TA/Prabhupada 0249 - ஏன் யுத்தம் ஏற்படுகிறது? என்று கேள்வி எழுப்பப்பட்டது

Revision as of 06:45, 31 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0249 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.6 -- London, August 6, 1973

எனவே அர்ஜூனன் தான் போராடலாமா வேண்டாமா என்று கருதும் கேள்விக்கே இடமில்லை. கிருஷ்ணர் அங்கீகரித்துவிட்டார். எனவே போராட்டம் நடந்தே தீரும். நாங்கள் சாதாரணமாக நடந்து கொண்டிருந்த போது, "ஏன் யுத்தம் ஏற்படுகிறது?" என்று எழுப்பப்பட்ட ஒரு கேள்வியைப் போல. அது புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமான விஷயம் அல்ல. ஏனெனில் நம் அனைவரிடமும் ஒரு போராட்ட உணர்வு இருக்கிறது. குழந்தைகள் கூடச் சண்டையிடும், பூனைகளும் நாய்களும் சண்டையிடும், பறவைகள் சண்டையிடும், எறும்புகள் சண்டையிடும். நாம் பார்த்திருக்கிறோம். ஆக ஏன் மனிதர்கள் மட்டும் கூடாது? போராட்ட உணர்வு இருக்கிறது. அது வாழும் நிலையின் அறிகுறிகளில் ஒன்றாகும். சண்டையிடுவது. எனவே எப்போது அந்தச் சண்டை நடக்க வேண்டும்? நிச்சயமாக, இந்தக் காலத்தில், லட்சியம் மிகுந்த அரசியல்வாதிகள், அவர்கள் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். ஆனால் சண்டையிடுவது, வேத கலாச்சாரதின்படி, சண்டையிடுதல் என்றால் தர்ம யுத்தம் என்று அர்த்தம். மத கோட்பாடுகளின் அடிப்படையில். அரசியல் கொள்கைகளின் உணர்ச்சி வேகத்தினால் அல்ல, வாதம். இதோ, இப்போது இரு அரசியல் பிரிவினர்களுக்கிடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது, பொதுவுடமைவாததிற்கும், முதலாளித்துவத்திற்குமிடையே. அவர்கள் மோதலை மட்டும் தவிர்க்க முயல்கிறார்கள், ஆனால் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது. அமெரிக்கா ஒரு துறைக்கு வந்த உடனேயே ரஷ்யாவும் அதில் வந்துவிடுகிறது. இந்தியா பாக்கிஸ்தானிற்கு இடையே நடந்த கடந்த போரில், ஜனாதிபதி நிக்சன் ஏழாவது கடற்படையை அனுப்பியவுடனேயே, இந்தியப் பெருங்கடலில், வங்காள விரிகுடாவில், கிட்டத்தட்ட இந்தியாவின் முன்னே... அது சட்டவிரோதமானது. ஆனால் அமெரிக்காவிற்கு இறுமாப்பு. எனவே பாக்கிஸ்தானிற்கு தன் அனுதாபத்தைக் காட்டவோ என்னவோ ஏழாவது கடற்படையை அனுப்பியது. ஆனால் உடனே நமது ரஷ்ய நண்பரும் கூட அங்கு வந்துவிட்டார். எனவே, அமெரிக்கா பின் வாங்க வேண்டியதாயிற்று. இல்லையெனில், அமெரிக்கா பாக்கிஸ்தானின் சார்பாகத் தாக்குதல் நடத்தியிருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆக இது நடந்து கொண்டிருக்கிறது. போரை உங்களால் நிறுத்த முடியாது. பலர், போரைத் தம்மால் எவ்வாறு நிறுத்த முடியும் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இது