TA/Prabhupada 0199 - சமயப் போதகரைவிட யாரால் சிறப்பாக அன்பு காட்ட முடியும்

Revision as of 18:34, 29 June 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 13.8-12 -- Bombay, September 30, 1973

மெய்யியல் அல்லாத எந்த புரிந்துணர்த்தலும், அது உணர்ச்சிவசப்பட்ட கருத்து. சமய எண்ணம் இல்லாத தத்துவம் மனம் சார்ந்த யூகம். உலகம் எங்கும் இவை இரண்டும் நடந்துக் கொண்டிருக்கிறது, இணைந்து அல்ல. அங்கே அதிகமான சமய செயல்முறைகள் உள்ளன, ஆனால் மெய்யியல் இல்லை. ஆகையினால் அந்த சமய செயல்முறைகள் நவநாகரீகம் கற்றறிந்த நபர்களை கவரவில்லை. அவர்கள் மதத்தைக் கைவிடுகிறார்கள், கிறிஸ்தவர், முஸ்லிம், இந்து ஏதோவொன்று. வெறுமனே சம்பிரதாயங்கள், சடங்குகள், அவர்களுக்கு அதில் விருப்பம் இல்லை. அவர்கள் தத்துவத்தின் அடிப்படையிலிருந்து அனைத்தையும் அறிந்துக் கொள்ள விரும்புகிறார்கள். அதுதான் பகவத்-கீதை. பகவத்-கீதை தத்துவத்தின் ஆதாரம், இந்த செயல்முறை, கிருஷ்ண-பக்தி. பகவத்-கீதை என்றால் கிருஷ்ண-பக்தி, கிருஷ்ணரிடம் பக்தி, கிருஷ்ண உணர்வு. அதுதான் பகவத்-கீதை. பகவத்-கீதை, அது கற்பிப்பது யாதெனில் மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு (ப. கீ. 18.65). இதுதான் பகவத்-கீதை. "எந்த நேரமும் என்னையே நினைத்துக் கொள்." கிருஷ்ண உணர்வு, களங்கமற்றது மேலும் எளிமையானது. மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு (ப. கீ. 18.65). எங்குமே கிருஷ்ணர் தன்னுடைய தனிச் சிறப்பியல்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அஹமாதிர்ஹி தேவானாம்: (ப. கீ. 10.2) " எல்லா தேவர்களின் முதலும் நானே." மத்த: பரதரம் நான்யத் கிஞ்சிதஸ்தி தனஞ்ஜய (ப. கீ 7.7). அஹம் ஸர்வஸ்ய ப்ரபாவோ மத்த: ஸர்வம் ப்ரவர்ததே இதி மத்வா பஜந்தே மாம் புதா பாவஸமன்விதா: (ப. கீ. 10.8). அனைத்தும் அங்கிருக்கிறது. ஆகையால் ஸர்வ தர்மான்பரித்யஜ்ய மாமேகம் (ப. கீ. 10.66), மாம், அஹம், "நான்." ஆகையால் ஒவ்வொரு பதத்திலும், ஒவ்வொரு அத்தியாயத்திலும், கிருஷ்ணர். மய்யாஸக்தமனா: பார்த்த யோகம் யுஞ்ஜன்மதாஸ்ரய: மய்யாஸக்த, "என்னிடம் பற்றிய மனத்துடன் இருப்பவர்," ஆஸக்த-மனா:, ""என்னிடம் பற்றிய மனத்துடன், அதுதான் யோக." யோகிநாம் அபி ஸர்வேஷாம் மத்-கதே நாந்தராத்மநா. மத்-கத, மறுபடியும் மத் (ப. கீ. 6.47). மத்-கதே நாந்தராத்மநா, ஸ்ரத்தாவான் பஜதே யோ மாம் ஸ மே யுக்த தமோ மத: ஆகையால் அனைத்திற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது, கிருஷ்ணர். ஆனால் இந்த அயோக்கிய வர்ணனையாளர், அவர்கள் கிருஷ்ணரை கழிக்க விரும்புகிறார்கள். இந்த அயோக்கியத்தனம் இந்தியாவில் பெரும் நாசத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அயோக்கியர்கள் வர்ணனையாளர் என்று அழைக்கப்படுபவர்கள், அவர்கள் கிருஷ்ணரை தவிர்க்க விரும்புகிறார்கள். ஆகையினால் இந்த கிருஷ்ண பக்தி இயக்கம் இந்த அயோக்கியர்களுக்கு ஒரு சவாலாகும். இது ஒரு சவால் அதாவது "நீங்கள் கிருஷ்ணர் இல்லாமல் கிருஷ்ணரை ஏற்படுத்த விரும்புகிறீர்கள். இது முட்டாள்தனம்."