TA/Prabhupada 0006 - எல்லோரும் கடவுள் - முட்டாள்களின் சொர்க்கம்

Revision as of 12:40, 26 May 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on SB 1.15.49 -- Los Angeles, December 26, 1973

எல்லோருக்கும் ஒரு அகந்தை, அதாவது, "எனக்கு தெரியும், எனக்கு எல்லாமே தெரியும். அதனால் எந்த குருவிடமும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை." குருவை, ஆன்மீக குருவை அணுகுவது எப்படி என்றால்: "நான் கீழ்த்தரமான பல விஷயங்களை கற்றேன். அவையெல்லாம் பயனற்றவை. எனக்கு தயவுசெய்து கல்வியை கற்று தாருங்கள்." இதைத்தான் அடிபணிதல் என்கிறோம். அர்ஜுனன் சொன்னது போல், சிஷ்யஸ் தே' (அ)ஹம் ஷாதி மாம் ப்ரபன்னம்(பகவத்-கீதை 2.7). அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டபோது, எந்த தீர்வும் காணமுடியாமல் போனவுடன், அர்ஜுனர் கிருஷ்ணரிடம் பணிந்தார், "என் அன்பிற்குரிய கிருஷ்ணா, இப்பொழுது நாம் நன்பர்களாக உரையாடுகிறோம். இதற்குமேல் தோழமையான உரையாடல் வேண்டியதில்லை. நான் தங்களை என் ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்கிறேன். கருணையுடன் என் கடமைகள் என்னவென்று கற்றுக்கொடுங்கள்." இதுதான் பகவத் கீதை. அதனால் ஒருவர் கற்றுக்கொள்ள வேண்டும். தத்-விஞானார்தம் ஸ குரும் ஏவ அபிகச்சேத் [மண்டுக்ய உபனிசத் 1.2.12]. இதுதான் வேதபாடம், அதாவது வாழ்க்கையின் மதிப்பென்ன? அது எப்படி மாற்றம் அடைகின்றது? நாம் எவ்வாறு ஓர் உடலிலிருந்து மற்றொரு உடலுக்கு மாறுகிறோம்? நான் யார்? நான் இந்த உடம்பா அல்லது இதற்கும் அப்பாற்பட்ட வேறு ஏதோ ஒன்றா? இவையெல்லாம் சிந்திக்கப்படவேண்டியவை. அதுதான் மனித வாழ்க்கை. அதாதொ பரஹ்ம ஜிஞ்ஞாசா. இந்த சிந்தனை இருந்தே ஆகவேண்டும். ஆக இந்த கலியுகத்தில், ஞானம் இல்லாமல், சிந்தனை எதுவும் இல்லாமல், குரு இல்லாமல், நூல்கள் இல்லாமல், "எல்லோரும் கடவுள்" என கோஷம் போடுகிறார்கள். அவ்வளவுதான். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது, முட்டாள்களின் சொர்க்கம். ஆக இதுவெல்லாம் உதவாது. இங்கு விதுரர் பற்றி... அவரும்... (ஸ்ரீமத் பாகவதம் 1.15.49) விதுரோ 'பி பரித்யஜ்ய ப்ரபாஸே தேஹம் ஆத்மனஹ க்ருஷ்ணாவேஷேன தச்-சித்த பித்ருபி: ஸ்வ-க்ஷயம் யயெள நான் விதுரரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். விதுரர் யமராஜராக இருந்தவர். சாது ஒருவர், யமராஜரிடம் தண்டனை பெற அழைத்துச் செல்லப்பட்டார். அந்த சாது யமராஜரிடம் கேட்டார், "நான் என் வாழ்க்கையில் எந்த பாவச் செயலையும் செய்த ஞாபகமில்லையே. பிறகு எந்த தீர்ப்புக்காக இங்கு அழைத்து வரப்பட்டுள்ளேன்?" யமராஜர் கூறினார், "தங்களுக்கு ஞாபகமில்லை. தங்களுடைய குழந்தைப் பருவத்தில் தாங்கள் ஓர் எறும்பை, ஓர் ஊசியால் அதன் மலக்குடலில் குத்தியதால் அது இறந்து போனது. ஆகையால் தாங்கள் தண்டனைக்குரியவர்." இதைக் கவனியுங்கள். குழந்தைப் பருவத்தில், அறியாமையினால், அவர் செய்த பாவச் செயலுக்கும் அவர் தண்டிக்கப்படுகிறார். ஆனால் நாமோ, "நீ கொல்ல மாட்டாய்" என்ற சமயக் கொள்கையை தெரிந்தே, விரும்பி பல ஆயிரக்கணக்கான மிருகவதை மையங்களை அமைத்திருக்கிறோம். அதை நியாயப்படுத்துவதற்கு, மிருகங்களுக்கு ஆத்மா கிடையாது என்கிற தவறான ஒரு கோட்பாட்டையும் உருவாக்கியுள்ளோம். வேடிக்கையைப் பாருங்கள். இது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவ்வளவு செய்த பிறகும் நாம் அமைதியாக இருப்போம் என்று எதிர்பார்க்கிறோம்.