சாத்தியமற்றது. அது அபத்தமான திட்டம். அது முடியவே முடியாது. ஏனெனில் போராட்ட உணர்வு அனைவரிடமும் உள்ளது. அது வாழும் நிலையின் ஒரு அறிகுறி ஆகும். அரசியல், பகையெல்லாம் இல்லாத குழந்தைகள் கூட, ஒரு ஐந்து நிமிடங்களுக்குச் சண்டை போடுவார்கள்; பின்பு மீண்டும் நண்பர்கள் ஆகிவிடுவார்கள். எனவே போராட்ட உணர்வு இருக்கிறது. இப்போது, அதை எப்படிப் பயன்படுக் கொள்ளலாம்? நம் கிருஷ்ண பக்தி உணர்வு இயக்கம் இருக்கிறது. நாங்கள் உணர்வு என்று சொல்கிறோம். நாங்கள், "சண்டையை நிறுத்துங்கள் “ என்றோ, " இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் " என்றோ சொல்வதில்லை. இல்லவே இல்லை. எல்லாம் கிருஷ்ண பக்தி உணர்வோடு செய்யப்பட வேண்டும். அது தான் எங்கள் பிரச்சாரம். Nirbandha-kṛṣṇa-sambandhe. நீங்கள் என்ன செய்தாலும், கிருஷ்ணரைத் திருப்தி படுத்துவதில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். கிருஷ்ணருக்குத் திருப்தி ஏற்படும் என்றால், நீங்கள் செயல்படலாம். அது தான் கிருஷ்ணர் பக்தி உணர்வு ஆகும். Kṛṣṇendriya tṛpti vāñchā tāra nāma prema (CC Adi 4.165). இது தான் அன்பு. நீங்கள் ஒருவரை விரும்புவதைப் போல; உங்கள் அன்பானவருக்காக, நீங்கள் எதையும் செய்ய முடியும், நாம் சில நேரங்களில் செய்கிறோம். இதுபோல், அதையே கிருஷ்ணரின் புறமும் திருப்ப வேண்டும். அவ்வளவுதான். கிருஷ்ணரை எப்படி விரும்புவது என்றும் கிருஷ்ணருக்கென்றே எப்படிச் செயல்படுவது என்றும் உங்களுக்கு நீங்களே பயிற்சி அளித்துக் கொள்ளுங்கள். இது தான் வாழ்க்கையின் பூர்ணத்துவம். Sa vai puṁsāṁ paro dharmo yato bhaktir adhokṣaje (SB 1.2.6). பக்தி என்றால் சேவை என்று பொருள், bhaja-sevāyām. bhaj-dhātu, அது சேவை செய்வது என்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது, bhaja. மேலும் bhaja, இதில் சமஸ்கிருத இலக்கணம் இருக்கிறது, kti-pratyaya, அதைப் பெயர்ச்சொல்லாக்குவதற்கு. இது வினைச்சொல். எனவே pratyayas, kti pratyaya, TI pratyaya, பல pratyaya-க்கள் உள்ளன. எனவே bhaj-dhātu kti, என்பது பக்திக்கு சமமானது. எனவே பக்தி என்றால் கிருஷ்ணரைத் திருப்திப் படுத்துவதாகும். பக்தியை வேறு யாரிடமும் செலுத்த முடியாது. யாராவது "நான் காளியின், காளி தேவியின் பரம பக்தன்" என்று சொன்னால், அது பக்தி இல்லை, வியாபாரம். ஏனெனில் நீங்கள் எந்தக் கடவுளின் அவதாரத்தை வணங்கினாலும், அதில் ஏதோ ஒரு நோக்கம் இருக்கும். பொதுவாக, மக்கள் இறைச்சி உண்பதற்காகக் காளியின் பக்தராகி விடுவர். அது தான் அவர்களின் நோக்கம். வேத பாரம்பரியத்தில், இறைச்சி உண்பவர்களுக்கு இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது, "கசாப்புக் கடையிலிருந்தே சந்தையிலிருந்தோ வாங்கிய இறைச்சியை உண்ண வேண்டாம்" என்று. உண்மையில், இந்தக் கசாப்புக் கடையைப் பராமரிக்கும் அமைப்பு, உலகம் முழுவதும் ஒருபோதும் இருந்ததில்லை, இது சமீபத்திய கண்டுபிடிப்பு தான். நாம் கிறித்துவர் கனவான்களோடு சில சமயம் பேசும்போது, இவ்வாறு விசாரித்தால், "கர்த்தராகிய கிறித்து 'கொலை செய்யாதிருப்பாயாக' என்கிறார்; பின்னர் ஏன் நீங்கள் கொலை செய்கிறீர்கள்?" என்றால், அவர்கள், ‘ஏசு நாதரே சில நேரங்களில் இறைச்சி சாப்பிட்டாரே" என்று ஆதாரங்களைக் கொடுக்கிறார்கள். சில நேரங்களில் ஏசுநாதார் இறைச்சி சாப்பிட்டார், சரி, ஆனால் ஏசு நாதர் என்ன "பெரிய, பெரிய கசாப்புக் கடைகளை அமைத்து இறைச்சி சாப்பிட்டுக் கொண்டே இருங்கள்?" என்றா கூறினார்? இதில் பொது அறிவு கூட இருக்கிறது. ஏசுநாதர் சாப்பிட்டிருக்கலாம். சில நேரங்களில் அவர் ... உண்ண எந்த உணவும் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று மற்றொரு கேள்வி. மிக அவசியமானபோது, இறைச்சியைத் தவிர வேறு எந்த உணவும் இல்லையென்றால்... அந்தக் காலமும் வந்து கொண்டிருக்கிறது. இந்தக் காலத்தில், கலியுகத்தில், படிப்படியாக உணவுத் தானியங்கள் குறைந்துவிடும். அது ஸ்ரீமத் பாகவதத்தில், பன்னிரண்டாவது காண்டத்தில் கூறப்பட்டுள்ளது. அரிசி இருக்காது, கோதுமை, பால், சர்க்கரை எதுவும் கிடைக்காது. இறைச்சி தான் சாப்பிட வேண்டும். இந்த நிலைமை தான் இருக்கும். ஒருவேளை மனித மாமிசத்தைக் கூட உண்ண வேண்டி வரலாம். இந்தப் பாவப்பட்ட வாழ்க்கை கீழ்த்தரமாகிக் கொண்டே போகிறது, இப்படியே போனால் இன்னும் அதிகம் பாவப்பட்டுப் போய்விடும். Tān aham dviṣataḥ krūrān kṣīpāmy ajasram andhe-yoniṣu (BG 16.19). அரக்கர்கள், பாபிகள், இயற்கையின் நியதிப்படி அவன் இறைவனைப் புரிந்து கொள்ளமுடியா வண்ணம் மேலும் மேலும் அரக்கனாக்கப் பட்டு விடுவான் இது தான் இயற்கையின் நியதி. நீங்கள் இறைவனை மறக்க வேண்டும் என்றால், நீங்கள் இறைவனைப் புரிந்து கொள்ளவே முடியாத நிலையில் அவர் உங்களை வைத்துவிடுவார். அது அரக்க வாழ்க்கை. அந்த நேரமும் வந்து கொண்டிருக்கிறது. . தற்போது, இன்னும் ஒரு சிலருக்கு ஆர்வம் இருக்கிறது, இறைவனை அறிந்துகொள்ள. Arto arthārtī jijñāsu jñānī (CC Madhya 24.95). ஆனால் இறைவனைப் புரிந்து கொள்வதற்கும் அறிவற்றுப் போய்விடும் காலம் வந்து கொண்டிருக்கிறது. அது தான் கலியுகத்தின் கடைசி நிலை, அந்த நேரத்தில் கல்கி அவதாரம், கல்கி அவதாரம் நடக்கும். அந்த நேரத்தில் இறையுணர்வைப் பற்றி எந்தப் பிரசாரமும் இருக்காது, நேராகக் கொலை தான், நேராகக் கொலை தான். கல்கி அவதாரம் தன் வாளைக் கொண்டு நேராக் கொன்றுகுவிக்கப் போகிறது. அதன்பின் மீண்டும் சத்திய-யுகம் வரும். மீண்டும் பொற்காலம் வரும்.