TA/Prabhupada 0390 - ஜய ராதா-மாதவ பொருள்விளக்கம்
Purport to Jaya Radha-Madhava -- New York, July 20, 1971
ஆக இதுதான் கிருஷ்ணரின் இயல்பு, கிருஷ்ணரின் மூல குணம். அவர் ராதா-மாதவர். ஸ்ரீமதி ராதாராணியின் காதலன். மேலும் குஞ்ஜ-விஹாரி, எப்பொழுதும் பிருந்தாவனத்தின் தோட்டங்களில் கோபியிர்களின் சகவாசத்தில் மகிழ்ச்சி அடைபவர். ராதா-மாதவ குஞ்ஜ-விஹாரி. ஆக அவர ராதாராணியின் காதலன் மட்டும் அல்ல, ஆனால் ப்ரஜ-ஜன-வல்லப. பிருந்தாவனத்தில் குடியிருப்பவர்கள் அனைவரும் கிருஷ்ணரின் மீது அன்பை வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது. கிருஷ்ணர் கடவுளா இல்லையா, என்பதையெல்லாம் அவர்கள் அறியமாட்டார்கள். "கிருஷ்ணர் கடவுளாக இருந்தால் தான் நான் அவரை நேசிப்பேன்." என அவர்கள் தம்மை வறுத்திக் கொள்வதும் இல்லை. "அவர் கடவுளாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி. அது முக்கியம் இல்லை. நாங்கள் கிருஷ்ணரை நேசிப்போம்." அவ்வளவு தான். அதுதான் தூய்மையான அன்பு. "கிருஷ்ணர் கடவுளாக இருக்கும் பட்சத்தில் தான் நான் அவரை நேசிப்பேன்" - இது நிபந்தனைக்குட்பட்ட அன்பு. இது தூய்மையான அன்பு அல்ல. கிருஷ்ணர் கடவுளாக இருந்தாலும் சரி எதுவாக இருந்தாலும் சரி, ஆனால் அவருடைய அற்புதமான செயல்களைக் கண்டு, விரஜவாசிகள், "ஓ கிருஷ்ணன், அவன் ஒரு அற்புதமான குழந்தை, ஒருவேளை யாராவது தேவனாக இருக்கலாம். தெய்வத்தன்மை பெற்றவனாக இருக்கலாம்." என்று நினைப்பார்கள். ஏனென்றால் தேவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள் என்ற அபிப்பிராயம் மக்களுக்கு பொதுவாகவே இருக்கும். இந்த ஜடவுலகில் அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள் தான். ஆனால் கிருஷ்ணரே தமக்கெல்லாம் மேம்பட்டவர் என்பது அவர்களுக்கு தெரியாது. ஈஷ்வர: பரம: க்ருஷ்ண: ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ: (பிரம்ம ஸம்ஹிதா 5.1). "மீயுயர்ந்த ஆட்சியாளர் கிருஷ்ணரே." என்ற கருத்தை, தேவர்களின் தலைவரான பிரம்மதேவரே வழங்குகிறார். ஆக, எப்படி விருந்தாவனத்தின் வாசிகள் எந்த நிபந்தனையும் இன்றி கிருஷ்ணரை நேசிக்கிறார்களோ, கிருஷ்ணரும் அவர்களை நேசிக்கிறார். வ்ரஜ-ஜன-வல்லப கிரி-வர-தாரி. இந்திர-யக்ஞத்தை நிறுத்தியதால், விருந்தாவன வாசிகள் பெரும் ஆபத்தில் சிக்கினார்கள். தீவிரமான கோபம் அடைந்த இந்திரர், மிகவும் சக்திவாய்ந்த ஒரு மேகத்தை அனுப்பி, தொடர்ந்து ஏழு நாட்களுக்கு