TA/Prabhupada 0466 - கருப்பு பாம்புகள் மனித பாம்புகளைவிட குறைந்த திங்கு உள்ளவை



Lecture on SB 7.9.8 -- Mayapur, February 28, 1977

பாம்பின் குணத்தை உடைய ஒருவன் மிகவும் அபாயமானவன். சாணக்கிய பண்டிதர் கூறியிருக்கிறார், சர்ப: குரூர: கால: குரூர: சர்பாத் குரூரதர: கால: மன்றஷடி-வஷ்ஹ சர்ப: கால: கேன நிவார்யதே. "அங்கே இரண்டு பெறாமையுள்ள ஜீவாத்மாக்கள் உள்ளன. ஒன்று பாம்பு, கருப்பு பாம்பு, மேலும் ஒன்று கருப்பு பாம்பின் குணத்தை உடைய மனித இனம்." அவனால் எந்த நல்லதையும் பார்க்க முடியாது. சர்ப: குரூர:. பாம்பு பொறாமையுள்ளது. எந்த குற்றமும் இல்லாமலேயே அது கடிக்கும். தெருவில் அங்கு ஒரு பாம்பு இருக்கிறது, நீங்கள் அதை கடந்துச் செல்ல நேர்ந்தால் அது கோபம் கொண்டு, உடனேயே கடித்துவிடும். ஆகையால் இது பாம்பின் குணம். அதேபோல், பாம்பைப் போல் குணம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். எந்த தவறும் இல்லாமலே உங்களை குற்றம் சாட்டுவார்கள். அவர்களும் பாம்பு தான். ஆனால் சாணக்கிய பண்டிதர் கூறுகிறார் அதாவது "இந்த கருப்பு பாம்புகள் மனித பாம்புகளைவிட குறைந்த திங்கு உள்ளவை." ஏன்? "இப்பொது, இந்த கருப்பு பாம்பு சில மந்திரங்களை உச்சாடனம், அல்லது சில மூலிகைகளின் மூலம் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரலாம். ஆனால் இந்த மனித பாம்பால் உங்களால் முடியாது. அது சாத்தியமல்ல." இந்த ஹிரண்யகசிபுவும் ப்ரஹ்லாத மஹாராஜாவால் பாம்பு என்று வர்ணிக்கப்படுகிறார். நரசிம்மதேவ் மிகவும் கோபமாக இருக்கும் பொது, பிறகு அவர் கூறுவார், அதாவது மோதேத ஸாதுர் அபி வ்ருஸ்சிக-ஸர்ப-ஹத்யா (ஸ்ரீ.பா. 7.9.14): "என் பகவானே, தாங்கள் என் தந்தையின் மீது மிகவும் கோபமாக இருக்கிறீர்கள். இப்போது அவர் மடிந்துவிட்டார், ஆகையால் தாங்கள் இன்னமும் கோபமாக இருக்க காரணம் இல்லை. சாந்தமடையுங்கள். என் தந்தையை கொன்றதால் யாரும் கவலைபடவில்லை, நம்புங்கள். ஆகையால் வேதனைபட காரணமில்லை. இவர்கள் யாவரும், இந்த தேவர்கள், பகவான் பிரம்மாவும் மற்றவர்களும், அனைவரும் உங்களுடைய சேவகர்கள். நானும் தங்களுடைய சேவகர்களின் சேவகன். ஆக இப்பொது அந்த பொறாமை கொண்ட பாம்பு கொல்லப்பட்டுவிட்டது, எல்லோரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்." ஆகையால் அவர் இந்த உதாரணத்தை கொடுத்தார் அதாவது மோதேத ஸாதுர் அபி வ்ருஸ்சிக-ஸர்ப-ஹத்யா: ஒரு சாது, ஒரு புனிதமானவர், எந்த உயிர் வாழிகளையும் கொல்வதை விரும்புவதில்லை. அவர்கள் சந்தோஷம் அடையமாட்டார்கள் ... ஒரு சிறிய எறும்பு கொல்லப்பட்டால் கூட, அவர்கள் சந்தோஷம் அடையமாட்டார்கள்: "எறும்பு ஏன் கொல்லப்பட வேண்டும்?" ஒரு