TA/Prabhupada 0545 - ஆத்மாவின் விருப்பத்தை காண்பதே உண்மையான நலமாகும்
பிரபுபாதர்: எனவே சைதன்ய மஹாபிரபு சில பரோ-உபகரங்களை செய்ய விரும்பியபோது ...
- பாரத பூமிதே மனுஷ்ய-ஜன்ம ஹைல யார
- மனுஷ்ய ஜன்ம சார்தக கரி கரோ பர-உபகார
இந்த நலன்புரி நடவடிக்கைகள் இந்த உடலுக்கு நலன் என்று அர்த்தமல்ல. இது ஆத்மாவுக்கானது, கிருஷ்ணர் அர்ஜுனனைக் கவர விரும்பிய அதே விஷயம், "நீ இந்த உடல் அல்ல, ஆன்மா" என்று. அந்தவந்த இமே தேஹஹ் நித்தியஷியோகதஹ் சரீரினஹ, ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே (BG 2.20). எனவே உண்மையான நலன்புரி செயல்பாடு என்பது ஆன்மாவின் ஆர்வத்தைக் காண்பதாகும். எனவே ஆத்மாவின் ஆர்வம் என்ன? ஆன்மாவின் ஆர்வம், ஆன்மா என்பது கிருஷ்ணரின் ( கடவுளின் ) ஒரு பகுதியாகும். சிறிய தீப்பொறி பெரிய நெருப்பின் ஒரு பகுதி மற்றும் சிறு கூறு போன்றது, இதேபோல், நாம் வாழும் மனிதர்கள், நாம் மிகவும் சிறிய சிறிய தீப்பொறி- உத்தம பிரம்மன், பர-பிரம்மன் கிருஷ்ணரின் மிகச் சிறிய பகுதி. நெருப்பிற்குள் இருக்கும் தீப்பொறி மிகவும் அழகாக இருப்பதால், நெருப்பும் அழகாக இருக்கிறது, மேலும் தீப்பொறியும் அழகாக இருக்கிறது, ஆனால் தீப்பொறி நெருப்பிலிருந்து கீழே விழுந்தவுடன், அது அழிந்துபோகும். எனவே நம் நிலை என்னவென்றால் ... நமது தற்போதைய நிலை என்னவென்றால், கிருஷ்ணர் என்ற முழு நெருப்பிலிருந்து நாம் கீழே விழுந்துவிட்டோம். இது வங்காள மொழியில் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது:
கிருஷ்ணா பூலியா ஜீவா போக வாஞ்சா கரே
பசதே மாயா தாரே ஜாபதியா தரே
மாயா என்றால் இருள், அறியாமை. எனவே இந்த உதாரணம் மிகவும் அருமை. நெருப்பின் தீப்பொறிகள் நெருப்புடன் மிக நேர்த்தியாக நடனமாடுகின்றன, அது ஒளிரும். ஆனால் அது தரையில் விழுந்தவுடன், அது தணலாகிறது, கருப்பு தணல், இனி உமிழும் தரம் இல்லை. இதேபோல், நாம் நடனமாட வேண்டியவர்கள், மற்றும் கிருஷ்ணருடன் விளையாடுவது, நடப்பது, என்று வாழவேண்டியவர்கள். அதுதான் நமது உண்மையான நிலை. அதுதான் பிருந்தாவன. எல்லோரும் ... எல்லோரும் கிருஷ்ணருடன் இணைந்தவர்கள். அங்கே மரங்கள், அங்கே பூக்கள், நீர், மாடுகள், கன்றுகள், மாட்டிடை சிறுவர்கள், அல்லது வயதான மாட்டிடை ஆண்கள், நந்த மகாராஜர், அவரது வயதில் பிற நபர்கள், பின்னர் யசோதமயீ அம்மா, பின்னர் கோபிகள் - இவ்வாறு, பிருந்தாவன வாழ்க்கை, பிருந்தாவன படம். கிருஷ்ணர் முழு பிருந்தாவன படத்துடன் வருகிறார், மேலும் அவர் தனது பிருந்தாவன வாழ்க்கையை நடத்திக்காட்டுகிறார், சிந்தாமணி- பிரகர-சத்மசு, நம்மை ஈர்க்க, அது "இந்த பௌதீக உலகில் அனுபவிக்க முயற்சிக்கிறீர்கள், ஆனால் இங்கே நீங்கள் அனுபவிக்க முடியாது, ஏனெனில் நீங்கள் நித்தியமானவர். நீங்கள் இங்கே நித்திய ஜீவனைப் பெற முடியாது. எனவே நீங்கள் என்னிடம் வாருங்கள். நீ என்னிடம் வா." தயக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாம் ஏதி கௌந்தேய (BG 4.9). இதுவே கிருஷ்ண பக்தி இயக்கம். (ஒதுக்கி :) தயவுசெய்து அவர்களை பிரசாதத்திற்கு காத்திருக்கச் சொல்லுங்கள். தயக்த்வா தேஹம் புனர் ஜென்ம நைதி மாம் ஏதி. இதுதான் அழைப்பு. மாம் ஏதி: "அவர் வீட்டிற்கு திரும்பி வருகிறார், மீண்டும் கடவுளிடம் வருகிறார்." இது பகவத்-கீதாவின் முழு அறிவுறுத்தலாகும். இறுதியில் அவர் கூறினார், சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரனம் வ்ரஜ (BG 18.66). பௌதீக வாழ்க்கையை சரிசெய்ய பல திட்டங்களைத் தயாரித்து, உங்களை ஏன் கஷ்டப்படுத்தி கொள்கிறீர்கள்? அது சாத்தியமில்லை. இங்கே அது சாத்தியமில்லை. இங்கே நீங்கள் நீண்ட காலமாக பௌதீக சங்கத்தில் இருக்கிறீர்கள், பின்னர் நீங்கள் உடலை மாற்ற வேண்டும். ப்ரக்ருதே: க்ரியமாணானி... (BG 3.27). ப்ரக்ரிதி -ஸ்தோ. அந்த ஸ்லோகம் என்ன? புருஷாஹ் ப்ரக்ரிதி -ஸ்தோ பி...
ஹரிதயானந்த: பூஞ்சதே ப்ரக்ரிதி ஜான் குணான்.
பிரபுபாதா: ஹா. பூஞ்சதே ப்ரக்ரிதி -ஜான் குணான்.