TA/Prabhupada 0251 - கோபியர்கள் கிருஷ்ணரைச் சேர்ந்த நித்தியமாணவர்கள்

Revision as of 07:02, 31 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0251 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.6 -- London, August 6, 1973

எனவே பகவத் கீதை நமக்கு அளிக்கும் முழு போதனையும் இது தான்: நீங்கள் தமக்கெனச் செயல்படக் கூடாது; கிருஷ்ணருக்காக மட்டும் செயல்பட வேண்டும். எனவே போர் புரிவதும் கிருஷ்ணருக்காக, ஏதேனும் அருவருப்பான செயலைச் செய்தாலும் கிருஷ்ணருக்காகவே செய்ய வேண்டும்… கோபியர்கள் போல .... கோபியர்கள் கிருஷ்ணரிடம் சொக்கிப் போயிருந்தனர். கிருஷ்ணர் ஒரு சிறுவன், மிகவும் அழகானவன், மேலும் கோபியர்களோ இளம் பெண்கள். அது மேலோட்டமானது ... உண்மையில், கோபியர்கள் கிருஷ்ணரின் நிரந்தர கூட்டாளிகள். Ānanda-cinmaya-rasa-pratibhāvitābhiḥ (Bs. 5.37). அவர்கள் கிருஷ்ணரின் விரிவாக்கங்கள். அவர்கள் கிருஷ்ணரின் இன்பாற்றாலின் விரிவாக்கங்கள். அவர்கள் கிருஷ்ணரின் இன்பத்திற்கு பொருத்தமானவர்கள். அவர்கள் சாதாரண பெண்கள் இல்லை. ஆனால் மேலோட்டமாக, எந்த ஆபத்திலும் எப்படி கிருஷ்ணரிடம் அன்பு செலுத்த வேண்டும் என்பதை நமக்குக் கற்பிப்பதற்காக ... எனவே கோபியர்கள், அவர்கள் நள்ளிரவில் கிருஷ்ணரால் கவரப்பட்ட போது ... கிருஷ்ணர் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தார், அவர்கள் அதில் ஈர்க்கப்பட்டு அவர்கள் தம் வீட்டை விட்டு வெளியேறினர். சிலர் பூட்டி வைக்கப்பட்டனர். அவர்கள் தம் உயிரையேக் கூடக் கொடுத்தனர். அவர்கள் அவ்வளவு ஈர்க்கப்பட்டிருந்தனர். இப்போது இந்த வகையான நடவடிக்கையை, இளம் பெண்கள்... வேதப் பண்பாட்டின்படி, அவர்கள் தம் தந்தையின், கணவனின் அல்லது சகோதரனின் பாதுகாப்பிலிருந்து வெளியே போக முடியாது. இல்லை, அவர்கள் போக முடியாது. குறிப்பாக நள்ளிரவில். எனவே இது வேதக் கொள்கைக்கு விரோதமானது. பகிரங்கமாக அது ஒரு வகையான விபச்சாரமாகும். ஆனால் அது கிருஷ்ணருக்காகச் செய்யப்பட்டது என்பதால், இறைவன் சைதன்ய மஹாபிரபு இவ்வாறு பரிந்துரைக்கிறார், ramyā kācid upāsanā vraja-vadhubhiḥ kalpitā: "வ்ரஜ கோபியர்கள் பாவித்த வழிபாட்டு முறையைவிட மேம்பட்டது வேறு எதுவும் கிடையாது. Vraja-vadhu. மிகவும் வெறுக்கத்தக்கது... ஒரு இளம் பெண் தன் கணவரின், தந்தையின் பாதுகாப்பை விட்டு மற்றொரு இளைஞனிடம் செல்வது என்பது வேத கலாச்சாரத்தின்படி, மிகவும் வெறுக்கத்தக்கதாகும். ஆனால் அப்படி இருந்தும், அது கிருஷ்ணரை மையமாகக் கொண்டதால், அது மிக உயர்ந்த வகை வழிபாடு என்று ஏற்கப்படுகிறது. அது தான் கிருஷ்ண பக்தி உணர்வு ஆகும். நாம் எப்படி கிருஷ்ணருக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்று, கிருஷ்ணரிடம் மட்டுமே எப்படி அன்பு செலுத்த வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது நம் வாழ்வே வெற்றியடைந்து விடுகிறது. மேலும் மனித வாழ்க்கை... ஏனெனில் நாமும் சில கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வைகுண்டத்திலிருந்து தானே வந்தோம். Anādi karama-phale. Anādi என்றால் படைப்பிற்கு முன் என்று பொருள். வாழும் உயிரினங்களான நாம், நாம் அழிவற்றவர்கள். படைப்பும் கூட பல இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வருடங்களுக்குப் பின் அழிந்துவிடும், ஆனால் வாழும் உயிரினங்கள் அழிவதில்லை. Na