TA/Prabhupada 0270 - எல்லோருக்கும் அவரவருடைய இயற்கையான மனப்பாங்கு இருக்கும்
Lecture on BG 2.7 -- London, August 7, 1973
பிரதியும்ன: மொழிபெயர்ப்பு, "இப்போது என் கடமையைப் பற்றி எனக்கு தடுமாற்றமாக இருக்கிறது மேலும் பலவீனத்தால் மன அமைதியை இழந்துவிட்டேன். இந்நிலையில், நான் தங்களை கேட்கிறேன் எனக்கு தெளிவாக கூறுங்கள் எது எனக்கு சிறந்தது என்று. இப்போது நான் தங்களுடைய சிஷ்யன், மேலும் ஆத்மாத்தரமாக தங்களிடம் சரணடைந்துவிட்டேன். தயவுசெய்து எனக்கு அறிவுரை வழங்குங்கள்."
பிரபுபாதர்: பகவத் கீதையில் இது மிகவும் முக்கியமான செய்யுள். இது வாழ்க்கையின் திருப்பு முனையாகும். கார்ப்பண்ய-தோஷ. இழிவு, தோஷ என்றால் தவறு. ஒருவர் தன்னுடைய தகுதிக்கு ஏற்றப்படி நடக்கவில்லை என்றால், அது தவறாகும். மேலும் அதை இழிவு என்று கூறுகிறோம். ஆகையால் எல்லோருக்கும் அவரவருடைய இயற்கையான மனப்பாங்கு இருக்கும், ஸ்வபாவ.
யஸ்ய ஹி ஸ்வபாவஸ்ய தஸ்யாஷோ துரதிக்ரம
ஸ்வபாவ, இயற்கையான மனப்பாங்குகள். இது ஒரு பொதுவான உதாரணம், அது கொடுக்கப்பட்டுள்ளது, அதாவது
யஸ்ய ஹி யஹ ஸ்வபாவஸ்ய தஸ்யாஷோ துரதிக்ரம
ஒன்று... பழக்கவழக்கம் அது இரண்டாவது குணம். ஒருவரிடம் உள்ளது, பழகிப்போனது, அல்லது ஒருவருடைய குணம், சில விதத்தில் உள்ள தனித்தன்மை, அதை மாற்றுவது மிகவும் கடினம். உதாரணம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஸவா யதி க்ரியதெ ராஜா சஹகிம் நசோ உபர்ஹநம்
ஒரு நாயை நீங்கள் அரசனாக்கினால், அது செருப்பை நக்காது என்று பொருள்படுமா? ஆம், நாயின் குணம் செருப்பை நக்குவதாகும். ஆகையால் நீங்கள் அதை அரசனைப் போல் உடை உடுத்தி சிம்மாசனத்தில் உட்கார வைத்தாலும், இருந்தும், அது ஒரு செருப்பைப் பார்த்த உடனேயே, தாவி குதித்து போய் அதை நக்கும். இதை ஸ்வபாவ என்றழைகின்றோம். கார்ப்பண்ய-தோஷ.ஆகையால் விலங்குக்ளின் வாழ்க்கையில், ஏனெனில் ஜட சக்தியால் கொடுக்கப்பட்ட அதனுடைய குணத்தை மாற்றுவது சாத்தியமில்லை, ப்ரக்ருதி.
ப்ரக்ருதெ: க்ரியமாணானி (ப. கீ. 3.27) காரணம் குண-ஸங்கோ அஸ்ய, காரணம் குண-ஸங்க: அஸ்ய ஸத-அஸத-ஜன்ம-யோனிஸு (பகவத் கீதை 13.22)
ஏன்? அனைத்து ஜீவாத்மாக்களும் பகவானின்அங்க உறுப்புக்கள். ஆகையினால் ஆதியில் ஜீவாத்மாக்களின் சிறப்பியல்புகள் பகவானுடையதைப் போல் சிறந்தது. வெறுமனே அளவைப் பொறுத்த ஒரு கேள்வியே. அதன் தரம் ஒன்றே. அதன் தரம் ஒன்றே.
