TA/Prabhupada 0226 - கடவுளின் பெயரை, மகிமையை, செயல்முறைகளை, அழகும் அன்பும் பரப்புவதற்காக

Revision as of 18:17, 29 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0226 - in all Languages Category:TA-Quotes - 1972 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture -- Los Angeles, May 18, 1972

உண்மையில், கிருஷ்ணர் இந்தப் பௌதிக உலகினுள் இல்லை. ஒரு பெரிய மனிதனைப் போல், அவரது தொழிற்சாலை இயங்கிக் கொண்டிருக்கும், வணிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கும், ஆனால் அவர் அங்கு இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதேபோல் தான், கிருஷ்ணரின் வலிமையும் செயல்படுகிறது. அவரது உதவியாளர்கள், அவருடைய பல அவதாரங்கள், பணிபுரிகிறிகின்றனர். அவர்கள் சாஸ்திரத்தில் விவரிக்கப் பட்டுள்ளனர். சூரியனைப் போலவே. சூரியன் தான் உண்மையில் இந்தப் பொருள் சார்ந்த அண்ட சராசரத்தின் வெளிப்பாட்டிற்கான காரணம். அது பிரம்மா-சம்ஹிதாவின் விளக்கப்பட்டுள்ளது: Yac-cakṣur eṣa savitā sakala-grahāṇāṁ rājā samasta-sura-mūrtir aśeṣa-tejāḥ yasyājñayā brahmati sambhṛta-kāla-cakro govindam ādi-puruṣaṁ tam ahaṁ bhajāmi கோவிந்தா…சூரியன் இறைவனுடைய பார்வையில் வருணிக்கப்பட்டுள்ளது. அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். நீங்கள் சூரிய ஒளியிலிருந்து ஒளிந்து கொள்ள முடியாததைப் போல, இறைவனிடமிருந்தும் ஒளிந்து கொள்ள முடியாது. அதனால், இந்த வழியில், கடவுளின் பெயரில், அது எந்தப் பெயராகவும் இருக்கலாம்..., வேத இலக்கியங்களில் இது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது, இறைவனுக்குப் பல பெயர்கள் இருப்பதும், ஆனால் அவற்றுள் கிருஷ்ணா என்ற பெயரே தலையாயது என்பதும். Mukhya. Mukhya என்றால் முக்கியம் என்று பொருள். அது மிகவும் நன்றாக விளக்கப்பட்டுள்ளது: "அனைத்திலும் கவர்ச்சிகரமான." பல வழியிலும் அனைத்திலும் கவர்ச்சிகரமானவர் அவர். எனவே கடவுளின் பெயர்... கிருஷ்ண பக்தி இயக்கம் கடவுளின் பெயரைப் பரப்புகிறது, கடவுளின் மகிமை, கடவுளின் செயல்பாடு, கடவுளின் அழகு, கடவுளின் அன்பு. அனைத்தும். நமக்கு இந்த பொருள் உலகில் கிடைத்திருக்கும் பல விஷயங்களும், அவை அனைத்தும், கிருஷ்ணருக்குள் அடக்கம். உங்களிடம் உள்ளவை அனித்தும். இங்கு இருப்பதைப் போல், இந்தப் பௌதிக உலகின் மிக முக்கியமான அம்சம் பாலியல் ஈர்ப்பு தான். ஆக அதுவும் கிருஷ்ணரில் அடக்கம். நாம் ராதையையும் கிருஷ்ணரையும் வணங்குகிறோம், ஈர்ப்பு. ஆனால் அந்த ஈர்ப்பும் இந்த ஈர்ப்பும் ஒன்றல்ல. அது உண்மையானது இது உண்மையல்ல. நாம் ஆன்மீக உலகில் இருக்கும் எல்லாவற்றையும் கையாள்கிறோம், ஆனால் அவை பிரதிபலிப்பு மட்டுமே. அதற்கு உண்மையான மதிப்பு இல்லை. தையற்கடையில் இருப்பது போல, சில சமயம் பல அழகான பொம்மைகள் இருக்கும், ஒரு அழகான பெண் நின்று