TA/Prabhupada 0246 - ஒருவர் கிருஷ்ணரின் பக்தர் ஆகி விட்டால், அனைத்து நற்குணங்களும் அவரது உடலில் வெளிப்படு

Revision as of 06:11, 31 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0246 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.9 -- London, August 15, 1973

இந்தப் பொருள் உலகில் அன்பு, சமூகம், நட்பு மற்றும் காதல் என்று அழைக்கப்படுபவை எல்லாம் உணர்வுகளின் நிறைவைப் பொறுத்தே இருக்கின்றன, maithunādi, பாலியலிருந்து தொடங்கி. Yan maithunādi gṛhamedhi-sukhaṁ hi tuccham. எனவே ஒருவர் இந்த maithunādi-sukham-லிருந்து வெளிவந்துவிடும்பொழுது அவர் விடுவிக்கப்படுகிறார், அவர் விடுவிக்கப்படுகிறார், ஸ்வாமி, கோஸ்வாமி. ஆகவே ஒருவர் இந்த maithunādi யோடு பிணைந்து இருக்கும் வரை, பாலியல் தூண்டுதலோடு இருக்கும் வரை, அவர் ஸ்வாமியும் இல்லை கோஸ்வாமியும் இல்லை. ஸ்வாமி என்றால் அவர் தன் புலன்களின் எஜமான் என்று பொருள். கிருஷ்ணரே உணர்வுகளின் எஜமான் என்பதால், ஒருவர் கிருஷ்ணரைப் பற்றிய உணர்வைப் பெறும்போது, உணர்வுகளின் எஜமான் ஆகிவிடுகிறார். உணர்வுகளை நிறுத்த வேண்டும் என்றில்லை. இல்லை, அதைக் கட்டுப்படுத்த வேண்டும். "எனக்குத் தேவைப்படும் போது, நான் அதைப் பயன்படுத்திக் கொள்வேன்; மற்ற நேரத்தில் இல்லை “ அது தான் உணர்வுகளின் எஜமான் என்பது. "நான் உணர்வுகளால் உந்தப்பட மாட்டேன். உணர்வுகள் தான் என் வழிகாட்டுதலின் கீழ் நடக்க வேண்டும்." அது தான் ஸ்வாமி. எனவே அர்ஜுனன் Guḍākeśa என்று அழைக்கப்படுகிறார். அவர் எஜமான் ... அவர் விரும்பும் போது அதுவும் கூடத் தான். அவர் ஒன்றும் கோழை இல்லை, ஆனால் அவர் பக்தர் என்பதால் கருணைமிகுந்தவராய் இருக்கிறார். ஏனெனில் அவர் கிருஷ்ணரின் பக்தர் ... ஒருவர் கிருஷ்ணரின் பக்தர் ஆகி விட்டால், அனைத்து நற்குணங்களும் அவரது உடலில் வெளிப்படும். Yasyāsti bhaktir bhagavaty akiñcanā sarvair guṇais tatra samāsate surāḥ (SB 5.18.12). அனைத்துத் தெய்வீக குணங்களும். எனவே அர்ஜுனன், அவரும் ... அவரும் அதே நிலைப்பாட்டில் இல்லையெனில் கிருஷ்ணரின் நெருங்கிய நண்பராக எப்படி ஆக முடியும்? இரு நண்பர்களும் சம நிலையில் இருக்கும்போது அந்த நட்பு மிகவும் வலுவாகிவிடுகிறது: ஒத்த வயது, ஒத்த கல்வி, ஒரே செல்வாக்கு, ஒத்த அழகு. அவர்கள் நிலையில் ஒற்றுமை மிகுந்திருந்தால், பின்னர் அந்த நட்பு பலமாகிவிடுகிறது. எனவே அர்ஜுனனும் கிருஷ்ணருக்கு சமநிலையில் தான் இருந்தார். ஒருவர் ஜனாதிபதியின் நண்பராகவோ, ராஜாவின் அல்லது ராணியின் நண்பராகவோ இருப்பதைப் போல. எனவே அவர் சாதாரண மனிதன் அல்ல. அவர் சம நிலையில் தான் இருக்க வேண்டும். கோஸ்வாமிகளைப் போலவே. கோஸ்வாமிகள், தங்கள் குடும்ப வாழ்க்கையை விட்ட போது ... ஸ்ரீனிவாச