TA/Prabhupada 0509 - இந்த மனிதர்கள் மிருகங்களுக்கு ஆத்மா இல்லையென்று சொல்கிறார்கள்.

Revision as of 05:13, 30 May 2021 by Soham (talk | contribs) (Created page with "<!-- BEGIN CATEGORY LIST --> Category:1080 Tamil Pages with Videos Category:Prabhupada 0509 - in all Languages Category:TA-Quotes - 1973 Category:TA-Quotes - Lec...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Lecture on BG 2.18 -- London, August 24, 1973

பிரபுபாதர்: வினா பஷுக்நாத் (ஸ்ரீ பா 10.1.4) இது ஒரு அரசனின் வாக்கு... அது என்ன? பக்தர்: யுதிஷ்டிரா. பிரபுபாதர்: யுதிஷ்டிரர் இல்லை. பக்தர்: பரீக்ஷித், பரிக்ஷித் மஹாராஜா. பிரபுபாதர்: பரிக்ஷித் மஹாராஜா. அவர் கூறுகிறார், இறை உணர்வு, கிருஷ்ண உணர்வு, விலங்குகளை கொல்பவரால், புரிந்து கொள்ளப்படமாட்டாது. வினா பஷுக்நாத் (ஸ்ரீ பா 10.1.4) நிவ்ருத்த-தர்ஷைர் உபகீயமாநாத். நீங்கள் பார்க்கலாம் விலங்குகளை கொல்பவர்கள், கிறிஸ்தவர்கள், முகமதியர்கள் என்று கூறிக் கொள்பவர்கள், இதனைப் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் வெறும் வெறியர்கள். அவர்களால் ஆன்மா, கடவுள் என்பவற்றை புரிந்துகொள்ள முடியாது. அவர்களுக்கு என்று சில கொள்கைகள் வைத்திருக்கின்றார்கள் நம்மை அவர்கள் மதவாதிகள் என்று நினைக்கிறார்கள். பாவம் என்பது என்ன, புண்ணியம் என்பது என்ன, இதனை அவர்கள் புரிந்து கொள்வதில்லை ஏனெனில் அவர்கள் மிருக வதை புரிபவர்கள். இது சாத்தியமில்லை. அதனால் தான் புத்தர் அஹிம்சையை பிரச்சாரம் செய்தார். அஹிம்சா. மனித குலம் முழுவதுமே மிருகவதையின் மூலம் நரகத்திற்குச் செல்கிறது என்பதனை அவர் உணர்ந்தார். "இதில் இருந்து அவர்களை நிறுத்துகிறேன், இதனால் அவர்கள், எதிர்காலத்திலாவது நிதானமாக இருப்பார்கள்". ஸதய-ஹ்ருதய தர்ஷித: இரண்டு பக்கங்கள். முதலாவதாக அவர் மிகவும் கருணை கொண்டிருந்தார், பாவமான விலங்குகள், கொல்லப்படுவதை கண்டு. அடுத்ததாக அவர் பார்த்தது "மொத்த மனித குலமே நரகத்திற்குச் செல்கிறது" என்பதை. அதனால், "நான் ஏதாவது செய்ய வேண்டும்," என்று அவர் முடிவுசெய்தார். அதனால், ஆன்மாவின் இருப்பையே மறுக்க வேண்டியதானது, ஏனெனில், அவர்கள் மூளை இதனை சகித்துக் கொள்ளாது. அதனால் அவர் ஆன்மாவைப் பற்றியோ அல்லது இறைவனைப் பற்றியோ எதுவும் சொல்லவில்லை. "மிருக வதையை நிறுத்துங்கள்" என்று மட்டுமே சொன்னார். உங்களை கிள்ளினால், உங்களுக்கு வலிப்பது போல். எனவே அடுத்தவருக்கு ஏன் நீங்கள் வலியை கொடுக்க வேண்டும்? அவனுக்கு ஆன்மா இல்லை