TA/Prabhupada 0225 - ஏமாற்றம் வேண்டாம் குழப்பம் வேண்டாம்

Revision as of 18:09, 29 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0225 - in all Languages Category:TA-Quotes - 1969 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture at Engagement -- Columbus, may 19, 1969

மனித நாகரிகத்தின் உத்தேசமே ஒருவர் சுயத்தை அறிந்து கொள்வதாகும், தான் யார் என்று புரிந்து கொண்டு அதன் படி செயல்படுதல் ஆகும். எனவே பாகவதம் சொல்கிறது, சுயத்தைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு வரவில்லை என்றால், பின்னர் நான் என்ன செய்தாலும் அது தோல்வி தான், அல்லது நேரத்தை வீணடிப்பதாகும். அதே சமயம், நாம் ஒரு நொடியைக் கூட வீணடிக்கக் கூடாது என்ற எச்சரிக்கையும் உள்ளது. தயவு செய்து இந்த வேத உபதேசங்களைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அவை எவ்வளவு நன்றாக உள்ளன. சாணக்கிய பண்டிதர் என்று ஒரு சிறந்த அரசியல்வாதி இருக்கிறார். அவர் மாவீரர் அலெக்ஸ்சாண்டரின் சமகாலத்தவரான பேரரசர் சந்திரகுப்தரின் பிரதம மந்திரியாக இருந்தார். ஆக அவர் பேரரசர் சந்திரகுப்தரின் பிரதம மந்திரியாக இருந்தார். மேலும் அவர் பல தார்மீக அறிவுரைகள் மற்றும் சமூக வழிமுறைகளைப் போதித்தார். அவரது கூற்றுகளில் ஒன்றில், அவர் இவ்வாறு சொல்கிறார் āyuṣaḥ kṣaṇa eko 'pi na labhyaḥ svarṇa-koṭibhiḥ. Āyuṣaḥ, "உங்கள் வாழ்நாளில்". உங்களுக்கு இருபது வயது என்று வைத்துக்கொள்வோம். இன்று மே மாதம் 19-ம் தேதி, மாலை மணி 4 என்று ஒரு நேரம் இருந்தது. இப்போது, மாலை 4 மணி, 19 மே, 1969, என்ற நேரம் கடந்து விட்டது. நீங்கள் மில்லியன் டாலர்கள் கொடுக்கத் தயாராக இருந்தாலும் உங்களால் அதை மீண்டும் பெற முடியாது. சற்றுப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். இதேபோல், உங்கள் வாழ்க்கை ஒரு நிமிடமேனும் எதற்கும் இல்லாமல், உணர்வுகளின் திருப்திக்காக மட்டும் - சாப்பிடுவதற்கு, உறங்குவதற்கு, இனச்சேர்க்கைக்கு, தற்காப்பிற்கு- என்று வீணடிக்கப்பட்டால், பின் உங்கள் வாழ்க்கையில் மதிப்பு உங்களுக்குத் தெரியவில்லை. நீங்கள் மில்லியன் கணக்கில் டாலர்களை அள்ளிக் கொடுத்தாலும் உங்கள் வாழ்க்கையின் ஒரு நிமிடத்தைக் கூடத் திரும்பப் பெற முடியாது. உங்கள் வாழ்க்கை எவ்வளவு மதிப்புமிக்கது என்று சற்று புரிந்து கொள்ள முயற்சிக்கவும். எனவே எங்கள் கிருஷ்ணர் பக்தி இயக்கம் மக்களுக்குத் தம் வாழ்க்கை எவ்வளவு மதிப்புமிக்கது என்று தெரியப்படுத்தி, அவ்வழியில் அவர்கள் அதைப் பயன்படுத்த வைப்பதற்கே ஆகும். எமது இயக்கம் sarve sukhino bhavantu என்பதாகும்: அனைவரும் சந்தோஷமாக இருக்கட்டும். மனித சமுதாயம் மட்டுமில்லை, மிருக சமூகமும் கூட. அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதை நாங்கள் பார்க்க வேண்டும். அது தான் கிருஷ்ணர் பக்தி இயக்கம். அது நடக்கக் கூடியதே; கனவு இல்லை. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும். ஏமாற்றம் வேண்டாம், குழப்பம் வேண்டாம். உங்கள் வாழ்க்கைக்கு மதிப்பு உள்ளது. நீங்கள், உங்களின் இந்தப் பிறவியில், அழிவற்ற வாழ்வை, ஞானம் என்னும் அழியாப் பேரின்பத்தை உணர முடியும். அது சாத்தியம் தான்; அசாத்தியம் ஒன்றும் அல்ல. எனவே நாம் வெறுமனே, உலகிற்கு இந்தத் தகவலைக் கொடுக்கிறோம், உங்கள் வாழ்க்கை மிகவும் மதிப்புமிக்கது. வெறுமனே பூனை, நாய்களைப் போல் அதை வீணடிக்க வேண்டாம். அதை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கவும்." இது தான் பகவத் கீதையின் கூற்றாகும். நாங்கள் பகவத் கீதா- அஸ் இட் இஸ் -ஐ வெளியிட்டுள்ளோம். அதைப் படிக்க முயற்சி செய்யுங்கள். பகவத் கீதையில் நான்காம் அத்தியாயத்தில் இது சொல்லப்பட்டுள்ளது: janma karma me divyaṁ yo jānāti tattvataḥ. அது கிருஷ்ணர் என்றால் என்ன, அவரின் வேலை என்ன, அவரது வாழ்க்கை என்ன, அவர் எங்கு வாழ்கிறார், என்பதைச் சற்றே புரிந்து கொள்ள முயல்கிறது,…ஜென்ம கர்மா. ஜென்மா என்றால் தோற்றமும் மறைவும் என்று பொருள்; கர்மா என்றால் செய்யும் செயல்கள்;; திவ்யம் - ஆழ்நிலை. Janma karma me divyaṁ yo jānāti tattvataḥ.எவனொருவன் கிருஷ்ணரின் தோற்றத்தையும், செயல்களையும் அறிகிறானோ, அசலில், உண்மையாக- உணர்ச்சிப்பூர்வமாக இல்லாமல், அறிவியல் ஆய்வுமூலம் - பின்னர் அதன் விளைவு tyaktvā dehaṁ punar janma naiti mām eti kaunteya (BG 4.9). கிருஷ்ணரைப் புரிந்து கொள்வதால் மட்டுமே, நீங்கள் இனி பரிதாபமான நிலையில் உள்ள இந்தப் பௌதிக வாழ்விற்கு மீண்டும் வரத் தேவை இருக்காது. இது தான் உண்மை. உங்கள் வாழ்க்கையில், இந்த ஜென்மத்தில் கூட, நீங்கள் புரிந்து கொள்வீர்கள், சந்தோஷமாக இருப்பீர்கள்.