TA/Prabhupada 0368 - நீ நித்தியமானவன் அல்ல என மூடத்தனமாக யோசிக்கிறாய்: Difference between revisions

(Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0368 - in all Languages Category:TA-Quotes - 1976 Category:TA-Quotes - Mor...")
 
(Vanibot #0023: VideoLocalizer - changed YouTube player to show hard-coded subtitles version)
 
Line 7: Line 7:
[[Category:TA-Quotes - in India, Nellore]]
[[Category:TA-Quotes - in India, Nellore]]
<!-- END CATEGORY LIST -->
<!-- END CATEGORY LIST -->
<!-- BEGIN NAVIGATION BAR -- TO CHANGE TO YOUR OWN LANGUAGE BELOW SEE THE PARAMETERS OR VIDEO -->
<!-- BEGIN NAVIGATION BAR -- DO NOT EDIT OR REMOVE -->
{{1080 videos navigation - All Languages|Tamil|FR/Prabhupada 0367 - Vrindavana signifie que Krishna est le centre|0367|FR/Prabhupada 0369 - Mes disciples font partie intégrante de moi|0369}}
{{1080 videos navigation - All Languages|Tamil|TA/Prabhupada 0367 - பிருந்தாவனம் என்றால் கிருஷ்ணரை மையமாகக் கொண்ட இடம்|0367|TA/Prabhupada 0369 - என்னுடைய இந்த சீடர்கள், என் அம்சம்|0369}}
<!-- END NAVIGATION BAR -->
<!-- END NAVIGATION BAR -->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
<!-- BEGIN ORIGINAL VANIQUOTES PAGE LINK-->
Line 18: Line 18:

<!-- BEGIN VIDEO LINK -->
<!-- BEGIN VIDEO LINK -->
{{youtube_right|y_f6FZqZ55Y| நீ நித்தியமானவன் அல்ல என மூடத்தனமாக யோசிக்கிறாய் <br />- Prabhupāda 0368}}
{{youtube_right|ASuej9_9RxI| நீ நித்தியமானவன் அல்ல என மூடத்தனமாக யோசிக்கிறாய் <br />- Prabhupāda 0368}}
<!-- END VIDEO LINK -->
<!-- END VIDEO LINK -->

Line 52: Line 52:
பிரபுபாதர்: தன்னிச்சையாக. பராஸ்ய பக்திர் விவிதைவ ஷ்ரூயதே ஸ்வாபாவிகீ க்ஞான-பால-க்ரியா ச. ஸ்வபாவ, உதாரணமாக, நீ என்னிடம் ஒரு விஷயத்தை எப்படி செய்யவேண்டும் என்று கேட்டால், அதற்கு நான் உடனேயே, "ஆம், நீ இப்படி செய்," என்றால் ஸ்வாபாவிகீ. அதை கச்சிதமாக செய்வதற்கான அறிவு என்னிடம் இயல்பாகவே இருக்கிறது. அப்படி தான் அது.  

''மயாத்யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸ-சராசரம்'' ([[Vanisource:BG 9.10|BG 9.10]])
''மயாத்யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸ-சராசரம்'' ([[Vanisource:BG 9.10 (1972)|பகவத்-கீதை 9.10]])

கிருஷ்ணர் உத்தரவிடுகிறார் "நீ இப்படி செய்." அப்படி செய்வதால் எல்லாம் கச்சிதமாக நடப்பதை நீயே பார்க்கலாம். ஒரு வேப்பம விதையிலிருந்து ஒரு வேப்பமரம் தான் வரும். இது எவ்வளவு சிறப்பாக படைக்கப்பட்டிருக்கிறது, கிருஷ்ண-பீஜோ (அ)ஹம் ஸர்வ-பூதானாம்([[Vanisource:BG 7.10|BG 7.10]])
கிருஷ்ணர் உத்தரவிடுகிறார் "நீ இப்படி செய்." அப்படி செய்வதால் எல்லாம் கச்சிதமாக நடப்பதை நீயே பார்க்கலாம். ஒரு வேப்பம விதையிலிருந்து ஒரு வேப்பமரம் தான் வரும். இது எவ்வளவு சிறப்பாக படைக்கப்பட்டிருக்கிறது, கிருஷ்ண-பீஜோ (அ)ஹம் ஸர்வ-பூதானாம்([[Vanisource:BG 7.10 (1972)|பகவத்-கீதை 7.10]])