விருந்தாவனத்தில் கனமழையை பெய்யச் செய்தார். இதனால் அங்கு குடியிருப்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டார்கள். அப்பொழுது வெறும் ஏழே வயது சிறுவனான கிருஷ்ணர், கோவர்தன மலையைத் தூக்கி, அவர்களை காப்பாற்றினார். இவ்வாறு அவர், இந்திதிரதேவருக்கு ஒரு பாடம் கற்பித்தார். அதாவது "உன் தொல்லையை நிறுத்துவதற்கு என் சுண்டுவிரலே போதும்." எனவே அவர் (இந்திரர்) முழங்காற்படிந்தார். இதையெல்லாம் நீங்கள் கிருஷணா எனும் புத்தகத்தில் காணலாம். ஆக கோபி-ஜன-வல்லபராக, கோபி-ஜனர்களை எப்படி காப்பது, என்பதே அவரது ஒரே பொறுப்பாகும். ஆக எப்படி கோபி-ஜனர்களில் ஒருவர் ஆவது என்பதே நம் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம். பிறகு மலையை தூக்கவேண்டியிருந்தாலும் சரி, கிருஷ்ணர் நம்மை எந்த ஆபத்திலிருந்தும் காப்பாற்றுவார். கிருஷ்ணர் மிகவும் கருணையுடையவர் மிகவும் சக்திவாய்ந்தவர். கிருஷ்ணர் மலையை தூக்கியபொழுது, எந்த யோக முறையையும் பயன்படுத்தவில்லை. அது தான் கடவுள். அவர் ஒரு சிறுவனைப் போல் விளையாடிக் கொண்டிருந்தாலும், பொதுவாக ஒரு குழந்தையைப் போல் செயல்பட்டிருந்தாலும், தேவைப்படும் போது அவர் கடவுளாக தோன்றினார். அதுதான் கிருஷ்ணர். எங்கேயாவது சென்று ஏதாவது யோக முறையில் பயிற்சி ஏற்றப் பிறகு, அவர் கடவுள் ஆனார்; அப்படி கிடையாது. அவர் அப்படிப்பட்ட கடவுள் கிடையாது; உருவாக்கப்பட்ட கடவுள் கிடையாது. அவர் எப்பொழுதுமே கடவுள். ஆக கோபி-ஜன-வல்லப கிரி-வர-தாரி. மேலும் ஒரு குழந்தையாக, யஷோகையின் செல்ல மகனாக, யஷோதா-நந்தன,... தன் பக்தனுக்கு பிள்ளையாக இருப்பதில் கிருஷ்ணருக்கு ஒரு சந்தோஷம். பக்தர்களாகிய தனது தாய் தந்தையிடம் தண்டிக்கப்பட விரும்புவார். ஏனென்றால் பொதுவாக எல்லோரும் அவரை வணங்குவார்கள்; யாரும் அவரிடம் கண்டிப்பதற்காக செல்லமாட்டார்கள். ஒரு பக்தன் தன்னை தண்டிக்கும் பொழுது அவர் இன்பத்தை உணருவார். அது கிருஷ்ணருக்கு வழங்கப்படும் சேவை. கிருஷ்ணர் கண்டிக்கப்படுவதில் இன்பம் பெறுவார் என்றால் பக்தனும் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்வான்: "சரி, நான் உனக்கு தந்தையாகி உன்னை கண்டிப்பேன்." கிருஷ்ணருக்கு எப்பொது சண்டை போட வேண்டும் என்று தோன்றுகிறதோ, அவரது பக்தர்களில் ஒருவர் ஹிரண்யகசிபுவாக மாறி அவருடன் சண்டை போடுவார். ஆக கிருஷ்ணரின் செயல்கள் எல்லாம் அவருடைய பக்தர்களுடன் தான். அவர்... எனவே, கிருஷ்ணருடன் இணைந்து