TA/Prabhupada 0531 - கிருஷ்ணருக்கு பலவகையான ஆற்றல்கள் இருப்பதை வேத இலக்கியங்கள் மூலமாக அறிகிறோம்

Revision as of 07:44, 31 May 2021 by Vanibot (talk | contribs) (Vanibot #0005: NavigationArranger - update old navigation bars (prev/next) to reflect new neighboring items)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)


Radhastami, Srimati Radharani's Appearance Day -- London, August 29, 1971

ஸர்வ-க: என்று ஒரு உயிர் வாழியின். ஸர்வ-க: என்றால் "தான் விரும்பும் எங்கும் செல்லக்கூடியவர்" என்று பொருள். நாரத முனியை போலே. நாரத முனி அவர் விரும்பும் எந்த இடத்துக்கும் பயணம் செய்யலாம், ஆன்மீக உலகிலோ பௌதீக உலகிலோ எனவே நீங்களும் அதை செய்ய முடியும். சாத்தியம் உள்ளது. துர்வாச முனி என்று ஒருவர், பெரிய யோகியாக இருந்தார். ஒரு வருடத்திற்குள் அவர் பிரபஞ்சம் முழுவதும் பயணம் செய்தார், விஷ்ணுலோகத்திற்குச் சென்று மீண்டும் திரும்பி வந்தார். அது வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவையே வாழ்க்கையின் சிறப்புகள். இந்த முழுமையை எவ்வாறு அடைய முடியும்? கிருஷ்ணரைப் புரிந்துகொள்வதன் மூலம். யஸ்மின் விஜ்ஞாதே ஸர்வம் ஏவ விஜ்ஞாதம் பவந்தி. உபநிஷத் கூறுகிறது, நீங்கள் கிருஷ்ணரை மட்டுமே புரிந்து கொண்டால், இந்த விஷயங்கள் அனைத்தையும் மிக எளிதாக புரிந்து கொள்ள முடியும். கிருஷ்ண உணர்வு என்பது, அப்படி ஒரு நல்ல விஷயம். எனவே இன்று, இன்று மாலை, நாங்கள் ராதாஷ்டமியைப் பற்றி பேசுகிறோம். கிருஷ்ணரின் தலையாய ஆற்றலைப் புரிந்துகொள்ள முயற்சிக்கிறோம். கிருஷ்ணரின் இன்ப ஆற்றல் தான் ராதாரணி. வேத இலக்கியங்களிலிருந்து நாம் புரிந்துகொள்வது போல, கிருஷ்ணருக்கு பல வகையான ஆற்றல்கள் உள்ளன. பராஸ்ய ஷக்திர் விவிதைவ ஷ்ருயதே (CC Madhya 13.65, purport). அதே உதாரணத்தைப் போலவே, ஒரு பெரிய மனிதனுக்கு பல உதவியாளர்களும் செயலாளர்களும் கிடைத்துள்ளனர் அதனால் அவர் தனிப்பட்ட முறையில் எதையும் செய்ய வேண்டியதில்லை, அவர் விரும்பியதெல்லாம் எல்லாம் செய்யப்படுகிறது, இதேபோல், புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் பலவிதமான ஆற்றல்கள் கொண்டவர். எல்லாமே மிக நேர்த்தியாக செய்யப்படுகின்றன. இந்த பௌதீகஆற்றலைப் போல. இப்போது நாம் வாழும் இந்த பௌதீக உலகம், இது பௌதீக ஆற்றல் என்று அழைக்கப்படுகிறது. பஹிர்-அங்கா-ஷக்தி. இதன் சமஸ்கிருத பெயர்: பஹிர்-அங்கா, கிருஷ்ணரின் வெளிப்புற ஆற்றல். இது எவ்வளவு நேர்த்தியாக செய்யப்படுகிறது, பௌதீக ஆற்றலில் உள்ள அனைத்தும். அதுவும் பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளது. மயாத்யக்ஷேண ப்ரக்ருதி: ஸூயதே ஸ-சராசரம்: (BG 9.10) "எனது கண்காணிப்பின் கீழ் பௌதீக ஆற்றல் செயல்படுகிறது." பௌதீக ஆற்றல் குருடில்லை. அது ... பின்னணியில் கிருஷ்ணர் இருக்கிறார். மயாத்யக்ஷேண ப்ரக்ருதி: (BG 9.10) ப்ரக்ருதி என்றால் இந்தப் பௌதீக ஆற்றல். இதேபோல் ... இது வெளிப்புற ஆற்றல். இதேபோல், மற்றொரு ஆற்றல் உள்ளது, அது உள் ஆற்றல். உள் ஆற்றலால் ஆன்மீக உலகம் வெளிப்படுகிறது. பராஸ் தஸ்மாத் து பவ: அன்ய: (BG 8.20) . மற்றொரு ஆற்றல், பரா, உயர்ந்த, ஆழ்நிலை, ஆன்மீக உலகம். இந்த பௌதீக உலகம் வெளிப்புற ஆற்றலின் கீழ் கையாளப்படுவதால், இதேபோல், ஆன்மீக உலகமும் உள் ஆற்றலால் நடத்தப்படுகிறது. அந்த உள் ஆற்றல் தான் ராதாரானி. ராதாரானி ..., இன்று ராதாராணியின் தோற்ற நாள். எனவே ராதாராணியின் அம்சத்தைப் புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். ராதாரானி தான் இன்ப ஆற்றல், ஹ்லாதினி- ஷக்தி. ஆனந்தமயோ 'ப்யாஸாத் (Vedānta-sūtra 1.1.12). வேதாந்த சூத்திரத்தில், பரம உண்மை ஆனந்தமயா என விவரிக்கப்படுகிறது, எப்போதும் இன்ப ஆற்றலில். அந்த ஆனந்தமய, இன்ப ஆற்றல்... ஆனந்தம். ஆனந்தா, இன்பம் விரும்பும் போது, ​​அதைத் தனியாக அனுபவிக்க முடியாது. தனியாக, நீங்கள் அனுபவிக்க முடியாது. நீங்கள் நண்பர்களின் வட்டங்களில் இருக்கும்போது, அல்லது குடும்பம், அல்லது பிற கூட்டாளிகளுடன், நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள். நான் பேசுவது போல. இங்கு பல நபர்கள் இருக்கும்போது பேசுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. என்னால் இங்கு தனியாக பேச முடியாது. அது ஆனந்தம் அல்ல. நான் இங்கே இரவில் பேச முடியும், நள்ளிரவில், இங்கே யாரும் இல்லை. அது ஆனந்தம் அல்ல. ஆனந்தம் என்றால் மற்றவர்கள் இருக்க வேண்டும்.