என்றாலும் பரவாயில்லை. அவர் ஆன்மாவை பற்றி எதுவும் பேசவில்லை. எனவே இந்த மக்கள் மிருகங்களுக்கு ஆன்மா இல்லை என்கிறார்கள். ஆனால் அது பரவாயில்லை, ஆனால் மிருகங்களை கொல்லும் பொழுது அவருக்கு வலிக்கிறது. உனக்கும் வலியின் உணர்வு இருக்கிறது. பின் நீயேன் மற்றவர்களுக்கு அந்த வலியை கொடுக்க வேண்டும்? அதுவே பகவான் புத்தரின் கொள்கை. ஸதய-ஹ்ருதய தர்ஷித-பஷு-காதம். நிந்தஸி யஜ்ஞ-விதேர் அஹஹ ஷ்ருதி-ஜாதம். "நான் வேதங்களை ஏற்கவில்லை" என்று அவர் புறக்கணித்தார். காரணம், வேதங்களில் சில சமயங்களில் பரிந்துரைக்கப்படுகிறது, கொல்வதற்காக அல்ல, ஆனால் மிருகங்களுக்கு புத்துயிர் கொடுப்பதற்காக. அங்கு கொல்வது என்பது யாகத்திற்காக செய்யப்படுவதே. ஆனால் பகவான் புத்தர் யாகத்திற்காக கூட மிருகங்களை கொல்வதை ஏற்கவில்லை. எனவே, நிந்தஸி. நிந்தஸி என்றால் அவர் விமர்சிப்பது. நிந்தஸி யஜ்ஞ-விதேர் அஹஹ ஷ்ருதி-ஜாதம் ஸதய-ஹ்ருதய தர்ஷித. ஏன்? அவர் மிகவும் இறக்கமும் அன்பும் உடையவராக இருந்தார். அதுவே கிருஷ்ண உணர்வு. கடவுள் மிகவும் இரக்கமானவர், அன்பானவர். அவருக்கு அது பிடிப்பதில்லை. இருந்தாலும் தேவை ஏற்படும்போது அவர் கொல்லலாம். ஆனால் அவர் கொல்வதற்கும் நாம் கொல்வதற்கும் வேறுபாடு உண்டு. அவர் முற்றிலும் நன்மை ரூபமானவர். கிருஷ்ணரால் கொல்லப்பட்ட எவரும் உடனடியாக மோக்ஷம் பெறுகின்றனர். இவையெல்லாம் இருக்கின்றன. எனவே இது அளவிடற்கரியது. ஆன்மா எத்தகையது என்பதை அளவிட முடியாது, ஆனால் ஆன்மா என்பது இருக்கின்றது, உடல் என்பது அழியக்கூடியது. "நீ சண்டையிட வில்லை என்றாலும் கூட, உணர்வு மிகுதியினால் உன் பாட்டனார், ஆசிரியர் மற்றும் பலரின் உடல்களை காப்பாற்றினாய் என்றாலும், அவை அழியக் கூடியவையே. அந்தவந்த என்றால் இன்றோ நாளையோ அழியக் கூடியது என்று பொருள். உன் பாட்டனார் ஏற்கனவே மிகவும் வயதானவர் என்று வைத்துக் கொள்வோம். அதனால் நீ அவரை இப்போது கொல்லவில்லை என்றாலும், ஒரு ஆறு மாதம், ஒரு வருடத்திற்கு பின்னர், அவர் இறக்கத்தான் போகிறார், ஏனெனில் அவர் ஏற்கனவே வயதானவர். இந்த வாதங்கள் தான் முன்வைக்கப்படுகின்றன. முக்கிய கருத்து என்னவென்றால் அர்ஜுனனை போரிட வைக்க வேண்டும் என்றே கிருஷ்ணர் விரும்பினார். அவன் போரிட வேண்டும், அவன் தனது க்ஷத்ரிய தர்மத்திலிருந்து விலகுதல் கூடாது. அழியக்கூடிய உடலின் மேல் அவன் இத்தனை உணர்ச்சிகளை வைக்கக் கூடாது. எனவே அவர் பின்வருமாறு வழிகாட்டுதல்களை கூறுகிறார்: "உடல் ஆன்மாவை விட வேறுபட்டது. எனவே ஆன்மா கொல்லப்படும் என்று நினைக்க வேண்டாம். எழுந்து போரிடு" இதுவே அவரது அறிவுறுத்தல். மிக்க நன்றி.