TA/Prabhupada 0192 - இருளின் இடுக்கனில் இருக்கும் அனைத்து மனித சமுதாயத்தையும் வேளியே கொண்டுவாருங்கள்
Lecture on SB 6.1.62 -- Vrndavana, August 29, 1975
பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது, பரம் ப்ரஹ்ம பரம் தாம பவித்ரம் பரமம் பவான் புருஷம் சாச்வதம் அத்யம் (பகவத் கீதை 10.12). கிருஷ்ணர், பகவான், புருஷா என்று வர்ணிக்கப்படுகிறார், மேலும் ஜீவாத்மாக்கள் பிரக்ருதி என்று வர்ணிக்கப்படுகிறார்கள். அபரேயமிதஸ்த்வன்யாம் ப்ரக்ருதிம் வித்தி மே பராம் ஜீவபூதாம் மஹாபாஹோ யயேதம் தார்யதே ஜகத் (பகவத் கீதை 7.5). கிருஷ்ணர் விளக்கியுள்ளார். அங்கே பௌதிக சக்தியும் ஆன்மீக சக்தியும் உள்ளது. ஆகையால், ஜீவ-பூதா. ஜீவ-பூதா, ஜீவாத்மாக்கள், அவர்கள் பிரக்ருதி என்று வர்ணிக்கப்பட்டுள்ளார்கள், அத்துடன் பிரக்ருதி என்றால் பெண்கள். மேலும் கிருஷ்ணர் புருஷா என்று வர்ணிக்கப்படுகிறார். ஆகையால் புருஷா அனுபவிப்பவர், அத்துடன் பிரக்ருதி அனுபவிக்கப்படுபவர். "அனுபவிக்கப்படுபவர்" என்றால் வெறுமனே பாலுறவு என்று எண்ணாதீர்கள். இல்லை. "அனுபவிக்கப்படுபவர்" என்றால் பணியாளர், புருஷாவின் கட்டளையை நிறைவேற்றுபவர். இதுதான் கிருஷ்ணரின் நிலைப்பாடு மேலும் நம்முடையதும். நாம் அங்க உறுப்புக்கள், எவ்வாறு என்றால் கைகளும் கால்களும் என் உடலின் அங்க உறுப்புக்கள் போல். கை கால்களின் கடமை யாதெனில் என் கட்டளையை நிறைவேற்றுவது. நான் என் கால்களிடம், "என்னை அங்கே தூக்கிச் செல்." என்றால், அது உடனடியாகச் செய்யும். என் கை - "சும்மா அதை எடு." நான் அதை எடுப்பேன். கை அதை எடுத்துவிடும். ஆகையால் இதுதான் பிரக்ருதியும் புருஷாவும். புருஷா கட்டளையிடுகிறார், மேலும் பிரக்ருதி கடமையை நிறைவேற்றுகிறார். இதுதான் உண்மை..., பிரக்ருதியும் புருஷாவும் என்று கூறியவுடன் பாலுறவு என்று கேள்வி எழுகிறது, அது அவ்வாறு இல்லை. பிரக்ருதி என்றால் கீழ்ப்படிதல், புருஷாவிற்கு கீழ்ப்படிதல். இதுதான் இயற்கை முறை. மேற்கத்திய நாடுகளில் இயற்கைக்கு மாறாக நிகரானவர்களாக முயற்சிக்கிறார்கள், ஆனால் அது இயற்கையாக சாத்தியமல்ல. தாழ்மை அல்லது மேன்மை, போன்ற கேள்வியே இல்லை. அது போன்ற கேள்வியே இல்லை. எவ்வாறு என்றால், ஆரம்பம், ஆரம்பத்தில், யதொ வா இமனி பூதானி ஜெயந்தே. ஜன்மாதி அஸ்ய யத: (ஸ்ரீமத் பாகவதம் 1.1.1). எங்கிருந்து இந்த புருஷா. பிரக்ருதி உறவுகள் ஆரம்பித்தது? ஜன்மாதி அஸ்ய யத: அது பூரண உண்மையிலிருந்து தொடங்கியது. ஆகையினால் பூரண உண்மை என்பது ராதா-கிருஷ்ண, அதே புருஷாவும் பிரக்ருதியும். ஆனால் ராதாராணி சேவகி, உபசரிப்பவர். ராதாராணி மிகவும் திறமையுடையவர் எவ்வாறு என்றால் அவர் எப்போதும் கிருஷ்ணரை தன்னுடைய சேவைகளால் வாசீகரிக்கிறார். இதுதான் ராதாராணியின் நிலைப்பாடு. கிருஷ்ணர் மதன-மோஹன