TA/Prabhupada 0363 - ஒருவர் உனக்கு நண்பராக இருப்பார் மற்றும் வேறொருவர் உன் எதிரியாக இருப்பார: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0363 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Lec...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in India, Mayapur]]
[[Category:TA-Quotes - in India, Mayapur]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0362 - De même que nous avons douze GBC, pareillement Krishna a douze GBC|0362|FR/Prabhupada 0364 - Devenir digne de retourner à Dieu n’est pas chose facile|0364}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0362 - நம் இயக்கத்தில் பன்னிரண்டு ஜி.பி.ஸி குழுவினர் போல், கிருஷ்ணரிடமும் பன்னிரண்டு|0362|TA/Prabhupada 0364 - கிருஷ்ணர் இருக்கும் இடத்துக்கு போக தேவையான தகுதி அடைவது சுலபம் இல்லை|0364}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 18: Line 18:


<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|aBsNjLhe7zA|ஒருவர் உனக்கு நண்பராக இருப்பார் மற்றும் வேறொருவர் உன் எதிரியாக இருப்பார <br />- Prabhupāda 0363}}
{{youtube_right|CSlZujAy3Ok|ஒருவர் உனக்கு நண்பராக இருப்பார் மற்றும் வேறொருவர் உன் எதிரியாக இருப்பார <br />- Prabhupāda 0363}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->


Line 32: Line 32:




''யஸ்மத் ப்ரிய அப்ரிய-வியோக-ஸம்யோக-ஜன்ம-ஷோகாக்னினா ஸகல-யோனிஷு தஹ்யமான: து:கௌஷதம் தத் அபி து:கம் அதத்-தியாஹம் பூமான் ப்ரமாமி வத மே தவ தாஸ்ய-யோகம்'' ([[Vanisource:SB 7.9.17|SB 7.9.17]])
''யஸ்மத் ப்ரிய அப்ரிய-வியோக-ஸம்யோக-ஜன்ம-ஷோகாக்னினா ஸகல-யோனிஷு தஹ்யமான: து:கௌஷதம் தத் அபி து:கம் அதத்-தியாஹம் பூமான் ப்ரமாமி வத மே தவ தாஸ்ய-யோகம்'' ([[Vanisource:SB 7.9.17|ஸ்ரீமத் பாகவதம் 7.9.17]])




Line 38: Line 38:




''துக்காலயம்-அஷாஷ்வதம்'' ([[Vanisource:BG 8.15|BG 8.15]])
''துக்காலயம்-அஷாஷ்வதம்'' ([[Vanisource:BG 8.15 (1972)|பகவத்-கீதை 8.15]])




Line 44: Line 44:




''தேஹாந்தர-ப்ராப்தி'' ([[Vanisource:BG 2.13|BG 2.13]])
''தேஹாந்தர-ப்ராப்தி'' ([[Vanisource:BG 2.13 (1972)|பகவத்-கீதை 2.13]])





Latest revision as of 19:28, 29 June 2021



Lecture on SB 7.9.17 -- Mayapur, February 24, 1976


யஸ்மத் ப்ரிய அப்ரிய-வியோக-ஸம்யோக-ஜன்ம-ஷோகாக்னினா ஸகல-யோனிஷு தஹ்யமான: து:கௌஷதம் தத் அபி து:கம் அதத்-தியாஹம் பூமான் ப்ரமாமி வத மே தவ தாஸ்ய-யோகம் (ஸ்ரீமத் பாகவதம் 7.9.17)


முந்தைய பதத்தில், பிரகலாத மகாராஜர் கூறியிருக்கிறார், "எனக்கு இந்த பௌதீக வாழ்வைக்கண்டு மிகவும் பயமாக இருக்கிறது,


துக்காலயம்-அஷாஷ்வதம் (பகவத்-கீதை 8.15)


இங்கு அவர் இத்தகைய துன்பத்தின் வெவ்வேறு கட்டங்களை விவரிக்கிறார், யஸ்மாத், இந்த பௌதீக வாழ்வின் காரணத்தால். இந்த ஜட உலகில் வந்தவுடன் நாம் பல நபர்களின் தொடர்பில் வருகிறோம். பூதாப்த-பித்ருணாம், ந்ருணாம். தாயின் கருவிலிருந்து வெளியேறியதும், பல உறவினர்கள், நண்பர்கள் இருக்கிறார்கள், பூத-ஆப்த, பித்ரு, பூதாப்த, ரிஷி, பித்ருணாம் ந்ருணாம் . நாம் இணைந்துவிடுகிறோம். அவர்களில் சிலர் பிரியமாக இருப்பார்கள் மற்றும் சிலர் அவ்வளவு பிரியமாக இருக்கமாட்டார்கள் - எதிரிகள். ஆக யஸ்மாத் ப்ரியாப்ரிய-வியோக-ஸம்யோக-ஜன்ம. வியோக-ஸம்யோக-ஜன்ம. ஒரு குழந்தை பிறந்தவுடன், அவன் தன் பழைய வாழ்க்கையிலிருந்து நீங்கிச் செல்கிறான், மற்றும் மற்றொரு புதிய வாழ்க்கையுடண், புதிய உடலுடன் இணைகின்றான், வியோக-ஸம்யோக. கடந்த உடல் மிகவும் சுகமானதாக இருந்திருக்கலாம், மற்றும் இந்த உடல் வெறுக்கத்தக்கதாக இருக்கலாம், குறைப்பாடுகள் நிறைந்ததாக. அதற்கு வாய்ப்பு இருக்கிறது.