அதாவது ஒரு வேப்பிலை மரம் தான் வரும், மாங்காய் மரம் அல்ல. அந்த ரசாயனங்களின் கலவை அப்படி ஆக்கப்பட்டிருக்கிறது. உனக்கு அதில் என்ன இருக்கிறது என்பது தெரியாது, ஒரு சிறிய விதை, ஆலமரம். அதிலிருந்து ஒரு பெரிய ஆலமரம் வெளியே வருகிறது, வேறு எதுவும் வருவதில்லை. அது தான் ஞானம். அவர் பூரணத்தை, அதாவது, மொத்த செயல்பாட்டையும் ஒரு விதையில் புகுத்தியிருக்கிறார். ஆகையால் க்ருஷ்ணர் கூறுகிறார், பீஜோ அஹம் ஸர்வ-பூதானாம். எந்த கவரும் இருக்காது. அப்படியே எடுத்து விதைத்தால் போதும். பலன் கிடைக்கும்.  

Line 71: Line 71:
பிரபுபாதர்: "நான் தான் இஸ்கான்," என நான் கூறினால் அதில் என்ன தவறு? நான் இதை உருவாக்கியிருப்பதனால் "இஸ்கான் என்றால் நான். நான் தான் இஸ்கான்."எனக் கூறுகிறேன். பிறகு அதில் என்ன தவறு இருக்கிறது? அப்படி தான். கிருஷ்ணரின் சக்தியால் அனைத்தும் வெளியே வந்திருக்கிறது. ஆக "நான் இது, நான் இது, நான் இது, நான் இது." என கூறுகிறார். விபூதி பின்னம். அனைத்தும்...  

''ஜன்மாதி அஸ்ய யத''  ([[Vanisource:SB 1.1.1|SB 1.1.1]])
''ஜன்மாதி அஸ்ய யத''  ([[Vanisource:SB 1.1.1|ஸ்ரீமத் பாகவதம் 1.1.1]])

அனைத்தும் கிருஷ்ணரிலிருந்து தான் வந்திருக்கிறது.  
அனைத்தும் கிருஷ்ணரிலிருந்து தான் வந்திருக்கிறது.  
Line 146: Line 146:
பிரபுபாதர்: உதாரணமாக, சூரியனையும் சூரிய கதிர்களையும் பிரித்து பார்க்கிறோம், ஆனால் குணத்தின் அடிப்படையில் அதே வெப்பமும் ஒளியும் தான் இருக்கிறது. ஆனால் சூரிய ஒளியின் ஒரு கதிர் தான் சூரியன் எனக் கூறமுடியாது. அப்படி கூறமுடியாது.  

''மத்-ஸ்தானி ஸர்வ-பூதானி ந சாஹம் தேஷ்-வவஸ்தி த'' ([[Vanisource:BG 9.4|BG 9.4]])
''மத்-ஸ்தானி ஸர்வ-பூதானி ந சாஹம் தேஷ்-வவஸ்தி த'' ([[Vanisource:BG 9.4 (1972)|பகவத்-கீதை 9.4]])

தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.  
தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.  

Latest revision as of 19:29, 29 June 2021

Morning Walk -- January 3, 1976, Nellore

பிரபுபாதர்: இது ஒரு பெரும்பொருளியல் சங்கம் என்று நினைக்கிறேன். அப்படித் தானே? அந்த சின்னம். அல்லது ராமகிருஷ்ணா மிஷனா.

அச்யுதாநந்தன்: இல்லை ஸால்வேஷன் ஆர்மி.

பிரபுபாதர்: ஸால்வேஷன் ஆர்மி, ஓஹோ.

ஹரிகேஷன்: வாஸ்தவத்தில் நாம் தான் ஒரே ஸால்வேஷன் ஆர்மி (இரட்சணிய சேனை). (இடைவேளை)

அச்யுதாநந்தன்:... அதிகாரியின் அதிகாரத்தை... நாம் அவர் அதிகாரத்தை ஏற்கிறோம், ஆனால் அவரது அனுபவம் புலனுணர்வால் வந்தது, அப்படி என்றால் திரும்பவும் அதே...

பிரபுபாதர்: மற்றோர்களிடமிருந்து அனுபவம் பெற்றவர்களைப் போன்ற அதிகாரிகளை நாம் அங்கிகரிப்பது இல்லை. நாம் அதிகாரி என்று ஏற்க தகுதி என்னவென்றால்...

கேஷவலால் த்ரிவேதி: அனுபவசாலி.