என்று அழைக்கப்படுகிறார். இங்கு விருந்தாவனத்தில் மதன-மோஹன இருக்கிறார், அத்துடன் ராதாராணி மதன-மோஹன-மோஹினி என்று அழைக்கப்படுகிறார். கிருஷ்ணர் மிகவும் கவர்ச்சிகரமானவர் அதனால்... நாம் அழகால் ஈர்க்கப்படுகிறோம், மேலும் கிருஷ்ணர் மன்மதனால் ஈர்க்கப்படுகிறார். ஆகையினால் அவர் பெயர் மதன-மோஹன. மேலும் ராதாராணி மிகவும் பிரமாதமானவர் அதனால் அவர் கிருஷ்ணரை கவர்கிறார். ஆகையினால் அவர் மிகவும் உயர்ந்தவர். ஆகையினால், விருந்தாவனத்தில், மக்கள் ராதாராணியின் பெயரை, கிருஷ்ணரின் பெயரை விட அதிகமாக ஜெபிக்க பழகிக் கொண்டார்கள்- "ஜெய ராதே." ஆம். உங்களுக்கு கிருஷ்ணரின் சலுகை வேண்டுமென்றால், நீங்கள் ராதாராணி திருப்தியடையச் செய்ய முயற்சி செயுங்கள். ஆகையால் இதுதான் வழி. இங்கு கூறப்பட்டுள்ளது, மன மதன-விபிதம்: "மனம் கலக்கமடைந்துவிட்டது." ஆகையால் இந்த மன கலக்கம் மதன-மோஹனால் ஈர்க்கப்படும்வரை தொடர்ந்து இருக்கும். நாம் மதன-மோஹனால் ஈர்க்கப்படவில்லை என்றால், இதுவரை நாம் மதன-மோஹனால் ஈர்க்கப்படவில்லை, நாம் மதனாவால் ஈர்க்கப்பட வேண்டும், மதன-விபிதம். இதுதான் செயல்முறை. உங்கள் மனத்தை உங்களால் கட்டுப்படுத்த முடியுமானால், மதனாவால் குழப்பம் அடையாமல் உங்கள் மனத்தை கட்டுப்படுத்த திறமையில்லை என்றால், முக்தியின் நிலை அடையாவோ அல்லது விமோசனம் அடையும் கேள்விக்கு இடமேயில்லை. வாழ்க்கையின் இறுதியான குறிக்கொள் எவ்வாறு இந்த பௌதிக ஈடுபாடுகளிலிருந்து விடுப்படுவது என்பதாகும், மீண்டும் மீண்டும் பிறப்பு, இறப்பு, அத்துடன் மூவகைத் துயரங்கள். அதுதான் பூரணத்துவம். வாழ்க்கையின் குறிக்கொள், வாழ்க்கையும், உலக முழுவதின் பூரணத்துவம் என்ன என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். முக்கியமாக இந்த வயதில் அவர்கள் மிகவும் நிலைத்தவறியதால் வாழ்க்கையின் குறிக்கோள் என்ன என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். இந்த பெரிய, பெரிய அரசியல் கட்சிகள், தத்துவஞானிகள், விஞ்ஞானிகள், அவர்களுக்கு அறிவுத்திறமை இல்லை. அவர்கள் இருளில் இருக்கிறார்கள். ஆகையினால் அது இருளில் உள்ள மாயை என்று அழைக்கப்படுகிறது. ஆனால் நமக்கு புரிகிறது அதாவது கிருஷ்ண சூரிய சம: " கிருஷ்ணர் சூரியனைப் போன்றவர்." கிருஷ்ண சூரிய சம; மாயா அண்டகார: "இந்த இருள் என்றால் மாயா." கிருஷ்ண சூரிய சம; மாயா அண்டகார, யாஹாண் க்ருஷ்ண, தாஹாண் நாஹி மாயார அதிகார (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 22.31). மாமேவ யே ப்ரபத்யன்தே மாயாமேதாம் தரந்தி தே (பகவத் கீதை 7.14). இதுதான் செயல்முறை. ஆகையால் அது அபாரமான விஞ்ஞானம். இருளின் இடுக்கனில் இருக்கும் அனைத்து மனித சமுதாயத்தையும் வேளியே கொண்டுவர, கிருஷ்ண பக்தி இயக்கம் மிகவும் அறிவுப்பூர்வமான இயக்கம்.