வாழ்வதற்காக, கிருஷ்ண உணர்வை பெறுவதற்காக... யஷோதா-நந்தன வ்ரஜ-ஜன-ரஞ்ஜன. அவரது ஒரே பொறுப்பு என்றால், எப்படி திருப்திப்படுத்துவது... எப்படி ப்ரஜ-ஜனரின் குறிக்கோள், கிருஷ்ணரை திருப்திப்படுத்துவதோ, அப்படியே, கிருஷ்ணரும் ப்ரஜ-ஜனரை திருப்திப்படுத்துவதை தன் பொறுப்பாகக் கருதுகிறார். இதுதான் அன்பின் பரிமாற்றம். யமுனா-தீர-வன-சாரி. பரமபுருஷராகிய முழுமுதற் கடவள், கிருஷ்ணர், யமுனையின் கரைமேல், கோபியர்கள், இடையர் சிறுவர்கள், பறவைகள், மிருகங்கள், கன்றுக்குட்டிகள் ஆகியவற்றை திருப்திப்படுத்துவதற்காக உலாவுகிறார். அவர்கள் சாதாரண பறவைகளோ, மிருகங்களோ, கன்றுக்குட்டிகளோ அல்லது மனிதர்களோ கிடையாது. அவர்கள் தன்னுணர்வின் உன்னதமான நிலையை அடைந்தவர்கள். க்ருத-புண்ய-புஞ்ஜஹ (ஸ்ரீமத் பாகவதம் 10.12.11). பற்பல ஜென்மங்களுக்குப் பிறகு அவர்கள் அந்த நிலையைப் பெற்றிருக்கிறார்கள்; கிருஷ்ணருடன் விளையாடுவதற்கான நிலையை. ஆக இந்த கிருஷ்ண பக்தி இயக்கத்தின் சிறப்பு இது தான். அதாவது யார் வேண்டுமானாலும் கிருஷ்ணலோகத்திற்கு சென்று, அவருடன் வாழலாம், ஒரு தோழனாக அல்லது ஒரு சேவகனாக, ஒரு தந்தையாக, ஒரு தாயாக; இப்படி பல விதமாக உறவாடலாம். மேலும் கிருஷ்ணருக்கும் இவையில் எந்த ஒரு உறவைக் கொள்வதிலும் பரிபூரண சம்மதம் உண்டு. இந்த விஷயங்களை நம்முடைய 'பகவான் சைதன்யரின் போதனைகள்' என்ற புத்தகத்தில் சிறப்பாக விளக்கியிருக்கிறோம். கிருஷ்ணர் ஒருபோதும் விருந்தாவனத்தை விட்டு ஒரு படி கூட எடுத்து வைக்க மாட்டார். உண்மையான கிருஷ்ணர் எப்பொழுதும் விருந்தாவனத்தில் தான் இருப்பார். இது பிரம்ம-ஸம்ஹிதையல் விளக்கப்பட்டிருக்கிறது. சிந்தாமணி-ப்ரகர-ஸத்மஸு கல்ப-வ்ருக்ஷ லக்ஷாவ்ருதேஷு ஸுரபீர் அபிபாலயந்தம் லக்ஷ்மீ-ஸஹஸ்ர-ஷத-ஸம்ப்ரம-ஸேவ்யமானம் கோவிந்தம் ஆதி-புருஷம்... (பிரம்ம ஸம்ஹிதா 5.29) பிரம்ம தேவரும் விருந்தாவன கிருஷ்ணரே பரமபுருஷரான கோவிந்தர் என்பதை ஏற்றுக்கொள்கிறார். வேணும் க்வனந்தம்: "அவர் புல்லாங்குழலை வாசிப்பவர்." அரவிந்த்-தலாயதாக்ஷம் பர்ஹாவதம்ஸம் அஸிதாம்புத-ஸுந்தராங்கம் கந்தர்ப-கோடி-கமனீய-விஷேஷ-ஷோபம் கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி (பிரம்ம ஸம்ஹிதா 5.30) ஆக, இந்த புத்தகங்களை, இந்த கல்வியை, இந்த பிரசாதத்தை, திருநாமத்தின் உச்சரிப்பை சாதகமாக பயன்படுத்தி, மகிழ்ச்சியாக இருங்கள், கிருஷ்ணரிடம் திரும்பிச் செல்லுங்கள். எவ்வளவு சிறப்பான விஷயம். சரி.