TA/Prabhupada 0299 - ஒரு சந்நியாசிக்கு தன் மனைவியை சந்திக்க அனுமதி கிடையாது: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0299 - in all Languages Category:TA-Quotes - 1968 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 8: Line 8:
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|English|Prabhupada 0298 - If You Are Anxious to Serve Krsna, That is the Real Asset|0298|Prabhupada 0300 - The Original Person is Not Dead|0300}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0298 - நீங்கள் கிருஷ்ணருக்கு சேவை அளிக்க ஆர்வமுடன் இருந்தால், அதுவே உண்மையான சொத்து|0298|TA/Prabhupada 0300 - மூலமானவர் இறக்கவில்லை|0300}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 18: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|-RUKhKrs89k|சன்னியாசி தனது மனைவியை சந்திக்க முடியாது<br/>- Prabhupāda 0299}}
{{youtube_right|tKHHQVDpbC4|சன்னியாசி தனது மனைவியை சந்திக்க முடியாது<br/>- Prabhupāda 0299}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->



Latest revision as of 19:07, 29 June 2021



Lecture -- Seattle, October 4, 1968


தமால கிருஷ்ணன்: பிரபுபாதரே, பகவான் சைதன்யர் சந்நியாசம் ஏற்ற பிறகு, பகவான் சைதன்யரின் உபதேசங்கள் என்ற புத்தகத்தில், அவர் தன் தாயாரை சந்தித்ததாக கூறப்பட்டிருக்கிறது. ஒரு சந்நியாசி அவ்வாறு செய்யக் கூடாது என்றுதான் நான் இதுவரை நினைத்திருந்தேன்.

பிரபுபாதர்: இல்லை, ஒரு சந்நியாசி தன் மனைவியை சந்திக்கக் கூடாது. ஒரு சந்நியாசிக்கு வீட்டிற்குச் சென்று, மேலும் மனைவியை சந்திக்கக் அனுமதியே கிடையாது, ஆனால் அவர் மற்றவர்களை சந்திக்கலாம்... ஆனால் அது... சைதன்ய மஹாபிரபு தன்னுடைய வீட்டிற்குச் செல்லவில்லை. அந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. அத்வைத பிரபு, சைதன்யரின் தாயாரை, அவரை பார்க்க அழைத்து வந்தார். சைதன்ய மஹாபிரபு, சந்நியாசம் ஏற்ற பிறகு கிருஷ்ணருக்காக பைத்தியமாகவே இருந்தார். அவர் கங்கை நதிக் கரையில், அது கங்கை என்பதையே மறந்து போய்க் கொண்டிருந்தார். "இது யமுனை. நான் இந்த நதி ஓரமாக சென்று விருந்தாவனத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறேன்," என்று அவர் நினைத்திருந்தார். ஆக நித்யானந்த பிரபு ஒரு நபரிடம், "நான் சைதன்யரை பின்தொடர்கிறேன். தயவுசெய்து அத்வைதரிடம் தெரிவித்து ஒரு படகை ஒரு படித்துறைக்கு கொண்டு வரச்சொலுங்கள். அப்போது தான் அவர் சைதன்யரை அவருடைய இல்லத்திற்கு அழைத்துச் செல்ல இயலும்," என்று சொல்லி அனுப்பினார். சைதன்ய மஹாபிரபு பரவச நிலையில் இருந்தார். பிறகு திடீர் என்று அத்வைதர் ஒரு படகுடன் காத்துக் கொண்டிருப்பதை அவர் பார்த்தார். ஆக அவர் அத்வைதரிடம் கேட்டார், "அத்வைதரே, நீங்கள் ஏன் இங்கு இருக்கிறீர்கள்? இது யமுனை." அத்வைதர் கூறினார், "ஆம், என் அன்பு நாதரே, நீங்கள் இருக்கும் இடமே யமுனை. நீங்கள் என்னுடன் வாருங்கள்." ஆக அவர் சென்றார், மற்றும் அவர் போய்ச் சேர்ந்தவுடன்... அவர் அத்வைதரின் இல்லத்திற்குச் சென்றார். பிறகு அவர் பார்த்தார், "நீங்கள் என்னை தவறாக வழிநடத்தி வந்திருக்கிறீர்கள். என்னை உங்கள் இல்லத்திர்க்கு அழைத்து வந்துவிட்டீர்கள். இது விருந்தாவனம் அல்ல. இது எப்படி நடந்தது?" "சரி, ஐயா, நீங்கள் தவறுதலாக வந்துவிட்டீர்கள், ஆக...," (சிரிப்பு) "தயவுசெய்து சற்று இங்கே இருங்கள்." அவர் உடனடியாக ஒருவரை சைதன்யரின் தாயாரிடம் அனுப்பினார். ஏனென்றால், சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் ஏற்றிருந்தார்; அவர் திரும்பவும் வீட்டிற்கு வரப்போவதில்லை என்பதை அவர் உணர்ந்தார். தாய் என்பதால் அவள் மகனுக்காக பைத்தியமாக இருந்தாள். அவளுக்கு அவர் ஒரே மகன். ஆக அவர், தன் தாயாருக்கு கடைசியாக மகனை பார்க்க ஒரு சந்தர்ப்பத்தை வழங்கினார். அது அத்வைதரால் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆக தாயார் வந்தவுடன், சைதன்ய மஹாபிரபு உடனடியாக தாயாரின் பாதங்களில் விழுந்தார். அவர் ஒரு வாலிபன், இருபத்திநான்கு வயது, மேலும் அந்த தாயார், தன் மகன் சந்நியாசம் ஏற்றுக் கொண்டதை கண்டதும், வீட்டில் மருமகள் வேறு இருக்கிறாள், இயற்கையாகவே பெண் என்பதால் அவள் மிகவும் உணர்ச்சிவசப்பட்டாள், அழ தொடங்கினாள். உடனே சைதன்ய மஹாபிரபு தன் தாயை அழகான வார்த்தைகளால் சமாதானப்படுத்த முயன்றார். அவர் கூறினார், "என் அன்பு அம்மா, இந்த உடல் உங்களால் கொடுக்கப்பட்டது, எனவே என் உடம்பை உங்கள் பணியில் ஈடுபடுத்தி இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் உங்களுடைய முட்டாள்தனமான மகன். நான் ஏதோ தவறு செய்துவிட்டேன். தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள்." ஆனால் அந்த காட்சி மிகவும் பரிதாபமிக்கது - தாய்க்கும் மகனுக்கும் இடையில் பிரிவு... (மங்கிய குரல்)