பிரபுபாதர்: தன்னிச்சையாக. பராஸ்ய பக்திர் விவிதைவ ஷ்ரூயதே ஸ்வாபாவிகீ க்ஞான-பால-க்ரியா ச. ஸ்வபாவ, உதாரணமாக, நீ என்னிடம் ஒரு விஷயத்தை எப்படி செய்யவேண்டும் என்று கேட்டால், அதற்கு நான் உடனேயே, "ஆம், நீ இப்படி செய்," என்றால் ஸ்வாபாவிகீ. அதை கச்சிதமாக செய்வதற்கான அறிவு என்னிடம் இயல்பாகவே இருக்கிறது. அப்படி தான் அது.

மயாத்யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸ-சராசரம் (பகவத்-கீதை 9.10)

கிருஷ்ணர் உத்தரவிடுகிறார் "நீ இப்படி செய்." அப்படி செய்வதால் எல்லாம் கச்சிதமாக நடப்பதை நீயே பார்க்கலாம். ஒரு வேப்பம விதையிலிருந்து ஒரு வேப்பமரம் தான் வரும். இது எவ்வளவு சிறப்பாக படைக்கப்பட்டிருக்கிறது, கிருஷ்ண-பீஜோ (அ)ஹம் ஸர்வ-பூதானாம்(பகவத்-கீதை 7.10)

அதாவது ஒரு வேப்பிலை மரம் தான் வரும், மாங்காய் மரம் அல்ல. அந்த ரசாயனங்களின் கலவை அப்படி ஆக்கப்பட்டிருக்கிறது. உனக்கு அதில் என்ன இருக்கிறது என்பது தெரியாது, ஒரு சிறிய விதை, ஆலமரம். அதிலிருந்து ஒரு பெரிய ஆலமரம் வெளியே வருகிறது, வேறு எதுவும் வருவதில்லை. அது தான் ஞானம். அவர் பூரணத்தை, அதாவது, மொத்த செயல்பாட்டையும் ஒரு விதையில் புகுத்தியிருக்கிறார். ஆகையால் க்ருஷ்ணர் கூறுகிறார், பீஜோ அஹம் ஸர்வ-பூதானாம். எந்த கவரும் இருக்காது. அப்படியே எடுத்து விதைத்தால் போதும். பலன் கிடைக்கும்.

அச்யுதாநந்தன்: அனைத்தையும் வளரச் செய்யும் அந்த தத்துவம், ஈஷோபனிஷத் கூறுகிறது, ஸோ அஹம் அஸ்மி: "நான் தான் அந்த தத்துவம்." இறுதி சுலோகத்தில், ஈஷோபனிஷத் கூறுகிறது, ஸோ அஹம் அஸ்மி: (மந்திரம் 16) "நான் தான் அது."

பிரபுபாதர்: அஸ்மி என்றால் "இது என் சக்தி. இது என் சக்தி."

அச்யுதாநந்தன்: இல்லை, அது கூறுகிறது...

பிரபுபாதர்: "நான் தான் இஸ்கான்," என நான் கூறினால் அதில் என்ன தவறு? நான் இதை உருவாக்கியிருப்பதனால் "இஸ்கான் என்றால் நான். நான் தான் இஸ்கான்."எனக் கூறுகிறேன். பிறகு அதில் என்ன தவறு இருக்கிறது? அப்படி தான். கிருஷ்ணரின் சக்தியால் அனைத்தும் வெளியே வந்திருக்கிறது. ஆக "நான் இது, நான் இது, நான் இது, நான் இது." என கூறுகிறார். விபூதி பின்னம். அனைத்தும்...

ஜன்மாதி அஸ்ய யத (ஸ்ரீமத் பாகவதம் 1.1.1)

அனைத்தும் கிருஷ்ணரிலிருந்து தான் வந்திருக்கிறது.

அச்யுதாநந்தன்: இல்லை, ஈஷோபனிஷத் கூறுவது என்னவென்றால், நீ தான் அந்த தத்துவம். ஈஷோபனிஷத் கூறுகிறது என்னவென்றால், சூரியனை ஜொலிக்கச் செய்யும் அந்த தத்துவம், அது "நான் தான் அந்த தத்துவம்.

பிரபுபாதர்: ஆமாம், ஒரு பக்தன் அதை ஒப்புக் கொள்கிறான்... அதை நாம் ஒப்புக் கொள்கிறோம்.

அச்யுதாநந்தன்: சூரியனை ஜொலிக்கச் செய்யும் அந்த உயிர் நான் தான்."