கொண்டிருக்கும். ஆனால் யாரும் அதைக் கவனித்துப் பார்ப்பதில்லை. ஏனென்றால் அனைவருக்கும் தெரியும், "இது உண்மையல்ல. எவ்வளவு அழகாக இருந்தாலும், அது உண்மையல்ல" என்று. ஆனால் உயிருள்ள ஒரு பெண், அவள் அழகாக இருக்கிறாள் என்றால், பலரும் அவளைப் பார்க்கிறார்கள். ஏனெனில் இது உண்மை. இது ஒரு உதாரணமே. இங்கே உயிருள்ளவரென்று அழைக்கப்படுபவரும் உயிரற்றவரே, ஏனெனில், உடல் தான் அந்தப் பொருளே. பொருளின் ஒரு துண்டு. ஆன்மா பிரிந்த பின் அதே அழகான பெண்ணை, யாரும் கவனிப்பதில்லை. ஏனென்றால் அது தையற்கடையின் சாளரத்தில் இருக்கும் பொம்மையைப் போலத் தான். எனவே உண்மையான அம்சம் ஜீவன் என்னும் ஆன்மா தான், மேலும் இங்கே அனைத்தும் உயிரற்ற பொருட்களால் ஆனவை என்பதால், எல்லாம் வெறும் போலியே, பிரதிபலிப்பே ஆகும். உண்மையான விஷயம் ஆன்மீக உலகில் தான் உள்ளது. ஆன்மீக உலகம் என்று ஒன்று உள்ளது. பகவத் கீதை படித்தவர்கள் அதைப் புரிந்து கொள்ள முடியும். ஆன்மீக உலகில் அங்கு விவரிக்கப்பட்டுள்ளது: paras tasmāt tu bhāvo 'nyo 'vyakto 'vyaktāt sanātanaḥ (BG 8.20). Bhāvaḥ என்றால் இயற்கை என்று அர்த்தம். இந்த இயற்கைக்கும் அப்பால் வேறொரு இயற்கை உள்ளது. இந்த இயற்கையை நாம் வானத்தின் எல்லைவரை நம்மால் பார்க்க முடியும். விஞ்ஞானிகள், அவர்கள் மிக உயர்ந்த கிரகத்திற்குச் செல்ல முயற்சிக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதற்கு நாற்பதாயிரம் ஆண்டுகள் எடுக்கும் என்று கணக்கிடுகிறார்கள். எனவே யார், நாற்பதாயிரம் ஆண்டுகள்வரை உயிர் வாழ்ந்து, அங்குச் சென்று திரும்பி வர முடியும்? ஆனால் கிரகம் என்பது இருக்கிறது. எனவே நம்மால் இந்தப் பௌதிக உலகின் நீள அகலத்தைக் கூட, கணக்கிட முடியாது, ஆன்மீக உலகித்தைப் பற்றி என்ன பேச முடியும். எனவே நாம் அதிகாரப்பூர்வ ஆதாரங்களிலிருந்து இருந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அதிகாரப்பூர்வ ஆதாரம் கிருஷ்ணர் தான். ஏனெனில் நாம் முன்பே விளக்கியபடி, கிருஷ்ணரை விட யாரும் புத்திசாலியோ அறிவாளியோ கிடையாது. எனவே கிருஷ்ணர் தான் இந்த அறிவை வழங்குகிறார். tasmāt tu bhāvo 'nyo (BG 8.20) என்று. "இந்தப் பௌதிக உலகிற்கு அப்பால் மற்றொரு ஆன்மீக வானம் இருக்கிறது." அங்கேயும் எண்ணற்ற கிரகங்கள் உள்ளன. அந்த வானம் இந்த வானத்தைவிடப் பல மடங்கு சிறந்தது. இது ஒரு கால் பங்கு தான். ஆன்மீக வானமோ முக்கால் பங்கு. பகவத் கீதையில் அது, ekāṁśena sthito jagat (BG 10.42) என்று விவரிக்கப்பட்டுள்ளது. இது ஒரு கால் பங்கு தான், இந்த பொருள் சார்ந்த உலகம். மற்ற ஆன்மீக உலகிமோ முக்கால் பங்கு. இறைவனின் படைப்பு நூறு என்று வைத்துக்கொள்வோம். அது இருபத்தி ஐந்து சதவீதம் மட்டுமே; எழுபத்தைந்து சதவீதம் இன்னும் உள்ளது. இதேபோல், உயிரினங்களும், உயிரினங்களின் மிகச் சிறிய துண்டுப் பகுதியே இங்கே உள்ளன. அவற்றின் பெரும் பகுதியோ, அங்கே, ஆன்மீக உலகில் உள்ளன.