TA/Prabhupada 1033 - இயேசு கிறிஸ்து கடவுளின் மகன், கடவுளின் சிறந்த மகன், எனவே நாம் அவரிடம் மிகுந்த மரியாதை க
740628 - Lecture at St. Pascal's Franciscan Seminary - Melbourne
விருந்தினர் (3) : இயேசு கிறிஸ்துவை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பிரபுபாதா : ம?
மதுத்விஸா : இயேசு கிறிஸ்துவைப் பற்றி நம்முடைய கண்ணோட்டம் என்ன?
பிரபுபாதா: ஏசு கிறிஸ்து.... அவர் கடவுளின் மகன், கடவுளின் சிறந்த மகன், எனவே நாம் அவரிடம் மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம். கடவுள் உணர்வைப் பற்றி, மக்களுக்கு யார் சொல்லித் தந்தாலும் அவரை நாம் மதிக்கிறோம். அது எந்த நாட்டில், எந்த சூழலில் என்பதைப் பற்றி அக்கறை இல்லை. அவர் பிரச்சாரம் செய்கிறார். மற்றதைப் பற்றி அக்கறை இல்லை
மதுத்விஸா : என்ன?
விருந்தினர் (4) : அசிசியின் புனித பிரான்சிஸ், எங்கள் கொள்கையை (தெளிவாக இல்லை) ஸ்தாபித்தார், பௌதிகத்தை கடவுளுக்காக உபயோகப்படுத்துவது, புனித பிரான்சிஸ், "நாய் அண்ணன்", "பூனை அக்கா", "தண்ணீர் அக்கா," "காற்று அண்ணன்" என்று பேசுவதுண்டு. புனித பிரான்சிஸின் கொள்கையைப் பற்றியும், கண்ணோட்டத்தைப் பற்றியும் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
மதுத்வஸா : (கேள்வியை திரும்ப கூறுகிறார்) நம்மை உரையாற்ற அழைத்திருக்கும் இந்த குறிப்பிட்ட தத்துவக் கொள்கையின் ஸ்தாபகரான புனித பிரான்சிஸ், பௌதிக உலகில் கடவுளைக் கண்டார். மேலும் அவர் இந்த பௌதிக உலகின் விஷயங்களை, "அண்ணன்", " அக்கா" என்று அழைப்பது வழக்கம். அதாவது, "தம்பி மரம்", " அக்கா தண்ணீர்" என்பதைப்போல இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?.
பிரபுபாதா : இதுதான் உண்மையான கடவுள் உணர்வு. ஆம் இது உண்மையான கடவுள் உணர்வு. "நான் கடவுள் உணர்வுடன் உள்ளேன். நான் மிருகங்களையும் கொல்வேன்." என்பது அல்ல அது கடவுள் உணர்வு அல்ல. மரம், செடி, கீழ்நிலை விலங்குகள், புழு பூச்சிகள், இவற்றை கூட சகோதரனாக ஏற்றுக் கொள்வது... ஸம: ஸர்வேஷு பூ4தேஷு. இது பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது.
ப்3ரஹ்ம-பூ4த: ப்ரஸன்நாத்மா ந ஷோ2சதி ந காங்க்ஷதி ஸம: ஸர்வேஷு பூ4தேஷு (ப.கீ 18.54). ஸம: . ஸம: என்றால் எல்லா உயிர்களிடத்தும் சமமாக இருத்தல், எல்லோரையும் ஆன்மீக ஆத்மாவாக பார்த்தல்.... அவன் மனிதனா, பூனையா, நாயா, மரமா, பூச்சியா, பெரிய மனிதனா, என்பதைப்பற்றி கேள்வி இல்லை. அவர்கள் அனைவருமே கடவுளின் அங்க துணுக்கு. வெறுமனே அவர்கள் வெவ்வேறு உடையில் இருக்கிறார்கள். ஒருவருக்கு மரத்தினுடைய இருக்கிறது, ஒருவருக்கு அரசரின் உடை இருக்கிறது, ஒருவன் பூச்சியின் உடையை பெற்றுள்ளான். இதுவும் பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது.
பண்டி3தா: ஸம-த3ர்ஷி2ன: (ப.கீ 5.18): "பண்டிதனாக, கற்றறிந்தவனாக இருப்பவனின் கண்ணோட்டம், சமமானது." எனவே புனித பிரான்சிஸ், இவ்வாறு நினைத்தார் என்றால், இது ஆன்மீகப் புரிதலின் உயர்ந்த நிலை.