TA/Prabhupada 0167 - கடவுளின் சட்டத்தில் எந்த குறைபாடும் இல்லை: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0167 - in all Languages Category:TA-Quotes - 1971 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in USA, New York]]
[[Category:TA-Quotes - in USA, New York]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0166 - பனிப்பொழிவை நாம் கட்டுப்படுத்த முடியாது|0166|TA/Prabhupada 0168 - சாந்தம் மற்றும் பணிவு போன்ற குணங்களின் கலாச்சார வழிமுறைகள்|0168}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<div class="center">
<div class="center">
Line 15: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|fO6PtZRYiEk|கடவுளின் சட்டத்தில் எந்த குறைபாடும் இல்லை -<br />Prabhupāda 0167}}
{{youtube_right|RfXHUe7uD4g|கடவுளின் சட்டத்தில் எந்த குறைபாடும் இல்லை -<br />Prabhupāda 0167}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


<!-- BEGIN AUDIO LINK -->
<!-- BEGIN AUDIO LINK -->
<mp3player>http://vaniquotes.org/w/images/710724SB.NY_clip.mp3</mp3player>
<mp3player>https://s3.amazonaws.com/vanipedia/clip/710724SB.NY_clip.mp3</mp3player>
<!-- END AUDIO LINK -->
<!-- END AUDIO LINK -->



Latest revision as of 05:27, 12 July 2019



Lecture on SB 6.1.8-13 -- New York, July 24, 1971

மனிதனால் இயற்றப்பட்ட சட்டத்தில் , மனிதனைக் கொலை செய்யும் குற்றம் மட்டுமே கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு மனிதனைக் கொன்ற கொலையாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் ஒரு மிருகத்தைக் கொன்றால்? மிருகமும் ஒரு உயிரினம்.. மனிதனும் ஒரு உயிரினம். எனவே ஒரு மனிதனைக் கொலை செய்பவனுக்கு மரண தண்டனை விதித்திருந்தால்.. ஒரு மிருகத்தைக் கொலை செய்யும் மனிதனுக்கு ஏன் மரண தண்டனை இல்லை? என்ன காரணம்? இது மனிதனால் இயற்றப்பட்ட சட்டத்தில் உள்ள குறைபாடு ஆகும். ஆனால் கடவுளால் இயற்றப்பட்ட சட்டத்தில் எந்த குறைபாடும் இருக்காது.. கடவுளின் சட்டத்தில் , ஒரு மிருகத்தைக் கொலை செய்தால், மனிதனை கொலை செய்த குற்றத்திற்கு வழங்கப்படும் தண்டனையே வழங்கப்படும். அதுவே கடவுளின் சட்டம். அதில் எந்த வித மன்னிப்பும் கிடையாது. நீங்கள் ஒரு மனிதனைக் கொன்றால் தண்டிக்கப்படுகிறீர்கள். மிருகத்தைக் கொன்றால் தண்டனை இல்லை.. இது துரோகம் ஆகும். இது சரியான நீதி அல்ல.. எனவே தான் இயேசு கிறிஸ்து அவர்கள் தனது பத்து கட்டளைகளில் "கொலை செய்யாதே" என்று கூறியிருக்கிறார். இதுவே சரியான சட்டம்.. "நான் மனிதனைக் கொள்ள மாட்டேன். ஆனால் மிருகங்களைக் கொள்வேன்" என்று வேற்றுமையைக் காண்பிக்க கூடாது.

பல்வேறு வகையான பாவ நிவர்த்திகள் உள்ளன. வேதாக கொள்கைகளின் படி, கழுத்தில் கயிற்றால் கட்டப்பட்டிருக்கும் ஒரு பசு இறந்தால்.. அது சரியான பாதுகாப்பின்மையாலோ அல்லது வேறு ஏதேனும் காரணத்தாலோ இறந்திருக்கலாம். ஆனால் அது கழுத்தில் கயிறால் கட்டப்பட்டுள்ளது என்றால்.. அந்த பசுவின் எஜமானன் சில பரிகாரங்களை செய்ய வேண்டும். ஒரு பசு நமது பொறுப்பில் கட்டப் பட்டிருக்கும் போது வேறு ஏதோ காரணத்தால் இறந்தாலே அதற்கு பரிகாரம் உண்டென்றால்... வேண்டுமென்றே ஒரு பசுவையோ அல்லது வேறு ஏதேனும் மிருகத்தையோ கொன்றால், நாம் எவ்வளவு பாவம் சுமக்க வேண்டி வரும் ? தற்சமயம் இயற்கையுடன் போர் நடந்து கொண்டிருக்கிறது.. எனவே தான் இயற்கை சீற்றங்களால் மக்கள் மொத்தமாக கொள்ளப்படுகிறார்கள். நீங்கள் மிருகங்களை வதைத்துக் கொண்டே அந்த போரை நிறுத்த முடியாது. அது சாத்தியம் அல்ல. மனிதர்களை தண்டிப்பதற்காகவே பற்பல விபத்துக்கள் நடக்கின்றன. ஒட்டுமொத்தமாக மரண தண்டனை தரப்படுகிறது. கிருஷ்ணர் கொல்லும்போது மொத்தமாகவே கொல்கிறார். நான் கொலை செய்ய வேண்டும் என்றால், ஒருவர் பின் ஒருவராகத்தான் கொல்ல முடியும். ஆனால் கிருஷ்ணர், கொலை செய்யப்பட வேண்டியவர்களை ஓரிடத்தில் கூடச் செய்து கொல்கிறார். எனவே சாஸ்திரங்களில் பல பரிகாரங்கள் கூறப்பட்டுள்ளன. உங்கள் பைபிளில் பரிகாரங்கள், பாவமன்னிப்பு கோருதல், அபராதம் கட்டுதல் என கூறப்பட்டிருப்பதைப் போல் ஆனால் பரிகாரங்கள் செய்த பிறகும், மக்கள் ஏன் இந்த தவறுகளை செய்கின்றனர் என்று நாம் சிந்திக்க வேண்டும்.