ஆச்சார்யரின் மூலம் இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது, tyaktvā tūrṇam aśeṣa-maṇḍala-pati-śreṇiṁ sadā tucchavat. Maṇḍala-pati, பெரிய, பெரிய தலைவர்கள், maṇḍala-pati. பெரிய, பெரிய தலைவர்கள், ஜமீன்தார்கள், பெரிய, பெரிய, பெரிய மனிதர்கள். அவர் அமைச்சராக இருந்தார். ஒரு பெரிய மனிதராக இல்லாவிடில் எப்படி அவருடைய நண்பராக ஆக முடியும்? எனவே ரூபா கோஸ்வாமி தங்கள் நிறுவனத்தைக் கைவிட்டார். ரூபா கோஸ்வாமியும் சனாதன கோஸ்வாமியும் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் தொடர்பு கிடைத்த உடனேயே, இவ்வாறு முடிவு செய்துவிட்டனர், "நாம் இந்த மந்திரி பதவியிலிருந்து ஓய்வு பெற்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவோடு இணைந்து அவருக்கு உதவி புரிய வேண்டும்" என்று. அவருக்குப் பணிவிடை செய்ய, அவருக்கு உதவி செய்வதற்கு அல்ல. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிற்கு யாருடைய உதவியும் தேவையில்லை. ஆனால் நாம் அவரோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவருக்குச் சேவை செய்ய முயற்சி செய்தால், நம் வாழ்க்கை வெற்றி அடைகிறது. கிருஷ்ணர் கூறுவதைப் போலவே ... கிருஷ்ணர் பகவத் கீதையை போதிக்க வந்தார். கிருஷ்ணர் கூறுவதைப் போலவே ... கிருஷ்ணர் பகவத் கீதையை போதிக்க வந்தார். "இந்த அயோக்கியர்கள் பல விஷயங்களுக்கு அடிமைகளாகிவிட்டனர்: சமூகம், நட்பு, காதல், மதம், இது, அது என்று பல விஷயங்கள், தேசியம், சமூகம் என்று. எனவே இந்த அயோக்கியர்கள் இவ்வாறான அனைத்து முட்டாள்தனமான விஷயங்களையும் நிறுத்த வேண்டும்." Sarva-dharmān parityajya: " இந்த அனைத்து முட்டாள்தனங்களையும் விட்டுவிடுங்கள். என்னிடம் வந்து சரணடைந்தால் மட்டுமே போதும்.” இது தான் மதம் என்பது. இல்லையெனில், கிருஷ்ணர் sarva-dharmān parityajya, (BG 18.66) "நீங்கள் அனைத்து மத அமைப்புகளையும் விட்டுவிடுங்கள் “ என்று எப்படி அறிவுறுத்துவார்? அவர் வந்ததோ-- dharma-saṁsthāpanārthāya. அவர் மதக் கொள்கைகளை மீண்டும் நிறுவுவதற்காகவே வந்தார். இப்போது அவர், sarva-dharmān parityajya: “அனைத்தையும் விட்டுவிடுங்கள்” என்று கூறுகிறார். அப்படியென்றால், கிருஷ்ண பக்தி இல்லையென்றால், கடவுள் பக்தி இல்லையென்றால், அவை அனைத்தும் ஏமாற்றும் மதங்கள் ஆகும். அவை மதங்கள் அல்ல. மதம் என்றால், dharmāṁ tu sākṣat bhagavat-praṇītam, , உயரிய இறைவனின் கட்டளை ஆகும். அந்த உயரிய இறைவன் யார் என்று நமக்குத் தெரியவில்லையெனில், உயரிய இறைவனின் கட்டளை என்னவென்று நமக்குத் தெரியவில்லையெனில், பின்னர் அங்கு மதம் ஏது? அது மதம் அல்ல. அதை ஒரு பேச்சிற்கு வேண்டுமானால் நாம் மதம் என்று அழைத்துக் கொள்ளலாம், ஆனால் அது ஏமாற்று வேலை தான்.