TA/Prabhupada 0221 - அரைகுறையான அடித்தளத்தில் உங்ளுடைய உயர்ந்த கட்டிடத்தை உயர்த்திக் கொண்டே செல்லுதல்
அர்ஜுனர் கிருஷ்ணரிடம் கேட்டார் - "பகவத் கீதையின் இந்த தத்துவத்தை சூரிய தேவருக்கு தாங்கள் போதித்ததாக சொல்கிறீர்கள். அதை நான் எப்படி நம்புவது?" – அதற்கு கிருஷ்ணர் பதில் அளித்தார், "உண்மையில் நாம் இருவருமே அங்கு இருந்தோம், ஆனால் நீ மறந்துவிட்டாய். நான் மறக்கவில்லை." அது தான் கிருஷ்ணருக்கும் ஒரு சாதாரண உயிர்வாழிக்கும் உள்ள வித்தியாசம். அவர் பூரணமானவர். நாம் சிறிய துகள்கள் மட்டுமே; நாம் கிருஷ்ணரின் அம்சங்கள். ஆகவே நாம் கிருஷ்ணரால் கட்டுப்படுவது தான் இயல்பு. கிருஷ்ணரால் கட்டுப்படுவதை நாம் மறுத்தால், ஜட இயற்கையின் சக்தியால், அதாவது இந்த பூமிர் ஆபோ அனலோ வாயுஹு (பகவத் கீதை 7.4), இவைகளால் நாம் கட்டுப்படுத்தப் படுவோம். உண்மையில், நாமும் ஆன்மீக சக்தி தான். நாம், தானே விரும்பி கிருஷ்ணரால் கட்டுப்படுத்தப்படுவதற்கு சம்மதிக்க வேண்டும். அது தான் பக்தித் தொண்டு. அது தான் கைங்கரியம். நாம் ஆன்மீக சக்தி, மற்றும் கிருஷ்ணரோ பரமாத்மா. ஆக நாம் கிருஷ்ணரால் கட்டுப்படுவதற்கு சம்மதித்தால், நாம் ஆன்மீக உலகிற்கு உயர்த்தப்படுவோம். ஆனால் நாம் சம்மதிக்கவேண்டும். கிருஷ்ணர், உங்களுக்கு வழங்கப்பட்ட சிறிதளவு சுதந்திரத்தில் தலையிடுவதில்லை. யதேச்சஸி ததா குரு (பகவத் கீதை 18.63). கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார், "உனக்கு எப்படி விருப்பமோ அப்படி செய்." அந்த சுதந்திரம் நமக்கு இருக்கிறது. ஆக அந்த சுதந்திரத்தை விருப்பம்போல் அனுபவிப்பதற்காகவே நாம் இந்த பௌதிக உலகிற்கு வந்துள்ளோம். ஆக, கிருஷ்ணர் நமக்கு சுதந்திரம் கொடுத்திருக்கிறார், "உனக்கு எப்படி விருப்பமோ அப்படி அனுபவி." நாமும் அதைச் செய்ய முயல்கிறோம். ஆனால் இதன் விளைவாக, நாம் மேன்மேலும் சிக்கல்களில் மாட்டிக்கொள்கிறோம். நமக்கு இந்த பௌதிக உலகில் செயல்படுவதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. நாம் அனைவரும் இந்த பௌதிக உலகின்மீது அதிகாரம் செலுத்த முயற்சி செய்கின்றோம். யாரும் சேவகன் ஆக முயல்வதில்லை. வைஷ்ணவர்களான நாம் மட்டுமே, சேவகர்கள் ஆக முயல்கிறோம். கர்மிகளுக்கும் ஞானிகளுக்கும் சேவகர்கள் ஆவதில் எந்த விருப்பமும் கிடையாது. அவர்கள் நம்மை பார்த்து, "வைஷ்ணவர்களான நீங்கள், அடிமை மனப்பான்மை கொண்டவர்கள்," என்று விமர்சிப்பார்கள். ஆம், நமக்கு அடிமை... சைதன்ய மஹாபிரபு போதித்திருக்கிறார், கோபி-பர்துஹு பத-கமலயோர் தாச-தாசானுதாசஹ (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 13.80) அது தான் நம் நிலை. செயற்கையாக “எல்லாம் என் கட்டுப்பாட்டில் உள்ளது,” என்று கோஷம் போட்டு என்ன பயன்? உன் அதிகாரம் உண்மை என்றால் எதற்காக இந்த காற்றாடி தேவை? நான் இந்த வெயில் காலத்தின் தாக்கத்திற்கு அடிபணிந்து ஆகவேண்டியிருக்கிறது. அதுபோலவே, குளிர்காலத்திற்கும் நான் அடிபணிந்து தான் ஆகவேண்டும், உறையும் குளிர். ஆக நாம் எப்போதும் அடியவர் தான். எனவே சைதன்ய மஹாபிரபு சொல்கிறார், “ஜீவேர ஸ்வரூப ஹய நித்ய-க்ருஷ்ண தாச." (சைதன்ய சரிதாம்ருதம் மத்திய லீலை 20.108-109). உண்மையில், கிருஷ்ணரின் தாசன் என்பதுதான் நமது ஸ்வரூப நிலை. எல்லாம் ஆள்பவர் அந்த கிருஷ்ணரே. இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் இதற்காகத் தான் அமைக்கப்பட்டுள்ளது, அதாவது இந்த முட்டாள்கள், அயோக்கியர்கள், 'மூடாஹா' ... "முட்டாள்கள் “, “அயோக்கியர்கள்” போன்ற வார்த்தைகளை நான் புதிதாக ஒன்றும் உபயோகிக்கவில்லை. அதை கிருஷ்ணரே கூறியிருக்கிறார். ந மாம் துஷ்க்ருதினோ மூடாஹா ப்ரபத்யந்தே நராதமாஹா (பகவத் கீதை 7.15). அவர் அப்படி பேசியிருக்கிறார். நீங்களே பார்க்கலாம். துஷ்க்ருதினஹ, எப்போதும் பாவச் செயல்களில் ஈடுபட்டிருப்பவர்கள், மற்றும் மூடாஹா, அயோக்கியர்கள், முட்டாள்கள். நராதமஹ, மனித பிறவியிலேயே மிக மோசமானவர்கள். "கிருஷ்ணா, ஜட இயற்கையில் லயித்திருக்கும் விஞ்ஞானிகளைப் பற்றி இவ்வளவு மோசமாகப் பேசுகிறீர்களே? பல தத்துவ ஞானிகள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாருமே 'நராதமஹ' தானா?" "ஆமாம், அவர்களும் 'நராதமஹ' தான்." "ஆனால் அவர்கள் படித்தவர்கள் ஆச்சே." "ஆமாம், எதுவாக இருந்தாலும் சரி..." ஆனால் எப்படிப்பட்ட கல்வி அது? மாயயா அபஹ்ருத-ஞானஹ: "அவர்களுடைய கல்வியின் விளைவு என்ன – மாயையினால் அவர்களது அறிவு அபகரிக்கப்பட்டிருக்கறது." பௌதீக கல்வியை ஒருவன் எந்த அளவுக்கு கற்கிறானோ, அந்த அளவுக்கு அவன் நாத்திகன் ஆகிவிடுகிறான். இக்காலத்தில்... அதற்காக, கல்வி என்பதே தீயது என்று... கல்வி என்றால் சரியான புரிதலை அடைவது. ஞானி. கல்வி கற்றவன் என்றால் விவேகமுள்ளவன், அறிஞன், ஞானி. உண்மையான ஞானி என்றால், மாம் ப்ரபத்யதே. பஹூனாம் ஜன்மனாம் அந்தே ஞானவான் மாம் ப்ரபத்யதே (பகவத் கீதை 7.19). அது தான் கல்வி. கல்வி என்பது நாத்திகன் ஆவதற்காக அல்ல, "கடவுளே இல்லை. நான் தான் கடவுள், நீயும் கடவுள். அனைவரும் கடவுள்." இது கல்வி அல்ல. இது அஞானம். மாயாவாதிகள், தாம் இறைவனில் இணைந்துபோவதாக நினைக்கிறார்கள். அது கல்வி அல்ல.