TA/Prabhupada 0252 - நாம் சுதந்திரமானவர்கள் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்

Revision as of 07:13, 31 December 2017 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0252 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.6 -- London, August 6, 1973

எனவே இந்தப் பௌதிகவாத நபர்கள், அவர்கள் முட்டாள்கள், அயோக்கியர்கள், துஷ்டர்கள், அவர்கள் இந்தப் பொருள்வாத நடவடிக்கைகளை அதிகரிக்கின்றனர். அவர்கள் இந்த பொருள்வாத நடவடிக்கைகளை அதிகரிப்பதன் மூலம் மகிழ்ச்சியாக இருந்துவிடலாம் என்று எண்ணுகின்றனர். இல்லை. அது சாத்தியம் இல்லை. Durāśayā ye... அவர்களின் தலைவர்கள் ... Andhā yathāndhair upanīyamānās te 'pīśa-tantryam uru-dāmni baddhāḥ (SB 7.5.31). நாம் அனைவரும் மிகவும் இறுக்கமாகக் கட்டப்பட்டு உள்ளோம், கைகளும் கால்களும், நாம் என்னவோ சுதந்திரமானவர்கள், விடுதலை அடைந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். பௌதிக இயல்பின் விதிகளின்படி... இன்னும், நாம் சுதந்திரமானவர்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். விஞ்ஞானி அறிவியலின் மூலம் விடுதலைப் பெற்று இறைவனைத் தவிர்க்க முயற்சி முயற்சி செய்து கொண்டிருக்கிறான். அது சாத்தியம் அல்ல. நாம் பௌதிக இயல்பின் பிடியில் இருக்கிறோம். பௌதிக இயல்பு என்றால் கிருஷ்ணரின் காரியகர்த்தா என்று அர்த்தம். Mayādhyakṣeṇa prakṛtiḥ sūyate sa-carācaram (BG 9.10). Prakṛteḥ kriyamāṇāni guṇair karmāṇi sarvaśaḥ (BG 3.27). எனவே நாம் அர்ஜுனனைப் போல் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்று, எப்போதும் குழப்பத்தோடு இருக்கிறோம். ஆனால் நாம், "நாம் கிருஷ்ணருக்காகச் செய்ய வேண்டும் ..." என்ற இந்த கொள்கையைக் கொண்டுவிட்டால், எனவே கிருஷ்ணரின் கட்டளையின்படி, மற்றும் கிருஷ்ணரின் பிரதிநிதியின் கட்டளையின்படி செய்தோமானால்; பின்னர் karma-bandhanaḥ கிடையாது. Karmāṇi nirdaheti kintu ca bhakti-bhājām (Bs. 5.54). இல்லையெனில், நாம் ஒவ்வொரு செயலின் எதிர்வினையோடும் பிணைக்கப்பட்டுள்ளோம். நாம் அதிலிருந்து வெளிவர முடியாது. எனவே "நான் சண்டையிடுவதா வேண்டாமா" என்ற குழப்பம், "ஆமாம், நீங்கள் கிருஷ்ணருக்காகச் சண்டையிட வேண்டும். பிறகு அது சரியென்றாகிவிடும்" என்று விளக்கப்படும். Kāmaḥ kṛṣṇa-karmārpane. அனுமனைப் போல. அவர் இராமசந்திர மூர்த்திக்காகப் போரிட்டார். தனக்காகப் போரிடவில்லை. இதேபோல், அர்ஜுனனும், அவரது கொடி kapi-dhvaja, அவரது கொடி அனுமனின் குறியைக் கொண்டுள்ளது. அது அவருக்குத் தெரியும். எனவே அனுமன், ஒரு பெரும் போர்வீரன், அவர் தன் தனிப்பட்ட ஆர்வத்திற்காக, இராவணனோடு போராடவில்லை. சீதா பிராட்டியை எப்படி இராவணனின் பிடியிலிருந்து மீட்பது, எப்படி மொத்தக் குடும்பத்தையும் வதம் செய்து வெளியேறுவது, எப்படி இராமசந்திரரின் பக்கத்தில் அவரை அமர வைப்பது என்பவை பற்றியே அவரது ஆர்வம் இருந்தது. பக்தர்களே, இது தான் அனுமனின் கொள்கை. இராவணனின் கொள்கையோ "ராமனின் பிடியிலிருந்து சீதையை எடுத்துச் சென்று அனுபவிப்பது" ஆகும். இது இராவணனின் கொள்கை. அனுமனின் கொள்கையோ: " இராவணனின் கைகளிலிருந்து சீதையை மீட்டு அவரை ராமரின் பக்கத்தில் அமரச் செய்வதே" ஆகும். அதே சீதை தான். சீதை என்றால் லக்ஷ்மி என்று அர்த்தம். ஆக லக்ஷ்மி என்றால் நாராயணனின் உடைமை, இறைவனின் உடைமை என்று பொருள். எனவே இந்தப் பௌதிகவாதிகள் அனைவரும், இராவணர்கள், அவர்கள் கடவுளின் சொத்தை அனுபவிக்க முயல்கிறார்கள் என்ற கொள்கையை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எனவே ஏதாவதொரு வகையில் ... நாம் இராவணவர்க்க மனிதர்களோடு போராட முடியாது. அதாவது ... நாம் அவ்வளவு வலியவர்கள் இல்லை. எனவே நாம் பிச்சைக்காரராகும் கொள்கையைக் கொண்டுள்ளோம்: "ஐயா, நீங்கள் மிகவும் நல்லவர். எங்களுக்கு ஏதாவது கொடுங்கள். எங்களுக்கு ஏதாவது கொடுங்கள். ஏனென்றால் நீங்கள் கடவுளின் சொத்தை வைத்திருப்பதால், உங்கள் வாழ்க்கையை நாசம் செய்து கொள்கிறீர்கள், நீங்கள் நரகத்திற்குச் செல்லப் போகிறீர்கள். எனவே ஏதாவது ஒரு வழியில், நீங்கள் அங்கத்தினர் ஆகிவிட்டால், நீங்கள் பிழைத்தீர்கள். நீங்கள் பிழைத்தீர்கள்". அது தான் நம் கொள்கை. நாம் பிச்சைகாரர்கள் இல்லை. ஆனால் அது ஒரு கொள்கை. இப்போது நம்மிடம் இராவணர்களோடு போரிடும் அளவு வலு இல்லை; இல்லையெனில், நாம் போராடியே எல்லா பணத்தையும் எடுத்துக் கொண்டிருப்போம். ஆனால் அது சாத்தியம் இல்லை. நம்மிடம் வலுவில்லை. எனவே நாம் பிச்சைக்காரரின் கொள்கையை எடுத்துக் கொண்டுவிட்டோம். மிக்க நன்றி.