சிறிய எறும்பு கூட, மற்றவர்களைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது. பர-துஹக்க- துஹக்கி. அது ஒரு எறும்பாக இருக்கலாம், முக்கியமற்றது, ஆனால் இறக்கும் தறுவாயில் அது கஷ்டப்படும், ஒரு வைஷ்ணவர் கவலைப்படுவார்: "ஒரு எறும்பு ஏன் கொல்லப்பட வேண்டும்?" பர-துஹக்க- துஹக்கி. ஆனால் அத்தகைய வைஷ்ணவர், ஒரு பாம்பு அல்லது தேள் கொல்லப்படும் பொது சந்தோஷமடைகிறார். மொடேத சாதுர் அபி வ்ருசிக-சர்ப-ஹத்ய. ஆகையால் ஒரு பாம்பு அல்லது தேள் கொல்லப்பட்டால், எல்லோரும் சந்தோஷமடைகிறார்கள், ஏனென்றால் அவை மிக, மிக ஆபத்தானவை. எந்த தவறுமில்லாமல் அவை கடித்து மேலும் பெரும் நாசம் ஏற்படுத்தும். ஆகையால் அங்கே பாம்பைப் போன்ற மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்கள் நம் இயக்கத்தின் மேல் பொறாமை கொண்டு, அதை எதிர்க்கிறார்கள். அதுதான் அந்த குணாதிசயம். ப்ரஹலாத மஹாராஜா அவர் தந்தையால் எதிர்க்கப்படுகிறார், மற்றவர்களை பற்றி என்ன கூறுவது. இது போன்ற காரியங்கள் நடக்கும், ஆனால் நாம் ஏமாற்றமடையக் கூடாது, பல விதத்திலும் நையாண்டி செய்யப்பட்ட போதிலும் ப்ரஹலாத மஹாராஜா ஏமாற்றமடையவே இல்லை. அவருக்கு விஷம் கூட கொடுக்கப்பட்டது, அவர் பாம்புகளுக்கு நடுவில் எறியப்பட்டார் மேலும் அவர் மலையின் மேல் இருந்து எறியப்பட்டார், யானையின் பாதத்தின் கீழ் போடப்பட்டார. இன்னும் பல வழிகளில் போடப்பட்டார்.. ஆகையினால் சைதன்ய மஹாபிரபு நமக்கு அறிவுரை கூறியுள்ளார் அதாவது "ஏமாற்றம் அடையாதீர்கள் பனிவாக பொறுத்துக் கொள்ளுங்கள்." த்ருணாத் அபி சுனிசேன தரோர் அபி ஸஹிஷ்ணுனா (சி.சி. ஆதி 17.31): மரத்தைவிட அதிகமாக பொறுமையுடன் இருங்கள். இருங்கள், நான் சொல்வதாவது, ஒருவர் புல்லைவிட பணிவாக மேலும் அடக்கமாக இருக்க வேண்டும். இந்த காரியங்கள் நடக்கும். நம் ஒரு வாழ்க்கையில் கிருஷ்ண உணர்வு மனப்பான்மையை செயல் படுத்தினால், சிறிதளவு வேதனைகள் இருந்த போதிலும், கவலை கொள்ளாதீர்கள். கிருஷ்ண உணர்வில் தொடர்ந்து செல்லுங்கள். அங்கே சில கஷ்டங்கள் இருந்தாலும், ஏமாற்றமடையாதீர்கள் அல்லது நம்பிக்கையை இழக்காதீர்கள். பகவத் கீதையில் கிருஷ்ணரால் அது ஊக்கமளிக்கப்பட்டுள்ளது, ஆகமாபாயினே அனித்யாஸ்தாம்ஸ் திதிக்ஷஸ்வ பாரத (ப.கீ. 2.14): "என் அன்பு அர்ஜுன, நீ சில வலிகளை உணர்ந்தால் கூட, இந்த உடல் வலி வரும்பிறகு போகும். எதுவும் நிரந்தரமல்ல, அதனால் இந்த காரியங்களுக்கு அக்கரை கொள்ளாதே. உன் கடமையில் தொடர்ந்து செயல்படு." இதுதான் கிருஷ்ணரின் அறிவுரை. ப்ரஹலாத மஹாராஜா நடைமுறைக்குரிய உதாரணம், மேலும் நம்முடைய கடமை ப்ரஹலாத மஹாராஜாவைப் போன்றவர்களின் அடிசுவட்டை பின்பற்றுவதாகும்.