறையின் நோக்கமும் கிருஷ்ணரின் மீது அன்பை வளர்பதற்கானது. ஸ வை பும்ʼஸாம்ʼ பரோ த⁴ர்மோ யதோ ப⁴க்திர் அதோ⁴க்ஷஜே (ஸ்ரீ.பா 1.2.6) பக்திர் அதோக்ஷ்ஜே. அது முதல் தரமான சமய முறை. இது முதல் தரமான சமய முறை. இந்த கிருஷ்ண உணர்வு முதல் தரமானது, மிக உயர்ந்த சமய முறை. ஏன்? மக்களை எப்போதும் கிருஷ்ணரை, பரம புருஷரைப் பற்றி சிந்திக்க வைக்க கற்பிக்கிறது. நேசிக்க. சிந்திக்க மட்டுமல்ல. அவரை நாம் நேசிக்கவில்லையெனில் எவரைப் பற்றியும் சிந்திக்க முடியாது. நீங்கள் யாரையாவது நேசித்தால், பிறகு அவரைப் பற்றி எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். காதலன் மேலும் அன்புக்குரியவர் இருவரையும் போல். எவ்வாறு என்றால், ஒரு ஆடவனும், மற்றொரு பெண்ணும் போல். ஆக அவர்கள் காதலிக்கிறார்கள். ஆகையால் அவர்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். "நாம் எப்போது மீண்டும் சந்திக்கலாம், நாம் எப்போது மீண்டும் சந்திக்கலாம்?" அதேபோல், மன்-மனா பவ மத்-பக்த:. நீங்கள் கிருஷ்ண பக்தராகலாம், எப்போதும் கிருஷ்ணரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கலாம், நீங்கள் கிருஷ்ணர் மீது அன்பை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டும். ப்ரமான்ஜன-சுரித-பக்தி-விலோசனென (பி.ச. 5.38). பக்தியால், கிருஷ்ணர் மீது அன்பை வளர்த்துக் கொள்ளலாம். அதுதான் அவசியம்.