தேஹாந்தர-ப்ராப்தி (பகவத்-கீதை 2.13)


எப்போதும் சிறந்த உடல் கிடைக்கும் என்பதற்கு ஒரு உத்தரவாதமும் கிடையாது. ஆனால் மாயசக்தி என்பது மிகவும் பலமானது. ஒரு பன்றியின் உடல் கிடைத்திருந்தாலும், "இது நன்றாகவே இருக்கே." என்று நினைக்கிறான். இது தான் ப்ரக்ஷேபாத்மிக-சக்தி. மாயையிடம் இரண்டு சக்திகள் உள்ளன: ஆவரணாத்மிக மற்றும் ப்ரக்ஷேபாத்மிக. பொதுவாக மாயை நம்மை மருட்சியால் மூடச்செய்கிறாள், மற்றும் ஒருவன் குஞ்சம் தெளிவடைந்திருந்தால், மாயையின் பிடியிலிருந்து வெளியேற நினைத்தால், மாயையிடம் வேறொரு சக்தி இருக்கிறது. அது யார் என்றால் ப்ரக்ஷேபாத்மிக. ஒருவேளை ஒருவன் நினைத்தால், "இனி நான் கிருஷ்ண உணர்வில் வாழ்வேன். இந்த சாதாரண பௌதீக உணர்வு என்னை தளர வைக்கிறது. கிருஷ்ண உணர்வில் வாழ்வதே மேல்." அப்போது மாயை கூறுவாள், "இதை வைத்து நீ என்ன செய்யப் போகிறாய் ? நீ இந்த பௌதீக உணர்வில் வாழ்வதே தேவலை." அது தான் ப்ரக்ஷேபாத்மிக-சக்தி என்றழைக்கப்படுகிறது. எனவே சிலசமயங்களில் எவனாவது ஒருவன் நம் இயக்கத்தில் வந்து, சில நாட்கள் இருந்த பிறகு, போகிவிடுவான். இது தான் ப்ரக்ஷேபத, விலகிச் செல்வான். மிகவும் ஆர்வமாக இருந்தால் ஒழிய, அவனுக்கு நம்மிடம் இருப்பு கொள்ளாது; அவன் தூர எறியப்படுவான். ஆக பிரகலாத மகாராஜர் கூறுகிறார், இந்த இரண்டு நிலைகள் - ஒருவர் மகிழ்வளிக்குமாறு இருப்பார் மற்றும் ஒருவர் வெறுப்பை ஊட்டுமாறு இருப்பார் - இது முடிவே இல்லாத நடந்துக் கொண்டிருக்கிறது. "நான் இந்த உடலை விட்டு மற்றொரு உடலுக்கு சென்றால் இந்த விவகாரமும் நின்றுவிடும்." அப்படி அல்ல. இல்லை. இந்த ஜட உலகில் இந்த உடல் இருக்கும்வரை, இந்த இரண்டு விவகாரங்களை சந்தித்தாகவேண்டும். ஒருவர் உனக்கு நண்பராக இருப்பார் மற்றும் வேறொருவர் உன் எதிரியாக இருப்பார். யோக-ஸம்யோக-ஜன்ம. எதிரிகள் ஏற்பட்டவுடன், துன்பம், பதட்டம் எல்லாம் ஏற்படும். ஷோகாக்னினா. இந்த சோகம் என்பது ஒரு துக்கத்தின் நெருப்பைப் போன்றது. ஷோகாக்னினா. ஷோகாக்னினா ஸகல-யோனிஷு. ஒருவன் நண்பன், ஒருவன் எதிரி - இப்படியெல்லாம் வெறும் மனித சமுதாயத்தில் மட்டுமே உள்ளது என்று நீ நினைத்தால் - அது தவறு. எந்த சமுதாயத்திலும், எந்த பிறவியிலும்... குருவிகளிலும் கூட, பறவைகள் சமுதாயத்தில் சண்டைப் போடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். அவைகளும் நெருக்கமாக பழகுவார்கள், மறுபடியும் சண்டைப் போடுவார்கள். பறவைகள் அல்லது நாய்களை எடுத்துக் கொள்ளலாம். அவைகள் சண்டைப் போடுவதில் பெயர் போனவர்கள். ஆக இது நடந்து கொண்டிருக்கிறது: ஒருவர் நெருக்கமானவர், ஒருவர் வெறுக்கத்தக்கவர்; பிறகு அவர்கள் மத்தியில் சண்டை வேறு.


ஸகல-யோனிஷு தஹ்யமான


ஒரு சமுதாயத்திலிருந்து தப்பித்து வேறொரு சமுதாயத்திற்கு செல்வதால் அதை தவிர்க்க முடியாது. அது சாத்தியம் அல்ல.. இந்த வேற்றுமை, பகை மற்றும் நட்பு என்கிற நெருப்பு தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும், இங்கே மட்டும் அல்ல, சொர்க்க லோகத்திலும் தான். சொர்க்கத்தில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே சண்டை இருக்கிறது. அசுரர்கள் தேவர்களைக் கண்டு பொறாமை படுவார்கள், மற்றும் தேவர்களும் அசுரர்களைக் கண்டு பொறாமை கொள்வார்கள். எல்லாவற்றிலும். அரசனான இந்திரர், மிகவும் செழுமையாக இருந்தாலும், அவருக்கு எதிரிகள் இருக்கிறார்கள். நாம் சொர்க்க லொகத்திற்குச் சென்று அங்கிருக்கும் செழுமையை அனுபவிக்க ஆசை படுகிறோம், ஆனால் அங்கேயும் அதே பிரச்சினை தான்.