TA/Prabhupada 0492 - புத்தரின் தத்துவம் என்னவென்றால் இந்த உடலை அகற்றினால், நிர்வாணம்

Revision as of 04:22, 30 May 2021 by Soham (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.14 -- Germany, June 21, 1974

இப்போது இந்த உடல் என்றால் என்ன? இந்த உடல் ஜடத்தின் கலவையால் ஆனது, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம் இவைகளின் இணைப்பினால் - எட்டு ஜட மூலப்பொருட்கள், ஐந்து ஸ்தூல பொருட்கள் மற்றும் மூன்று சூட்சுமமான பொருட்கள். இந்த உடல் அவைகளால் செய்யப்பட்டது. ஆக இந்த புத்தரின் தத்துவம் என்னவென்றால் இந்த உடலை அகற்றினால், நிர்வாணம். எடுத்துக்காட்டாக இந்த வீடு செங்கல், மரம் மற்றும் பல பொருட்களாலையும் செய்யப்பட்டிருக்கிறது. ஆக நீ அதை உடைத்தால், கல்லும் இருக்காது, செங்கல்லும் இருக்காது. அவை நிலத்துடன் ஒன்றாகிவிடுகின்றன. நிலத்தில் துற எறி. அப்போது வீடே இருக்காது. அதுபோலவே, நீ சூன்யம் ஆனால், உடல் இல்லாதபடி, அப்பொழுது நீ சுக துக்கங்களிலிருந்து விடுவிக்கப்படுவாய். இது தான் அவர் தத்துவம், நிர்வாணத்தின் தத்துவம், சூன்யவாதி: "சூன்யம் ஆக்கு." ஆனால் அது சாத்தியம் அல்ல. உன்னால் அது முடியாது. ஏனேன்றால் நீ ஆன்மாவாவாய். அது விளக்கப்படும். உனக்கு முடிவே கிடையாது. உன்னால் சூன்யம் ஆக முடியாது. அது விளக்கப்படும்.


ந ஹன்யதே ஹன்யமானே ஷரீரே (பகவத் கீதை 2.20)


அதாவது நாம் இந்த உடலை விட்டு விடுகிறோம் ஆனால் உடனேயே நான் மற்றொரு உடலை ஏற்றுக் கொள்ள வேண்டும். பிறகு உடல் இல்லாமல் இருப்பதற்கு கேள்வியே இல்லை. இயற்கையின் கட்டளையால் உனக்கு மற்றொரு உடல் தரப்படும். சுகங்களை அனுபவிக்க ஆசை இருந்ததனால் நீ இந்த ஜட உலகில் வந்திருக்கிறாய். கேட்கவே வேண்டாம். எல்லோருக்கும் தெரியும் "நான் இந்த ஜட உலகில் இருக்கிறேன். நான் முழுமையாக சுகத்தை அனுபவிக்க வேண்டும்." "நான் மறுஜென்மம் ஏற்றுக் கொள்ள வேண்டும்", என்கிற உண்மை தெரியாதவன் நினைக்கிறான், "இது வெறும் ஜட பொருட்களின் இணைப்பு - நிலம், நீர், காற்று, நெருப்பு. ஆக எப்பொழுது இது கலைந்து விடுகிறதோ, எல்லாம் முடிந்து விடும். ஆகையால் எதுவரை இந்த சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறதோ, நான் முழுமையாக சுகத்தை அனுபவிக்க வேண்டும்." இதை தான் ஜட உணர்வு என்பார்கள், அதாவது நாத்திகன், நாத்திகன், அவன் நாம் மரணமில்லா ஆன்மா, நாம் வெறும் உடலை மற்றும் மாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை அறிய மாட்டான். நாத்திகர்கள் நினைக்கிறார்கள் இது முடிந்தபிறகு... இங்கே இந்த மேற்கத்திய நாடுகளில், பெரிய பெரிய பேராசிரியர்கள், அவர்களும், இந்த உடல் அழிந்துப் போனால் எல்லாம் முடிந்து விடும் என்ற தோற்றத்தில் தான் இருக்கிறார்கள். இல்லை. அப்படி கிடையாது. ஆகையால் அது தான் முதல் போதனை.


தேஹினோ அஸ்மின் யதா தேஹே கௌமாரம் யவ்வனம் ஜரா (பகவத் கீதை 2.13)


நீ வெவ்வேறு உடல்களை மாற்றிக் கொண்டிருக்கிறாய். இந்த உடல் அழிந்தாலும், நீ அழிவதில்லை.