பிரபுபாதர்: நீ கூறுவது எனக்கு புரியவில்லை. அச்யுதாநந்தன்: ஸோ அஹம் அஸ்மி. அந்த பதினாறாம்...

ஹரிகேசன்: "சூரியனுக்கு உள்ளதைப் போல், நானும் அவனே."

பிரபுபாதர்: ஆமாம், ஸோ அஹம் அஸ்மி - ஏனென்றால் நான் அம்சம்.

அச்யுதாநந்தன்: இல்லை, ஆனால் அது கூறுவது என்னவென்றால் "அவன் நானே,". "நான் அவன் அம்சம்." என்பதில்லை. "அவன் நானே."

பிரபுபாதர்: இல்லை. அப்படி கூறியிருந்தால் அதை ஏன் ஒப்புக் கொள்ளமுடியும் என்றால், குணாதிசயங்களின் அடிப்படையில் எனக்கும் (ஆன்மாவுக்கும்) கடவுளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

கேசவலால் த்ரிவேதி: அளவின் அடிப்படையில் பெரும் வித்தியாசம் இருக்கிறது.

பிரபுபாதர்: ஆமாம். "நான் இந்தியன்" என நான் கூறினால், அதில் என்ன தவறு?

அச்யுதாநந்தன்: அது வேறு விஷயம்.

பிரபுபாதர்: ஆம். வேறு விஷயம் அல்ல.

அச்யுதாநந்தன்: ஆனால் ஷ்ருதியிலிருந்து நேரடியாக புரிந்துக் கொண்டால், நீ அதே தத்துவம் தான் எனக் கூறுகிறது.

பிரபுபாதர்: அதற்கு தான் குருவிடமிருந்து கற்கவேண்டும். மேலும் நேரடியாக ஏற்றுக் கொண்டால், நீ தொடர்ந்து மூடனாகவே இருப்பாய். அதற்கு தான் குரு தேவை. அது தான் ஷ்ருதியின் கற்பித்தல். தத்-விக்ஞானார்த்தம் ஸ குரும் எவாபிகச்சேத் (மாண்டுக்ய உபநிஷத் 1.2.12). ஷ்ருதியை அறிய விருப்பம் இருந்தால் குருவிடம் வந்தாக வேண்டும்.

அச்யுதாநந்தன்: இல்லை, ஆனால் இது அதற்கு பின்வருகிறது. அந்த உபநிஷத்தின் இறுதி தீர்மானம், ஷ்ருதி, அதிகாரமானது, என்னவென்றால் நீ அதே தத்துவம் தான்.

பிரபுபாதர்: ஆம், நான் அதே தத்துவம் தான். நித்யோ நித்யானாம்.

அச்யுதாநந்தன்: அது சரி, ஆனால் எதுவும் மற்றொன்றை விட அதிகமாக நித்தியமானதாக இருக்கமுடியாதல்லவா.

பிரபுபாதர்: எல்லோரும் நித்தியமானவர்கள் தான்.

அச்யுதாநந்தன்: அப்படி என்றால் இதில் முரண்பாடு இருக்கிறதே. நித்யோ நித்யானானாம். ஒரு விஷயம் மற்றொரு விஷயத்துடன் அதிகமாக நித்தியமானது எனக் கூறமுடியாதல்லவா.

பிரபுபாதர்: இல்லை, இல்லை. அது கருத்து இல்லை. எல்லோரும் நித்தியமானவர்கள் தான்.

அச்யுதாநந்தன்: அப்போது எப்படி ஒருவர் அதிகமாக நித்தியமானவராக...

பிரபுபாதர்: எப்படி கடவுள் நித்தியமானவரோ, அப்படியே தான் நீயும் நித்தியமானவன். நீ இந்த ஜடவுடலை ஏற்றிருப்பதனால், நீ நித்தியமானவன் அல்ல என மூடத்தனமாக யோசிக்கிறாய். உண்மையில், கடவுள் எப்படி நித்தியமானவரோ நீயும் நித்தியமானவன் தான்.

அச்யுதாநந்தன்: இருவரும் நித்தியமானவர்கள் என்றால் பிறகு எதற்காக ஒன்றை மற்றொன்றைவுடன் பிரித்து பார்க்கவேண்டும்?

பிரபுபாதர்: உதாரணமாக, சூரியனையும் சூரிய கதிர்களையும் பிரித்து பார்க்கிறோம், ஆனால் குணத்தின் அடிப்படையில் அதே வெப்பமும் ஒளியும் தான் இருக்கிறது. ஆனால் சூரிய ஒளியின் ஒரு கதிர் தான் சூரியன் எனக் கூறமுடியாது. அப்படி கூறமுடியாது.