hanyate hanyamāne śarīre (BG 2.20). அவை தொடர்ந்து இருக்கும். எனவே இந்த முழு அண்ட சராசரத்தின் வெளிப்பாடு அழிக்கப்படும் போது, வாழும் உயிரினங்கள் விஷ்ணுவின் உடலில் வந்து தங்கிவிடுகின்றன. பின்னர் மீண்டும் மற்றொரு படைப்பு நடக்கும்போது, அவை வெளியே மீண்டும் வந்து தங்கள் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்கின்றன. உண்மையான ஆசையோ, எப்படி வீடு பேறு அடைவது, எப்படி தெய்வத் தலைவனை அடைவது என்பதே. எனவே இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆக இந்த வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்தினால், இந்த வாழ்க்கை, மனித வடிவில் இந்த வாழ்க்கை, அது மிக, மிக ஆபத்தானது. மீண்டும் நாம், பிறப்பு மற்றும் இறப்பின் சுழற்சியை ஏற்க வேண்டும். அது மட்டும் இல்லை, நாம் வாழ்க்கையின் நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்றால், பின்னர் மீண்டும் அங்கு முழு படைப்பின் அழிவும் ஏற்பட்டுவிடும். பின் நாம் பல இலட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வருட காலத்திற்கு விஷ்ணுவின் உடலினுள் தங்க வேண்டிவரும். மீண்டும் நாம் வர வேண்டும். ஆக, எனவே அது anādi karama-phale என்று அழைக்கப்படுகிறது. Anādi என்றால் "படைப்புக்கு முன்" என்று அர்த்தம். இது நடந்து கொண்டே இருக்கிறது. மேலும் புத்தியற்ற உயிரினங்களுக்குக் கற்பிக்கக் கிருஷ்ணரே தனிப்பட்ட முறையில் வருகிறார். கிருஷ்ணர் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு, மீண்டும் தெய்வத்தலைவனிடம் அழைத்துச் செல்வதற்கு ஆர்வத்துடன் இருக்கிறார். ஏனெனில் நான் அனைவரும் கிருஷ்ணரின் ஒரு பகுதியே. உங்கள் மகன் தெருவில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம், உங்கள், கவலை எல்லாம், "ஓ, ஏதாவது விபத்து ஏற்பட்டு விடலாம், பாவம் சின்னப் பையன் அடி பட்டி உயிரிழக்க நேர்ந்துவிடும்” என்று இருக்காதா. எனவே நீங்கள், சென்று கண்டறிய முயற்சிக்கிறீர்கள். அதேபோல், கிருஷ்ணரின் நிலையும் இதைப் போன்றது தான். நாம் இந்தப் பௌதிக உலகில் ஒவ்வொரு பிறவியிலும் அவதியுற்று வருகிறோம். Duḥkhālayam aśāśvatam (BG 8.15). இந்த இடம் துன்பம் நிறைந்தது. ஆனால் மாயையின் ஜாலத்தால், நான் இந்தப் பரிதாபகரமான நிலையை மகிழ்ச்சியான வாழ்க்கை என்று எடுத்துக் கொள்கிறோம். இது தான் மாயை என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அது தான்... இந்த பொருள் உலகில் சுகம் ஏதும் இல்லை. எல்லாம் பரிதாபகரமானவை தான். இந்தப் பௌதிக உலகில் அனைத்தும் மோசமானது என்று எவ்வளவு விரைவாக நாம் புரிந்து கொள்கிறோமோ, எவ்வளவு விரைவாக நாம் இந்தப் பொருள் உலகை விட்டு, மீண்டும் வீட்டிற்குச் செல்லத் தயார் ஆகிறோமோ…, அது தான் நம் உணர்வு. இல்லையெனில், நாம் என்ன செய்தாலும்ம், தோற்கடிக்கவே படுகிறோம். ஏனெனில் நாம் நோக்கத்தையே தோலைத்துவிடுகிறோம். Na te viduḥ svārtha-gatiṁ hi viṣṇum (SB 7.5.31). Durāśayā. நாம், நம்பிக்கைய்கு மேல் நம்பிக்கை வைத்து – அது ஒருபோதும் நிறைவேறாது- நாம் இங்கு மகிழ்ச்சியாக இருக்க இறையுணர்வு இல்லாமல், சில விஷயங்களை ஈடுகட்டி முயற்சிக்கிறோம். அது முடியவே முடியாது... Na te viduḥ svārtha-gatiṁ hi viṣṇuṁ durāśayā. Durāśayā என்றால் "என்றும் நிறைவேறாத நம்பிக்கை" என்று பொருள்.