மமைவாம்சோ ஜீவ-பூத (பகவத் கீதை 15.7)
ஒரே மாதிரியான உதாரணம். நீங்கள் ஒரு துளி கடல் நிரை எடுத்தால், அதன் தன்மை, இரசாயன கலவை ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் அதன் அளவு வேறுபடும். அது ஒரு துளி, மேலும் கடல் அகன்ற சமுத்திரம். அதேபோல், நாமும் நுண்மையாக கிருஷ்ணரைப் போல் ஒரே மாதிரியான தன்மையுள்ளவர்கள். நாம் ஆராயலாம். பகவான் தனித்தன்மை உள்ளவர் என்று மக்கள் ஏன் கூறுகிறார்கள்? நான் ஒரே மாதிரியான தன்மை பெற்றிருந்தால், ஆக பகவானும் மனிதர், அவர் எவ்வாறு தனித்தன்மை உள்ளவராவார்? ஆனால், தரத்தைப் பொறுத்தவரை, நாம் ஒன்றே, பிறகு நான் தனித் தன்மையை உணர்கிறேன், ஆகையால் பகவானுக்கு ஏன் தனித் தன்மை மறுக்கப்பட வேண்டும்? இது மற்றோரு முட்டாள்தனம். இந்த அருவவாதிகள் போக்கிரிகள், பகவானின் குணாதிசயத்தை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியாது. பைபளில் (Bible) கூட அது கூறப்பட்டுள்ளது: "மனிதன் பகவானின் பிம்பமாக படைக்கப்பட்டான்." உங்கள் தன்மையை ஆராய்வதன் மூலம், நீங்கள் பகவானின் தன்மையை ஆராயலாம், அல்லது எவருடைய தன்மையையோ. வெறுமனே அதன் வேறுபாடு அளவை வேற்றுமைதான். என்னிடம் சில தன்மைகள் உள்ளன, சில உற்பத்தி திறன். நாமும் உற்பத்தி செய்கிறோம், ஒவ்வொரு தனிப்பட்ட ஆத்மாவும் ஏதோ ஒன்றை உற்பத்தி செய்துக் கொண்டிருக்கிறது. ஆனால் அவனுடைய தயாரிப்பு பகவானின் தயாரிப்புடன் ஒப்பிடப்பட முடியாது. அதுதான் அந்த வேறுபாடு. நாம் ஒரு பறக்கும் இயந்திரம் உற்பத்தி செய்துக் கொண்டிருக்கிறோம். நாம் மிகவும் அகங்காரம் கொள்கிறோம் அதாவது: " இப்போது நாங்கள் ஸ்புட்நிக் (sputnik) கண்டுபிடித்துவிட்டோம். அது சந்திர கோள்கிரகத்திற்கு செல்கிறது." ஆனால் அது பூரணமாக இல்லை. அது மறுபடியும் திரும்பி வருகிறது. ஆனால் பகவான் பல பறக்கும் கோள்கிரகங்களை, கோடான கோடி கோள்கிரகங்கள், மிகவும் கணமான கோள்கிரகங்களை உருவாக்கி இருக்கிறார். எவ்வாறு என்றால் இந்த கோள்கிரகங்கள் மிகப் பெரிய மலைகளையும், கடல்களையும், தூக்கிக் கொண்டிருக்கிறது, ஆனால் இருப்பினும் அது பறந்துக் கொண்டிருக்கிறது. அது பஞ்சு சுற்றப்பட்ட குச்சிபோல் காற்றில் மிதந்துக் கொண்டிருக்கிறது. அதுதான் பகவானின் தெய்வசக்தி.
காமாவிஷ்ய (பகவத் கீதை 15.13)
பகவத் கீதையில், நீங்கள் காண்பீர்கள்: அஹம் தாரயாமியோஜஸா யார் இந்த பெரிய, பெரிய கோள்கிரகங்களை தாக்குப்பிடித்துக் கொண்டிருக்கிறார்? நாம் ஈர்ப்புச் சக்தியைப் பற்றி விளக்குகிறோம். மேலும் சாஸ்திரத்தில் நாம் காண்கிறோம், அதாவது அது சண்கர்ஷணவால் தூக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.