மத்-ஸ்தானி ஸர்வ-பூதானி ந சாஹம் தேஷ்-வவஸ்தி த (பகவத்-கீதை 9.4)

தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.

கேஷவலால் த்ரிவேதி: ஸ்வாமிஜி, தாங்கள் இதை விவரித்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன், மேலும் அதில் இருக்கும் நியாயத்தை என்னால் அறியமுடிகிறது. அதாவது "நான் ஈசன், ஆனால் ஸர்வேசன் அல்ல. நான் ஆத்மன் ஆனால் பரமாத்மன் அல்ல. நான் அம்சம் ஆனால் பரமாம்சம் அல்ல."

பிரபுபாதர்: ஆம். அது வேறு இடத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது... அதற்கான குறிப்பை அறியவேண்டும்.

ஈஷ்வர: பரம: க்ருஷ்ண (பிரம்ம ஸம்ஹிதா 5.1). நானும் ஈஷ்வர

அதை நான் பல முறை விளக்கியிருக்கிறேன். ஆனால் நான் தான் பரமேஷ்வர என்று அதற்கு அர்த்தம் இல்லை. பரமேஷ்வர என்றால் கிருஷ்ணர். இது எந்த கட்டிடம்?

கேஷவலால் த்ரிவேதி: நான், முதல் நாள், ஸ்வாமிஜியை மண்டாபுரில் இருக்கும் ராஜேசுவராவில் கேட்டதற்கு முன்பு, அஹம் ப்ரஹ்மாஸ்மி என்பதற்கு என்னால் அர்த்தம் கூற முடியவில்லை. இது பொருத்தமான விளக்கம் தான். மறுபுறம் மாயாவாதிகள், "எல்லாம் சரி, ஆனால் சங்கராச்சாரியாரே அஹம் ப்ரஹ்மாஸ்மி என்கிறாரே. நீ எதற்காக மறுக்கிறாய்?" ஏனென்றால் பல பேர் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். பிறகு விவாதம் ஏற்பட்டபோது, என்னால் அதற்கு பதில் அளிக்க முடியவில்லை. ஆனால் முக்தி என்பது எப்படி விளக்கப்பட்டிருந்ததோ, முக்தி, ஆம், மற்றும் அந்த உபந்நியாசத்தில், ஈஷ, ஸர்வேஷ மற்றும் பல விஷயங்கள் - ஆத்மா, பரமாத்மா, அம்ச, பரமாமச - இதையெல்லாம் சரியாக விளக்கமுடியும் என்பதை நான் அறிந்தேன். ஏனென்றால் பல நபர்கள் லையன்ஸ் க்ளப் போன்ற பொதுக்கூட்டங்களில் கேட்கிறார்கள். அங்கு நாங்கள் இத்தகைய விஷயங்களை விவாதம் செய்வது உண்டு. பிறகு எப்படி பதில் அளிப்பது என்பதே தெரியாமல் தளர்ந்து போனோம். ஆனால் இப்போது என்னால் விளக்கம் அளிக்க முடியும் என நம்புகிறேன்.

பிரபுபாதர்: ஆக என் விளக்கம் புரியுமாறு இருந்ததல்லவா?

கேஷவலால் த்ரிவேதி: ஆம், நான் அப்படி தான் உணர்கிறேன். அது அச்யுதாநந்த ஸ்வாமியின் கேள்விக்கும் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.

அச்யுதாநந்தன்: நான் வெறும் விவாதம் செய்தேன்.

கேஷவலால் த்ரிவேதி: அது பரவாயில்லை... எனக்கு தெரியும்.

அச்யுதாநந்தன்: ஆக துர்க்கை விஷ்ணுவை விட உயர்ந்தவளா? ஏனென்றால் தம்மை யோக-நித்திரையிலிருந்து விழிப்பூட்டுவதற்கு, விஷ்ணு துர்க்கையை கேட்டுக்கொண்டார் அல்லவா. மது மற்றும் கைடப அசுரர்களை கொல்வதற்கு. அப்படி என்றால் அவர் அவள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தானே அர்த்தம்.

பிரபுபாதர்: சரி. இப்போது நான் என் சேவகனை, "என்னை ஏழு மணிக்கு விழிப்பூட்டச் செய்," என்றால் அதற்கு அர்த்தம் என்ன... (சிரிப்பு)